Wednesday, December 9, 2009

கண்மணி அன்போடு...நலமறிய ஆவல்...



சமீபத்தில் உறவினர் ஒருவர் அழைத்து தஞ்சாவூர் வீட்டு விலாசம் வேண்டும்,பத்திரிக்கை அனுப்பனும் என்றார். எவ்வளவு யோசித்தும் நினைவுக்கே வரவில்லை..காரணம் கடிதம் எழுதும் பழக்கமே முற்றிலும் ஒழிந்து போனதுதான். பிறகு தம்பிக்கு போன் பண்ணி விலாசம் வாங்கி கொடுத்தேன்.

தஞ்சையில் கல்லுரியில் படித்து கொண்டிருக்கும் போது(???)சினிமா மோகம் தலைக்கேறி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சென்னைக்கு வர நினைத்த போது அப்பா..என்னவாவது பண்ணி த் தொலை...என்று சொல்லி விட்டார்..அம்மா என்ன ஆசையோ செய்..ஆனால் வாரத்துக்கு ஒரு கடிதம் கண்டிப்பா போடனும் என்று சொல்லி விட்டாள்.ஒரு சுப தினத்தில் படிப்பை (வராத)மூட்டை கட்டி விட்டு விடை கொடுத்தேன் தஞ்சைக்கு..கிளம்பும்போது அம்மா செலவுக்கு பணமும் ஒரு 50 போஸ்ட் கார்டுகளும் கொடுத்தாள். அத்தனையும் சுய விலாசமிட்டவை. .நீ ஒண்ணும் பண்ண வேண்டாம் .. எதாவது எழுதி வாரம் ஓண்ணு அனுப்பு போதும் என்றாள்.அதன் பின் சென்னை வந்து சந்தி சிரிச்சு.கால் வயிறு,அரை வயிறு காஞ்சு அதெல்லாம் தனி கதை..

இப்பவும் ஊருக்கு போவதென்றால் மனம் இறக்கை கட்டித்தான் பறக்கிறது..காரணம் பல..ராமனாதன் பார்(செல்லமா சபா) நான் சென்னையில் இருந்தாலும் நண்பர்கள் கூடி குடிக்கும்போது ஒரு இருக்கை காலியாகவே இருக்கும்(எனக்காம்)அதன் முன் ஒரு கிளாஸ்..அதில் சரக்கு..எல்லாம் முடிந்தவுடன் அதை கடைசியில் பங்கிட்டு குடிப்பார்களாம்..(அதாவது நான் இங்கு த(ண்) னி "குடி"த்தனம்..அவர்கள் கூட்டு "குடி" த்தனம்". பின் காபி பேலஸ் ரவா தோசை,நைட்டு ரோட்டு கடை இட்லி பூண்டு சட்னி,தேவர் பிரியாணி, காமாட்சி மெஸ் விரால் மீன் மண்டை,வறுவல்,சினிமா(நைட் ஷோ)....எல்லாவற்றுகும் மேல் அவள் குடியிருந்த வீடு,கோயில் பிரகாரங்கள்..அங்கு நடந்த கொடுக்கல்/வாங்கல்கள்(கடிதம் மட்டுமல்ல)(அவளோடு சேர்ந்து பார்த்த முதல் படம்..அதாவது அவள் அவள் குடும்பத்தோடு/ நான் நண்பர்களுடன்..படம் "திசை மாறிய பறவைகள்"

ம்ம்ம்..நிணைவுகள் தான் எத்தனை சுகமானவை...

பதிவர் மாதவராஜ் அழைத்தார். அவர் வெளிக்கொணரும் “பூக்களிலிருந்து நான்கு புத்தகங்கள்” தொகுப்பில் என் கவிதையும் இடம் பெறுகிறது என்று காதில் தேன் பாய்ச்சினார். எனக்கும் மிகவும் பிடித்த கவிதை அது. தமிழ்மண போட்டியில் கூட அந்த கவிதையைதான் பரிந்துரை செய்திருக்கிறேன்.




