”சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்ச்சாகனும்...
அகண்ட வெளியில் எங்கோ
ஒலிக்கும் ஒற்றை புல்லாங்குழலின் ஓசை..
இதயத்தை அறுக்கிறது....
காற்று திடிரென்று நின்று ....
கனவொன்று களவு போனது..
நிமிஷத்தின் நிழல்..
நிராயுதபாணியின் மீது யுத்தம் தொடுக்க.
நிர்கதியாய்..உணர்கிறேன்...
மூழ்கிய நிலையிலும்
மூச்சு விடுவது சாத்தியமா?
சந்தேகம் தீராத...
டேய்..டேய்..நீ முதல்ல நிறுத்து..யாராவது அவன் கிட்ட இருந்து பேனாவை பறிங்கப்பா....என்னாச்சு உனக்கு?மானங்கெட்ட மானிட்டரை வுட்டுத் தொலைன்னா..கேக்கறியா?ஏன்யா..உலகத்தை பத்தி நல்லதா நாலு வார்த்தை எழுதுன்னா....இப்படியா?பரந்து விரிந்த உலகம்..பல்வேறு நாடுகள்..பலதரப்பட்ட மொழிகள்...நிறைய நீரும்,மீதி நிலமும் நாலாம் வகுப்பு படிக்கிற பையனுக்கு ஒரு கட்டுரை எழுத சொன்னா,நீ கெட்ட வார்த்தைல திட்டிகிட்டு இருக்கியே..போ..போ..இடத்தை காலி பண்ணு..இரு.இரு..இந்த காலி பாட்டிலையையும்,பீடி கட்டையும் எடுத்து கிட்டு நடை கட்டுறா சாமி..
சத்தியா மடத்தில் சில ஆண்டிகள்:
சாமிகளா..இந்த ராஜகுரு செய்யறது சரியில்ல.
என்னாச்சு?இன்னைக்கு என்ன பிரச்சனை?ஒரு காவி ..இடுப்புல கட்னது மட்டும்தான் இருக்கு..கிழிக்காம சொல்லு..
அங்க காசி மடத்துல ராஜகுரு ஆளுகளுக்கு ஏழு கோயில் வாசல்ல உக்கார இடம் கொடுத்தோம்..கலந்து கட்டி அடிக்கிறாங்க..ஆனா இங்க நமக்கு..நமக்கு ஒரு மூணோ,அஞ்சோ ஒதுக்கி கொடுத்தா என்ன?கொஞ்சம் பட்டை சோறு..ஏதோ கொஞ்சம் சில்லறை தேத்தலாமில்ல..
அதை பத்திதான் பேசகூடாதுன்னு மங்கம்மா சொல்லுதே?
மங்கம்மா அப்படித்தான் சொல்லும்..நாமதான்யா அடிச்சு புடிச்சு இடம் கேக்கணும்....முச்சூடும் அவங்களே வழிச்சு கொட்டிகிறாங்க..பக்கத்துல போனா ”கையை”உதறி பருக்கையை பொறுக்கிட்டு போங்கிறாங்க.....சங்கம் கூடுறப்ப நாம ஒரு தீர்மானம் கொண்டு வருவோம்....நாச்சியார் மடத்துக்கு ஆதரவை மாத்தி விட்ருவோம்னு மிரட்டி பார்ப்போம்..
எலேய் ..சும்ம இரும்..மங்கம்மாவுக்கும்,நாச்சியாருக்கும் ஆகாது.....தெரியுமில்ல....அப்படியே கொடுத்தாலும் அஞ்சு பொட்டலம் கொடுப்பாங்க..நம்ம அதை பிரிக்கறதுக்குள்ள அம்பது எழவு விழும்.....
யாரப்பா..இங்க பிச்சை? என்றொரு குரல் கேட்கிறது..
ஆளாலுக்கு நாந்தான் என்றபடி கலைகின்றனர்...
அறிவு மடத்தில் ராஜகுரு...காசி மடத்துக்காரனுங்க ஓசில எதை கொடுத்தாலும் போதும்பாங்க...சோத்தை மட்டும் போடுங்க..தப்பி தவறி”எப்படி” பொங்க வைக்கிறதுன்னு கத்து கொடுக்கவே கூட்டாது..ருசி கண்டுட்டா..அம்புடுதான்...விருதாசலம் சாமியார்,தைலாபுரம் ஆதினம் இவங்க கூட கூட்டு சேர்ந்து நம்ம அடி மடியில ”கை”வச்சுடுவாங்க..பாத்து சூதானமா நடந்துக்கணும்..
மணிரத்னமிடம் 32 கேள்விகள் என்றதும் கொலை வெறியோடு பார்த்தார்..சரி வந்தது வந்துட்டீங்க..சில கேள்விகள் மட்டும் என்றார்..அது..
உங்க பெயர் சொல்லுங்க.. உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
நா பொறந்தது சினிமா தியேட்டரில்தான் முதல்ல ம...ன்னுதான் வச்சாங்க...அப்புறம் இண்டர்வல்லுக்கு பிறகு ணி..சேத்தாங்க.. ஆனா இந்த பேர் எனக்கு பிடிக்கலை..
ஏன் சார்?
ரொம்ப நீளமா இருக்கு...
கடைசியாக அழுதது எப்பொழுது?
ராவணா சீதாவை கிட்நாட் பண்ணிட்டு போனப்ப அழுதேன்..
உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு ஆய்தஎழுத்துதான் பிடிக்கும்..
பிடித்த மதிய உணவு என்ன?
பசிக்கலை..
சார் சாப்பிடுறீஙகளான்னு கேக்கல.....பிடிச்ச உணவு என்னன்னு கேட்டேன்...
