Monday, January 4, 2010

மானிட்டர் பக்கங்கள்........ 04/01/10


இந்தியா வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்கிறது என்கின்றனர் நம் அரசியல்வாதிகள். ஆனால் இந்தியர்களின் பொருளாதார நிலை குறித்து சுரேஷ் டெண்டுல்கர் என்பவர் தலைமையிலான குழு சமர்பித்த ஆய்வறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்த மக்கள் தொகையில் 37 % பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனராம். கிராமப்புறங்களீல் இந்த எண்ணிக்கை 42% ஆக உள்ளதாம்.மத்திய அரசின் நிதி கடைக் கோடி மக்களை சேர்வதே இல்லை என்பதையே இது காட்டுகிறது. வருடத்திற்கு இரண்டு இடைத்தேர்தல் வந்தால் நிலைமை சரியாகி விடும் என்று நம்பலாம். ஆனால் நம்முர் அரசியல்வியாதிகள் வறுமைக்கோட்டுக்கு கீழ் சென்றுவிடும் அபாயமும் உண்டு.


வந்தவாசி தொகுதியில் மொத்தம் 21 பேர் 49 ஓ போட்டிருக்கிறார்கள். மொத்த மக்கள் தொகையில் கிட்டதட்ட 25% வன்னியர் இருக்கும் தொகுதி. ஆனால் ராமதாசு இன்னும் நம்புகிறார். பெண்ணாகரத்தில் தனியே நின்று டிபாசிட்டை கோட்டை விட்டால் கூட திருந்த மாட்டார் போல.அண்ணன் சமீபத்தில் பேசியது. “எத்தனை நாளைக்குத்தான் போயஸ் கார்டன் போய் ‘அம்மா தாயே” என்று கெஞ்சறது. பதிலுக்கு அந்தம்மா “அண்ணே”ன்னு பூச்செண்டு கொடுத்து நடிக்கிறது. அப்புறம் கோபாலபுரம் போய் “அய்யா கலைஞரே..கொஞ்சம் பார்த்து கொடுங்களேன்னு கேட்கிறது.வன்னியனுக்கு, வன்னியன் ஓட்டு போட்டால் போதும். 120 தொகுதிகளிலும் வெற்றிதான் என்கிறார் தமிழ்குடிதாங்கி. ம்ம்ம்..நம்பிக்கைதான் வாழ்க்கை. வீழுங்க..சே..வாழுங்க!!

இது மக்கள் தொலைகாட்சி மேட்டர். மதுரைக்கு அங்கிட்டு நிறைய இடங்களில் சரியாக தெரியவில்லை. வெறும் புள்ளியாய் தெரிகிறது. அதற்கு காரணம் முக்கிய புள்ளி “அ” அண்ணன் . நல்ல நிகழ்ச்சிகள். ஆனால் இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறது. அந்த சேனல் தெரியவில்லை என்பதற்காகவே நான் டிஷ் வாங்காமலிருந்தேன். இப்போது ரிலையன்ஸ் மற்றும் டிஷ் டிவியில் தெரிகிறது போலும். இருந்தாலும் ஆர்வமில்லை. அதில் வரும் பயணம் என்ற தொடர் எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் பிரமோவை பார்க்க வேண்டும்! மிக அருமையாக கட் பண்ணியிருப்பார்கள். எடிட்டருக்கு என் வாழ்த்துக்கள்.

சனிக்கிழமை மீண்டும் புத்தக கண்காட்சி. வம்சி ஸ்டாலில் தோழர் மாதவராஜ் பதிவுலகத்திலிருந்து தொகுத்திருக்கும் புத்தகங்களை வாங்கினேன். அருமை. ஆனால் என் கவிதையைதான் ரொம்ப சுருக்கி விட்டீர்கள். இருந்தாலும் நன்றி தோழர்.

