சமீபகாலமாக நான் வலைப்பக்கங்களில் எழுதுவதில்லை.ஆனால் தமிழ்மணம் நட்சத்திரவாரமாக என்னைத் தேர்ந்தெடுத்திருப்பதற்கான அனுமதியைக் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பே கேட்டிருந்தது. ஏற்கனவே ஒப்புக்கொடுக்கப்பட்டது என்பதாலும் இறுதிநேரத்தில் மாற்று ஏற்பாடுகளைத் தமிழ்மணம் நிர்வாகம் செய்யவியலாது என்பதாலும் இந்த ஒருவாரம் மட்டும் எழுதலாம் என்றிருக்கிறேன். ஒருவாரத்தின்பின் மீண்டும் வலைப்பக்கங்கள் மூடப்படும்.
முதலில் தமிழ்மணம் நட்சத்திரவாரத்திற்காக என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றிகள். ஆனால் தேர்ந்தெடுப்பதற்குத் தமிழ்மணம் எடுத்துக்கொண்ட காலம்தான் அதிகம். ஆறு வருடங்கள். அதில் எனக்கு வருத்தமிருக்கிறது என்பதைப் பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். எனக்குப் பின்னால் தமிழ்மணத்தில் எழுத வந்த பலர் நட்சத்திர வாரமாகத் தேர்ந்தெடுத்தபோது எனக்குப் பொறாமையாக இருந்தது என்பதை மறைக்க விரும்பவில்லை.
நட்சத்திர வாரம் என்றில்லை, வலைச்சரம் என்னும் வலைப்பூ இருக்கிறது அங்கும் என்னை இதுவரை எழுத அழைத்ததில்லை. முன்பொரு காலத்தில் சென்னைப்பட்டினம் என்றொரு வலைப்பூ, சென்னைக்கு அப்பால் உள்ள ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் எழுதும் பதிவுகளுக்கான வலைப்பக்கம். அங்கும் அழைக்கப்பட்டதில்லை. தொடர் விளையாட்டுகளில் பெரும்பாலும் அழைக்கப்பட்டவனில்லை. ஆனால் இதில் எல்லாம் எனக்கு வருத்தங்கள் இருந்ததில்லை. குறிப்பாக தமிழ்மணம் நட்சத்திர வாரம் குறித்துத்தான் வருத்தம். ஆனால் அதில் என்னைத் தேர்ந்தெடுக்கும்போது கிட்டத்தட்ட நான் எழுதுவதை நிறுத்த வேண்டிய மனநிலை.
இப்போது அதிகமாய் வலைப்பூக்களில் எழுதுவதில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாளைக்குப் பத்து பதிவுகள் வரை எழுதியிருக்கிறேன். (அதில் பாதி கவிதைகள்). அப்போது தமிழ்மணம் பூங்கா என்னும் இதழை நடத்திவந்தது இப்போதுள்ள பல புதிய பதிவர்களுக்குத் தெரியாமலிருக்கலாம். வாரம் ஒருமுறை வெளியாகும் பூங்கா இதழில் அந்த வாரத்தின் சிறந்த பதிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியாகும். ஒரு கட்டம் வரை எல்லா பூங்கா இதழ்களிலும் எனது பதிவுகள் வந்தவண்ணமிருந்தன. பிறகு நான் தமிழ்மணத்திற்கு ஒரு மின்னஞ்சல் எழுதினேன். ”என்னை மாதிரியான முகங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்து போரடிக்கிறது. தயவுசெய்து புதுமுகங்களை அறிமுகப்படுத்துங்கள்”என்று. அதற்குப் பின் பூங்காவில் எனது பதிவுகள் வருவதில்லை. ஒருகட்டத்தில் பூங்கா இதழ் நிறுத்தப்பட்டு விட்டது.
மேலும் சூடான இடுகைகளில் வந்த எனது ஒருசில பதிவுகளைப் பார்த்தால் அது பெரும்பாலும் அக்கப்போர்களாகத்தானிருக்கும். சில காலங்களின்பின் படித்தால் நான் தேவையில்லாத ஏதோ வெட்டிவேலைகள் செய்திருக்கிறேன் என்று தெரியும். என்நினைவின்படி இதுவரை என்னுடைய பதிவுகள் எதுவும் வாசகர்பரிந்துரைகளில் வந்ததில்லை.
இவ்வளவு விரிவாக எழுதுவதற்குக் காரணம் வாசகர்பரிந்துரைகள், பாசிட்டிவ் குத்து, நெகட்டிவ் குத்து, போடுங்கம்மா ஓட்டுப் பிச்சைக்குரல்கள், முதுகு சொரியும் சக பதிவரின் விருதுகள், ஃபாலோயர் பஞ்சாயத்துகள் என இந்த நாய்ச்சண்டைகள் குறித்த புரிதலுக்காகத்தான்.
