Monday, December 7, 2009

மானிட்டர் பக்கங்கள்…………..07/12/09

drum-01

ஹெட்மாஸ்டர் சார்.. அந்த பையன் கிளாசுக்கே வர்றதில்லை. எப்படி முதல் ரேங்கில் பாஸ் பண்றான்..?

சும்மா இருங்க.. அவன் காதுல விழுந்தது.. தொலைஞ்சீங்க.

என்ன சார் இப்படி பயபடறீங்க?

யோவ்.. அவன் மந்திரி புள்ளையா!!

காலம் ஓடோடி போனது. மந்திரி புள்ளை வர்ணாசிரம தர்மப்படி மந்திரி ஆகிவிட்டார். அவர் துறையில் விவாதம் நடக்கிறது. ஆனால் மந்திரி வரவில்லை. வாழ்க...வளர்க... பூச்சி மருந்து அடிச்சாலும் இனி பிரயோசனமில்லை.. ஓசி வாங்கி ஓட்டு போடும் மக்களுக்கு அது பற்றி என்ன கவலை? சபைக்கு ஆள் வரலைன்னா, செலவை ஏத்துக்கணும், சஸ்பெண்ட் பண்ணனும் .. இப்படி நிறைய பேர் டிவியில் கருத்து சொன்னார்கள். நான் சொல்றேன். சம்பந்தபட்ட ஆளை தொகுதிக்கு வரவழைத்து ஆளுக்கொரு குட்டு நங்குன்னு!!!

இரண்டு வாரங்களுக்கு முன் ஞானி எழுப்பிய ஒரு கேள்வி அதிகம் கவனிக்கப்படாமலே மறைந்தது... கல்லூரி படிப்பை முடித்த ஒரு இளைஞன். எந்த வேலைக்கும் போனதில்லை. எப்படி பத்து கோடி ரூபாயில் ஒரு திரைப்படம் தயாரிக்க முடிகிறது. பாவம் ஞானி. அவர்கள் ஆளுக்கொரு 500 ரூ கொடுங்கள். வண்ணக்கோலம் படைக்கிறேன் என்று மேடை போட்டு பணம் வசூலிக்க வேண்டுமா என்ன? அந்த இளைஞன் என்ன ? தெருவிளக்கில் படித்தா பட்டம் வாங்கினார். மந்திரி பரம்பரையப்பா.

வந்தவாசி தொகுதி கலரே மாறிவிட்டதாம். அட ..ரேஷன் அரிசி கூட.. கொல்லங்குடி கருப்பாயி கலர் இருந்த அரிசி முன்னாள் கன்னியாகுமரி தாசில்தார் நிர்மலா அம்மையார் நிறத்துக்கு மாறியதன் பிண்ணனியில் உணவு அமைச்சர் ஏ.வ .வேலு இருப்பார் என்று நம்புவோம்..(அவர்தான் அம்மையாரின் நிறத்தை புகழ்ந்தவர்..)

சம்பாதிக்கிற காசையெல்லாம் அங்கதான் அழிக்கிறோம். நீங்க இலவசமா கொடுத்த கலர் டிவியையும் வித்து குடிக்கிறோம். ஆனா சரக்கு போதையே ஏற மாட்டேங்குது. இப்படி மானாவாரியா புகார் வந்ததும் காவல்துறை சுதாரித்து கொண்டது. குடிகளுக்கு இப்படியா என்று டாஸ்மாக்கிற்கு ரெய்டு போனார்கள். உள்ளே நம்மாளுங்க மாநகராட்சி இடைத்தேர்தல் கணக்கா களப்பணியில் ஈடுபட்டிருந்தார்கள். எவனோ லோக்கல் ஜி.டி.நாயுடு கண்டுபிடிச்சு கொடுத்த தொழில்நுட்பத்தின்படி உள் இருக்கும் சரக்கை எடுத்து விட்டு எச்.2 .ஓ வை கலந்து கொண்டிருந்தார்கள். டாணாகாரர்களை கண்டதும் வுடு ஜீட். அப்புறம் நம்ம காக்கிகள் விடிய,விடிய காவல்தான்.

