என்னங்க சொல்றீங்க ? நெசமாவா ?
ஆமாம்யா. இப்பதான் தாக்கல் வந்துச்சு.
யார் சொன்னாங்க ?
நம்ம தலையாரிதான். அவரே கண்ணால பார்த்தாராம்.
நமக்கெல்லாம் நல்ல காலம் பொறந்துடுச்சுன்னு சொல்லு. சரி ஒரு ஆயிரம் ரூபா கைமாத்து கொடேன் !!
அட ! விசயம் கேள்விப்பட்டா , நான், நீன்னு போட்டி போட்டு கிட்டு கொடுக்க ஆள் வருமய்யா .!
பொங்கலுக்கு வெள்ளை அடிக்கணும். புது துணி எடுக்கணும். பேங்க் காசை திருப்பி கேக்கமாட்டாங்க இல்ல ?
முச்சூடும் தள்ளுபடிதான். ஏதோ சாமி இந்த மட்டும் கண்ணை திறக்கலைன்னா ? இன்னும் ரெண்டு வருஷமுல்ல காத்திருக்கணும் ?
அண்ணே ! மோசம் போயிட்டோம். குடி கெட்டு போச்சு.
என்னடா தங்கராசு ? என்ன சொல்றே?
ஆமாண்ணே. இப்பதான் ஆசுபத்திரியிலிருந்து வர்றேன்.
அடப்பாவி. விளங்கறா மாதிரி சொல்றா !
அண்ணே . நம்ம எமெல்லே பொழச்சுகிட்டாருண்ணே.
போச்சு. எல்லாம் போச்சு. ஊமை கண்ட கனவா போச்சு.
( சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரு எம்.எல்.ஏ மயிரிழையில் உயிர் தப்பினாராம் : பத்திரிக்கை செய்தி)
புது டெல்லி சவுத் பிளாக். அனைத்து துறைகளுக்கும் பிரதமர் உத்தரவு பறக்கிறது. இனிமேல் காலண்டரில் தேதி கிழிக்கவே கூடாது.
என்ன ஆச்சு ? பிரதமருக்கு. அது வேறு ஒன்றும் இல்லை ஜெண்டில்மேன். சிங் இன்னும் இரண்டு நாளில் தெலுங்கானா பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று அருள்வாக்கு சொல்லிட்டாருல்ல. அதான். உங்கொய்யால. தமிழ்நாட்டான் தான் இளிச்சவாயன் போல. இதுவரைக்கும் நம்ம பிரச்சனை ஒன்னுக்காவது இந்த மனுஷன் வாயை திறந்திருப்பாரு ? அவங்க கவர்மெண்ட்டு. அதான் சதை ஆடுது . எப்படியோ போங்கப்பா !!
நம் தமிழ்த்தாயின் தலைமகன் நேற்று உதிர்த்த முத்து இது. 1924 ஆம் ஆண்டு நான் பிறந்தேன். அப்போதுதான் காவிரி பிரச்சனை ஆரம்பித்தது. அன்று முதல் அதை தீர்க்க வாதாடியும், போராடிக்கொண்டும் இருக்கிறேன்.
லேட்டஸ்ட் தகவல் . சிங் தன் காலர் ட்யூனை மாற்றி விட்டார். பல்லே..பல்லே..பல பல்லே. இது போச்சு. இப்ப நீங்கள் அழைக்கும் நபரின் தொலைபேசி எண் உபயோகத்தில் இல்லை. இதான் அவர் காலர் ட்யூனாம்.
வீட்டில் ஆள் இல்லாதபோது திருடினால், அது களவாம். ஆள் இருக்கும் போது கத்தியையோ, உளியின் ஓசை டிவிடியையோ காட்டி அடித்தால் அது கொள்ளையாம். அது கூட ஐந்து பேர் கொண்ட கும்பலாக இருக்க வேண்டுமாம். நாலு பேர் என்றால் வழிப்பறியாம்.
