Thursday, December 3, 2009

சாருவும், நானும்....



சமீபத்தில் மதுரையில் உயிர்மை 10 புத்தகங்கள் வெளியிட்டார்கள். விழாவிற்கு வாசு,சூர்யா மற்றும் நான் சென்று சிறப்பித்தோம். சாருவும் வந்திருந்தார்(அடப்பாவி..அவர் சிறப்பு விருந்தினர்டா..) மறுநாள் எங்களுக்கு 12 மணிக்கு ட்ரெயின். 8 மணிக்கே கள்ள மார்க்கெட்டில் தீர்த்தவாரி ஆக தொடங்கியிருந்தது.. காலை உணவிற்காக ஒரு ஓட்டலுக்கு போன போதுதான் சாருவுடனான சரித்திர சந்திப்பு. உணவு என்னவோ சைவம்தான்.. ஆனால் பேசின விஷயங்கள் ஒரு மூணு முனியாண்டிவிலாசுக்கு சமம். மனுஷன் எந்த விகல்பமும், போலித்தனமும் இல்லாத ஆள்.(இப்போது காற்றுக்காக திடீரென்று கதவை திறந்து வைத்திருக்கிறார்..அவர் அப்படித்தான்..)..மலேசியா சாண்ட்விச்சிலிருந்து இத்தாலி பிஸ்ஸா வரை..நடுவில் கொஞ்சம் தாய்லாந்து, பிரான்ஸ் என்று ஒரு கட்டு கட்டியிருக்கிறார்.. கொடுத்து வைத்த மனுஷன்

சாருவை நாம் ரசிக்க வேண்டும். விமர்சிக்க கூடாது. அதற்கெல்லாம் அவர் அப்பாற்பட்டவர். குமுதம் சொன்னதெல்லாம் சும்மா..சென்சேஷனுக்காக சாருவிடம் சொல்லி விட்டே செய்திருப்பார்கள்..(தலைவரும் சும்மா எல்லாம் தலையாடியிருக்க மாட்டார்..)

சாரு.. போட்டோவை தாமதமாக போடுகிறேன்.. நீங்கள் அன்று சொன்னது போல் லிங்க் கொடுத்து விடுங்கள். உங்கள் புண்ணியத்தில் இன்றைய பொழுது ஓடட்டும்.. 12 ஆம் தேதி சந்திப்போம்..(பவுன்சர்லாம் வர்றாங்களாமே)

41 comments:

பாலா said...

அது என்ன கடைசி பாரா?

ஒன்னும் புரியலையே

Cable சங்கர் said...

athu சரி
ரைட்டு
புரிஞ்சிருச்சு
நினைச்சது
நடந்துரும்

ஒண்ணுமில்ல போட்டிக்கு கவிதை எழுதி பழகுவதால் வந்த எண்டர் பட்டன் பிரச்சனை

நையாண்டி நைனா said...

அண்ணே... சூர்யா, சல்மான்கான் எல்லாம் உங்க "36"(6x6)பேக் பாடிய பார்த்து... டெர்ரர் ஆகிட்டாங்க.... பிளீஸ்.. பிளீஸ் அவங்க மேலே கருணை காட்டுங்க....

அண்ணனுக்கு "மலையூர் மம்பட்டியான்" போர்வை ஒன்னு பார்சல் பண்ணு.

Raju said...

அண்ணே, ஃபோட்டோல அந்த தாடி வச்சுருக்கரவருதான் சாருவா...?
நல்லா "நானா படேகர்" மாதிரி இருக்காபல..!

Ashok D said...

சாரு பத்தி நல்லதா சொன்னதுக்கு நன்றி ஜி

பெசொவி said...

//Cable Sankar said....
ஒண்ணுமில்ல போட்டிக்கு கவிதை எழுதி பழகுவதால் வந்த எண்டர் பட்டன் பிரச்சனை//

ஜனவரி வரைக்கும் இந்த உள்குத்த விட மாட்டீங்களா, சங்கர் அண்ணே!

வால்பையன் said...

சாரு பக்கத்துல நிக்கிற ஹாலிவுட் ஹீரோ யாரு!?

எறும்பு said...

அண்ணாச்சி... நிஜத்தை விட கற்பனை சுகமானது.... உங்க கவிதை எல்லாம் படிச்சிட்டு உங்களை வேறு கற்பனை பண்ணி வச்சிருந்தேன்... அந்த பிம்பம் இன்று தொலைந்தது ... எல்லாம் உங்க போட்டோவ பாத்துதான்.... ;-))
அப்புறம் இது கலர் போட்டோவா அண்ணாச்சி... பாக்க ப்ளாக் & வைட் போட்டோ மாதிரி இருக்கு..... சாரு வைட்டா இருக்காரு... நீங்க.....ஹி ஹி உங்க டி ஷர்ட் பிரைடா இருக்கு...

