Wednesday, January 20, 2010

அசல்.................ஒரு போளி பார்வை


அசல் பற்றி விமர்சனம் எழுத சொல்லி நண்பர்கள் மிகவும் வற்புறுத்தி கேட்டுக் கொண்டார்கள். மெயிலிலும், கைபேசியிலும். டக்ளஸ் கோவிச்சிக்குவாரோ என்று முதலில் தயங்கினேன். சரி. ஆகறது ஆகட்டும். நட ராஜா.

மேற்கு மாம்பலத்தில்தான் முதல் அசல் போளி கடை இருந்தது. அதன் பெயர் வெங்கட்நாரயணா போளி ஸ்டால். பருப்பு போளி, தேங்காய் போளி இதெல்லாம் சிறப்பு ஐட்டங்கள். அதன் பின் ஓம்பொடி, காராசேவு, பாதுஷா. அப்புறம் மிளகாய் பஜ்ஜி, உருளைகிழங்கு போண்டா என்று தூள் கிளப்பினார்கள்.

அதன் வெற்றியை பார்த்து புற்றீசலாக போலி போளிகள் கிளம்பினார்கள். டி.கல்லுப்பட்டியிலிருந்து கிளம்பி வந்த ஆசாமி பெங்களூர் ஐயங்கார் பேக்கரி ஆரம்பிப்பதை போல், ஆளாலுக்கு பெயருக்கு பின்னால் கிருஷ்ணா ,நாரயணா என்றெல்லாம் கடைகளை பரப்பினார்கள். இவர் அவரின் மச்சான். இப்ப தனியா போயிட்டாருன்னு மக்களாகவே ஊகித்து கொண்டனர்.(ஊகித்தா? யூகித்தா?)

ஆனாலும் என்னால் அசலுக்கும், போலி போளிக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடிந்தது. பின்ன? வேட்டைக்காரன் ரேஞ்சுக்கு எல்லா கடைகளிலும் ருசி பார்த்திருக்கிறேன். பார்சல் வாங்கி கொண்டு போய் காரில் உட்கார்ந்து மானிட்டருடன் சேர்த்து அமுக்கியதுமுண்டு.

அசல் படத்தின் கதைக்கும், மேலே எழுதியதை நீங்கள் ஸ்கிரோல் பண்ணாமல் படித்ததற்க்கும் ஒரு ஓற்றுமை இருக்கிறது. போக் ரோடில் உள்ள ஒரு டாஸ்மாக்கில் சரக்கு அடிக்கும்போது சிவாஜி பிலிம்ஸ் ஆட்கள் இருவர் போலி சரக்கின் உபயத்தில் அசலை பற்றி கொஞ்சம் அலசியதை நானும் அதே பாடாவதி சரக்கின் உபயத்தில் காது கொடுக்க நேர்ந்தது.

அசல் அஜீத்துக்கும், போலி அஜீத்துக்கும் இடையில் நடக்கும் அதிரடியான சண்டைக் காட்சி மட்டும் 15 நாட்கள் படமாக்கப்பட்டதாம். கொரியன் ஸ்டண்ட் இயக்குநர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். சிகரெட் வேணுமா பாஸ் என்று அவர்களிடம் குறுக்கிட்டேன். ஜக்குபாயை இணையத்தில் வெளியிட்ட கிக்குபாயைப் போல் என்னை பார்த்தார்கள். நீங்க பிரஸா ? என்று கேட்டார்கள். இல்லை. நான் தலைக்கு மேல் சுற்றிய பேனை (எப்படி வேணும்னாலும் அர்த்தம் எடுத்துக்கங்க!!) சிம்பாலிக்காக காட்டினேன். நீங்க பாங்காக் போனீர்களா? என்று கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில்! இன்னொரு குவார்ட்டர் சொல்லுங்க! சேர்ந்து போயிடலாம்!


அசல் எந்த ஒரு ஆங்கில படத்தின் ஜெராக்ஸ் என்று தெரிந்து கொள்ள பிப்ரவரி 5 வரை காத்திருப்போம். ஆனால் ஷமிராரெட்டி என்கிற பருப்பு போளியும், பாவணா என்கிற தேங்காய் (மல்லுப்பா!) போளியும் அசல் சுவையாய் இருப்பார்கள் என்பதை வெங்கட்நாரயணா மீது ஜொள்ளீயம் செய்கிறேன்.

34 comments:

எறும்பு said...

Present sir

எறும்பு said...

annanuku oru set poli parcel..

Paleo God said...

(ஊகித்தா? யூகித்தா?)//

எதுவா இருந்தாலும் பரவாயில்லை மன்னா, ஆனால் முதல் ரெண்டு எழுத்துக்கள் சேர்க்க வேண்டியது மிக முக்கியம்..:)

சங்கர் said...