சென்ற வாரம் நண்பரின் பைக் விபத்துக்குள்ளானது. புகார் கொடுக்க போனோம். முன்பெல்லாம் பேப்பர், பேனா வாங்கி வர சொல்வார்கள். டெக்னாலஜி இம்ப்ரூவ் ஆயிடுச்சில்ல.. அந்த காக்கி வில்ஸ் கேட்டது. டொகொமோ ரீசார்ஜ்(120 ரூ)..

சைதாப்பேட்டை பாலத்தில் டிராபிக் ஊர்ந்து கொண்டிருந்தது. காரில் அலுவலகம் (??) போய் கொண்டிருந்தேன். மொபைல் அடிக்க, பார்த்தால் கிளையண்ட். சார் திரும்பவும் அழைக்கிறேன்னு சொல்லிவிட்டு துண்டித்தேன். மூக்கில் வியர்த்த கழுகாய் இரு போக்கு”வரத்து” காவலர்கள் மடக்கினார்கள்.தினத்தந்தி மொழியில் பாய்ந்து பைக்கில் வந்தார்கள். கார் ஓரம் கட்டப்பட்டது.

டிரைவிங்கில் மொபைல் பேச கூடாது. 1200 ரூ அபராதம்.

சார் உடனே கட் பண்ணிட்டேனே..


ம்ம்.. நான் நீங்க பேசினதை பார்த்தேன். பேப்பர்ஸ் எடுங்க... எங்க வொர்க் பண்றீங்க?

பத்திரிக்கையில்!!

எந்த பத்திரிக்கை?

கல்யாண பத்திரிக்கை..

நக்கலா?


இல்லீங்க. கல்யாணமாலைன்னு மேட்ரிமோனியல் மேகசின். நீங்க கூட ஹெல்மெட்டை டேங்க் மேல வச்சிருக்கீங்க. பிராக்டிக்கலா பாருங்க சார்..

சரி 250 ரூ கொடுத்துட்டு கிளம்புங்க..

காசை கொடுத்து விட்டு அவனை முறைத்து பார்த்தேன். மானசீகமாக அந்த ரூபாயை கழித்தேன்.... (புரியாதவங்க விட்டுடுங்க..)

ஸ்லீப்பிங் ஜெயண்ட்ஸ் என்று தூர்தர்ஷனையும், பிஎஸ் என் எல்லையும் சொல்லலாம். மும்பை கம்பெனிகளெல்லாம் கஸ்டமர் கேரில் தமிழ் பேசும் ஆட்களை அமர்த்தியிருக்கிறார்கள். சென்னை தொலைபேசிக்கு போன் பண்ணினேன். எண் வாரியாக மொழித்தேர்வு. 4 ல் தமிழ். 4 ஐ தேர்வு செய்தேன். மறுமுனையில் மலையாளத்தில் எந்தா

வேணும்!! கொடுமைடா சாமி...

டிஸ்கி கவுஜை :

சோரம் போன மனைவி..

போதை மகன்

சீரழிந்த மகள்

கொலைக்கும் துணிந்த சகோதரன்

நாட்டை காட்டி கொடுக்கும் முதலாளி

எதற்கும் துணிந்த நண்பன்

இத்தனை பேரும்

ஒரே நாளில் ஒழிந்தார்கள்

சனியன் புடிச்ச டிவி ரிப்பேர்...

21 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

டிஸ்கி கவுஜை super

ஜெட்லி... said...

//எவனோ லோக்கல் ஜி.டி.நாயுடு கண்டுபிடிச்சு கொடுத்த தொழில்நுட்பத்தின்படி உள் இருக்கும் சரக்கை எடுத்து விட்டு எச்.2 .ஓ //

//நிர்மலா அம்மையார் நிறத்துக்கு மாறியதன் பிண்ணனியில் உணவு அமைச்சர் ஏ.வ .வேலு இருப்பார் என்று நம்புவோம்//

செம நக்கல்..

Romeoboy said...

\\காசை கொடுத்து விட்டு அவனை முறைத்து பார்த்தேன். மானசீகமாக அந்த ரூபாயை கழித்தேன்.... (புரியாதவங்க விட்டுடுங்க.)//

ரைட் விட்டாச்சு ...

