Tuesday, January 19, 2010

””ஆ”” ஜீரத்தில் ஒருவன்....நான் எழுதிய கதை??


இந்த கதை முழுக்க என் கற்பனையே! சேர, சோழ, பாண்டியர்கள் என் மீது வழக்கு தொடர்வதாக இருந்தால் சென்னை ஜிரிடிக்‌ஷனில்தான் தொடுக்க வேண்டும். ஏன் எனில்
எனக்கு அங்குதான் சில வாய்தா மற்றும் தேங்காய் மூடி வக்கீல்களை தெரியும்.(வாசு விரைவில் கோர்சை??(படிப்பை சொன்னேன் வாசு)முடித்தால் எனக்கு ஆஜராகலாம்.
பீஸாக அய்யனார் கம்மா மற்றும் கோவில் மிருகம் சன்மானம் உண்டு.

டெல்லி. சி.பி.ஐ. தலைமை நிலையம். அங்கிருந்து ஒரு ரெட் அலர்ட் சென்னை காவல்துறை தலைவருக்கு பிறப்பிக்கப் படுகிறது. ஆனால் அவர் சீட்டில் இல்லை.

வள்ளுவர் கோட்டத்தில் முதல்வருக்கு நடை பெறும் ஒரு பாராட்டு விழாவில் கவிதையாற்றி..இல்லை கடைமையாற்றிக் கொண்டிருந்தார். ரமணா படத்தில் வரும் யூகிசேது போல் ஒரு புத்திசாலி கன்ஸ்டபிள் அந்த செய்தியை ரிசீவ் செய்கிறார்.

செய்தியின் சாராம்சம் இதுதான். ராமேஸ்வரம் கடற்கரை ஓரத்தில் இருக்கும் சவுக்குத் தோப்பில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஆயுத குவியலை பயங்கரவாதிகள்
தோண்டி எடுக்கப் போடுகிறார்கள். அது மிகப் பெரிய நாச வேலைக்கு உபயோகப்படுத்தப் படலாம்.

டைட்டில் போடப்படுகிறது. பார்த்திபன் அரசவை. அதாவது சோழனின் தர்பார்.அரச நர்த்தகி ஆண்ட்ரியாவுக்கு அலங்காரம் செய்யப்படும் காட்சிகள் இண்டர்கட்டில். கலை
இயக்குனர் சந்தானம் உருவாக்கிய மகரயாழை சோழன் மீட்டியபடி பாட ஆரம்பிக்க, தேவதை போல் ஆண்ட்ரியாவின் நடனம்.மிக பிரமாண்டமான செட். தத்ரூபமாய் சோழ
அணிகலண்களும், அணங்குகளும் அற்புதம். சந்தானத்திற்கு பெரிய கோவில் வாசலில் ஒரு சிலையே வைக்கலாம்.

காட்சி மாறுகிறது. மீன் கொடி முகப்பில் இருந்து காமெரா ஜீம் பேக்.பாண்டிய நாடு.பாண்டிய அரசவை. அங்கும் ஒரு ராஜ நர்த்தகி.சோழர்களின் குறியீடாய் சிலர்.
திருக்கை சவுக்கால் அடி வாங்கி கொண்டு ஆடுகிறார்கள். கால் தவறி இடறி விழுபவர்களை பாண்டிய வீரர்களின் வாள் சிரசேதம் செய்கிறது. இந்த அளவு இரத்தமும்
வன்முறையும் இதற்கு முன் தமிழ் சினிமாவில் வந்ததில்லை. சபையில் இருக்கும் ஒரு அறிஞர் சற்றே கோபமாய் பாண்டியனை பார்த்து கேள்வி எழுப்புகிறான். ஏன்?

இவர்களுக்கு இந்த கொடுந்தண்டனை ஏன்என்று! திரைச்சீலைகளில் ஸ்லைடு ஷோ போல் காட்சிகள் விரிகிறது.ஜென்மப் பகைக்கான காரணம் சற்றே புரியாத தமிழில் பிண்ணனி
விவரிப்புகளாய்!!


நவீன களத்துக்கு கதை நகருகிறது.ஹைடெக் உடையணிந்த உயரமான வில்லன்கள். சிலரிடம் கொஞ்சம் அன்னிய தேசத்தின் சாயல்.

“சோழன் புதைத்து வைத்திருக்கும் மொத்த தங்கத்தின் மதிப்பு கிட்ட தட்ட 5000 டன்கள்.”

யார் சொன்னது?

மெக்கனாஸ்கோல்ட் திரைப்படத்தின் புகழ் பெற்ற வசனமான “தி மேப் சேஸ்” ராயல் சிகாரை பற்ற வைத்துக் கொண்டே பிரதாப் போத்தன் சொல்ல, ரீமா தன்
கையிலிருக்கும் விஸ்கியில் கொஞ்சம் சிகார் சாம்பலை தட்டிக் கொள்கிறார். அப்போது ஒரு சோம்பல முறிக்கிறார் பாருங்கள்.கொஞ்சம் ரஷ்யன் ஆங்கிளிலில் வைக்கப் பட்ட
ஷாட் அது. எந்திரிச்சு (நாந்தான்) பாத்ரூமுக்கு போலாமா என்று தோன்றியது.

