பிஸ்ஸா, பர்கர், பானிபூரி, பேல்பூரி என்று விரைவு மற்றும் சாட் உணவுக்கலாசாரம் பெருகி போனது தெரிந்த செய்திதான். வீட்டில் குழந்தைகளுக்கு உணவு பழக்கத்தை அறிவுறுத்த வேண்டிய பெற்றொர்களே நாகரீக உண்வு என்ற போர்வையில் ஒபிசிட்டியை வளர்க்கும் உணவுகளை திணிக்கிறார்கள். நண்பரும், சகபதிவருமான சங்கவி சத்துள்ள உணவுகளை பற்றி எழுதிய விரிவான, தெளிவான இடுகை இது. நகல் எடுத்து சமைலறையில் ஓட்டியும் வைக்கலாம்.
என் பெயர் ராஜகோபால். நண்பர் இப்படி அறிமுக படுத்திக் கொண்டதும் நான் இப்போது என்ன பெயர் சொல்லுஙகள் என்றேன். தண்டோரா, பைத்தியக்காரன், டுபுக்கு, பிளாக் பாண்டி, ஆப்பு இதைப் போல் என்றவுடன் “எறும்பு” என்றார்.
நினைவுக்கு வந்துவிட்டது. அம்பாசமுத்திரத்தை சேர்ந்த எறும்பு சென்னையில் தற்போது சுறுசுறுப்பாகஓடிக்கொண்டிருக்கிறது.
சிற்றெரும்பை போல் கடிக்கவும் செய்கிறார். பிள்ளையார் எறும்பை போல் கிச்சு, கிச்சு மூட்டவும் செய்கிறார். வாழ்த்துக்கள் நண்பரே.
இயற்பெயரை சொன்னார். மறந்து விட்டேன். வலைப் பெயர் நன்றாக நினைவில் உள்ளது. காரணம் அப்புறம். சுருக்கமாக மட்டுமில்லாமல், சுருக்கென்றும் கவிதைகள் எழுதுகிறார். தீண்டாமை பற்றி ஒரு சின்ன கட்டுரை பிரமாதம். சென்சிபிளாய் நகைச்சுவையும் வருகிறது. ஜமாயுங்கள் நண்பரே..
பெயரை சொல்லவில்லையா? கிட்ட தட்ட நானும் அப்படித்தான்.பலாப்பட்டறை
10 comments:
அறிமுகங்களுக்கு நன்றி தலைவரே தொடரட்டும் உங்கள் சேவை
நண்பர் தண்டோரா எனது இடுக்கை பற்றியும், என்னையும் சக பதிவாளர்களிடம்
அறிமுகப்படுத்தியதும், ஊக்கப்படுத்தியதும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது....
நன்றி நண்பரே..............
அறிமுகபடுத்தியதுக்கு நன்றி...
தொடர்ந்து ஊக்கம் அளிப்பதற்கு நன்றி
தண்டோரா.. சார், ரொம்ப பெரிய அங்கீகாரம் எனக்கு..மிக்க மகிழ்ச்சி .. நன்றி.
பெயர் உங்களுக்கு பரிச்சயமானதுதான்... நம்ப கேபிள் ஜி யோடதுதான் என்னோடதும்.. (இனிமே மறக்கமாட்டீங்க :) )
அறிமுகத்துக்கு நன்றி தலலலலலலலலலலலலலலல...
:-))))))))
அறிமுகங்களுக்கு நன்றி
மூன்று பேருமே நன்றாக எழுதுகிறார்கள். :)
-வித்யா
மூன்றாம் நாள் வாழ்த்துக்கள் அண்ணே
அறிமுகங்களுக்கு நன்றி அண்ணெ,தொடரட்டும் உங்கள் சேவை
Post a Comment