அந்தரங்க சாட்சியாய்...

இந்த இரும்பு பாதை
முடியும் இடத்தில்
ஒரு நகரம்
இருந்தது..

இன்று
அது இல்லை
காற்றில் கலந்திருக்கும்
ரத்த வாசம்
மட்டுமே
மிச்சமாயிருக்கிறது

தினம் விடியலில்
தன்னை
புதுப்பித்துக் கொள்ளும்
அழகான
இயற்கை
மட்டுமே
அந்தரங்க
சாட்சியாயிருக்கிறது..

மெலிதாய்
கேட்டுக்கொண்டிருந்த
முனகல்களும்
ஓய்ந்து விட்டன..

இடமும் வலமுமாய்
நெளியும் இந்த
வழியேதான்
கடைசியாக கடந்து
போனது ஆர்மி ரயில்

இவைகளுக்குள்
பறிமாறிக்
கொள்ளப்படும்
தடக்..தடக்
மொழியும்
அதிர்வும்
இனி இல்லை..

அந்த நகரம்
முற்றிலுமாய்
அழிக்கப்பட்டு
விட்டது...

நீங்கள்
இந்த பாதையின்
வழியே சென்று
இடதுபுறம்
திரும்பி
பாருங்கள்

அங்கே
இரண்டும்
ஒன்றோடு
ஒன்று
பிண்ணி
பிணைந்திருக்கலாம்
சாரைகளாய்..

24 comments:

butterfly Surya said...

படிச்சிட்டு அப்புறம் வரேன்.

butterfly Surya said...

பழைய பதிவு தான் .ஆனால் புதிய செய்தி.

வாழ்த்துகள் ஜி..

butterfly Surya said...

சரி.. டீரிட் எப்போ..??

க.பாலாசி said...

கவிதை நன்றாக உள்ளது.

எத்தனையோ இழந்துவிட்டோம்...அதில் கடிதங்களும் ஒன்று...

shortfilmindia.com said...

ஏதோ கவிதை என்னளவில் இல்லாட்டாலும்.. ஓரளவுக்கு ஓகேயா எழுதியிருக்கீங்க.. கீப் இட் அப்..:)

கேபிள் சங்கர்

கலையரசன் said...

//கூடி குடிக்கும்போது ஒரு இருக்கை காலியாகவே இருக்கும்(எனக்காம்)அதன் முன் ஒரு கிளாஸ்..அதில் சரக்கு..எல்லாம் முடிந்தவுடன் அதை கடைசியில் பங்கிட்டு குடிப்பார்களாம்..//

அட! என் நண்பர்களையும் நினைவுப்படுத்திட்டீங்களே அண்ணாச்சி... ஆனாலும், இங்கு புது நண்பர்கள் சேர்த்துகிட்டு குடிக்கிறேங்கறது வேற விசயம்...

வாழ்த்துக்கள்! அந்த கவிதை, புத்தகத்தில் வர இருப்பதற்க்கு..

Ashok D said...

:)

vasu balaji said...

வாழ்த்துகள் சார்.

Jerry Eshananda said...

வாழ்த்துகள்

Kumky said...

தகுதியான கவிதைதான்...
அதில் கடைசி வார்த்தை தவிர்த்திருக்கலாமோ என தோன்றுகிறது...”சாரைகளாய்”...
இதற்கு முன்னரே கவிதை முடிந்து விடுகிறது இல்லையா...?

ஊர்...நினைவு...ஏக்கம்...
ப்ரகாரங்களின் கதை ஏதேனும் தொடருமா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள்! கவிதை, புத்தகத்தில் வர இருப்பதற்கு..

அத்திரி said...