மேற்க் கண்ட முத்தை உதிர்த்தது தமிழறிஞர் மா.நன்னன் என்று நினைக்க வேண்டாம்.நம்ம சென்னை சிட்டி போலிஸ் கமிஷனருங்கோ!!
கொஞ்சம் வேட்டைக்காரன். பிளஸ் டூவில் நான்கு முறை பெயிலாகும் விஜய் பாடுகிறார். ஆக்ஸ்போர்டு கல்விதான் எல்லோருக்கும் கிடைக்கணும். பிரச்சனை அதில்லை. சம்பாதிக்கும் காசில் இதுவரை கல்யாணமண்டபங்களாக கட்டும் இ.த. ஒரு பள்ளிக் கூடம் கூட கட்டியதில்லை என்பதுதான் முக்கியமான மேட்டர். அது கூட அரசு நிலத்தை குறைந்த மதிப்பில் வாங்கிய வில்லங்கங்கள் வேறு. விஜய்க்கு முதல்வர் ஆகும் ஆசை வந்ததில் தப்பே இல்லை. மேற்கண்டவைதானே அதற்கு முதல் தகுதி!!
டிஸ்கி : பின்னூட்டம் இட விரும்பும் அன்பர்கள் தலைப்பை ஒத்தியோ, வெட்டியோ போட்டு விடலாம்
38 comments:
நினைப்புதான் பொழப்பக் கெடுக்குது!
அதனால நினைக்காம இருந்திரலாம்.
இந்தப் பின்னூட்டம் செல்லுமா?
தலைப்பை ஒத்தி அல்ல
ஒட்டி!
சூப்பர்..
ஒட்டிப்போட்டாச்சு.
பிளஸ் டூவில் நான்கு முறை பெயிலாகும் விஜய் பாடுகிறார். ஆக்ஸ்போர்டு கல்விதான் எல்லோருக்கும் கிடைக்கணும். பிரச்சனை அதில்லை. சம்பாதிக்கும் காசில் இதுவரை கல்யாணமண்டபங்களாக கட்டும் இ.த. ஒரு பள்ளிக் கூடம் கூட கட்டிடதில்லை என்பதுதான் முக்கியமான மேட்டர். அது கூட அரசு நிலத்தை குறைந்த மதிப்பில் வாங்கிய வில்லங்கங்கள் வேறு. விஜய்க்கு முதல்வர் ஆகும் ஆசை வந்ததில் தப்பே இல்லை. மேற்கண்டவைதானே அதற்கு முதல் தகுதி!!” முட்டாள் கூட்டத்திற்கு புரியுமா?
அசத்தலான செய்திகள்.
வீட்டில் ஆள் இல்லாதபோது திருடினால், அது களவாம். ஆள் இருக்கும் போது கத்தியையோ, உளியின் ஓசை டிவிடியையோ காட்டி அடித்தால் அது கொள்ளையாம். அது கூட ஐந்து பேர் கொண்ட கும்பலாக இருக்க வேண்டுமாம். நாலு பேர் என்றால் வழிப்பறியாம்.//
செம சூடு
நல்ல கலக்கல் காமெடிகள் அண்ணே
//பின்னூட்டம் இட விரும்பும் அன்பர்கள் தலைப்பை ஒத்தியோ, வெட்டியோ போட்டு விடலாம்//
அண்ணே! இது எங்களுக்குத் தானே சொன்னீங்க... :-)
இப்ப நானும் உங்களுக்கு சொல்லுறேன். போயி பொழைப்ப பாருங்கண்ணே! இவய்ங்க எப்பவுமே இப்படி தான். :-))
பொழைப்புன்ன உடனே உங்க வேலைய பாக்க போயிட்டிகளா?