சரி . அதை எப்படி அடைவது?

ஒரே வழிதான் .இருக்கு.பாண்டிய வம்சத்தில் மீதியிருக்கும் 20 நபர்களை (அய்யா! இது பேண்டசி..) கண்டு பிடித்து பலி கொடுக்க வேண்டும்.

யாரிடம்?

12 வது பிறவி எடுத்து பழி வாங்க காத்திருக்கிறானே! சோழன் அவனிடம்!

அந்த 20 பேர்கள் யார்?


இடைவேளை..(இதுக்கு பிறகு பார்ப்கார்ன் காதில் சுற்றப்படும்)


பிளாஷ் கட்டில் சில உள்ளங்கைகள் காட்டப்படுகிறது. மிக உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே மீன் வடிவிலான மச்சம் தெரிகிறது.

அதன் பின் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வுதான். அடுத்தடுத்து இரண்டு பாடல்கள். அதில் மனதில் ஒட்டுவது “மாலைநேரம் “ மட்டுமே பிளவுப் பட்ட மார்பின் வழியே
வழியே மழை நீரை கார்த்தி தான் நாக்கில் வாங்கி சுவைப்பதும், ஆண்ட்ரியாவின் கண்களில் வழியும் காமமும் கிரேக்க புராணங்களில் வரும் சில வர்ணனைகளை
நினைவூட்டுகிறது.

கதையில் ட்விஸ்ட் இல்லையா? என்று கேட்பவர்களுக்கு. நிறைய. முதலில் ஆபத்தான வளைவுகளில் கேமரா பயணிக்கிறது. ஆம்.ரீமா, ஆண்ட்ரியா மற்றும் கிரேக்க
தேவதைகள் போன்ற சில ஜீனியர் நடிகைகள்.


கற்குகை போன்ற செட்டில் கார்த்தி தோளில் மலைப்பாம்பை போட்டுக் கொண்டு ரீமாவுடன் ஆடும் ஆட்டம். அப்பட்டமான காமக்குறியீடு. உச்சகட்டமாய் பாம்புகள் புணரும் காட்சியும் உண்டு.


செல்வா ! இதைப் போன்ற கதையை படம் எடுக்க முதலில் நிறைய பணம் வேண்டும். அப்புறம்தான் தைரியம்!!

அந்த 20 பாண்டிய நாட்டு வாரிசுகள் யார்? அவர்களை எப்படி இனம காண்கிறார்கள் என்பதெல்லாம் வழக்கமான களம்தான்.ஆனால் அவர்களை பலி கொடுக்க அந்த பழைய
சோழனிடம் ஒப்படைத்த பின் இவர்களுக்கு திடிரென்று ஒரு ஞானோதயம் வருகிறது. ஒரு அசரிரீ வடிவில்.எறிகல் போல் ஒரு பொருள் வானத்திலிருந்து ரீமாவின் மேல்
விழுகிறது. அதன் பின் அவருக்கு கிடைக்கும் அசாத்தியமான அனுமாஷ்ய சக்தியும், தொடர்ந்து ரீமாவின் வசனங்களூம் எக்ஸ்லண்ட். பெண்டாஸ்டிக்.


இத்தனை நாள் நம்மை நாமே காட்டி கொடுத்து அழித்துக் கொண்டது போதாதா? இன்னும் எத்தனை தலைமுறைக்கு இதை தொடர்வது? உலகம் முழுதும் நம் தமிழினத்தை
அழித்தொழிக்க கங்கணம் கட்டி திரிகிறார்கள். நாம் ஒன்று படுவோம். சதியை முறியடிப்போம். லாஜிக் இல்லாவிட்டாலும் தியேட்டரில் பின் டிராப் சைலன்ஸ்.அனைவரின் ஆயுதங்களும் எதிரியை நோக்கி திரும்பட்டும் என்ற முழக்கம் கேட்கும்போது அரங்கில் ஒலித்த கைத்தட்டல் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.


(நான் முழுக்கதையையும் எழுதவில்லை.அரங்கில் படம் பார்த்து ரசியுங்கள். தலைவர் திருட்டு விசிடியை ஒழித்து விட்டாராம்)

24 comments:

Cable சங்கர் said...

படத்தை போல வே ஒன்னும் பிரியல..:)

Raju said...

அண்ணே, கற்பனைக் குதிரைக்கு கொஞ்சம் கடிவாளம் போடுங்க..!
5000 ட தங்கம்ம்ம்ம்ம்மா..?
அவ்வ்வ்வ்வ்வ்வ்

உண்மைத்தமிழன் said...

