Saturday, December 5, 2009

உண்மைத்தமிழனுக்கு எதிராக சதி....


Author: உண்மைத்தமிழன்

அன்பிற்கினிய தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு..!

எனது வலைத்தளம் அமெரிக்க நேசப் படைகளின் கூட்டுச் சதி காரணமாகவும், ஐரோப்பிய தேசங்களின் துரோகத்தாலும் வலையுலகின் பார்வைக்கு வராமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதை தமிழ்மண நிர்வாகத்தினரின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், சி.ஐ.ஏ., எஃப்.பி.ஐ. என்கிற ஒட்டுண்ணிக் கும்பலையும் தன்னந்தனியாக நான் ஒருவனே எதிர்த்து நிற்பதால் எனது வலைத்தளத்தின் முடிவு என்னவென்று தெரிய சில நாட்களாகும் என்று தெரிகிறது.

தமிழ்மணம் நடத்துகின்ற இந்தப் போட்டியில் நான் கலந்து கொண்டால் நிச்சயம் ஜெயித்துவிடுவேன் என்றெண்ணி அங்குள்ள வலைப்பதிவர்கள் யாரோ சிலர்தான் அமெரிக்க அரசைத் தூண்டிவிட்டு எனது வலைத்தளத்திற்குள் வைரஸை பரப்பி இந்த கொடுஞ்செயலைச் செய்திருக்கிறார்கள் என்று சந்தேகிக்கிறேன்.

ஆகவே தமிழ்மணம் நிர்வாகத்தினரை நான் கேட்டுக் கொள்வது என்னவெனில், போட்டிக்கான இடுகைகளை பரிந்துரைக்கும் தேதிகளை என் பொருட்டு காலவரையின்றி நீட்டிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

தமிழ்மணம் எனது வேண்டுகோளை புறக்கணித்து ஏற்க முடியாது என்று சொன்னால் தயவு செய்து நான் கலந்து கொண்டால் ஜெயிக்கக் கூடிய இரண்டு முதல் பரிசுகளை சிறப்புப் பரிசுகள் என்று சொல்லி எனக்கு அனுப்பி விடுங்கள்..!

தமிழ்மணமே.. நீங்கள் நடத்துகின்ற இந்தப் போட்டியை வரவேற்று தனியா ஒரு பதிவு போட்டு வாழ்த்தியவன் இந்த உண்மைத்தமிழ் என்பதையும் போகிறபோக்கில் மறந்துவிடாதே..!

இல்லைன்னா.. தமிழ்மணத்தின் எதிர்க்கும் புல்லுருவிகளின் கூட்டத்தில் ஒருவனாக நானும் மாறிவிடுவேன் என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..!

அப்பனே முருகா.. என்னே உனது விளையாட்டு.. ஆயிரம் ரூபாயைக்கூட பரிசா வாங்கக் கூடாதுன்னு நினைக்குற பாரு.. நீதாண்டா கடவுள்.. நீதாண்டா தெய்வம்.. நீதாண்டா சாமி..

முருகனுக்கு அரோகரா..! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..

டிஸ்கி : சென்னையில் உள்ள எலுமிச்சை பழம் வியாபாரிகள் உண்மைத்தமிழன் பிளாக்கை மீட்க ஆர்வமாக உள்ளனர். காரணம் கேட்டதற்கு பதில் கூற மறுத்து விட்டனர். அண்ணே நீங்களாவது சொல்லுங்களேன்.

33 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))

உண்மைத்தமிழன் said...

[[[டிஸ்கி : சென்னையில் உள்ள எலுமிச்சை பழம் வியாபாரிகள் உண்மைத்தமிழன் பிளாக்கை மீட்க ஆர்வமாக உள்ளனர். காரணம் கேட்டதற்கு பதில் கூற மறுத்து விட்டனர். அண்ணே நீங்களாவது சொல்லுங்களேன்.]]]

மொத்தப் பேரையும் டேமேஜ் பண்ணிட்டியேண்ணே..!

இந்தக் குத்தலை மிகவும் ரசித்தேன்..

நன்றி.. நன்றி.. நன்றி..!

Ashok D said...

இக்கி இக்கி

அண்ணன் உ.த. பிளாக்குக்கு என்ன ஆச்சு? தயவுசெய்து யாராவது கொல் சாரி சொல்லுங்களேன்..

Ramprasath said...

நம்ம தளமும் “http://stopbribe.blogspot.com/” வச்சுடான்யா ஆப்பு Under Arrest, 5 நாளாச்சு, Google-டமிருந்து எந்த பதிலும் இல்லை,தளத்தை மீட்க யாருக்காவது வழி தெரிந்தா சொல்லுங்களேன்.

தேவன் மாயம் said...

மொத்தப் பேரையும் டேமேஜ் பண்ணிட்டியேண்ணே..!

இந்தக் குத்தலை மிகவும் ரசித்தேன்..

நன்றி.. நன்றி.. நன்றி..!

December 5, 2009 10:25 PM//

துன்பம் வரும் நேரத்திலும் ரசிக்கிறாரே!! உண்மைத்தமிழன் நீங்க ரொம்ப நல்லவருங்க!! 4/4!