இந்த நாய்ச்சண்டைகளின் அடிப்படையில் பார்த்தால் நான் ஒரு குறிப்பிடத்தக்க பதிவராகவே இருக்க முடியாது. ஆனால் இந்த வரைவெல்லைகளைத் தாண்டி என் எழுத்துக்களைத் தொடர்ச்சியாகப் படிக்கும் வாசகர்கள் பல்வேறுதளங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மாற்று அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், நவீன இலக்கியத்தின்பால் அக்கறையும் கரிசனமும் கொண்டவர்கள் என. சமயங்களில் ‘நான் உங்கள் பிளாக்கை ரெகுலராகப் படிச்சுட்டு வர்றேன்’ என்னும் வார்த்தைகள் எதிர்பாராத இடங்களிலிருந்து வரும்போது ஆச்சரியமாக இருக்கும் (அதிர்ச்சியாக அல்ல((-). இதற்கெல்லாம் காரணம் என் எழுத்துதானே தவிர ஃபாலோயர்ஸ் அல்ல.
என் எழுத்தை எனக்குப் பிடிக்கும். எனக்குப் பிடிக்காத எதுவொன்றையும் வாசகி/கனுக்குத் தருவதில்லை. என் மீது தனிப்பட்ட முறையிலும் கருத்தியல் ரீதியாகவும் பகைமை கொண்டவர்களும் கூட என் எழுத்தின் அடர்த்தியையும் ருசியையும் ஒத்துக்கொள்வார்கள் என்றே நம்புகிறேன். எழுதும் எல்லா எழுத்தும் யாராவது ஒருவர் வாசிக்கக் கோருவதே. எனவே வலைப்பதிவர்களுக்குத் தங்கள் எழுத்து வாசிப்பவரைச் சென்றடைய வேண்டும் என்னும் ஆவலிருப்பது இயற்கையின்பாற்பட்டதுதான். ஆனால் அதற்கு எழுதிப்பழக வேண்டுமே தவிர பிள்ளை பிடித்துப் பழகக் கூடாது. ஆனானப்பட்ட காந்திக்கே நாட்டில் சொல்லிக்கொள்கிறமாதிரி ஃபாலோயர்ஸ் கிடையாது. உங்களுக்கு எதற்கு இத்தனை ஃபாலோயர்கள்?
நீண்டநாட்களாகவே தமிழ்மண வாசகர்பரிந்துரையில் வருபவைகளில் தொண்ணூறு விழுக்காடு குப்பைகள்தான். இது பிள்ளைபிடித்து உருவாக்கப்படுகிற பரிந்துரைகள். ஒட்டுமொத்தமாக எல்லா இடுகைகளையும் படிக்க தோதில்லாது முக்கியமான இடுகைகளைப் படிக்க வரும் வாசகர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதி, எழுத்துக்கு இழைக்கப்படும் அநீதியும் கூட.
இந்த அநீதிகளின் நீட்சிதான் தமிழ்மண விருதுகள் பரிந்துரை. சென்ற ஆண்டு எனக்குக் கிடைத்த தமிழ்மண விருது ‘சிறந்த நகைச்சுவைப் பதிவர்’. உண்மையில் அதற்கான பதிவு சிறந்த நகைச்சுவைப் பதிவு என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் பெரியார், அம்பேத்கர், இலக்கியம், சினிமா விமர்சனங்கள் என பலவற்றைக் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிற என்னுடைய அடையாளம் இதுதானா? நான் விருதுக்கான பரிசுத்தொகையை வாங்கவில்லை.
இந்த ஆண்டு அதில் கலந்துகொள்வதில்லை என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் ஏதோ நினைப்பில் எனது இடுகைகளை அனுப்பிவிட்டேன். ஆனால் நிச்சயமாக நான் யாருக்கும் வாக்களிக்கப் போவதுமில்லை, யாரும் எனக்கு வாக்களிக்கவும் வேண்டாம். தமிழ்மணம் இந்த விருதுகளை நிறுத்திவிட்டு பூங்கா மின்னிதழை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் கருத்து. பூங்காவிற்காக நான் கொளத்தூர்மணி, அ.மார்க்ஸ், சுப.வீரபாண்டியன் போன்ற பலரின் நேர்காணல்களை எடுத்து தந்திருக்கிறேன். இப்போது என்னால் அதைச் செய்ய முடியாவிட்டாலும் பல்வேறு துறைசார்ந்த பதிவர்களைக் கொண்டு பல்வேறு துறைசார்ந்த ஆளுமைகளின் நேர்காணல்களை இடம்பெறச் செய்யலாம். தமிழ்மணத்திற்கு அப்பாலும் பங்களிப்புகளைப் பெறலாம் என்றே கருதுகிறேன்.
........................................................................................................................................................................
இந்த வார தமிழ்மண நட்சத்திரத்தின் அதிகபிரசங்கித்தனம்தான் மேலே நீங்கள் கண்டது. அநேகமாக நிறைய பேர்கள் படிக்க வாய்ப்பில்லை.அதானால் நான் பதிகிறேன். நாய்சண்டையில் நானும் ஒரு நாயாய் என் பங்குக்கு கொஞ்சம் குலைத்து விட்டு போகலாம் என்று எண்ணம். இதன் மூலம் பதிவுலக நண்பர்களுக்கு சொல்வது வீட்டு நாயாக இருங்கள். தெரு நாயாக இருக்க வேண்டாம். உங்கள் படைப்புகளுக்கு நீங்கள்தான் அத்தாரிட்டி. தமிழ்மணத்திற்கு நன்றி.