அட, இவய்ங்க டவுசர கிழிக்கிற மாதிரி இப்படி எழுதுறது தாண்ணா நம்ம பொயப்பு. :-))
கடைசில இன்ஜினியரிங் காலேஜுக்கு (கல்லா கட்ட) வழி சொல்லிட்டீங்களே...::((
//"போடா... போக்கத்தவனே...போய் பொழப்ப பாருடா.."//
சரிங்கண்ணே...::))
தலை தாக்கு தாக்குன்னு தாக்கிட்டிங்களே.........
இந்த வருசம் பென்னாகரத்துக்காரங்களுக்குத்தான் பொங்கல்........
நமக்கு இல்ல.........
//"போடா... போக்கத்தவனே...போய் பொழப்ப பாருடா.."//
அண்ணே உங்களை போய் அப்படி சொல்லமுடியுமான்னே!
போங்க போக்கத்தவரே...போய் பொழப்ப பாருங்க சாரே!
இப்படி வேண்டும் என்றால் சொல்லுறேன்:)
அண்ணே நமக்கு நல்லது செய்யவேண்டியது நடிகன் இல்லை, நம் தலைவர்கள். நாம நடிகன் பேசு வசனங்களுக்காக எல்லாம் அவர் அதை பொதுவாழ்வில் கடைபிடிக்கனும் என்று நினைப்பது சரி இல்லை.
"போடா போக்கத்தவனே.. போய் பொழப்ப பாருடா.."
அண்ணே.. நான் காப்பி பண்ணி அப்படியே போட்டுட்டேண்ணே..!
அண்ணே ஈரோடு பதிவர் குழுமம் பேனரை ஒரு தாடிகாரர் பிடிச்சிருக்கிறாரே அவரை திருப்பதி ரயில்வே ஸ்டேசனில் பார்த்த மாதிரி இருக்கே அவரா இவரு?:)))))
இடுகைல வர விஷயம் எல்லாம் நமக்கு சொல்லுறது தலைப்பு. :)). என்னா வில்லத்தனம் சாமியோவ்
மணிஜி. ஒட்டு போட்டாச்சு. 7/7
ரீசார்ஜ் கூப்பன், Avtar டிக்கெட், எது கொடுத்தாலும் பரவாயில்லை.
//அண்ணே . நம்ம எமெல்லே பொழச்சுகிட்டாருண்ணே.
போச்சு. எல்லாம் போச்சு. ஊமை கண்ட கனவா போச்சு.
( சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரு எம்.எல்.ஏ மயிரிழையில் உயிர் தப்பினாராம் : பத்திரிக்கை செய்தி)//
சரியான கலக்கல்
//நம் தமிழ்த்தாயின் தலைமகன் நேற்று உதிர்த்த முத்து இது. 1924 ஆம் ஆண்டு நான் பிறந்தேன். அப்போதுதான் காவிரி பிரச்சனை ஆரம்பித்தது. அன்று முதல் அதை தீர்க்க வாதாடியும், போராடிக்கொண்டும் இருக்கிறேன்//
//வீட்டில் ஆள் இல்லாதபோது திருடினால், அது களவாம். ஆள் இருக்கும் போது கத்தியையோ, உளியின் ஓசை டிவிடியையோ காட்டி அடித்தால் அது கொள்ளையாம். அது கூட ஐந்து பேர் கொண்ட கும்பலாக இருக்க வேண்டுமாம். நாலு பேர் என்றால் வழிப்பறியாம்.
மேற்க் கண்ட முத்தை உதிர்த்தது தமிழறிஞர் மா.நன்னன் என்று நினைக்க வேண்டாம்.நம்ம சென்னை சிட்டி போலிஸ் கமிஷனருங்கோ!!//
எப்பத்தான் திருந்துவானுங்களோ....
//வீட்டில் ஆள் இல்லாதபோது திருடினால், அது களவாம். ஆள் இருக்கும் போது கத்தியையோ, உளியின் ஓசை டிவிடியையோ காட்டி அடித்தால் அது கொள்ளையாம். அது கூட ஐந்து பேர் கொண்ட கும்பலாக இருக்க வேண்டுமாம். நாலு பேர் என்றால் வழிப்பறியாம்.//
இது என்னாங்க பார்முலா!
