எழுத்துக்களை கலைத்துப் போட்டு
வார்த்தைகளை வார்க்கும்
சிறுபிள்ளை விளையாட்டை
திரும்ப ஆடும் ஆசை
இக்கணம் தோன்றிய
அத்தனையும் இங்கு
தனித்தனி எழுத்துக்களாய்தான்
இதுவரையிலான நிகழ்வுகளிலிருந்து
சில எழுத்துக்கள்
சிதறி கிடந்தது
பொருத்தமான வார்த்தைக்கு
கொஞ்சம் மெனக்கெடத்தான்
வேண்டியிருந்தது
இறுதியில் எஞ்சிய ஐந்து வார்த்தைகள்
4.திமிர்
1.ஆணவம்
3.அகம்பாவம்
2.தற்பெருமை
5.நான்
இரண்டெழுத்தில் ஒரு
வார்த்தையை
“நான்” தேர்ந்தெடுத்தேன்.
40 comments:
நல்ல கவிதை... அருமை...
அன்பின் தண்டோரா,
வெகு நுட்பமான கவிதை.
கொஞ்சம் எடிட் செய்திருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
மானிட்டர் பக்கங்களின் தொடர்ச்சியோ ?
தலை கொஞ்சம் வித்தியாசமான, அழகான கவிதை
உங்களுக்கும் உமது குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
நல்லா இருக்கு ஜி
Really nice
Impressive
nice one...keep it up
good one ........ sir
கவிதை அருமை.
(என்ன ஒரு ஒற்றுமை......தற்பெருமை பற்றி இன்று காலைதான் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்)
ரசித்தேன்....
"நான்" "நீ" தேர்ந்தெடுப்பேன்..
பிரமாதம் ஜி.
கவிதை அருமை!!
சிக்கலில்லாத நூல் போல் எளிய வரிகள்!!
எப்போது புத்தக வெளியீடு?
மூன்றெழுத்தில் ஒரு வார்த்தையை தேர்ந்தெடுத்தேன்.
"அருமை".
அருமை
நல்லாருக்கு . வாழ்த்துக்கள்...
கவிதை நல்லாருக்கு.. :))
திரும்ப ’ஆடும்’ ’ஆசை’ ’நான்’ என்பதையே எப்போதும் தேர்ந்தெடுக்கும்.::)
ஒ.. இதுக்கு பேர் தான் தன்னிலைவிளக்கமோ, நன்று
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். அது முடிந்த பின்னால் என் பேச்சிருக்கும். கடமை.. அது கடமை..!!!
//கொஞ்சம் எடிட் செய்திருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும்.//
சரிதான்.
பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv
http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx
கவிதை நன்று.
நான் நீ என்று சொனால் உதடுகள் கூட ஒட்டாது. நாம் என்று சொன்னால் தான் ஒட்டும்.
//நான் நீ என்று சொனால் உதடுகள் கூட ஒட்டாது. நாம் என்று சொன்னால் தான் ஒட்டும்.
//
அது பழசு தலைவரே....
அசின் த்ரிஷா என்றால் உதடுகள் ஒட்டாது
நமீதா மாளவிகா என்றால் உதடுகள் ஓட்டும்......
anne allitteenga
அருமை மணிஜி.....
///நாம் என்று சொன்னால் தான் ஒட்டும்.///
இதனால்.. கிடைக்கும்.. பலன் என்னவோ குருவே? :)
அட!நல்லாருக்கு!
மிக அருமை மணிஜி!
அடடா இது கவித...எப்படி இப்படி..?
தோள்ல கெடக்கா இன்னமும்?
நல்லாருக்குங்க..
கடமையை செய்.. பலனை எதிர்பார்க்காதே..
அதையே அண்ணன் உ.த முன்னரே சொல்லிட்டார்.
ஜெட்லி... நீங்க தான் ரியல் யூத்து..
அருமை..
:).. nice 1
நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது... நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும்....
யாரோ ஒரு மூதறிஞர், போதையில் இல்லாதபோது சொன்னது....
பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி..
Post a Comment