Friday, January 1, 2010

மானிட்டர் பக்கங்கள்........01/01/2010


முதலில் பதிவர் உலகநாதனுக்கு நன்றி. கூடுதல் பணம், நேரம் செலவு செய்து எங்களை பார்ப்பதற்காக சென்னை வந்து திருச்சி போனார். கடல் கடந்து வரும் பதிவர்களின் தர்மப்படி (தர்மம்தானே!!) சீமைச் சரக்கும் வந்தது. நேரம் போனதே தெரியவில்லை. நான், கேபிள், சூர்யா, வாசு, கார்க்கி ,பெஸ்கி, மோகன்குமார். இனிமையான மாலைவேளை. இறுதியில் அண்ணன் சிவராமனும் வந்து கலந்து கொண்டு நிகழ்வை மேலும் இனிமையாக்கினார். என்ன இருந்தாலும் இனியவன்.காம் இல்லையா?


உயிர்மை புத்தக வெளியீட்டு விழா. சாருவின் பேச்சில் அனல் பறந்தது. ஆனாலும் யாரும் அதை சீரியசாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. முதலில் ஞானியை ஒரு பிடிபிடித்தார். அம்மாவிடம் பொட்டி வாங்கி கொண்டு அய்யாவை ஐந்து வருடமாக திட்டி கொண்டிருக்கிறார். அடுத்து மாட்டியவர் ஜெயமோகன். ஏகவசனம்தான். புத்தகத்தை பற்றியும் ஓரிரு வரிகள் பேசியதாக நினைவு. இலக்கியத்தை எப்படியெல்லாம் வளர்க்க வேண்டியிருக்கிறது !

சுதந்திர போராட்ட காலத்தில் உப்பு சத்தியாகிரகத்துக்கு போனவர்களை விரட்டி அடித்தவரின் பேரன் இன்று காங்கிரசில் மத்திய அமைச்சராக இருக்கிறார். அவர் திரு ஜி.கே. வாசன். அவரின் பாட்டனார் கோவிந்தசாமி மூப்பனார்தான் அந்த புண்ணிய காரியத்தை செய்தவர். தியாகி பரம்பரை. ஆமாம் வாசன் எந்த துறைக்கு அமைச்சர் ? அடுத்த பாராவில் !

சேது சமுத்திர திட்டத்துக்காக இருந்த அலுவலகம் இழுத்து மூடப் பட்டு விட்டது. டி.ஆர். பாலுவின் சபதம் என்னவாயிற்று தெரியவில்லை! கப்பல் ஓடுவதை கலைஞருக்கு காட்டுவேன் என்று கண்ணீர் பொங்க வடித்தவரின் கன்னத்தில்தான் கை வைத்து விட்டார்களே. அப்புறம் அதை பற்றி பேசினால் உம்மாச்சி கண்ணை குத்தி விடும் என்பதாலோ யாரும் சீரியசாக பேசுவதில்லை. (தீவிர பார்ப்பனீயம் தெரியுதா எழுத்தில்!? ). போன வருஷக் கடைசியில் எனக்கு அறிஞர்கள் நிறைந்த சபையில் கொடுக்கப் பட்ட பட்டம் அது. நன்றி நண்பர்களே !!

புத்தக கண்காட்சி கோலாகலமாக தொடங்கியாச்சு. வாசு, முத்துவேல் உடன் சென்றிருந்தேன். புத்தகங்கள் நிறைய வாங்க வேண்டும். இன்னும் 10 நாட்கள் இருக்கிறதே. ஒரே ஒரு புத்தகம் வாங்கினேன். சுவாரசியமான புத்தகம். தலைப்புக்கு பொருத்தமாக இருந்தது. அதிலிருந்த ரசித்த ஒரு சிறு பகுதி.

“பாரசீக மன்னன் ஜாம்செட் என்பவனுக்கு திராட்சை மீதிருந்த அளவற்ற ஆசையினால் அதன் பழக் குலைகளை பெரிய ஜாடிகளீல் சேகரித்தான். சிறிது காலம் கழித்து திறந்து பார்த்தபோது அவை ஒரு வித புளிப்பு சுவை கொண்ட திரவமாக மாறிவிட்டிருந்தது. அருகிலிருந்த அறிஞர் பட்டாளம் சாத்தானின் வேலையால் அவை நாசமாகிவிட்டன என்று கூறியது. மனம் வெறுத்த மன்னன் அந்த ஜாடிகளின் மீது விஷம் என்று எழுதி வைத்தான்”

மன்னன் தன்னை வெறுத்ததனால் மனம் உடைந்த பெண் ஒருத்தி தற்கொலை செய்து கொள்ள எண்ணி அந்த புளித்த திரவத்தை குடித்து விட்டாள் . அது மரணத்திற்கு பதிலாக ஒரு வித பரவச நிலையை உண்டு பண்ணியதாம். மன்னனும் அதை பருகி உணர்ந்து அதற்கு “ஒயின்” என்று பெயரிட்டானாம். ஆகவே ஒயினை மகிழ்ச்சி தரும் விஷம் என்று அழைக்கிறார்கள்.

