Saturday, January 23, 2010

ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க


இன்னைக்கு முடிவு பண்ணிடலாம்.

ஏன் அவ்வளவு அவசரம்? இன்னும் கொஞ்சம் யோசிக்கலாமே!

இல்லை. எனக்கு இதுக்கு மேலே பொறுமையில்லை. ஆனா ஒன்னு நல்ல முடிவா இருக்கணும்.

உனக்கா?

ரெண்டு பேருக்குமே!

அதெப்படி ரெண்டு பேருக்கும் இருக்க முடியும்? எனக்கு பிரிய விருப்பமில்லை.

ஆனா எனக்கு சேர்ந்து வாழ விருப்பமில்லை.

என் கிட்ட என்ன குறை?

நிறைய! எனக்கு சொல்லத் தெரியலை. விவாகரத்துதான் ஒரே வழி.

நாம காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். விரும்பித்தானே?

விரும்பியா? என் விதி!

அப்ப எனக்கு?

எனக்கு உங்க கிட்ட பேச பிடிக்கலை.

அப்ப குழந்தை?

இப்ப என்ன பிறந்துடுச்சா என்ன? கலைச்சிடலாம்!

நான் பேர் கூட வச்சிட்டேனே.

மறந்துடுங்க.

சரி. போதும். சாப்பாடு ரெடியா? பசிக்குது.

நா என்ன சமையல்காரியா உங்களுக்கு?

என் வீட்டுக்காரிடி

நானும் டா போடுவேன். மரியாதை கொடுத்து..

உனக்கென்னடி மரியாதை! அந்த அமிர்தாஞ்சன் பாட்டிலை எடு.

ஏன்? தலைவலிக்குதா? டீ போட்டுத் தரவா?

உனக்குத்தான் டீ போட்டா பிடிக்காதே!

ரொம்ப அறுக்காதீங்க. மழை வர மாதிரி இருக்கு. மாடியிலேர்ந்து துணியை எடுத்து கிட்டு வாங்க.

என் துணியை மட்டும்தான் எடுப்பேன். உன்னுதை நீ போய் எடுத்துக்க..

என்னங்க..வீட்டுல விருந்தாளியை வச்சுகிட்டு இப்படி சண்டை போடலாமா?

விருந்தாளியா? அவர் போய் அரை மணி நேரம் ஆச்சு. நல்ல ஐடியா கொடுத்தடா செல்லம். ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க.

23 comments:

ஒரு காசு said...

ஒரு மார்க்கமாத் தான் இருக்கிறீங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

எறும்பு said...

!!!!!

Paleo God said...

அதிதி தே...போ..வராத..

VISA said...

ஏய் கலக்கல் தல இது...

லோகு said...

அடப்பாவமே.. உங்களையுமா வெரட்டிட்டாங்க??

ஈரோடு கதிர் said...

ஆஹா

ஜெட்லி... said...

நல்ல ஐடியா

vasu balaji said...

பாவி மனுஷா! என்ன அநியாயம் இது:))

அரவிந்தன் said...

சமீபத்தில் நீங்கள் தஞ்சை சென்ற போது ஏற்ப்பட்ட அனுபவமா.?

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

உண்மைத்தமிழன் said...

அப்ப நான் உங்க வீட்டுக்கு வரவே மாட்டேன்..!

தயவு செஞ்சு கூப்பிடாதீங்க..!!!

Unknown said...

அந்தக் காலத்து ஒரு பகக குமுதம் கதை மாதிரி இருக்கு.

payapulla said...

நீங்களே தண்டோரா போட்டு அவிங்கள வர சொல்லிபோட்டு இப்ப விவாகரத்து அது இதுன்னு ஆக்ட் குடுத்துகீனு இருக்கீங்க

கலகலப்ரியா said...

அடப்பாவிங்களா.... வீட்டுக்கு கூப்ட்டா ரொம்ப ரோசன பண்ணிட்டுதான் வரணும் போலயே... =))...

மாதேவி said...

"ஆ...ஊன்னா கூட்டமா கிளம்பி வந்துடறாங்க"

மறுமொழி போடவும் பயமா இருக்கே. :)))))

Sanjai Gandhi said...

//வீட்டுல விருந்தாளியை வச்சுகிட்டு இப்படி சண்டை போடலாமா?
//

விருந்தாளியா? சஞ்சய் தான? அவன் சாப்ட்டு கை கழுவிட்டு குட்டித் தூக்கம் போட்டுட்டு கிளம்பிட்டான்..

..யோவ் மாமா.. நீங்க கொடாக் கண்டன்னா நாங்க விடாககண்டன்.... ஜாக்கிறதை.. இந்த பிம்பிளிக்கா பிளாக்கி வித்தை எல்லாம் செல்லாதுடி செல்லம்.. :))

க ரா said...

செமயா யோசிக்கிறிங்க.

ரோஸ்விக் said...

//நிறைய! எனக்கு சொல்லத் தெரியலை. விவாகரத்துதான் ஒரே வழி.//

நான் வக்கீலு... அப்பாடா எனக்கு ஒரு கேசு கிடைச்சிடுச்சு...

//இப்ப என்ன பிறந்துடுச்சா என்ன? கலைச்சிடலாம்!//

என் பொண்டாட்டி டாக்டர்... அப்பாடி அவளுக்கும் ஒரு கேசு கிடைச்சிடுச்சு...

//மாடியிலேர்ந்து துணியை எடுத்து கிட்டு வாங்க.
என் துணியை மட்டும்தான் எடுப்பேன். உன்னுதை நீ போய் எடுத்துக்க..//

மாமா... உங்க துணிய நீங்க எடுத்துக்கங்க... அக்கா துணியை நான் எடுத்துக்கிறேன்... சும்மா வீறாப்புல எனக்கு கிடைக்கிற கறி சோத்தை கேடுத்துருவீக போலையே!...

நாங்கெல்லாம் எப்பேற்பட்டவணுக... மேல சொன்னதெல்லாம் நான் மனசுக்குள்ள நினைச்சுகிட்டது.


//விருந்தாளியா? அவர் போய் அரை மணி நேரம் ஆச்சு. நல்ல ஐடியா கொடுத்தடா செல்லம்.//


ரெண்டு பேரும் டைனிங் டேபிளுக்கு கீழ குனிஞ்சு பாருங்க. நான் இங்கதான் இருக்கேன். கிளைமாக்ஸ்-க்காக வெயிட்டுங்கு... :-))

நாங்கெல்லாம் மோசமானவங்கல்லே முக்கியமானவய்ங்க... :-D

செ.சரவணக்குமார் said...

தல ஏன் இப்பிடி?

குறை ஒன்றும் இல்லை !!! said...

எண்ணன்ணே? கேபிளார் இல்லே பெஸ்கி வீட்டுக்கு வரதா சொல்லி இருந்தாங்களா?

Romeoboy said...

இது சூப்பர் ஐடியாவா இருக்கே.. எங்க வீட்டுக்கு கொஞ்சம் வந்துட்டு போங்க தலைவரே டெஸ்ட் பண்ணி பார்த்துடுறேன்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ஸ்.....அப்பா .இப்பவே கண்ணக் கட்டுது.

மரா said...

இன்னைக்குத்தான் வந்து புத்தகமெல்லாம்
ஓசி வாங்கிட்டு போலாம்னு நெனச்சேன்.
இனி எங்கிட்டு வர்றது..:(