ஹரிணி அம்மா said...

தளங்களையுமாப்பா? முருகா!! ஒரு வழி சொல்லுப்பா!!

வெற்றி said...

ஹா ஹா ஹா.......டிஸ்கி சூப்பர்.......

gulf-tamilan said...

:)))
இதுதானா காரணம்!!!

Ramprasath said...

Malicious software includes 4 scripting exploit(s). Successful infection resulted in an average of 1 new process(es) on the target machine.

Malicious software is hosted on 2 domain(s), including riosv.com/, kjremover.info/.

1 domain(s) appear to be functioning as intermediaries for distributing malware to visitors of this site, including tamilish.com/.

This site was hosted on 1 network(s) including AS15169 (Google Internet Backbone).

vasu balaji said...

குசும்புக்கு அளவே இல்லையாண்ணே=))

butterfly Surya said...

மணிஜீ. பாவம் உ.த ..

ஏண்ணே இப்படி..??

ஆனாலும் உங்க ஸ்டைல் வழக்கம் போல் சூப்பர்.

cheena (சீனா) said...

அடடே தண்டோரா - பாவம் இல்லையா உ.த - வருத்தத்தில் இருக்கும் அவரை கிண்டல் பன்ணுவது சரிதானா - உரிமையொடு செயயப்ப்டுகிறதா - ம்ம்ம்ம் - அவரும் இயல்பாக எடுத்துக் கொள்கிறார்.

வாழ்க உங்கள் நட்பு

கலகலப்ரியா said...

=))

இராகவன் நைஜிரியா said...

அண்ணே என்னாது இது..

அய்யோ பாவம் நம்ம உ.த. அண்ணன்..

ஹேமா said...

கடவுள்ன்னா இப்பிடியெல்லாம் செய்யணும்.அப்பதான் மதிப்பீங்க !

ரவி said...

இந்த பதிவின் மூலம் அண்ணனுக்கு விடுக்கும் சேதி என்னவென்றால்...

1. கூகிள் உங்கள் பதிவை 90 நாட்களுக்குள் டேஷ் போர்டில் காட்டுமாம்.

2. நீங்கள் கடைசியாக எழுதிய நானூறு பதிவுகளுக்கு மேல் என்னிடம் உள்ளது.புதிய பதிவொன்றை உருவாக்கி அதில் அந்த இரண்டையும் போட்டு தமிழமணத்துக்கு அனுப்பி போட்டி ஆட்டத்தில் சேர்க்கும்படி கோரலாம். தொடர்ந்து அந்த புது பதிவிலேயே எழுத ஆரம்பித்தால், உங்கள் பதிவு உங்களுக்கு திரும்ப கிடைக்கும்போது புதிய பதிவில் இருந்து அனைத்து பதிவுகளை எக்ஸ்போர்ட் செய்து பழைய பதிவில் இம்போர்ட் செய்துகொள்ளலாம்.

தண்டோரா இதை போன் போட்டு உண்மை அண்ணனிடம் தெரிவித்துவிடுங்கள்.......

ஜோதிஜி said...

துன்பம் வரும் நேரத்திலும் ரசிக்கிறாரே!! உண்மைத்தமிழன் நீங்க ரொம்ப நல்லவருங்க

மௌனியும் செந்தழல் ரவியும் ஹேமா சொன்னதற்காக அனுப்பப்பட்டவர்கள்.

கிரி said...

எங்க தண்டோரா! பாவங்க உண்மைத்தமிழன் ...No kindal Pls

பூங்குன்றன்.வே said...

//அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், சி.ஐ.ஏ., எஃப்.பி.ஐ. என்கிற ஒட்டுண்ணிக் கும்பலையும் தன்னந்தனியாக நான் ஒருவனே எதிர்த்து நிற்பதால்//

சொல்லவே இல்ல :)

உ.த.விற்கு பதிவை போட்ட அண்ணன் தண்டோரா வாழ்க.
அண்ணனின் குத்தலை ரசிக்கும் உ.த வாழ்க.
பதிவை மீட்க யோசனை தரும் நம்ம செந்தழல் ரவி வாழ்க.
உ.த.வின் தளத்தை மீண்டும் ஆவலோடு எதிர்பார்க்கும் என்னை போன்ற ரசிகர்களும் வாழ்க.

Cable சங்கர் said...

கொஞ்ச நாளாவது அவரோட டைப்ரேட்டருக்கு ஓய்வு கிடைக்கட்டும்யா.. நீ வேற..

Jerry Eshananda said...

கவலை வேண்டாம் தோழர்களே,"சதி செய்தவர்களை எப்படியும் பிடித்து ,கொரில்லா செல்லில் அடைத்து விடுவோம்."

geethappriyan said...

அய்யோ, அண்ணே பயந்து வருதே!:))

நிஜாம் கான் said...

அண்ணே! வெந்த புண்ணுல வெடிய வக்கிறியண்ணே! அவரது பலவருட பொக்கிஷங்கள் கேள்விக்குறியா இருக்குற இந்த நேரத்தில.., அதுல அவரும் பின்னூட்டம் போட்டு கலக்கிட்டாரு..