போலாமா ? போலாமே ! எங்க ? அங்கதான் ! சரி ! போனோம். நான், கொத்துபுரோட்டா மாஸ்டர், தம்பிக்கு சில குறிப்புகள் எழுதுபவர், சிவசைலம், வெள்ளைப்பூ, மதுராந்தகம் கவிஞர் மற்றும் அந்த பிரபல சர்ச்சைக்குறிய எழுத்தாளர் சார். போன இடம் டாஸ்மாக். உண்மையில் அந்த இடத்தை பார்த்தால் வாந்தி வரவேண்டும். ஆனால் நாங்கள் மூன்றாவது ரவுண்டில் வாந்தி எடுக்க ஆரம்பித்தோம் . வார்த்தைகளை! எழுத்தாளர் பெயரை சரியாக சொல்பவர்களுக்கு பரிசு கிடையாது. சாரு..சீ..சாரி..


துணை முதல்வர் ஸ்டாலினின் இணையதளத்திற்கு கடந்த ஒரு மாதத்தில் வருகை தந்தவர்கள் எண்ணிக்கை 6,9,446 பேர்களாம்.மொத்தம் 50 க்கும் மேற்ப்பட்ட நாடுகளிலிருந்து அவரை தொடர்பு கொள்கிறார்கள். 60 சதவிகிதம் பேர் பாராட்டியும். மற்றவர் கோரிக்கைகள் முன் வைத்தும். அனைத்தும் நியாயமாக இருக்கும் பட்சத்தில் உடனுக்குடன் நிறைவேற்ற படுகின்றனவாம். வாழ்த்துக்கள் துணை முதல்வருக்கு. ஸ்டாலினின் செயல்பாடுகளும் ஆக்கப்பூர்வமாகவும், விவேகமாகவும் இருக்கிறது என்று சோ பாராட்டியது தப்பேயில்லை. பதவிக்கு போட்டி போன்ற தலைவலிகள் இல்லையென்றால் இன்னும் சிறப்பாக செயலாற்றுவார் என்றே தோன்றுகிறது.

நட்சத்திர ஓட்டல்களில் சில ஸ்பெஷல் சரக்குகள் :

இளம் பெண்களை கவர டக்கீலா. இதை கொடுக்கும் போதே எலுமிச்சை சாறும், உப்பும் உண்டு. ஒரு சிப். ஒரு நக். ஏகாந்தம்தான்.

சூட்டர் : இதை கிளாசில் ஊற்றி எடுத்து வரும்போதே அதில் லைட்டரில் எரியும் தீபம் போல் நெருப்பு எரிந்தபடி இருக்குமாம். அதை அணைத்தவுடன் ஒரே கல்ப். உள்ளெ பற்றிக் கொள்ளும்.

ஆண்களுக்கு ஸ்பெஷல் சிகாரும் உண்டு. அடிஷனல் போதைக்கு 100 % உத்தரவாதம்.

டிஸ்கி கவுஜை :

உன் நண்பர்கள்
எனக்கும் நண்பர்கள்
என் நண்பர்கள்
ஏன் உனக்கு
நண்பர்களில்லை?


என்ன சமைக்கலாம்
என்று தொணதொணத்த
மனைவியிடம்
எரிந்து விழுந்தேன்.

சாப்பிட அழைக்கும்போது
அனிச்சையாய் கேட்டேன்
என்ன சமையல்?


மீண்டும் ஒரு டிஸ்கி : இதெல்லாம் ஒரு கவுஜையா ? என்று பக்கத்திலிருக்கும் அப்பாவியிடம் கடுப்படிக்கும் நண்பர்களுக்கு. இது பிரசுரத்திற்கு அல்ல!!!!


டிஸ்கியேதான் : கடவுள் இருக்கிறாரா,இல்லையா என்பது அவரவர் நம்பிக்கை. இல்லையென்பவர் கடவுளின் குதம்,சதம்,பதம் என்றெல்லாம் கவிதை என்று கண்ராவியை எழுதுகிறார்கள். இருக்கிறார் என்று நம்பிகிறவர்கள் யாரை இப்படி வர்ணித்து அதே கண்ராவி களை எழுதலாம்!?