சரக்கு செம காட்ட இருக்கு தல .. ஊடாண்ட ஆட்டோ எதுனா சுத்துதா அடிகடி எட்டி பார்த்துக்கோ.

Raju said...

\\உணவு அமைச்சர் ஏ.வ .வேலு இருப்பார் என்று நம்புவோம்..(அவர்தான் அம்மையாரின் நிறத்தை புகழ்ந்தவர்..) \\

மெதுவா பேசுங்க அண்ணே..!
ரெய்டு வந்துறப் போறாப்ல.

vasu balaji said...

டிஸ்கி கவுஜ அசத்தல் அண்ணே.

/ அந்த இளைஞன் என்ன ? தெருவிளக்கில் படித்தா பட்டம் வாங்கினார். மந்திரி பரம்பரையப்பா. /

கல்லூரில ஒரு அத்தாட்சி இருக்கணும்னுதானே சேருறது. இல்லைன்ன உட்கார்ந்த இடத்தில் என்ன பட்டம் வேணுமுன்னாலும் போட்டு குடுப்பாங்களே.:))

Ashok D said...

திடீருன்னு என்ன ஆச்சு..ஜி.. பதிவு நல்லாவந்திருக்கே.. கவிஜ சூப்பரு...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//காசை கொடுத்து விட்டு அவனை முறைத்து பார்த்தேன். மானசீகமாக அந்த ரூபாயை கழித்தேன்.... (புரியாதவங்க விட்டுடுங்க..) //
எனக்குப் புரியுது.:-)))))))))))))))))

butterfly Surya said...

நக்கல் + கிண்டல் = தண்டோரா.

Cable சங்கர் said...

kavithai arumai..

கலகலப்ரியா said...

கலக்கல்..! டிஸ்கி சூப்பர்..!

ஈரோடு கதிர் said...

ரூபாயை கழித்தது மானசீகமாக புரிந்தது

பூங்குன்றன்.வே said...

//கல்லூரி படிப்பை முடித்த ஒரு இளைஞன். எந்த வேலைக்கும் போனதில்லை. எப்படி பத்து கோடி ரூபாயில் ஒரு திரைப்படம் தயாரிக்க முடிகிறது.//

புரியுது பாஸ்..என்ன செய்யலாம்?

// எந்த பத்திரிக்கை?

கல்யாண பத்திரிக்கை..//

அந்த போலீஸ் மாமா முகத்தை பார்க்கணுமே ??

sathishsangkavi.blogspot.com said...

நக்கல் எல்லாம் கலக்கல்................

Unknown said...

அந்த கார் நம்பரை சொல்லவில்லை.

துணைக்கு ஞானி

வேலுவும், நாச்சியாரும் நிறமாலை வெண்பா

பின்னி விட்டீர். சிக்கினால் வலைபின்னல்தான்

உண்மைத்தமிழன் said...

ஹைய்யா..

இன்னிக்கு எழுதின கவிதைதான் ஒரே தடவைல புரிஞ்சுச்சு..!

வாழ்க அண்ணன்..!

பெசொவி said...

மொத்தப் பதிவுமே அருமை... விறுவிறுப்பாகப் படித்தேன். (உங்கள் சங்கடங்கள்......எங்கள் சந்தோஷங்கள்!)
டிஸ்கி கவிதை அருமையிலும் அருமை.

வாழ்த்துகள்!

கலையரசன் said...

மானிட்டர் சூப்பர்ண்ணே...
அந்த கவுஜையில, எதற்கும் துணிந்த நண்பனுக்கு பதிலா... குழிபறிக்கும் நண்பன்னு இருந்தா.. இன்னம் நல்லாயிருக்குமோ?

ரோஸ்விக் said...

கவித மிக அருமை.

ஞானி கேக்குறதும் கரக்ட்டு தான்....உங்க பதிலும் கரைக்டு தான்...:-)

வினோத் கெளதம் said...

தல வழக்கம்போல் கலக்கல் கலக்கல்ஸ்..

மணிஜி said...

நண்பர்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்..

Ganesan said...

நிகழும் விசயங்களை நக்கலாக எழுதி , எழுதுவதில் வித்தியாசம் காட்டி இருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்