சிநேகிதன் அக்பர் said...

சதி செஞ்சவனுக்கு சரியான தண்டனை ஒரே நேரத்தில் அவரோட 10 பதிவுகளை பின்னூட்டத்தோட சேர்த்துபடிக்க வைக்கனும்.:)

உ.த க்கு என்ன ஆச்சு. யாருமே சரியான பதில் சொல்லமாட்டிங்கிறீங்களே.

உண்மைத்தமிழன் said...

[[[செந்தழல் ரவி said...

இந்த பதிவின் மூலம் அண்ணனுக்கு விடுக்கும் சேதி என்னவென்றால்...

1. கூகிள் உங்கள் பதிவை 90 நாட்களுக்குள் டேஷ் போர்டில் காட்டுமாம்.

2. நீங்கள் கடைசியாக எழுதிய நானூறு பதிவுகளுக்கு மேல் என்னிடம் உள்ளது. புதிய பதிவொன்றை உருவாக்கி அதில் அந்த இரண்டையும் போட்டு தமிழமணத்துக்கு அனுப்பி போட்டி ஆட்டத்தில் சேர்க்கும்படி கோரலாம். தொடர்ந்து அந்த புது பதிவிலேயே எழுத ஆரம்பித்தால், உங்கள் பதிவு உங்களுக்கு திரும்ப கிடைக்கும்போது புதிய பதிவில் இருந்து அனைத்து பதிவுகளை எக்ஸ்போர்ட் செய்து பழைய பதிவில் இம்போர்ட் செய்துகொள்ளலாம்.

தண்டோரா இதை போன் போட்டு உண்மை அண்ணனிடம் தெரிவித்துவிடுங்கள்.......]]]

தம்பீ..

கடந்த செப்டம்பர் மாதம் முடிய நானே பேக்கப் வைத்துள்ளேன்.

ஆனால் அந்த பேக்கப்பை புதிய வலைப்பூவில் இணைக்க முடியவில்லை. இம்போர்ட் ஆப்ஷன் கொடுத்த பின்பு சிஸ்டமே ஹேங் ஆகிவிடுகிறது.

ஒரு இரவு முழுவதும் 12 மணி நேரம் அப்படியே ஆன் செய்து வைத்தேன். ஒன்றும் நடக்கவில்லை.

பேக்கப் கொஞ்சமான சைஸ்தான்.. வெறும் 42 எம்.பி. அளவுதான் உள்ளது. இதை எப்படி இம்போர்ட் செய்வது..?

உன்னால் முடியுமெனில் நீயே ஒரு வலைப்பூவை உருவாக்கி இம்போர்ட் செய்து அனுப்பி வை..!

சென்னைக்கு வரும்போது "கவனிக்கிறேன்.."

Starjan (ஸ்டார்ஜன்) said...
This comment has been removed by the author.
Starjan (ஸ்டார்ஜன்) said...

உண்மைத் தமிழா பொங்கி எழுக‌ ! பொறுத்தது போதும் !!

Cable சங்கர் said...

/ஆனால் அந்த பேக்கப்பை புதிய வலைப்பூவில் இணைக்க முடியவில்லை. இம்போர்ட் ஆப்ஷன் கொடுத்த பின்பு சிஸ்டமே ஹேங் ஆகிவிடுகிறது.//

கொஞ்சமா எழுதியிருந்தானே..பின்ன ஹாங் ஆகமா என்ன செய்யும்.

உண்மைத்தமிழன் said...

[[[Cable Sankar said...

/ஆனால் அந்த பேக்கப்பை புதிய வலைப்பூவில் இணைக்க முடியவில்லை. இம்போர்ட் ஆப்ஷன் கொடுத்த பின்பு சிஸ்டமே ஹேங் ஆகிவிடுகிறது.//

கொஞ்சமா எழுதியிருந்தானே. பின்ன ஹாங் ஆகமா என்ன செய்யும்.]]]

செய்றதையெல்லாம் செஞ்சுபோட்டு நக்கல் வேற பண்றியா..?

எனக்கும் ஒரு நேரம் வரும்டி.. அப்ப பேசிக்கிறேன்..!

Thamira said...

உண்மையில் வருத்தமும், பின்னூட்டங்களால் கொஞ்சம் ரிலீஃபும் கிடைக்கின்றன.

ராமலக்ஷ்மி said...

@ உண்மைத் தமிழன்,

கூடிய சீக்கிரம் உங்கள் ப்ளாக் மீட்கப்படுமென் நம்புவோம். நல்லது நடக்கக் காத்திருப்போம்.

Anonymous said...

மணி பாவம் சரவணன். ரெம்ப ஓட்டாதீங்க.

உண்மைத்தமிழன் said...

பின்னூட்டத்தில் எனக்கு ஆறுதல் சொன்ன அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்..!

புதிய பதிவை துவக்கிவிட்டேன். அங்கும் வந்து எனக்கு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..

www.unmaithamilan.blogspot.com