உரையாடல் போட்டி வந்தாலும் வந்தது.....ஆளாளுக்கு கிளம்பிட்டாங்கய்யா

பூங்குன்றன்.வே said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு.ஆனால் கொஞ்சம் வலி தருகிறது.
நீங்கள் சொன்னது போல கடிதம் எழுதும் பழக்கம் சுத்தமாக இப்போ இல்ல.போஸ்ட் ஆபிஸ் பக்கம் போயே பல வருடங்கள் ஆகி விட்டது ஸார்.

தேவன் மாயம் said...

இப்பவும் ஊருக்கு போவதென்றால் மனம் இறக்கை கட்டித்தான் பறக்கிறது..காரணம் பல..ராமனாதன் பார்(செல்லமா சபா) நான் சென்னையில் இருந்தாலும் நண்பர்கள் கூடி குடிக்கும்போது ஒரு இருக்கை காலியாகவே இருக்கும்(எனக்காம்)அதன் முன் ஒரு கிளாஸ்..அதில் சரக்கு..எல்லாம் முடிந்தவுடன் அதை கடைசியில் பங்கிட்டு குடிப்பார்களாம்.//


என்னே நட்பு!! வியக்கிறேன்.

தேவன் மாயம் said...

தேவர் பிரியாணி, காமாட்சி மெஸ் - ரெண்டுமே நல்லாயிருக்கும்!!

cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் தண்டோரா

பா.ராஜாராம் said...

மீண்டுமொரு அற்புதமான ரெக்கை அடிப்பு!

இப்ப தொடங்கிய நம் நட்பிலேயே எவ்வளவோ மிஸ் பண்ண வேண்டியதிருக்கு மணிஜி.

நண்பர்களுக்கு தர நம்மை மாதிரி ஆட்களுக்கு என்ன இருக்கு?உண்மையை தவிர...

துருவே பிடித்து கிடந்தாலும் உண்மை எப்பவும் உண்மைதானே மணிஜி?

ரொம்ப நல்ல கவிதை!நன்றியும் அன்பும் மாதவன்!

வாழ்த்துக்கள் தஞ்சாவூரான்!

உண்மைத்தமிழன் said...

அண்ணே.. என் சிஸ்டத்துல மறுபடியும் ஒரு பிரச்சினை.. ஓட்டுப் போட முடியலை.. என்ன செய்யறது..?

கலகலப்ரியா said...

testin... 1.. 2. . 3

கலகலப்ரியா said...

uff...

//எனக்கும் மிகவும் பிடித்த கவிதை அது//

எமக்கும்..!

Unknown said...

கவிதை அருமை..

//.. ஏதோ கவிதை என்னளவில் இல்லாட்டாலும்.. ஓரளவுக்கு ஓகேயா எழுதியிருக்கீங்க ..//

போற பக்கம் இவுரு தொல்ல தாங்கமுடியல.. :)

மணிஜி said...

நண்பர்கள் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிகள்

Cable சங்கர் said...

அண்ணே.. என் சிஸ்டத்துல மறுபடியும் ஒரு பிரச்சினை.. ஓட்டுப் போட முடியலை.. என்ன செய்யறது..?
//

முதல்ல சிஸ்டத்தை கையில எடுத்துட்டு உங்களையே மூணு முறை சுத்தி கீழே டமால்னு போட்டுட்டு திரும்பி பாக்காம வாஙக் சரியாயிரும்..:) அதை கொஞ்ச நாளாவது ரெஸ்ட் கொடுய்யா

மரா said...

தல நம்ம ஊர் பெருமையெல்லாம் நினைவுப்படுத்திட்டிங்களே......மருந்தமறந்து இருந்தேன்......சீக்கிரம் ஒருநாள் சந்திப்போம்... ...லிஸ்ட்ல மெடிக்கல் காலேஜ் பர்ஸ்ட் கேட் தோசைக்கடையயும், அசோகா அல்வாவும் விட்டுப் போச்சே..... கலக்குங்க