இன்னும் நிறைய சுவாரசியமான தகவல்கள். வரும் மானிட்டர் பக்கங்களில் பார்க்கலாம். (ரொம்ப முக்கியம்)

டிஸ்கி கவுஜை :

அந்த சிறிய
ஒலிக் குறிப்பிலேயே
வந்துவிட்டாள் தோழி
சீ. சீ. அதற்கில்லை
அங்கே பார் என்றேன்.

சாரி சாரியாய்
அணிவகுப்பதை
இடதும், வலதுமாய்
பிரிந்து தாக்குவோம்.

அடுத்த ஆறுமாதம்
பதுங்கி சாப்பிட
போதுமானதுதான்.

டிஸ்கி 2 : இது கவுஜையா? என்று திட்டி தீர்ப்பவர்களுக்கு. இது எங்கும் பிரசுரத்திற்கு எழுதப் பட்டதல்ல.

டிஸ்கி 3 : எந்த ஒரு நிகழ்வின் முடிவிலும் கொண்டாட்டம் இப்போது வழக்கமாகி விட்டது. அதுதான் ஈரோடு சந்திப்பிலும் நடந்தது. அப்புறம் அடிமுட்டாள்களாகிய நாங்கள் ஈரோட்டுக்கு பகுத்தறிவு பாசறையில் முற்போக்கு பயில்வதற்காக போகவில்லை என்பதை அநியாயமாக குப்பண்ணா மெஸ்ஸில் எங்களுக்காக உயிரை விட்ட நாட்டுக் கோழி மீது சத்தியமாக தெரிவித்து கொள்கிறோம்.

52 comments:

இரும்புத்திரை said...

ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க

Paleo God said...

present sir..:)

கார்க்கிபவா said...

அண்டங்காக்கா கொண்டைக்காரி

vasu balaji said...

புத்தாண்டு வாழ்த்துகள். அட்டகாசமா தொடங்கிட்டீங்க. டிஸ்கி அட்டகாசம்.

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல தொடக்கம், வாழ்த்துக்கள்

Kumky said...

அது அந்த குப்பண்ணா மெஸ் கோழிக்கு தெரியுமா...?

Kumky said...

தர்மம்தான்...ஆனா நீங்களே கும்மிக்கிட்டிருந்தா அதர்மமாகிடும்..

Kumky said...

இவ்ளோ திட்டியும் ஜெமோ ஒரு சினிமா சான்ஸாவது வாங்கித்தராரா பாருங்க...
புரிஞ்சிக்கவே மாட்டாரா?

Kumky said...

ஒட்டு மொத்த நிதியில் பாதிக்கும் மேலே தமிழ்நாட்டுக்கு தள்ளிகிட்டு வந்ததில் பாலுவுக்கு நாமெல்லாம் நன்றி சொல்லத்தான் வேண்டும்...சமயம் பார்த்து வச்சுட்டாங்க ஆப்பு.

மணிஜி said...

/கும்க்கி said...
அது அந்த குப்பண்ணா மெஸ் கோழிக்கு தெரியுமா...?//

தெரிஞ்சிருக்கணும்..

மணிஜி said...

/ கும்க்கி said...
ஒட்டு மொத்த நிதியில் பாதிக்கும் மேலே தமிழ்நாட்டுக்கு தள்ளிகிட்டு வந்ததில் பாலுவுக்கு நாமெல்லாம் நன்றி சொல்லத்தான் வேண்டும்...சமயம் பார்த்து வச்சுட்டாங்க ஆப்பு//

நிதி?/ யூ மீன் கருணாநிதியா?

Kumky said...

புத்தாண்டு வாழ்த்துங்னா...

போன் போட்டா எடுக்கவே மாட்டிங்கறீங்க..நம்மள பத்தி யாராவது போட்டுகுடுத்துட்டாங்களா...?