//பார்சல் வாங்கி கொண்டு போய் காரில் உட்கார்ந்து மானிட்டருடன் சேர்த்து அமுக்கியதுமுண்டு.//

எதெல்லாம் சைட் டிஷ்ஷா யூஸ் பண்ணுறீங்க, முடியல :))

சங்கர் said...

@பலா பட்டறை

எப்புடி இப்புடி ??

CS. Mohan Kumar said...

போளி மற்றும் இன்ன பிற விஷயம் படித்ததும் நாக்கில் எச்சி ஊறிடுச்சு..

போளியும் அஜித்தும் இணைச்சு.. யப்பா என்னமா யோசிக்கிறீங்க

பாலா said...

இங்க பாருய்யா... கவிஞர் ஸ்லேடையில் விளையாடுறாரு.

பாலா said...

இந்த டாஸ்மாக் கடையை மூடித் தொலைங்கய்யான்னா கேக்க மாட்டேங்கறாங்க.

எங்கண்ணனை எப்பவும் தெளிவா வச்சிருக்கறதுல.. அரசாங்கத்துக்கு என்ன லாபம்???

sathishsangkavi.blogspot.com said...

தலைக்கு போளி ரொம்ப பிடிக்குமோ...? (பருப்பு போளியும், தேங்காய் போளியும்)

butterfly Surya said...

ஜி, அடுத்த வாரம் கண்டிப்பாக போகணும்.

உண்மைத்தமிழன் said...

பெரிசு..

இப்படியெல்லாம் எழுதி எங்க யூத் கிளப்ல சேர்ந்திரலாம்னு நினைக்காதீங்க..

முடியவே முடியாது. நீங்க அண்ணன்தான்..!

Raju said...

தலைவரே பிப்ரவரி 5 இல்லையாம்..!
26ன்னு சொல்றாங்க..!

@பலா பட்டறை
இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேங்க..!
:-))))))))

vasu balaji said...

/எதுவா இருந்தாலும் பரவாயில்லை மன்னா, ஆனால் முதல் ரெண்டு எழுத்துக்கள் சேர்க்க வேண்டியது மிக முக்கியம்..:)/

மன்னர் எப்படி! மக்கள் அப்படி:))

தராசு said...

//அசல் எந்த ஒரு ஆங்கில படத்தின் ஜெராக்ஸ் என்று தெரிந்து கொள்ள பிப்ரவரி 5 வரை காத்திருப்போம்.//

ஆரம்பிச்சுட்டாய்ங்கய்யா......

Unknown said...

//அசல் எந்த ஒரு ஆங்கில படத்தின் ஜெராக்ஸ் என்று தெரிந்து கொள்ள பிப்ரவரி 5 வரை காத்திருப்போம்.//

படம் வரவே இல்லை ஹ்ம்ம்... நடத்துங்க நடத்துங்க....

Beski said...

சரக்கையும், அடை அவியலையும் அறிமுகப்படுத்திய நீங்கள் இதை இன்னும் என்னிடம் சொல்லவில்லையே... ரைட்டு நோட் பண்ணியாச்சு.

//உண்மைத் தமிழன் (15270788164745573644) said...
இப்படியெல்லாம் எழுதி எங்க யூத் கிளப்ல சேர்ந்திரலாம்னு நினைக்காதீங்க..//
அண்ணே,
எழுத்துப்பிழை இருக்கு பாருங்க...

//அசல் எந்த ஒரு ஆங்கில படத்தின் ஜெராக்ஸ் என்று தெரிந்து கொள்ள பிப்ரவரி 5 வரை காத்திருப்போம்.//
ஹி ஹி ஹி... ஆரம்பிக்கவேயில்ல, அதுக்குள்ள...
நா ரெடி.

Ashok D said...

போளி சாப்பிடராமாதிரியே இருந்தது...

பலா பட்டறை.. பலான பட்டறையல்ல என்பதை என்ன அழகா சொல்லியிருக்கீங்க ;)

ஜெட்லி... said...

//பாவணா//

ஒரு சுழி எக்ஸ்ட்ராவா இருக்கு....

R.Gopi said...

தலைவா...

எப்போவும் போல... உங்களின் நக்கல் நன்றாக விளைடாடி இருக்கிறது...

இருந்தாலும் நம்ம “டக்ளஸ்” அண்ணன் கோவிச்சுக்கல.... அவரு இப்போ ரொம்ப “தெளிவா” இருக்காரு..

போளி படு சூப்பர்.... தித்திப்போ தித்திப்பு.... அதுவும் அந்த பருப்பு போளி.......ம்ம்ம்ம்ம்... முடியல..

R.Gopi said...

தலைவா...

