
நெரிசலான பேருந்தில்
சிறு இடைவெளியில்
கூனி..குறுகி.. புகுந்து
சற்றே கிடைத்த இடத்தில்
கம்பியை பற்றி
ஆசுவாசம்..
முன்பக்கம் நெரிசலில்
பார்த்த முகம்..
நெடுநாள்
பார்க்காத முகமும்
கூட...
ஆருயிர் நண்பன்
அருகில் அழைக்கத்தான்
மனமில்லை
அடுத்த நிறுத்தத்தில்
கள்வனாய் இறங்கி
கும்பலில் கலந்தேன்
காரணம் ஒன்றும்
பெரிதாயில்லை
கடன் தான்.
பாவம்..
ஏன் அவன்
குற்ற உணர்வை
கூட்டி விட வேண்டும்?
மீண்டும் கேட்டால்
இல்லையென்று
மறுக்க முடியாத
இயலாமை..
இன்னொரு சொல்ல
விரும்பாத காரணமும்
கூட....
34 comments:
arumai! kalkunga saga!
super! continue
அப்பவே சொன்னேன் கேட்டீங்களா...
இப்போ கவிதை எழுதறீங்க.
கடன் அன்பை முறிக்கும் சரிதானே..?
அன்பு தண்டோ.....ரா....,
மிக இயல்பான, எளிமையான கவிதை. கடன் கொடுத்தவருக்கு நட்பின் பொருட்டு ஏற்படும் ஒரு குற்ற உணர்ச்சி, கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவரை பார்த்திருந்தால், எப்படி இறங்கி கூட்டத்தில் கலந்திருப்பான் என்று நினைக்க வைக்கிறது.
அழகாய் இருக்கிறது.
அன்புடன்
ராகவன்
elimai ezhuthiyirukiingka
vaasikkum poothum vera maari ninaichcheen
piRaku ungkal manasu puriyuthu
// மீண்டும் கேட்டால்இல்லையென்றுமறுக்க முடியாதஇயலாமை..
இன்னொரு சொல்லவிரும்பாத காரணமும்கூட....//
சூப்பர் அண்ணே... ரசிச்சேன்.
அருமை தண்டோரா அண்ணா.. :))
நீங்கத்தான் உண்மையான...கர்ணன்...கவிதையின் கோணம் முற்றிலும் மாறப்பட்டு இருந்தது வாழ்த்துக்கள்.
//இன்னொரு சொல்ல
விரும்பாத காரணமும்//
ஹெவினெஸ்ஸைக் கூட்டுகிறது..
அட
நிமிட நேர உணர்வை
அழகா பதித்த கவிதை
என்னது இது..?
இந்தப் பதிவுல மட்டும் தலைப்புல கவிதைன்னு கொடுத்திருக்கீங்க..?
அப்போ மத்ததெல்லாம்..???
அருமை அண்ணே.
கவிதை நன்று. கவிதையை தொடர்ந்த கிண்டலும்.
/அப்பவே சொன்னேன் கேட்டீங்களா...
இப்போ கவிதை எழுதறீங்க./
அருமை நண்பரே இதை வாசித்ததும் எனக்கு எனது நண்பனின் ஞாபகம் வந்து விட்டது. அருமையான கவிதை.
கவிதை மிகவும் நன்றாக உள்ளது.
வாழ்த்துகள்!
//மீண்டும் கேட்டால்
இல்லையென்று
மறுக்க முடியாத
இயலாமை.. //
யாருக்கு கொடுப்பவருக்கா....அல்லது உங்களுக்கா?
நல்ல கவிதை....
கடன் வாங்கவும் வேணாம்.
கொடுக்கவும் வேணாம்.
வாழ்வின் பாடம் இது.
உடல்நிலை சுகமா உங்களுக்கு ?
இன்னும் மனசு உங்கள் உடல்நிலையிலேயே இருக்கு.கடன் பிறகே...மகளின் குறும்படம் எனக்கு திறக்க இயலவில்லை.வாழ்த்து சொல்ல ஆசை.பார்த்துட்டு சொல்றேன்.கவிதையில் சொல்ல விரும்பாத காரணம்,கவிதையை எடுத்து செல்கிறது பெயரிட்டு அழைக்க முடியாத பறவையை போல்.
kalakkal super....
மிக அருமை நண்பரே வாழ்த்துக்கள்
அருமை
கவித நல்லா ஷோக்கா இருக்குண்ணே
இயல்பான கவிதை..:-))))
நிதர்சனம் வெளிப்படுகிறது.
வாசித்து கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அன்பு நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..
ராஜாராம்,ச்கோதரி ஹேமா.. அன்புக்கு மிக்க நன்றி..உடலும்,உள்ளமும் நலம்
உடல் நலம் சரியாகிவிட்டதா?
இப்போ புரியுது ஏன் உங்களுக்கு பி.பி ஏறிச்சுன்னு..:)
அருமை. அந்த வேறொன்று என்ன..?
அருமை அன்பு தண்டோ.....ரா....,
\\இப்போ புரியுது ஏன் உங்களுக்கு பி.பி ஏறிச்சுன்னு..:)
அருமை. அந்த வேறொன்று என்ன..?
\\
repeattee
ஆருயிர் நண்பர் என்பீர்!
சில காகிதங்களைக் கொடுப்பீர்!
பின் முகம் பார்க்க மறுப்பீர்!
காகிதங்களுக்காக நட்பை
அடகும் வைப்பீரா?!
இயலாமை .. இனிமை..
வாசு, நித்தம் வேற வேற போட்டோவா..??
Post a Comment