Kumky said...

இல்ல தலைவரே...மத்திய மந்திரியா இருக்கும்போது....அது தலைவருக்கும் சேர்த்துத்தான்..
கடல்ல எவ்வளவு இது வரைக்கும் கரைச்சாங்கன்னு தெரியலயே...

மணிஜி said...

/கும்க்கி said...
புத்தாண்டு வாழ்த்துங்னா...

போன் போட்டா எடுக்கவே மாட்டிங்கறீங்க..நம்மள பத்தி யாராவது போட்டுகுடுத்துட்டாங்களா.//

நேத்திக்கு நைட்டு சைலண்ட் மோடு. தூக்கம்.. வாழ்த்துக்கள்.

மணிஜி said...

/ கும்க்கி said...
இல்ல தலைவரே...மத்திய மந்திரியா இருக்கும்போது....அது தலைவருக்கும் சேர்த்துத்தான்..
கடல்ல எவ்வளவு இது வரைக்கும் கரைச்சாங்கன்னு தெரியலயே.//

அதுதான் வருத்தம் அவருக்கும். அப்பப்ப மண்னை அள்ளி தூத்தலாம்னு இந்தாங்க..போச்சு.எல்லாம்...

geethappriyan said...

அண்ணே அனைத்தும் அருமை
ஓட்டுக்கள் போட்டாச்சு

அண்ணாமலையான் said...

இந்த பதிவு கூட ஒயின் மாதிரி டேஸ்ட்டாதான் இருக்குது! (ஆனா விஷம் ஏற வேண்டியவங்களுக்கு ஏறுனா சரி)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள்

கலகலப்ரியா said...

=))... superu...!

நல்லதந்தி said...

”ஆங்கில”புத்தாண்டு வாழ்த்துகள்!.
நீண்ட இடைவெளிக்குப் பின்!!!!

நல்லதந்தி!

Ashok D said...

இலக்கிய கலந்துரையாடலில் எனை அழைக்காதலால் உடனடி வெளி நடப்பு செய்கிறேன்... நிரந்தரமாக...

Cable சங்கர் said...

கவிதைக்கு என்ன அர்த்தம்???

மணிஜி said...

/Cable Sankar commented on 01012010: “கவிதைக்கு என்ன அர்த்தம்???”

கடைசியா எண்டர் ஆயிட்டு இந்த கேள்வி கேக்கலாமா கேபிள்?

ஈரோடு கதிர் said...

கோழி இன்னுமா ஜீரணிக்கல!!!

மணிஜி said...

/ஈரோடு கதிர் said...
கோழி இன்னுமா ஜீரணிக்கல!!//

தப்பு உங்க பேர்லதான் கதிர். பின்ன கோழியை உயிரோட வாங்கி கொடுத்தீங்கல்ல!! தொண்டைல இல்ல கொன்னோம்!!

உண்மைத்தமிழன் said...

நாட்டுக்கோழியை கொலை செஞ்சா கருட புராணத்துல என்ன தண்டனைன்னு தெரியுமாஜி..!

Sanjai Gandhi said...

//சுதந்திர போராட்ட காலத்தில் உப்பு சத்தியாகிரகத்துக்கு போனவர்களை விரட்டி அடித்தவரின் பேரன் இன்று காங்கிரசில் மத்திய அமைச்சராக இருக்கிறார். அவர் திரு ஜி.கே. வாசன். அவரின் பாட்டனார் கோவிந்தசாமி மூப்பனார்தான் அந்த புண்ணிய காரியத்தை செய்தவர். தியாகி பரம்பரை. //

முடியலை மாமா உங்க லாஜிக்.. உங்கப்பா எதுனா தப்பு பண்ணி இருந்தா அதை வச்சி தான் உங்க வாழ்க்கை இருக்கனுமா? உங்க தாத்தாக்கு 3 பொண்டாடிங்க இருந்திருந்தா, உங்கள 3 பொண்டாட்டிக்காரர் பேரனா தான் பார்க்கனுமா? மணியா பார்க்கக் கூடாதா? எப்டி தான் யோசிப்பிங்களோ..

Prathap Kumar S. said...

புதுவருசத்துக்கு பொருத்தமா இருக்கு ஒயின் மேட்டர்... சந்தோஷ கொடுக்கறவிசயத்தை பத்தி சொன்னதுக்கு சந்தோஷம்,,

பின்னோக்கி said...