டிஸ்கி : ??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
71 comments:
//நாய்சண்டையில் நானும் ஒரு நாயாய் என் பங்குக்கு கொஞ்சம் குலைத்து விட்டு போகலாம் என்று எண்ணம்.//
மீ த செகெண்டு :)
??,!!, :), :(, ^_^.
இப்பதிவு தேவையா மணிஜி...
நல்லாத்தான்யா போகுது 2010.
உண்மை.எனக்குத் தெரிந்து நீண்ட நாட்களாக எழுதும் பலர் இதுவரை அழைக்கப் பட்டதேயில்லை.சிலருக்கு இரண்டாம் முறை வாய்ப்பு வந்திருக்கிறது.சிலர் எழுத வந்து 2 மாதத்தில் நட்சத்திரமான கதையும் உண்டு.சில பேரை எழுதாவிட்டாலும் தமிழ்மணம் திரும்பத் திரும்ப அழைத்தக் கூத்தும் நடந்திருக்கிறது.கேட்டால் தானியங்கி சேவைன்னு சொல்லலாம்.
இன்னமும் நட்சத்திரத் தேர்வுக்கான விதிமுறையைத் தமிழ்மணம் சரியாக வகுத்துக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
நட்சத்திரம் என்றில்லை மகுடம் சூடான இடுகை வாக்களிப்பு முறை எல்லாமேதான்.வாக்களிப்பில் தமிழிஷ் போல அடையாளம் காட்டினால் நன்றாக இருக்கும்.
எதுனாலும் செய்து கொள்ளட்டும் நான் எழுதுவதை எழுதிக்கிறேன் என்ற பக்குவம் பெரும்பாலான பதிவர்களுக்கு இருப்பதால்தான் இன்னமும் தமிழ்மணத்தில் புதுப்புது பதிவர் வரவுகள் வந்து கொண்டிருக்கிறது.
இந்த பதிவு டேஷ் போர்டில் Display ஆகவில்லை.. ஏன்..??
முதல் வடையை(எலும்புத்துண்டு - அசைவப் பிரியர்களுக்கு)கைப்பற்றிய அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
இப்போ எங்களுக்கும் பங்கு வேணும்
லொள் லொள் லொள் லொள் லொள்
லொள் லொள் லொள் லொள் லொள்
லொள் லொள் லொள் லொள் லொள்
லொள் லொள் லொள் லொள் லொள்
லொள் லொள் லொள் லொள் லொள்
லொள் லொள் லொள் லொள் லொள்
லொள் லொள் லொள் லொள் லொள்
லொள் லொள் லொள் லொள் லொள்
லொள் லொள் லொள் லொள் லொள்
கொஞ்சம் கூட கிடைக்கலையே
"முட்டாள்கள், வடிகட்டின முட்டாள்கள், நாய்கள், நாய்ச் சண்டைகள்.."
இப்படி வலைப்பதிவுகளையும், வலைப்பதிவர்களையும் சொல்வதற்கும் ஒரு தகரியம் வேணும்.. அது சுனாதீனாவுக்கு மட்டுமே உண்டு..
ஏன்னா அவர் இந்தக் கூட்டத்துல இருக்குற ஒரேயொரு மனிதர்..!!!
கண்மணி..
இப்ப பிரச்சினை சுனாதீனாவை ஆறு வருஷம் கழிச்சு தமிழ்மணம் எழுதக் கூப்பிட்டதில்லை..
மேலே சொன்ன மேட்டர்தான்..!
:).. can understand you maniji..!
தலைவா.....
உங்க எழுத்து பல பேருக்கு பிடிக்கும் என்பது இங்கிருக்கும் பல பேருக்கு தெரியும்....
இவ்ளோ கோவம் வேணாமே மணிஜி..
//இந்த ஆண்டு அதில் கலந்துகொள்வதில்லை என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் ஏதோ நினைப்பில் எனது இடுகைகளை அனுப்பிவிட்டேன். //
ஜோக் அடிச்சா சிரிங்கப்பு.... என்னாத்துக்கு டென்சன்...
தினம் நான் எடுக்கிற பிச்சையில 4 பிச்ச களவாண்டு போற நாய் எதுன்னு தெரிஞ்சா சொல்லுங்கப்பு. நான் சண்டை போடணும்.
//கண்மணி..
இப்ப பிரச்சினை சுனாதீனாவை ஆறு வருஷம் கழிச்சு தமிழ்மணம் எழுதக் கூப்பிட்டதில்லை..
மேலே சொன்ன மேட்டர்தான்..//
உண்மைத் தமிழன் சார் நான் சு னா தி னா மேட்டருக்கே வரலை.
தண்டோராவின் ஆதங்கம்
//முதலில் தமிழ்மணம் நட்சத்திரவாரத்திற்காக என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றிகள். ஆனால் தேர்ந்தெடுப்பதற்குத் தமிழ்மணம் எடுத்துக்கொண்ட காலம்தான் அதிகம். ஆறு வருடங்கள். அதில் எனக்கு வருத்தமிருக்கிறது என்பதைப் பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். எனக்குப் பின்னால் தமிழ்மணத்தில் எழுத வந்த பலர் நட்சத்திர வாரமாகத் தேர்ந்தெடுத்தபோது எனக்குப் பொறாமையாக இருந்தது என்பதை மறைக்க விரும்பவில்லை.//
அதற்கான பதிலாக என் மனப்போக்கை பதிவு செய்தேன்.