//1924 ஆம் ஆண்டு நான் பிறந்தேன். அப்போதுதான் காவிரி பிரச்சனை ஆரம்பித்தது. அன்று முதல் அதை தீர்க்க வாதாடியும், போராடிக்கொண்டும் இருக்கிறேன்//
இது சரியான காமடி...நானும் காலையில செய்தியை படிச்சேன்.
கலக்கல்...
//போங்க போக்கத்தவரே...போய் பொழப்ப பாருங்க சாரே!//
//அண்ணே ஈரோடு பதிவர் குழுமம் பேனரை ஒரு தாடிகாரர் பிடிச்சிருக்கிறாரே அவரை திருப்பதி ரயில்வே ஸ்டேசனில் பார்த்த மாதிரி இருக்கே அவரா இவரு?:)))))//
//அண்ணே.. நான் காப்பி பண்ணி அப்படியே போட்டுட்டேண்ணே..!//
பின்னூட்டமே கலக்கட்டுது :))))
சூப்பர்..
தலைப்பு...........அருமை.
//1924 ஆம் ஆண்டு நான் பிறந்தேன். அப்போதுதான் காவிரி பிரச்சனை ஆரம்பித்தது. அன்று முதல் அதை தீர்க்க வாதாடியும், போராடிக்கொண்டும் இருக்கிறேன்//
எங்க தலைவர் இலங்கை பிரச்சனையே நாலு நாள்ல முடிச்சவர் இதுக்கு ஏன் லேட்டாவுதுன்னு தெரியல? ஒருவேளை காவேரி ஒடற இடத்தில எல்லாம் போய் பிரச்சனையை முடிச்சு வெய்க்கறாரோ!!!
//ஏதோ சாமி இந்த மட்டும் கண்ணை திறக்கலைன்னா ?//
ஆனாலும் சாமி..... அடிக்கடி தெறக்குதுங்க
நல்ல தலைப்பு:)!
தலைப்புல சொல்றது எங்களையா?
வடை போச்சே
அப்படி போடு அருவாள..
எனக்கு விஜயை திரையில் மட்டுமே பிடிக்கும். நான் அவருக்கு வக்காலத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம். ஆனால் தெரிஞ்சதை சொல்கிறேன்.
வேளச்சேரியில் விஜய் இரண்டு பள்ளிக்கூடங்கள் நடத்துகிறார். வந்தால் அழைத்து செல்கிறேன். மேலும் பரங்கிமலை ஜோதியில் சைக்கிள் ஸ்டேண்ட் நிரம்பி வெளியில் நிறுத்தியிருக்கிறார்கள் இன்று.(ஃபோட்டோ எடுத்து வைத்திருக்கிரேன்) அப்படி உங்களுக்கு விஜயை பிடிக்கவில்லையென்றால் ஃப்ரீயா விடுங்க. எப்போதும் இந்த நினைப்பாவே இருக்காதிங்க சாமீ..
/கார்க்கி said...
எனக்கு விஜயை திரையில் மட்டுமே பிடிக்கும். நான் அவருக்கு வக்காலத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம். ஆனால் தெரிஞ்சதை சொல்கிறேன்.
வேளச்சேரியில் விஜய் இரண்டு பள்ளிக்கூடங்கள் நடத்துகிறார். வந்தால் அழைத்து செல்கிறேன். மேலும் பரங்கிமலை ஜோதியில் சைக்கிள் ஸ்டேண்ட் நிரம்பி வெளியில் நிறுத்தியிருக்கிறார்கள் இன்று.(ஃபோட்டோ எடுத்து வைத்திருக்கிரேன்) அப்படி உங்களுக்கு விஜயை பிடிக்கவில்லையென்றால் ஃப்ரீயா விடுங்க. எப்போதும் இந்த நினைப்பாவே இருக்காதிங்க சாமீ//
எனக்கும் விஜயை திரையில் பிடிக்கும்.