AXIS BANK 1000 கோடி ரூபாய் சேது சமுத்திர திட்டத்திற்கு குடுத்திருக்கிறது. சேது சமுத்திரத்தில் கால்வாய் வெட்டப்பட்டது உண்மை. ஆனால் கடல் மண் கொண்டு அதை மூடி விட்டது. இந்த உண்மை தெரியாமல் நீங்கள் சேது சமுத்திரம் வேஸ்ட் என்று எழுதியிருப்பது தவறு.

selventhiran said...

ம்...ம்...நடக்கட்டும்.

butterfly Surya said...

புத்தாண்டு டிஸ்கி சூப்பர்.


பார்த்துகுங்கண்ணே.. விரைவில் ”எச்சரிக்கை” வரப்போகுது....

சுசி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தண்டோரா.

பிரபாகர் said...

அண்ணா,

நல்லாருக்கு ஒயின்...

வாசன் மட்டுமல்ல.

சேது சேதுவாகிவிட்டது!

டிஸ்கி:

டிஸ்கி.

பிரபாகர்.

ஜெட்லி... said...

//அநியாயமாக குப்பண்ணா மெஸ்ஸில் எங்களுக்காக உயிரை விட்ட நாட்டுக் கோழி மீது சத்தியமாக தெரிவித்து கொள்கிறோம்.//

நடத்துங்க தலைவரே...

cheena (சீனா) said...

அன்பின் தண்டோரா

அருமை அருமை - நகைசுவை ரசித்தேன் - பாவம் அந்தக் கோழி - சீமைச்சரக்கு அடிக்கறதுக்கு இவ்ளோ பேரா - அவ்ளொ இருந்திச்சா

விஷம் ஒயினான கதை நல்ல தகவல்

கவுஜ சூப்பர்

நல்வாழ்த்துகள் தண்டோரா

அகநாழிகை said...

அருமை. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

- பொன்.வாசுதேவன்

மணிஜி said...

//AXIS BANK 1000 கோடி ரூபாய் சேது சமுத்திர திட்டத்திற்கு குடுத்திருக்கிறது. சேது சமுத்திரத்தில் கால்வாய் வெட்டப்பட்டது உண்மை. ஆனால் கடல் மண் கொண்டு அதை மூடி விட்டது. இந்த உண்மை தெரியாமல் நீங்கள் சேது சமுத்திரம் வேஸ்ட் என்று எழுதியிருப்பது தவறு.//

பின்னோக்கி அண்ணே..எத்தனை முறை தோண்டி,தூர் வாரினாலும் மீண்டும் மண் மூடி விடும் அபாயம் உண்டு என்று வல்லுனர்கள் சொன்னார்கள். அதை இவர்கள் பொருட்படுத்தவில்லை.

மணிஜி said...

சஞ்சய்..தினமணி ஆசைரியர் திரு. வைத்தியநாதன் தன் பேச்சில் சொன்னது.அதுமட்டுமல்ல. திராவிட இயக்கத்தின் விடிவெள்ளி பெரியாரின் பேரன் இன்று காங்கிரசில். காங்கிரஸ் பாரம்பரியம் மிக்க திருச்சி நேருவின் குடும்பம் இன்று திமுக வில்.இவ்வாறு அர்சியல் முரண்களை பற்றி அவர் பேசினார்.நான் தவறாக ஏதும் எழுதவில்லை என்று நினைக்கிறேன்.(போன வாரம் ஜீனியர் விகடன் படித்தீர்களா மாப்ளை? அதில் உங்கள் தலைவர்களை பற்றி புட்டு சுட்டிருந்தார்கள்!!

Sanjai Gandhi said...

மாம்ஸ், தினமணி, ஜூவி போன்ற நேர்மையான பத்திரிக்கைகள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். அது பிரச்சனை இல்லை. அவர் தாத்தா அவ்வாறு செய்தாரா என்பதும் நான் கேட்கவில்லை. அதற்காக வாசனுக்கு அளிக்கப் பட்டிருக்கும் பதவி தவறு என்பது போல் “ தியாகி பரம்பரை” என்று குறிப்பிட்டதை தான் தவறு என்றேன். என் தாத்தா கொலை செய்திருந்தால் என்னை கொலைகார பரம்பரை என்பீர்களா? இது என்ன லாஜிக் என்றேன்.

நிலாரசிகன் said...

:)

Sanjai Gandhi said...

