Thursday, December 10, 2009

எதிர்...புதிர்...


இடது, வலது
ஏறி, இறங்கி
மேலும்,கீழும்
சரியும்,தவறும்
நடத்தலும்,நிற்றலும்
முன்னும்,பின்னும்
அந்தப்புறம், இந்தப்புறம்
ஆணும்,பெண்ணும்
இதுவரை சரிதான்
ஆனால்
உனக்கும்,எனக்கும்
எனக்கும்,உனக்கும்
என்பதில் உடன்பாடில்லை
அது நான்,நீ என்று
திருத்தப்படுகிறது....
........................................................

அர்த்த ஜாம கனவொன்றில்
தனியனாய் அழுது கொண்டிருந்தேன்
பிணக்குவியல் மத்தியில்
விடிந்த பின் யோசித்தேன்
கனவுக்கான காரணியை
மெல்ல புலப்பட்டது
நான் சுயநலமில்லாதவன்
என்ற லேசான கர்வம்தான்
................................................................

22 comments:

Cable சங்கர் said...

ஒகே.. நான் நேரே வ்ந்து கேட்டுக்குறேன்.

எறும்பு said...

அண்ணே
ரெண்டும் நல்லாருக்கு...
எல்லா கவிதையும் இப்படி புரியிற மாதிரி iruntha....
remba nallarukum

அகநாழிகை said...

\\Cable Sankar said...
ஒகே.. நான் நேரே வ்ந்து கேட்டுக்குறேன்.\\

அருமை, பிடித்திருக்கிறது, வாழ்த்துகள்.

Romeoboy said...

எனது இது தல ?? கவிதையா ??

Ashok D said...

My choice is Second one, :)

எறும்பு said...

150 followersku அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

எறும்பு said...

150 followersku வாழ்த்துக்கள்
:-))

vasu balaji said...

அருமை!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லாருக்கு.

க.பாலாசி said...

//நான் சுயநலமில்லாதவன்
என்ற லேசான கர்வம்தான்//

அருமை,
நல்லாருக்கு...
வேறெதாவது
வார்த்தையிருந்தா
சொல்லலாம்...
யோசிக்கிறேன்...
ஆயினும்
அருமை
என்பதிலேயே
முடிகிறது என் பின்னூட்டம்.

சிவாஜி சங்கர் said...

//நான்,நீ என்று
திருத்தப்படுகிறது...// Supper Boss..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஒகே.. நான் நேரே வ்ந்து கேட்டுக்குறேன்//

நானும் தான்

உண்மைத்தமிழன் said...

நிறுத்தக் குறி.
தொடர்ச்சிக் குறி(கள்)..
ஆச்சரியக் குறி!!!

இவை எதுவுமின்றி..
வெறும் வரிகளைப்
படிக்கையில்...

முதலில்
எளிதில்
புரிவதில்லை..!

தாமதமான
புரிதலுக்கு
ஆசிரியரே
பொறுப்பு..!

பூங்குன்றன்.வே said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு பாஸ்.

//நிறுத்தக் குறி.
தொடர்ச்சிக் குறி(கள்)..
ஆச்சரியக் குறி!!!

இவை எதுவுமின்றி..
வெறும் வரிகளைப்
படிக்கையில்...

முதலில்
எளிதில்
புரிவதில்லை..!

தாமதமான
புரிதலுக்கு
ஆசிரியரே
பொறுப்பு..!//

ஆஹா...இப்ப உண்மைத்தமிழனும் என்டர் தட்ட ஆரம்பிச்சிட்டாரே...கேபிள் அண்ணே பார்த்துக்குங்க.

sathishsangkavi.blogspot.com said...

//நான் சுயநலமில்லாதவன்
என்ற லேசான கர்வம்தான்//

நல்லாருக்கு.......

Cable சங்கர் said...

/ஆஹா...இப்ப உண்மைத்தமிழனும் என்டர் தட்ட ஆரம்பிச்சிட்டாரே...கேபிள் அண்ணே பார்த்துக்குங்க.//

எதோ என்னால முடிஞ்ச சேவை..

Jerry Eshananda said...

குட் ஈவ்னிங்..

அத்திரி said...

அண்ணே வணக்கம்ணே

தேவன் மாயம் said...

//நான் சுயநலமில்லாதவன்
என்ற லேசான கர்வம்தான்//

இது சூப்பர்!

கலகலப்ரியா said...

மிக நன்று..!

மணிஜி said...

வருகைக்கு நன்றி நண்பர்களே...

geethappriyan said...

அண்ணே செம லொல்லு,சிரிப்போ சிரிப்பு,