எப்போவும் போல... உங்களின் நக்கல் நன்றாக விளைடாடி இருக்கிறது...

இருந்தாலும் நம்ம “டக்ளஸ்” அண்ணன் கோவிச்சுக்கல.... அவரு இப்போ ரொம்ப “தெளிவா” இருக்காரு..

போளி படு சூப்பர்.... தித்திப்போ தித்திப்பு.... அதுவும் அந்த பருப்பு போளி.......ம்ம்ம்ம்ம்... முடியல..

மணிஜி said...

//ஜெட்லி said...

//பாவணா//

ஒரு சுழி எக்ஸ்ட்ராவா இருக்கு///

சுழி வேணுமப்பா!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

என்ன ஒரு ஆராய்ச்சி.உங்களை நெனச்சா ரொம்ப பெருமையா இருக்குங்க.

Unknown said...

விவகாரமான பக்டி.இதைப் பற்றிய தரவுகள் நுனி விரல் பிடித்து போளிக் கடைக்கே அழைத்துச்செல்கிறது.வாயின் உள் நோக்கிய அவதானிப்பு.

பா.ராஜாராம் said...

:-)))

மணிஜி said...

12 போளியில் 3 போலி போலிருக்கு

மரா said...

//ஆனால் ஷமிராரெட்டி என்கிற பருப்பு போளியும், பாவணா என்கிற தேங்காய் (மல்லுப்பா!) போளியும் அசல் சுவையாய் இருப்பார்கள் //
ஒருக்கா நம்ம எழுத்தாளர் சுஜாதாக்கிட்ட கேட்டாங்க -’தமிழ் சினிமாவில் மலையாளக் கரையோர நடிகைகள் பிரபலமாக இருப்பதுக்கு என்ன காரணம்?’
அதுக்கு சுஜாதா சொன்ன ஒற்றை வார்த்தை பதில்-’தேங்காய்’
எப்டி தல இப்டிலாம். airport bribgeku கீழே நின்னு யோசிப்பீங்களோ!!.......

Kumky said...

படு ஸ்பீடு...

கெளப்புங்க....

டி.கல்லுப்பட்டியிலிருந்து யாரும் வரப்படாதா என்ன...

Unknown said...

உங்க பதிவு டெஸ்ட் மேட்ச் மாதிரின்னா, பலா பட்டறையோட பின்னூட்டம் ட்வெண்டி 20 மாதிரி.. பின்னிட்டாரு..

:)

அத்திரி said...

அண்ணே கலக்கல்

VISA said...

//ஒருக்கா நம்ம எழுத்தாளர் சுஜாதாக்கிட்ட கேட்டாங்க -’தமிழ் சினிமாவில் மலையாளக் கரையோர நடிகைகள் பிரபலமாக இருப்பதுக்கு என்ன காரணம்?’
அதுக்கு சுஜாதா சொன்ன ஒற்றை வார்த்தை பதில்-’தேங்காய்’
எப்டி தல இப்டிலாம். airport bribgeku கீழே நின்னு யோசிப்பீங்களோ!!.......//



தேங்காய் என்று பொத்தாம் பொதுவாக சொல்லி நம்மை எல்லாம் குழப்பமடைய செய்துவிட்டார்.

தேங்காய் என்றால்
இரண்டாய் உடைத்த முடி தேங்காவா....
அல்லது குலுங்கும் இளநீர் தேங்காவா....
கருக்கா.....
வழுக்கா.....

எதுவும் புரியலையே.
எது எப்படியோ.....
நானும் தேங்கா எண்ணையை தடவிகிட்டு எவ்வளவோ முயற்சி பண்ணி பாக்குறேன்
ஒண்ணும் சிக்கிட்டில்லா.

VISA said...

//-’தமிழ் சினிமாவில் மலையாளக் கரையோர நடிகைகள் பிரபலமாக இருப்பதுக்கு என்ன காரணம்?’
அதுக்கு சுஜாதா சொன்ன ஒற்றை வார்த்தை பதில்-’தேங்காய்’
//

அந்த "தேங்காய்" பதில் தலைவர் சொன்னது எப்போது? ஷகீலாவுக்கு பின்னா முன்னா?

பின் முன் என்பதை கி.மு. கி.பி வகையில் பொருள் கொள்க. மாற்றி பொருள் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல.

க ரா said...

நல்ல போலி.. இல்ல இல்ல நல்ல போளி...

விஸ்வாமித்திரன் said...

/டி.கல்லுப்பட்டியிலிருந்து கிளம்பி வந்த ஆசாமி பெங்களூர் ஐயங்கார் பேக்கரி ஆரம்பிப்பதை/

SOOOPPER KEEP IT UP

"உழவன்" "Uzhavan" said...

ஒரு பருப்பு போளி பார்சல் :-)