//சஞ்சய்..தினமணி ஆசைரியர் திரு. வைத்தியநாதன் தன் பேச்சில் சொன்னது.அதுமட்டுமல்ல. திராவிட இயக்கத்தின் விடிவெள்ளி பெரியாரின் பேரன் இன்று காங்கிரசில். காங்கிரஸ் பாரம்பரியம் மிக்க திருச்சி நேருவின் குடும்பம் இன்று திமுக வில்.இவ்வாறு அர்சியல் முரண்களை பற்றி அவர் பேசினார்.//
இதில் என்ன் முரண்? தமாகா பிரியும் போது எங்கப்பா அதில் இருந்தார். நான் காங்கிரசிஸ் உறுப்பினராகவே தொடர்ந்தேன். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட நிலைபாடுகள் இருக்கலாம். குமரி அனந்தன் மகள் பாஜகவில். வைத்தி மாமா இதில் என்ன முரணைக் கண்டுப்பிடித்துவிட்டார் என நீங்கள் வழிமொழிகிறீர்கள்?

//நான் தவறாக ஏதும் எழுதவில்லை என்று நினைக்கிறேன்.//
தியாகி பரம்பரை என எழுதி கிண்டல் செய்தது உங்களுக்கு தவறாக தெரியாமல் போனது என் குற்றம் இல்லை சாமி.

//(போன வாரம் ஜீனியர் விகடன் படித்தீர்களா மாப்ளை? அதில் உங்கள் தலைவர்களை பற்றி புட்டு சுட்டிருந்தார்கள்!!//

விகடன் தானே.. எனக்கு எதுல சிரிக்கிறதுன்னு தெரியலை. இந்த வாரம் கூட எழுதி இருந்தாங்க “ தம்பிதுரை தருமபுரி எம்பி” என்று. அப்போ கரூர் எம்பி தாமரைசெல்வனா?

மேலும் விகடனின் துல்லியமான செய்திகள வாசிக்க : http://www.blog.sanjaigandhi.com/2009/12/mini-meals-v-21209.html

Vidhoosh said...

நல்ல தொகுப்பு.

அந்த எறும்புக் கவிதை பற்றி... இதுவும் பரவால்லையா...க்கும்.

முடிஞ்சா ஒருக்கா நம்ப யாத்ராவின் எறும்புக் கவிதையும் படியுங்க..
http://yathrigan-yathra.blogspot.com/2009/07/blog-post.html

ஜிகர்தண்டா Karthik said...

இந்த கவுஜய ஆட்டோ பின்னாடியே எழுதலாமே!!!

Jerry Eshananda said...

குப்பண்ணா மெஸ் மிச்சாயிடிச்சே .

வெள்ளிநிலா said...

DEAR thandoora, PLS SEND YOUR MOBILE NUMBER TO 8124248660, I WANT TO TALK WITH YOU ABOUT BLOGER'S MAGAZINE -THANKING YOU

மணிஜி said...

//vellinila said...

DEAR thandoora, PLS SEND YOUR MOBILE NUMBER TO 8124248660, I WANT TO TALK WITH YOU ABOUT BLOGER'S MAGAZINE -THANKING YOU

93400 89989.thanks.(chennai)

Unknown said...

நல்லா இருக்கு ..., அதும் அந்த கவித...

பித்தன் said...

njoy

RAMYA said...

ம்ம்ம் எல்லாம் நல்ல இருக்கு...

கவிதை அசத்திப் போட்டுடீங்க போங்க:)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-)))))))

மரா said...

//போன வருஷக் கடைசியில் எனக்கு அறிஞர்கள் நிறைந்த சபையில் கொடுக்கப் பட்ட பட்டம் அது.//

விடுங்க பாஸ்...இவிங்களே இப்பிடித்தான்.இதெல்லாம் பாத்தா தொழில் பண்ண முடியுங்களா..புத்தாண்டு மானிட்டர் ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள்..

வால்பையன் said...

//அடிமுட்டாள்களாகிய நாங்கள் ஈரோட்டுக்கு பகுத்தறிவு பாசறையில் முற்போக்கு பயில்வதற்காக போகவில்லை என்பதை அநியாயமாக குப்பண்ணா மெஸ்ஸில் எங்களுக்காக உயிரை விட்ட நாட்டுக் கோழி மீது சத்தியமாக தெரிவித்து கொள்கிறோம்.//


நான் ஈரோட்டில் கோழிபண்ணை வைத்திருக்கிறேன்! பகுத்தறிவுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை!
அது எந்த கடையில விக்குதுன்னு கூட எனக்கு தெரியாது!