அரசியல் என்று அலைபாய்வது,உதயம் தியேட்டர் எதிரில் அரசு நிலத்தை முறைகேடாக வாங்குவது என்று சகலமும் நான் சொன்னது புரளியில்லை.காஞ்சிபுரம் அருணா தியேட்டர் ஓனர் என் நண்பர்(தொழில் ரீதியாக. அதாவது 18 தியேட்டர்களில் என் கிளையண்ட்டின் விளம்பரம் ஓடுகிறது. அவர்கள் சொல்லும் தகவல்கல்களைதான் எழுதினேன்.ஜோதி தியேட்டரில் வாகனம் என்று நான் சொன்னது டூவீலர்களை. சைக்கிளை அல்ல. இன்று காலையில் கூட பார்த்தேன்.சைக்கிள் ஸ்டேண்டு வெளியில் உள்ளது.படம் ஓட வாழ்த்துக்கள்.உங்களுக்கு அவர்கள் அரசியல் தெரியாது. அதானால் கோபம் வருகிறது என்று நினைக்கிறேன் சகா.
கார்க்கி..பள்ளிக்கூடத்தில் கல்வி இலவசமா? அட்லீஸ்ட் ரசிகர் மன்றத்தினர் பிள்ளைகளுக்கு. சில வருடங்களுக்கு முன் திருப்பாச்சி பேனர் கட்டும் போது தவறி விழுந்து இறந்த இருவரை இ.த.கண்டு கொள்ளாததை பற்றி பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது.
நான் சொல்வது விஜயோ அல்லது தலையோ, நல்லவர்களாய் வேஷம் மட்டுமே போட முடியும் என்பதைதான்.சினிமாவோட நிறுத்தும் எண்ணம் இருப்பவர்களை பற்றி நாம் கவலைப்படவில்லை. அடுத்து அரசியல் எனும்போதுதான் பொது விமர்சனம் வைக்க வேண்டியிருக்கிறது சகா..
தைரியமேவமஸ்த்து..
கலக்கிட்டீங்க.
ஜி..மட்டுமல்ல...நம் கதை இந்திய நண்டுகள் மாதிரிதான்...யாராக இருந்தாலும் தமிழகம் போல சுயநலவாதிகள் ஆட்சியிலிருக்கும்வரை டெல்லிவாலாக்கள் எதைக்குறித்தும் கவலைப்படப்போவதில்லை..
இன்னுமா விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்தெல்லாம் யோசிக்கறீங்க...ன்ன்நா போங்ன்னா..
// வீட்டில் ஆள் இல்லாதபோது திருடினால், அது களவாம். ஆள் இருக்கும் போது கத்தியையோ, உளியின் ஓசை டிவிடியையோ காட்டி அடித்தால் அது கொள்ளையாம். அது கூட ஐந்து பேர் கொண்ட கும்பலாக இருக்க வேண்டுமாம். நாலு பேர் என்றால் வழிப்பறியாம். //
இதையே யூனிஃபார்ம் போட்டுகிட்டு ரோடில் பண்ணா என்னா பேருங்க?
போ போ போ பொ வ பாருங்ணா..!
ஹா ஹா ஹா.....!
:)....சூப்பர்..
சிங்கு காலர் டோன் மேட்டர் கலக்கல்...
கார்க்கி சகா இ.த.பள்ளிக்கூடம் கட்டியிருக்காரே... இன்டர்நேஷனல் ஸ்கூலா, மெட்ரிக்குலேஷனா... டொனேஷன் எவ்வளவுன்னு கேளுங்க தெரிஞசவேராட புள்ளைக்கு அட்மிஷன் வேணும்.
லேட்டா வந்துட்டேன்.. சாரி... சூப்பர்.... லாஸ்ட்ல சொன்ன வரி பார்த்ததும் கை துறுதுறுன்னு வருது... ஆனா... அவ்வ்வ்வ்.. =))...
:)
Post a Comment