தச்சி மம்மு...
கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
மாட்டேன்..ப..யம்.....
உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
நா அவங்க கிட்ட மொத்தமே நாலு வார்த்தைதான் பேசியிருக்கேன்..
என்ன சார் அது?
ம்...சரி..
சார்..ரெண்டு வார்த்தைதான் இருக்கு...
அதை யேதான் ரெண்டு வாட்டி...
கடைசியாகப் பார்த்த படம்?
சம்பூர்ணராமாயணம்......
இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
வால்மீகி ராமாயணம்....
வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
தளபதிக்காக அஸ்தினாபுரம்,அங்க நாட்டுக்கெல்லாம் போனேன்.இப்ப ராவணாவுக்கு அயோத்தி...
என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
பேசாதே...வாயுள்ள ஊமை நீ.....
24 comments:
ஆஹா... மானிட்டர் மானிட்டர்தான்.. அதிலும் அந்த மணிரத்தினம் நேர்காணல் அசத்திட்டீங்க...
தலைவரே.. கவிதையில பேனா வ புடுங்கிற கவிதையில ஒரு சேதியிருக்கு..
மணி 32 கேள்விகள் சூப்பர்..
உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
நா அவங்க கிட்ட மொத்தமே நாலு வார்த்தைதான் பேசியிருக்கேன்..
என்ன சார் அது?
ம்...சரி..
சார்..ரெண்டு வார்த்தைதான் இருக்கு...
அதை யேதான் ரெண்டு வாட்டி...
மேலுள்ள வரிகளை ரசித்தேன்..
இந்த மானிட்டர் போதை கொஞ்சம் கம்மிதான் தண்ணி நறையா கலந்தாச்சு...
நன்றி.ராகவன்..
ரசித்தேன்.
//தலைவரே.. கவிதையில பேனா வ புடுங்கிற கவிதையில ஒரு சேதியிருக்கு..
மணி 32 கேள்விகள் சூப்பர்.//
கேபிள் எதுக்கும்,இதுக்கும் சம்பந்தமில்லை..பொடி வச்சு சூட்டை கிளப்பிடாந்தீங்க...
ஆமாம் ஜாக்கி..இந்த வாட்டி தண்ணி கொஞ்சம் ஜாஸ்திதான்...ஆனா ரொம்ப ராவா எழுதி டைலுட் பண்ணேன்...
ரசித்தேன்//
காலை வணக்கம் தராசு அண்ணே...
தலைவா,
Dilute ஆனதே இப்பிடின்னா......
ஸ்ரீ....
/தலைவா,
Dilute ஆனதே இப்பிடின்னா......
ஸ்ரீ...//
ஸ்ரீ..போனவாரமெ எழுதி டிராப்ட்ல இருந்தது...இன்னைக்கு படிச்சா ரொம்ப ராவா இருந்தது..அதான்...
இன்னிக்கு கொஞ்சம் ஓவராயிருச்சுன்னு நினைக்கிறேன்..!
எது..?
மானிட்டர்தான்..?!!!
கவிதையும் சரி, மடத்து செய்திகளும் சரி சூப்பரு.
32 கேள்விகள் ரசித்துப் படிக்க வைத்தது.
அண்ணே... சூப்பர் அண்ணே...
அடி பின்னிடீங்க....
மடத்து செய்திகள் டாப்பு.
//நாச்சியார் மடத்துக்கு ஆதரவை மாத்தி விட்ருவோம்னு மிரட்டி பார்ப்போம்..//
உள்ளதும் போச்சுறா நொல்லக்கண்ணானு உட்காந்துக்க வேண்டியது தான்!
/இன்னிக்கு கொஞ்சம் ஓவராயிருச்சுன்னு நினைக்கிறேன்..!
எது..?
மானிட்டர்தான்..?!!//
அண்ணெ..சரக்கிருந்தா மப்பு வரும்..மப்பு இருந்தா சரக்கு முறுக்கா வரும்...
/கவிதையும் சரி, மடத்து செய்திகளும் சரி சூப்பரு.
32 கேள்விகள் ரசித்துப் படிக்க வைத்தது.
July 16, 2009 9:53 PM//
வாங்க அன்பு..
/அண்ணே... சூப்பர் அண்ணே...
அடி பின்னிடீங்க....
மடத்து செய்திகள் டாப்பு.//
வணக்கம் நக்கலிஸ்ட் நைனா..
///நாச்சியார் மடத்துக்கு ஆதரவை மாத்தி விட்ருவோம்னு மிரட்டி பார்ப்போம்..//
உள்ளதும் போச்சுறா நொல்லக்கண்ணானு உட்காந்துக்க வேண்டியது தான்//
வணக்கம் அருண்..கோவை விசிட் கேன்சல்..
//நா அவங்க கிட்ட மொத்தமே நாலு வார்த்தைதான் பேசியிருக்கேன்..
என்ன சார் அது?
ம்...சரி..
சார்..ரெண்டு வார்த்தைதான் இருக்கு...
அதை யேதான் ரெண்டு வாட்டி...//
சிரிச்சிகிட்டே இருக்கேன்!
ஏ சூப்பர்ப்பா..
:)))))))))
மணிரத்தினத்தின் பதில்கள் அசத்தல்
மணிரத்தினத்தின் பதில்கள் அசத்தல்
அண்ணே.......
மானிட்டர்.........ஹ்ம்ம்... பட்டைய கெளப்புது.........
கலக்குங்க..... கலக்குங்க...........
அப்புறம், நம்ம பக்கம் வந்து ரொம்ப நாளாச்சோ?? ஒரு ஏழு (எட்டு) வந்துட்டு போறது....
Post a Comment