Thursday, December 17, 2009

அர்த்தமில்லாத கவிதைகள்பிரி என்றும்
பிரிக்காதே என்றும்
போராட்டமாம்
சீந்துவாரின்றி கிடக்கிறேன்
உலையில்

இருப்பது ஒன்று
போவதும் ஒருமுறைதான்
பிரவாகமாய் வெடித்தான்
தானைத் தலைவன்
அவன் பவளவிழாவில்
தீக்குளித்த தொண்டன்
மனைவியின் வயிற்றில்
ஆறுமாத வாரிசு

எங்கள் ஆட்சியில்
எட்டும், ஒன்றும் பத்து
உங்களுக்கு ஒன்று அதில்
ஆர்ப்பரித்த கூட்டம்
ஒன்றை வாங்கிகொண்டது
ஒன்பதை சமமாக பிரித்தான்
தலைவன்
ஆளுக்கு மூன்று என்று

இல்லம் தானம்
இந்த உடலும் தானம்
பக்கம் பக்கமாய்
தம்பட்டம்
நாட்டையே தானமாய்
தந்து விட்ட நம்மைத்தான்
கண்டு கொள்வதாய்
இல்லை யாரும்

34 comments:

உண்மைத்தமிழன் said...

கன்னா பின்னாவென்று வழிமொழிகிறேன்..! சூப்பருங்கண்ணே..!

Raju said...

அப்புடிப்போடு அருவாள..!

நையாண்டி நைனா said...

சூபரண்ணே...

இப்படிக்கு
"பின்னூட்ட புயல்" அண்ணன் உண்மைதமிழனின்
உண்மை தொண்டன்
நையாண்டி நைனா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கன்னா பின்னாவென்று வழிமொழிகிறேன்..! சூப்பருங்கண்ணே..!//

I second it

பெசொவி said...

புரிந்தும்
புரியாமலும்
தெரிந்தும்
தெரியாமலும்
அறிந்தும்
அறியாமலும்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
வழிந்தும்
வழியாமலும்
சொல்லுகிறேன்...........சூப்பர் அண்ணே!

க‌ரிச‌ல்கார‌ன் said...

க‌ல‌க்க‌ல் ன்னோய்

பா.ராஜாராம் said...

அர்த்தம் இருக்கு.

க.பாலாசி said...

//அவன் பவளவிழாவில்
தீக்குளித்த தொண்டன்
மனைவியின் வயிற்றில்
ஆறுமாத வாரிசு//

உண்மைதான்.

butterfly Surya said...

எந்த அர்த்தமும் இல்லாத கவிதைகள் நிறைய எழுதுங்கஜி..

போட்டு தாக்கு... xlent.

இராஜ ப்ரியன் said...

அருமை ............

Paleo God said...

உதடுக்குள் நற நறன்னு எங்கேயும் கேக்கும் சத்தத்தின் அர்த்தம் இதுதானா???

SUPER SIR....

அகநாழிகை said...

ரொம்ப ஓவர்,
கவிதையில்
சூடு.

ஆனா, எவ்வளவு சூடு வெச்சாலும்
தாங்கறாங்களே..

ஜெட்லி... said...

//போட்டு தாக்கு... xlent.
//

repeatae

vasu balaji said...

எவ்வளவு அர்த்தமான கவிதை! வ்யர்த்தமாகும் கவிதைகள்னு வெச்சிருக்கலாம். என்னாஆஆ அடி!

Ashok D said...

"அர்த்தமில்லாத கவிதைகள்"
நாட்டு நடப்பு

செ.சரவணக்குமார் said...

//இல்லம் தானம்
இந்த உடலும் தானம்
பக்கம் பக்கமாய்
தம்பட்டம்
நாட்டையே தானமாய்
தந்து விட்ட நம்மைத்தான்
கண்டு கொள்வதாய்
இல்லை யாரும்//

ரொம்ப நல்லாயிருக்கு தலைவரே.

பூங்குன்றன்.வே said...

கவிதை மிக நன்று பாஸ் :)

Unknown said...

போட்டு தாக்குறீங்க..

மண்குதிரை said...

பிரித்தல் நலம்.

sathishsangkavi.blogspot.com said...

நல்லாயிருக்குங்க.........

VISA said...

//இல்லம் தானம்
இந்த உடலும் தானம்
பக்கம் பக்கமாய்
தம்பட்டம்
நாட்டையே தானமாய்
தந்து விட்ட நம்மைத்தான்
கண்டு கொள்வதாய்
இல்லை யாரும்//

அய்யா தலைவா உன் கைய கொஞ்சம் குடு......பின்னல்.

கலையரசன் said...

என்ன போடுறதுன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்.....

Unknown said...

பொருத்தமான தலைப்பு

Cable சங்கர் said...

தண்டோரா இப்பவே சொல்லிட்டேன் யார் எதை தானம் கொடுத்தாலும் பிரிக்கிறதுன்னு முடிவுக்கு வந்திட்டா கேட்டுக்கு அந்த பக்கம் உங்களது.. இந்த பக்கம் என்னுது என்ன.. சரியா..?

Beski said...

எப்பத்துல இருந்து அர்த்தமில்லாக் கவிதை ஆரம்பிச்சது? இப்பத்தான் பாக்குறேன்...

//தண்டோரா இப்பவே சொல்லிட்டேன் யார் எதை தானம் கொடுத்தாலும் பிரிக்கிறதுன்னு முடிவுக்கு வந்திட்டா கேட்டுக்கு அந்த பக்கம் உங்களது.. இந்த பக்கம் என்னுது என்ன.. சரியா..?//
கேட்டு என்னது?

ஹேமா said...

கவிதை நல்லா...ருக்கு.
அர்த்தமிருக்கு.ஆனா அங்கயும் இங்கயுமா பிரிஞ்சு கிடக்கு.

Beski said...

// ஹேமா said...
ஆனா அங்கயும் இங்கயுமா பிரிஞ்சு கிடக்கு.//
நீங்க கவிதயத்தான சொன்னீங்க?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

கன்னா பின்னாவென்று வழிமொழிகிறேன்..! சூப்பருங்கண்ணே..!//

Repeat.

geethappriyan said...

நாட்டையே தானமாய்
தந்து விட்ட நம்மைத்தான்
கண்டு கொள்வதாய்
இல்லை யாரும்//

உண்மைதானுங்கண்ணா

அண்ணாமலையான் said...

உண்மைய சொன்னாலும் உறைக்காத மக்கள் மத்தியில் சொல்லி என்ன பிரயோஜனம்? சோற்றாலடித்த பிண்டங்கள்..பிரமாதம் தல...செருப்பால அடிச்சா மாதிரி சொன்னீங்க....
(கெட்ட வார்த்தைகள் நெறய வருது.. ஆனா வேனாம்னு...எழுதல...)

கமலேஷ் said...

"அர்த்தமில்லாத கவிதைகள்"
நாட்டு நடப்பு

கலகலப்ரியா said...

அர்த்தமில்லா கவிதைதான்.. =)).. superb.. as usual..

மணிஜி said...

வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே..

CS. Mohan Kumar said...

அருமை சாமி.. கடைசி வரி ரொம்ப கரக்ட்டு