பதிவின் உள்குத்து புரியாம வாயை விட்டுட்டேனோ...அவ்வ்வ்வ்
//ஈரோடு கதிர் said...
ஜோக் அடிச்சா சிரிங்கப்பு.... என்னாத்துக்கு டென்சன்...//
ஹா...ஹா...ஹா.... சரியான காமடி...(பீஸ்)
அண்ணே நான் தமிழ்மணத்துல நிமித்தி ஓட்டு போட்டுட்டேன். தமிழிஷ்ல கூட. நாள பின்ன பஞ்சாயத்துக்கு நான் ஆளில்ல சாமி.
//க.பாலாசி said...
ஹா...ஹா...ஹா.... சரியான காமடி...(பீஸ்)//
ங்கொய்யாலே நானா காமெடி பீசு...!!!!
//ஈரோடு கதிர் said...
ங்கொய்யாலே நானா காமெடி பீசு...!!!!//
தமிழ்மண நட்சத்திரத்தை சொன்னேன்.
மேலே சொன்ன மேட்டர்தான்..!//
அது என்ன மேட்டர்?
//ஒட்டுமொத்தமாக எல்லா இடுகைகளையும் படிக்க தோதில்லாது முக்கியமான இடுகைகளைப் படிக்க வரும் வாசகர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதி, எழுத்துக்கு இழைக்கப்படும் அநீதியும் கூட.//
உண்மை......
அட்றா....சக்கை.....அட்றா....சக்கை
இந்த நாய்ங்களுக்கு பழைய பொனத்தை நோன்டுறதே வேலையா போச்சு!!
இப்படிக்கு,
இன்னொரு நாய்!
//சென்ற ஆண்டு எனக்குக் கிடைத்த தமிழ்மண விருது ‘சிறந்த நகைச்சுவைப் பதிவர்’. உண்மையில் அதற்கான பதிவு சிறந்த நகைச்சுவைப் பதிவு என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் பெரியார், அம்பேத்கர், இலக்கியம், சினிமா விமர்சனங்கள் என பலவற்றைக் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிற என்னுடைய அடையாளம் இதுதானா//
எழுதின எல்லாத்தையும் படிச்சுப் பார்த்து சரியாப் புரிஞ்சுதான் குடுத்திருக்கறாங்களோ என்னவோ...
ம்ம்ம்
நட்சத்திர பதிவர் ஆனதிற்கு வாழ்த்துக்கள்
மன்னிக்கவும் நீங்க எழுதியது என்று நினைத்து விட்டேன்..
இதுதானா அது?
:)
கண்மணி் said,
//தானியங்கி சேவைன்னு சொல்லலாம்//
ஆமாம் கண்மணி.தமிழ்மணம் அழைக்காமலேயே நானும் நட்சத்திரப்பதிவர் ஆனேன்.வழக்கமான
தமிழ்மணம் server தொங்கிப்போய் முகப்பில் என் பதிவு ஒன்றரை நாள் நட்சத்திரமாக மின்னிக்கொண்டிருந்தது.
இது மாதிரி இரண்டு தடவை மின்னினேன்.
நன்றிகள் கோடி.எப்படி லொள்(ளு)
லொள்(ளு).
நீங்க சொல்றவரா தமிழ் மண நட்சத்திரம்.??? நல்ல வேளை நீங்க சொல்லைனா எனக்கு தெரிஞ்சிருக்காது.. நீங்களே..திரட்டி
கேபிள் சங்கர்
/ சொறிநாய் said...
இந்த வார தமிழ்மண நட்சத்திரத்தின் அதிகபிரசங்கித்தனம்தான் மேலே நீங்கள் கண்டது. நாய்சண்டையில் நானும் ஒரு நாயாய் என் பங்குக்கு கொஞ்சம் குலைத்து விட்டு போகலாம் என்று எண்ணம். இதன் மூலம் பதிவுலக நண்பர்களுக்கு சொல்வது வீட்டு நாயாக இருங்கள். தெரு நாயாக இருக்க வேண்டாம். உங்கள் படைப்புகளுக்கு நீங்கள்தான் அத்தாரிட்டி. தமிழ்மணத்திற்கு நன்றி//
இந்த கமெண்ட் சொறிநாய் என்ற பெயரில் சு.தி.க்கு போடப்பட்டிருக்கிறது.அதை கிளிக் பண்ணால் என் பெயர் வருகிறது!!. எந்த அரை டிக்கெட் இந்த சைபர் கிரைமில் ஸ்பெஷலிஸ்ட்? தெரிந்தால் சொல்லுங்கள்.
/shortfilmindia.com said...
நீங்க சொல்றவரா தமிழ் மண நட்சத்திரம்.??? நல்ல வேளை நீங்க சொல்லைனா எனக்கு தெரிஞ்சிருக்காது.. நீங்களே..திரட்டி
கேபிள் சங்கர்//
கேபிள்.இனி உங்கள் படைப்புகளூம் இனி அச்சில் வரும்??பாவம்!!
நான் எழுதியது இன்னும் அவரை பிரபலமாக்கட்டுமே...
/ T.V.Radhakrishnan said...
இப்பதிவு தேவையா மணிஜி..//
சார்...கோபம்தான். சாரி...