கார்க்கிபவா said...

தண்டோரா சார் பாக்கதுல்ல நிக்கிறாரே!!! அவர்தான் சாருவா?

கலையரசன் said...

மணிவண்ணனுக்கு டூப் போடலாம்ண்ணே நீங்க!!
கூட யாருண்ணே அது, உங்க ஸ்கூல் சாரா?

நர்சிம் said...

நடக்கட்டும் நடக்கட்டும்

Karthikeyan G said...

Sir, நேரில் பார்த்தபோது இன்னும் யூத்தாக இருந்தீர்கள்..

butterfly Surya said...

போட்டோவில் அநியாயமாய் என்னை வெட்டி விட்டீர்கள். ரைட்டு.. பரவாயில்லை..

///நீங்கள் அன்று சொன்னது போல் லிங்க் கொடுத்து விடுங்கள். உங்கள் புண்ணியத்தில் இன்றைய பொழுது ஓடட்டும்.. 12 ஆம் தேதி சந்திப்போம்.///// ஏண்ணே..??

குசும்பன் said...

நீலகலர் டீசர்டில் சாரு சும்மா கும்முன்னு இருக்கார்!

மணிஜி said...

/குசும்பன் said...
நீலகலர் டீசர்டில் சாரு சும்மா கும்முன்னு இருக்கார்!//

கலரை மாத்திபுட்டோமில்ல

மணிஜி said...

/ butterfly Surya said...
போட்டோவில் அநியாயமாய் என்னை வெட்டி விட்டீர்கள். ரைட்டு.. பரவாயில்லை..

///நீங்கள் அன்று சொன்னது போல் லிங்க் கொடுத்து விடுங்கள். உங்கள் புண்ணியத்தில் இன்றைய பொழுது ஓடட்டும்.. 12 ஆம் தேதி சந்திப்போம்.///// ஏண்ணே..??//


மூணு பேர்ல ஒருத்தர்தான் அழகா இருக்கணும் !!

மணிஜி said...

/ கார்க்கி said...
தண்டோரா சார் பாக்கதுல்ல நிக்கிறாரே!!! அவர்தான் சாருவா?//

ஒரு சார்..ஒரு சாரு..

மணிஜி said...

/ Karthikeyan G said...
Sir, நேரில் பார்த்தபோது இன்னும் யூத்தாக இருந்தீர்கள்..//


நிஜம் நிழலாகும்..நிழலும் நிஜமாகும்

மணிஜி said...

/ ♠ ராஜு ♠ said...
அண்ணே, ஃபோட்டோல அந்த தாடி வச்சுருக்கரவருதான் சாருவா...?
நல்லா "நானா படேகர்" மாதிரி இருக்காபல..!//

நீ ஒருத்தன் தான் பாக்கி..நீயும் சொல்லிட்டியா? சந்தோஷம்

மணிஜி said...

/ D.R.Ashok said...
சாரு பத்தி நல்லதா சொன்னதுக்கு நன்றி ஜி//


ஏன்யா..போன் பண்ணி எடுக்காததையெல்லாம் பின்னூட்டத்தில..டிபனுக்கு என்ன பல்பமா சாப்பிடறே?

மணிஜி said...

/நையாண்டி நைனா said...
அண்ணே... சூர்யா, சல்மான்கான் எல்லாம் உங்க "36"(6x6)பேக் பாடிய பார்த்து... டெர்ரர் ஆகிட்டாங்க.... பிளீஸ்.. பிளீஸ் அவங்க மேலே கருணை காட்டுங்க....

அண்ணனுக்கு "மலையூர் மம்பட்டியான்" போர்வை ஒன்னு பார்சல் பண்ணு//

அப்படியே போர்வைக்குள்ள யாராவது..(சரிதா வேண்டாம்)சரக்கு

மணிஜி said...

/ வால்பையன் said...
சாரு பக்கத்துல நிக்கிற ஹாலிவுட் ஹீரோ யாரு!//

ஸ்டிராங் பீரு

Jackiesekar said...

தாடி வச்சி இருந்தாலும் சாருவைவிட என் கண்ணுக்கு நீதான்யா இளமையா தெரியற...

மணிஜி said...