இதுக்கு அந்த படமே பரவாயில்லை போலிருக்கு..!

கிள்ளிவளவன் said...

இதை அப்படியே தஞ்சாவூர் கல்வெட்ல எழுதினா பின் வரும் சங்கதிகள் தெரிந்து கொள்வார்கள்

Beski said...

இதென்ன அர்த்தமில்லாத கதைகளா?

sathishsangkavi.blogspot.com said...

ரீமாவப் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம் தலைவரே....

Ashok D said...

//சோழர்களின் குறியீடாய் சிலர்// பாண்டியகளின்???

R.Gopi said...

தலைவா

இப்போதான் “டக்ளஸ் ராஜூ” போட்டு தாக்கினத படிச்சுட்டு இங்கே வந்தேன்...

இது அதை விட பெரிய டெர்ரரா இருக்குடோய்.....

ஒரு குப்பி சோமபானம் கிடைக்குமா?

Paleo God said...

நான் எதுக்கும் குணா படத்தையே பாத்துக்கரேன். :))

அபிராமி காப்பாத்துமா.....

Prathap Kumar S. said...

அண்ணே... இது பின்நவினத்துவ கதைன்னு டிஸ்கில போட்டுட்டிங்கண்ணா நாங்க உஷாரா வெளியே போயிருவோம்... ரிஸ்க் எடுக்கமாட்டோம்...

vasu balaji said...

இப்போ நான் சோழனா, பாண்டியனா, ரீமா சென்னா, தண்டோராவா? ஆமாம் 5000 டன்னுன்னா எத்தன சவரன்? :))

Kumky said...

தலைவரே..
@%$#(&)*+_+)()^*%^&$^%#^%&*^*(&()&()&$#^$^%^%*&^*(&)_(+_))&*(^&*%.

அற்புதம்.

நல்ல வேளை போன ஜென்ம புன்னியம்...முழு கதையும் நீங்க எழுதல....

திருட்டு விசிடிய ஒழிச்சுட்டாங்களாமா....எங்க..?

அண்ணாமலையான் said...

உங்க குதிரை என்னமா ஓடுது..!

தராசு said...

நான் இந்த விளையாட்டுக்கே வரலப்பா!!!!!!!!

தேவன் மாயம் said...

தெளிவா எழுதியிருக்கீங்க!!! ஏன் புரியலை மக்களுக்கு!!?

Unknown said...

அருமையான கதை.. ஏன் எல்லாரும் பிரியலைன்னு சொல்றாங்க?

ஆமா இதுல ராஜீவ் காந்தி எங்க வர்றாரு??

ஏய் யாரது? செருப்பெடுத்துட்டு ஓடி வர்றது? இளங்கோ..ச்சீ ச்சீ போ அந்தாண்ட...

நீங்க சொல்லுங்க தல, யாரு ராஜீவ்?

மணிஜி said...

/முகிலன் said...
அருமையான கதை.. ஏன் எல்லாரும் பிரியலைன்னு சொல்றாங்க?

ஆமா இதுல ராஜீவ் காந்தி எங்க வர்றாரு??

ஏய் யாரது? செருப்பெடுத்துட்டு ஓடி வர்றது? இளங்கோ..ச்சீ ச்சீ போ அந்தாண்ட...

நீங்க சொல்லுங்க தல, யாரு ராஜீவ்?//

அந்த குண்டன் கையில் இருக்கும் இரும்பு குண்டாய் இருக்கலாமோ? ஒரு குறியீடுதான் தலை( சஞ்சய் சண்டைக்கு வந்துடாதே!!)

க ரா said...

அருமையான கதை. ரொம்ப தெளிவா புரியுது..

Jerry Eshananda said...

சும்மா கத விடாதீங்க.

butterfly Surya said...

லேபிளில் மொக்கைன்னு போட்டாச்சு.

அதனால ஒட்டு மட்டும் போட்டு விட்டேன்..

கலகலப்ரியா said...

votes only.. appuram padichukkaren sry maniji..

மணிஜி said...

பின்னூட்டமும்,ஓட்டும் போட்டவங்களுக்கு நன்றிங்கோ!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆகா..இவரது தொல்லைக்கு கடிவாளம் போட ஆளே இல்லையா..?:)))

பெசொவி said...

//வானம்பாடிகள் said...
இப்போ நான் சோழனா, பாண்டியனா, ரீமா சென்னா, தண்டோராவா? ஆமாம் 5000 டன்னுன்னா எத்தன சவரன்? :))
//
5000 Ton =
5000 x 1000 Kgs

= 5000 x 1000 x 1000 gms.

ie 5000000000 grams.

but 8 grams = 1 sovereign

so 5000000000 grams = 5000000000/8 sovereigns.

= 625000000 sovereigns.

நாங்க கணக்குல புலியாக்கும் (அட சோழ மன்னனுடைய கொடியில இருக்குமில்ல, அந்த புலிதான்)