என்ன தலைவா? ஒண்ணுமே புரியலியே
அரை டிக்கெட், குறை பிரசவத்தில் பிறந்த டிக்கெட், தரை டிக்கெட் எல்லோருக்கும் தெரியபடுத்திக்கிறேன்.ஆட்டம் ஆரம்பம். ஆடிடுவோம்.
என்னடா சாமி ஒரு எழவும் புரியமாட்டேங்குது.. இதுக்கு என் கவிதைகளே தேவலாம் போலயிருக்கு...
சரி இங்க என்னத்தான் நடக்குது...
கும்மி ஸ்டாட்ஸ்...
வாவ் வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
இப்படிக்கு அமீரகத்தில் இருந்து ஒரு தெரு நாய்..:)
சரியாத்தான்யா பேரு வச்சுருக்கீங்க..
தண்டோரா..அடிச்சுட்டிங்க போல..
ஆனா,இவ்வளவு சடைச்சுகிட்டு ஏன் எழுதனும் அப்படின்னு கேக்கலாம் தானே..
இந்தக் கோபம் தேவையற்றது. என்னதான் சுஜாதா அவர்கள் சொன்னதுபோல எழுதுவதற்கு கோபம் அவசியம் என்றாலும் இது மனதை பாதிக்கும் ஒன்று.
உங்கள் எழுத்தின் மீது நம்பிக்கையிருந்தால் அது வெற்றி பெறும் எழுத்துக்களாக இருந்தால் இன்றில்லையென்றாலும் என்றாவது ஒரு நாள் கவனிக்கப்படும், அங்கீகரிக்கப்படும்.
கோபத்தை தவிர்த்து தொடருங்கள்.
http://www.manalkayiru.com
//அதை கிளிக் பண்ணால் என் பெயர் வருகிறது!!. எந்த அரை டிக்கெட் இந்த சைபர் கிரைமில் ஸ்பெஷலிஸ்ட்? தெரிந்தால் சொல்லுங்கள்.///
இதுக்கெல்லாமா.. சைபர் க்ரைமை கூப்பிடுறது? :)
அங்க.. அனானியா கமெண்ட் பண்ண வசதியிருக்கு. அப்படின்னா.. நாமே வேணுங்கற பெயரை அடிச்சி.. லிங்க்கா.. யாரோட ப்ரொஃபைலை வேணும்னாலும் கொடுக்கலாம்.
தோ.. கீழ பாருங்க.. ‘யாரோ’ உங்க பேர்லயே.. கமெண்ட் போட்டிருக்காங்க.
======
தண்டோரா said...
தோழர்,
தமிழில் நகைச்சுவை எழுத்தாளர்கள் மிகக் குறைவு. தயவுசெய்து... எழுதுவதை நிறுத்த வேண்டாம். மீண்டும் நகைச்சுவைப் பதிவர் விருது வாங்க வாழ்த்துக்கள்.
=====
சும்மா டெஸ்ட் பண்ணினேன். அவரை சீண்டனும்னு எல்லாம் இல்லை!! :) :)
பிரபலம் ஆய்டுவேனா???? :) :)
===
ஏற்கனவே இவர் பேர்ல... ஒரு ஃபேக் ஐடி க்ரியேட் பண்ணி.. என் ப்ளாகில் கமெண்ட் போட்டுகிட்டு இருக்காங்க.
அண்ணே......நீங்க எந்த சுவண்ணா? தியண்ணாவ சொல்லறீங்க??????????
என்ன அண்ணே தெரியாத மாதிரி கேக்கறீக?
இங்க கும்மி அலவ்டா.?
இல்லண்ணே......நெசமாலும் தெரியலைண்ணே....
அவருதான் இவுரா????இல்ல இவுரு வேற அவுரு வேறயாண்ணே
எதுக்கும் ஒரு வார்த்தை தமிழ் மணத்தில கேட்டுபோடுவம்ணே
இது முற்றிலும் கும்மிக்காகவே நடத்தபடுகிறது.பெரியார்களுக்கு அனுமதி இல்லை. சிறியார்கள் வரலாம்.
இங்கு குரைக்கலாம சாரி கும்மலாமா.?
:).....:)...:)??????
சந்தேகத்தை தீர்த்து வச்சதுக்கு ஒரு பொற்கிழி இல்லையா???
என்ன உலகமடா இது!
ஆரூர்... =)))))))... முடியல...
இத்தனை வருடங்களாக எழுதிவரும் நீங்கள், மின்னஞ்சல் அனுப்பி உங்கள் கவிதைகளை விடுத்து புதியவர்களுக்கு வாய்ப்புக்கொடுக்குமாறு கேட்ட நீங்கள், இப்பொழுது தமிழ்மணத்தை நினைத்து வருந்துவது தேவையில்லாதது என நினைக்கிறேன்.
இந்த சூடான இடுகை, பிரபல இடுகை போன்ற ஆசைகளை இத்தனை வருடங்களாக எழுதிவரும் நீங்கள் விரும்ப வேண்டியது இல்லை என்பது என் கருத்து.
தொடர்ந்து உங்கள் கருத்துகளை உங்கள் ப்ளாக்கில் எழுதுவதே உங்களைப் படிப்பவர்களுக்கு நீங்கள் செய்யும் மரியாதையாக இருக்கும் என்பது என் கருத்து.