/ jackiesekar said...
தாடி வச்சி இருந்தாலும் சாருவைவிட என் கண்ணுக்கு நீதான்யா இளமையா தெரியற//

அண்ணனுக்கு ஒரு ஃபுல் ரம் பார்சல்

மணிஜி said...

தமிழ்மணம் பரிந்துரை : 4/5

வாடா மாப்பிள்ளை

யாத்ரா said...

ஆகா கலக்கல் போட்டோ.

நையாண்டி நைனா said...

/*தண்டோரா ...... said...
/ ♠ ராஜு ♠ said...
....நல்லா "நானா படேகர்" மாதிரி இருக்காபல..!//

நீ ஒருத்தன் தான் பாக்கி..நீயும் சொல்லிட்டியா? சந்தோஷம்*/
உங்களுக்கு சந்தோசம் ஓகே..
இதை கேள்வி பட்டு நானா படேகர்...நாலு நாளா தூங்கலியாம்...
ஆ வ் வ் வ் வ் வ் வ் வ் வ் வ் வ் வ்
(என்னோட கவிதைய பற்றி ஒன்னும் சொல்லலைலோ.. அதான்... இன்னிக்கு எனக்கு லஞ்சு.. பல்பம் தான்...)

cheena (சீனா) said...

அன்பின் தண்டோரா

நல்லதொரு இடுகை

நல்வாழ்த்துகள்

நையாண்டி நைனா said...

போட்டோ திடீர்னு எப்படி ஓல்டு மங்கு கலருக்கு மங்கி போச்சு... அஆவ்வ்வ்வ்வ்வ்

மணிஜி said...

//நையாண்டி நைனா said...
போட்டோ திடீர்னு எப்படி ஓல்டு மங்கு கலருக்கு மங்கி போச்சு... அஆவ்வ்வ்வ்வ்வ்//

வெய்யில் ஜாஸ்தி நைனா..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//சாருவை நாம் ரசிக்க வேண்டும். விமர்சிக்க கூடாது. அதற்கெல்லாம் அவர் அப்பாற்பட்டவர். //

சரிங்க சார்.

(Mis)Chief Editor said...

உண்மைதான்!
சாரு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்!

அவருடன் நீங்கள் புகைப்படத்தில் இருந்ததால்
நீங்களும் இப்போதைக்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்!

-பருப்பு ஆசிரியர்

Unknown said...

//.. தமிழ்மணம் பரிந்துரை : 4/5

வாடா மாப்பிள்ளை ..//

இதுக்குதான் விழுந்து விழுந்து சிரித்தேன்..

Romeoboy said...

பெரிய தலை கூட சின்ன தல ...

பா.ராஜாராம் said...

எழுத்தும் அன்பும் ரூபங்கலற்றது.சார்பற்றது.

அருமை சாமியோவ்..

மணிஜி said...

கருத்து பகிர்வுக்கு நன்றி நண்பர்களே

Sanjai Gandhi said...

டி ஷர்ட்ல சாரு ரொம்ப நல்லா இருக்கார். பக்கத்துல தண்டோரா தான் கேவலமா இருக்கார். வர்ட்டா மாமா..

Sanjai Gandhi said...

டி ஷர்ட்ல இருக்கிறவர் தான் சாருன்னு எப்டி கண்டு பிடிச்சேன்னு முழிக்காதிங்க. என் மலையாள நண்பர்கள் கிட்ட கேட்டேன். அவங்க பாக்கெட்ல வச்சிருந்த போட்டோவை காட்டி இதான் சாருன்னு சொன்னாங்க.

கார்மேகராஜா said...

///நன்றி...
கடைசி வரை வந்ததுக்கு... ///

ithu than super :-)

Ramprasath said...

//டி ஷர்ட்ல இருக்கிறவர் தான் சாருன்னு எப்டி கண்டு பிடிச்சேன்னு முழிக்காதிங்க. என் மலையாள நண்பர்கள் கிட்ட கேட்டேன். அவங்க பாக்கெட்ல வச்சிருந்த போட்டோவை காட்டி இதான் சாருன்னு சொன்னாங்//

சான்ஸே இல்ல..செம உள்குத்து.. (சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது)

KARTHIK said...

// டி ஷர்ட்ல இருக்கிறவர் தான் சாருன்னு எப்டி கண்டு பிடிச்சேன்னு முழிக்காதிங்க. என் மலையாள நண்பர்கள் கிட்ட கேட்டேன். அவங்க பாக்கெட்ல வச்சிருந்த போட்டோவை காட்டி இதான் சாருன்னு சொன்னாங்க.//

தல அவங்கலாம் ஆண் நண்பர்களா இல்ல பெண் நண்பர்களா ?