17 comments:

இரும்புத்திரை said...

என்ன ஒரே போதையாக இருக்கிறது.பெண்ணாகரத்தில் எங்கள் தானைத் தலைவர் வற்றி வாகை சூடுவார்.

மணிஜி said...

/இரும்புத்திரை said...
என்ன ஒரே போதையாக இருக்கிறது.பெண்ணாகரத்தில் எங்கள் தானைத் தலைவர் வற்றி வாகை சூடுவார்//

அரவிந்த்.அதென்ன வற்றி வாகை?

இரும்புத்திரை said...

டெபாசிட் காலி.வேறன்ன

Raju said...

மானிட்டர் பக்கங்கள் மட்டும் எழுதும் உத்தேசமா...?



அந்தாளு இருக்குற இடத்துக்கெல்லாம் எப்புடித்தான் இந்த இருபுத்திரை ஆஜராகிறார்..?
”வற்றி” வாகை ரசித்தேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

present sir

பெசொவி said...

//இருக்கிறார் என்று நம்பிகிறவர்கள் யாரை இப்படி வர்ணித்து அதே கண்ராவி களை எழுதலாம்!?//

கடவுளை நம்புகிறவன் எவனிடமும் இப்படி வம்புக்கு அலைய வேண்டிய அவசியமில்லை. எல்லாம் அவன் பாத்துப்பான் என்ற நம்பிக்கையில் தைரியமாக தன்னுடைய வழியில் செல்லலாம்.

Paleo God said...

T.V.Radhakrishnan said...
present sir//

ஆஹா வட போச்சே ...^_^

permission sir..:)

sathishsangkavi.blogspot.com said...

பென்னாகரத்தில் நிச்சயம் டெபாசிட் அவுட்டு...

மக்கள் தொலைக்காட்சியில் நானும் இந்நிகழ்ச்சிகளை ரசித்து உள்ளேன்...

சமீபகாலமாக துனை முதல்வரின் நிர்வாகத்திறமை அனைவரும் பாராட்டத்தக்கது...

நட்சத்திர ஓட்டல் ஸ்பெஷல் சரக்கு மேட்டர் சூப்பர்...

டோட்டலா மானிட்டர் பக்கம் நச்சுன்னு இருக்கு....

Ashok D said...

நல்ல சமையல் :)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நம்பிக்கைதான் வாழ்க்கை நம்பிட்டு போகட்டும் விடுங்க.
நான் மக்கள் டிவி பாத்தது ஒரே முறைதான் ,அது எப்பன்னு உங்களுக்கே தெரியும்.
கவிதை அருமை.

butterfly Surya said...

உன் நண்பர்கள்
எனக்கும் நண்பர்கள்
என் நண்பர்கள்
ஏன் உனக்கு
நண்பர்களில்லை?? /// இந்த கவிதை அவருக்கா..??

ஜெட்லி... said...

மானிட்டர் மேட்டர் சூப்பர் மப்பு...

CS. Mohan Kumar said...

கிசு கிசு போல் எழுதிய உண்மை மேட்டர் ரசித்தேன்

Prathap Kumar S. said...

மருத்துவருக்கு நம்பிக்கை நட்சத்திரம் அவார்டே கொடுக்கலாம்... டெபாசிட்டு ஸ்வாகா...

டகீலா உண்மையிலேயே ஏகாந்தம்தான். ஒருதடவை அனுபவித்ததில் சொல்கிறேன்...

Cable சங்கர் said...

jivvvvvvvv

கலையரசன் said...

என்ன அவசரம்?? இப்பதானே.. போன இடுகைக்கு கமெண்ட் போட்டேன்?.

அகல்விளக்கு said...

சூப்பரு.....