வானம்பாடிகள் said...
நான் ஒழுங்கா ஓட்டு போட்டதை பாராட்டாத தண்டோராவுக்கு என் கண்டனத்தைத் தெரியக் குரைக்கிறேன்.
லொள். லொள். (தமிழ்மணத்துக்கு ஒன்னு. தமிலிஷ்கு ஒன்னு.:))
ஐய்யயோ.. அது நீங்க போட்டதுன்னு நினைச்சு உங்களுக்கு அறிவுரை சொல்லி எனக்கு தலை சுத்துதுங்க.. ஆள விடுங்கப்பா..
///ஐய்யயோ.. அது நீங்க போட்டதுன்னு நினைச்சு உங்களுக்கு அறிவுரை சொல்லி எனக்கு தலை சுத்துதுங்க.. ஆள விடுங்கப்பா..///
மொத கமெண்ட்டை படிச்சதும்.. உங்களை ‘கடிக்கலாம்’னு நினைச்சேன். தப்பிச்சீங்க!!
வ்வ்வ்வ்வ்வவவர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!
வ்வ்வ்வ்வ்வவவர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!
அடக்கம்மனாட்டிகளா,
பொம்மனாட்டிகளாட்டமா என் துகிலை இப்படி உரியுரீங்களே,கண்ணா,கண்ணா,கண்ணா.
சீ இது கலிகாலம் கண்ணன் எங்கே வரப்போறான்? ஒரு இரண்டும்கெட்டானை இப்படி கலாய்த்து கும்மிஅடிக்கிறீங்களே,இதைக்கேட்பாரே இல்லையா?
அப்பாடி ஆராய்ச்சி முடிஞ்சது.
இப்பத்தான் என்ன நடக்குதுன்னே தெரிஞ்சது. ஹாலிவுட் என்னைய கடிக்காம விட்டதுக்கு நன்றியா அவரோட எல்லா பதிவுக்கும் ஓட்டு போடுவேன்.
“அவரு” நான் எழுதுன ஒரு பதிவுல வந்து “இதெல்லாம் ஒரு பதிவா ?. அப்படின்னா ஆணியே புடுங்க வேண்டாம்னு” பயங்கர கோபமா சொல்லிட்டு போனார். நான் பயந்துட்டேன். என்னடா இது நான் பாட்டுக்கு நாலு பேரு மொக்கை படிக்கட்டும்னு பதிவு போட்டா இவரு திட்டுறாரேன்னு. இப்பத்தான் தெரியுது அவர் பயங்கர கோவத்துல இருக்காருன்னு.
இப்பதேன் ஆபிஸ்லேர்ந்து வந்தேன்..என்ன நடக்குது..சுவண்ணா...தியண்ணா...ஸ்டாரா....இந்த லோகத்த பகவாந்தான் காப்பத்தோனும்டா சாமி..சட்றியான காமெடிதேன்....
//ஏற்கனவே ஒப்புக்கொடுக்கப்பட்டது என்பதாலும் இறுதிநேரத்தில் மாற்று ஏற்பாடுகளைத் தமிழ்மணம் நிர்வாகம் செய்யவியலாது என்பதாலும் இந்த ஒருவாரம் மட்டும் எழுதலாம் என்றிருக்கிறேன்.//
தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு செய்யும் தொண்டுக்கு நன்றி..
//ஒருவாரத்தின்பின் மீண்டும் வலைப்பக்கங்கள் மூடப்படும்//
புண்ணியமாப் போகும், சீக்கிரமா செய்யவும்.
//ஏதோ நினைப்பில் எனது இடுகைகளை அனுப்பிவிட்டேன். //
மொதல்ல சொன்னதெல்லாம் சாதாரண ஜோக்ஸ், இதுதான் உலக மகா ஜோக்..
நகைச்சுவை எழுத்தாளர்னு சரியாத்தான் சொல்லியிருக்காங்க, சிரிப்பு போலீஸ் மாதிரி சிரிப்பு பதிவர்னு சொல்லியிருந்தா இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
^^ என்னா.. வில்லத்தனம்? :) :) :)
//நாலு பேரு மொக்கை படிக்கட்டும்னு பதிவு போட்டா இவரு திட்டுறாரேன்னு. இப்பத்தான் தெரியுது அவர் பயங்கர கோவத்துல இருக்காருன்னு.///
போலிகளைக் கண்டு ஏமாறாதீர்.
நான் வாழ்த்திட்டு போய்டுறேன்..
வாழ்த்துக்கள்.
தண்டோரா அண்ணே , இந்த பதிவுக்கு நான் நெகட்டிவ் ஓட்டு போட்டா உங்களுக்கு லாபமா?பாஸிடிவ் ஓட்டு போட்டால் உங்களுக்கு லாபமா?
ஒரே குழப்பமாயிருக்கு.
:)
நானும் ரெண்டு பதிவுக்கும் மாறி மாறி வந்துப் பார்க்கிறேன். ஒன்னும் தேறலையே????
”எதாவது செய்யணும் பாஸ்”
அடுத்தது ரெடியாகிட்டு இருக்கு.தொடர்ந்து கும்முவோம்.
-/சுடலை மாடன்/- said...
//சமீபகாலமாக நான் வலைப்பக்கங்களில் எழுதுவதில்லை.ஆனால் தமிழ்மணம் நட்சத்திரவாரமாக என்னைத் தேர்ந்தெடுத்திருப்பதற்கான அனுமதியைக் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பே கேட்டிருந்தது.//
//ஆனால் தேர்ந்தெடுப்பதற்குத் தமிழ்மணம் எடுத்துக்கொண்ட காலம்தான் அதிகம். ஆறு வருடங்கள். அதில் எனக்கு வருத்தமிருக்கிறது என்பதைப் பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். எனக்குப் பின்னால் தமிழ்மணத்தில் எழுத வந்த பலர் நட்சத்திர வாரமாகத் தேர்ந்தெடுத்தபோது எனக்குப் பொறாமையாக இருந்தது என்பதை மறைக்க விரும்பவில்லை.//
தமிழ்மணத்திலுள்ளவர்கள் எந்தச் சதியும் செய்யவில்லை என்று மட்டும் நான் அறிவேன்.
உங்கள் பதிவுகளை முன்பு அதிகம் படித்திராத நண்பர் ஒருவர் நீங்கள் எழுதிய ஒரு இடுகையை அனுப்பி நட்சத்திரத்துக்குப் பரிந்துரைத்த பொழுது, நீங்கள் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பாகவே நட்சத்திரமாக இருந்திருக்கக் கூடும் என்று நினனத்தேன். இருந்தாலும் தொடர்ந்து அதிகம் எழுதும் ஒரு சிலரை இரண்டு முறைகள் நட்சத்திரமாக தமிழ்மணம் அழைத்திருந்தபடியால் உங்களை மறுபடியும் நட்சத்திரமாகக் கேட்கலாம் என்றுதான் நினைத்தேன். சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு (இரண்டு மாதமல்ல, சரியாக நவம்பர் 27, 2009ல்) தமிழ்மணத்திலிருந்து அழைப்பை அனுப்பினோம். (வழக்கமாக கையில் கொஞ்சம் அதிக நேரம் இருந்தால் தமிழ்மணத்தின் பழைய தரவுகளைத் தேடி நீங்கள் முன்னால் நட்சத்திரமாக இருந்தீர்களா என்று பார்க்க முடியும்.)
தமிழ்மணத்தில் உங்கள் பதிவை இணைத்த பொழுது நீங்கள் அளித்த முகவரிதான் தமிழ்மணத்தில் சேமிக்கப் பட்டிருக்கும். அதைத்தான் பதிவர்களுடனான அஞ்சல்களுக்குப் பயன்படுத்துகிறோம். எனவே தரவுதளத்திலிருந்த உங்கள் முகவரிக்கு (sugunadiwakar@yahoomail.com) நான் அனுப்பிய மின்னஞ்சலிலிருந்து இரண்டு நாட்களாகப் பதில் வரவில்லை. எனவே நவம்பர் 29 ஆம் நாள், மேலுள்ள முகவரியோடு, உங்கள் வலைத்தளத்திலிருந்த gmail முகவரிக்கும் மீண்டும் அழைப்பை அனுப்பி வைத்தேன். அதன்பின் தான் என்னுடைய முதல் மின்னஞ்சல் எனக்குத் திரும்பி வந்தது. அப்பொழுது உங்கள் முகவரியிலுள்ள தவறைத் திருத்தி, (yahoo.com) முகவரிக்கு அனுப்பி வைத்தேன். எனத் தோன்றியது. உங்கள் வலைத்தளத்திலிருந்த gmail முகவரிக்கும் அப்பொழுது அனுப்பி வைத்தேன். அதுவும் திரும்பி வந்ததனால், தமிழ்மணம் தரவில் உங்களுடைய இன்னொரு பதிவுடன் வேறு முகவரி கொடுக்கப் பட்டிருக்கிறதா என்று தேடினேன். அப்பொழுதுதான் நீங்கள் இதற்கு முன்னால் நட்சத்திரமாக இருந்திருக்கவில்லையென்றும் தெரிந்தது. அப்பொழுது இங்கு Thanksgiving விடுமுறை என்பதால் எனக்கு நேரம் செலவழிக்க முடிந்தது. வேறு தருணங்களில் இதுபோன்ற சூழலில் வேறு பதிவரை அழைத்திருக்கிறேன்.
எனவே நீங்கள் நட்சத்திரமாக இதுவரை அழைக்கப் படாமல் இருந்ததற்கு தவறான மின்னஞ்சல் முகவரியும் காரணம். உங்கள் பதிவை அதிகம் படித்திராதவர்களும் கூட தமிழ்மணம் நட்சத்திரப் பொறுப்பாளர்களாகக் கடந்த ஆண்டுகளில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனுப்பிப் பார்த்து விட்டு விட்டிருப்பார்கள். No Response, Bounced Mails போன்றவற்றையெல்லாம் நாங்கள் ஒதுக்கிவிட்டு அடுத்த பதிவர்களுக்குப் போயிருக்கிறோம். எனென்றால் நாங்களும் இவற்றை எங்களது ஓய்வு நேரத்தில்தான் செய்கிறோம். நான் உங்களுடைய இடுகைகளைப் பெரும்பாலும் படித்து விடுவதாலேயே கொஞ்சம் அதிக முயற்சி எடுத்தேன். தனிப்பட்ட முறையில் நாம் ஒருமுறை நெடுநேரம் சந்தித்துப் பேசியிருப்பதால் என்னுடைய மின்னஞ்சலில் கூட உங்கள் முகவரியைத் தேடினேன்.
சமீப காலமாக உங்களது பல இடுகைகளில் முரண்பாடுகளிருந்தாலும், உங்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டுமென்று அடிக்கடி தோன்றினாலும் :-) அதுபோன்ற நேரத்தை என்னால் முடிந்த அளவு நேரத்தைத் தமிழ்மணத்தில் செலவழிக்கிறேன். உங்களைப் போன்றவர்கள் வலைப்பதிவுகளில் எழுதுவது விகடன்-குமுதம் போன்ற மழுங்கடித்து வைத்திருக்கும் தமிழ் வாசகர்களின் மத்தியில் வாசக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று தனிப்பட்ட அளவில் நான் கருதுகிறேன். அமெரிக்காவில் இருந்தாலே நாங்களெல்லாம் முதலாளிகளாகி விடவில்லை :-) எங்களுக்கும் வேலை பார்த்தால்தான் சோறு கிடைக்கும் . Thanksgiving மற்றும் கிறித்துமஸ் நேரங்களில் மட்டுமே அலுவலக வேலையிலும் கொஞ்சம் மட்டம் போட முடியும் :-) காட்டாக, கடந்த ஒரு மாதமாக தமிழ்சசி தன்னுடைய குடும்ப வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு தமிழ் மணம் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும், விருதுகளுக்கும் ஓய்வு நேரத்தையெல்லாம் செலவழித்துக் கொண்டிருக்கிறார்.
நன்றி – சொ.சங்கரபாண்டி
1:07 PM
-/சுடலை மாடன்/- said...
முந்தைய பின்னூட்டத்தின் தொடர்ச்சி...
அறிவுஜீவிகளுக்கோ தங்களுக்குத்தான் கொள்கையடிப்படையில் மேதாவித்தனமாய் பேச முடியும் என்றெண்ணி தன்னார்வத் தொண்டு செய்வோரைக் குறை சொல்வது எளிது. ஆதிக்க சக்திகளுக்கெதிரான அமைப்புகளையும் அவற்றை நடத்துபவர்களையும் ஏதோவழியில் கொள்கைக் குறைகள் சொல்லி போட்டு அடிப்பது மிக எளிது. இதைத்தான் தமிழகச்சூழலில் அறிவுஜீவிகள் செய்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் பெரும்பாலும் ஒரு சிறு மாற்றத்தைக் கூட சமுதாயத்தில் ஏற்படுத்தியிருக்க மாட்டார்கள் என்பதே உண்மை. வணிக மற்றும் ஆதிக்கச் சக்திகளுக்கெதிரான தன்னார்வ நிறுவனங்கள் பலவற்றை உருவாக்குவதே அரசுகளையும், அமைப்புகளையும் முழுமையாக ஆக்கிரமித்திருக்கும் அச்சக்திகளுக்கெதிரான முதல் செயல்பாடாக இருக்க முடியும். ஆனால் தமிழ் அறிவுஜீவிகளுக்கு தங்களுடைய மேதாவித்தன விளம்பரங்கள்தான் முக்கியம்.
விருதுகளைப் பற்றிய பொதுவான விமர்சனத்தை நானும் வரவேற்கிறேன். வலைப்பதிவுகளிலேயே கூட கடந்த ஆண்டு விரிவான விமர்சனம் நடந்தது. ஆனால் அதைச் சொல்லும் பக்குவமோ அனுபவமோ உங்களிடமில்லை. தமிழ் வலைப்பதிவுகளில் பேசப்படும் விசயங்கள் இன்னும் உயரவேண்டும் என்ற அடிப்படையில் செய்ய வேண்டிய செயல்பாடுகள் பல உண்டு. அதில் ஒரு முயற்சியே இவ்விருதுகள். பதிவுகளிலுள்ள அக்கப்போர்களின் மேல் உங்கள் கோபமிருந்தாலும், அவற்றை நாய்ச்சண்டைகள் என்றழைப்பது அதிகம். இதை நீட்டிப் பார்த்தால் உங்களுக்குப் பிடிக்காதவர்களை நீங்கள் திட்டுவதைக் கூட நாய்ச்சண்டை இரகம்தான் என்று வேறுசிலர் கூறலாம். இந்தவொரு விசயத்தில் ஜெயமோகன் கருத்துக்கும் உங்கள் கருத்துக்கும் வேறுபாடில்லை.
நன்றி – சொ.சங்கரபாண்டி
1:08 PM
அது!! :) :)
ரைட்டு ,நடத்துங்க.
////வீட்டு நாயாக இருங்கள். தெரு நாயாக இருக்க வேண்டாம். ////
ஏன் சார். இப்படி. :(
ok ok
என்னத்த சொல்றது....
நாய்கள் குறைக்கும் ஆனால் கடிக்காது என தோன்றியிருக்குமோ....
Henry J... யாரப்பா நீ. இங்க என்ன நடக்குது நீ என்ன பேசுறாய்??? அய்யோ அய்யோ...ம்ம்
Post a Comment