Wednesday, December 2, 2009

அர்த்தமில்லாத கவிதை......


சாமி ஒரு சங்கதி
சத்த காது கொடுக்கணும்

பொழப்பு ஒண்ணும்
பெரிசா இல்ல
நல்ல சோத்தை பாத்து
நொம்ப நாளாச்சு
நாய் கடிச்சு வச்சதுதான்
நல்ல துணியாச்சு

தெக்கேந்து பங்காளி
வந்தான்..பளபளன்னு
எப்படிராண்ணேன்

திருவிழாவாம் அங்கிட்டு
கையை மோந்து பாத்தேன்

கறிவாசம் அடிக்குது
ஆறுமாசமாச்சாம்
வாசம் போவலையாம்

ஆறடிக்கு இலை
ஆட்டு கறி சோறு
அதுக்குள்ள
காப்பவுன் கம்மலாம்
இலைக்கடியில
ஆட்டுப்பால் குடிச்சவரு
சிரிச்சாராம்
பொருமலா இருந்துச்சு

பொஞ்சாதிக்கு சீலை
மல்லு வேட்டியாம் இவனுக்கு
குண்டி நோவாம
குந்த வச்சு
வண்டியில கூட்டி போனாங்களாம்
விரல்ல மை வைக்க

சாமி போறாமையா இருக்கு
நம்மூர்லயயும் திருவிழா
வந்தாக்க சொகமா கிடக்கும்தானே

நம்ம ஊர் தலை சொம்மாத்தானே
கிடக்கு..அதுக்கு
செத்தாவது
சீதக்காதியாவட்டுமே

குறிப்பு : ஏற்கனவே எழுதிய கவிதைதான்...இடைத்தேர்தலை முன்னிட்டு மீண்டும்...

23 comments:

நிலாரசிகன் said...

நல்லா இருக்குங்க :)

sathishsangkavi.blogspot.com said...

காலத்திற்கு ஏற்ற கவிதை......

anujanya said...

நல்லா இருக்கு :)

அனுஜன்யா

நையாண்டி நைனா said...

நல்லா இருக்குங்க
குறிப்பு : ஏற்கனவே எழுதிய பின்னூட்டந்தான்... இடைத்தேர்தலை முன்னிட்டு மீண்டும்...

ஹேமா said...

வார்த்தைகள் இயல்பு நடையில் நல்லாருக்கு.

vasu balaji said...

/சாமி போறாமையா இருக்கு
நம்மூர்லயயும் திருவிழா
வந்தாக்க சொகமா கிடக்கும்தானே/

ஆட்டுப்பால புட்டிப்பாலாக்கி ரவுசுட்டு காட்டி குடுத்துடுவானே நம்மாளு.:))

Marimuthu Murugan said...

அர்த்தமில்லாத கவிதை....

நிறைய அர்த்தம் இருந்தது.

அருமை....

பெசொவி said...

//செத்தாவது
சீதக்காதியாவட்டுமே
//

அருமை, ரசித்தேன், வாழ்த்துகள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்கு

கமலேஷ் said...

உண்மையான வரிகளில் மிளிர்கிறது கவிதை...

cheena (சீனா) said...

நல்ல கவிதை - நேரத்திற்கேற்ற கவிதை - இயல்பான நடை - எளிதான சொற்கள் - நல்ல சிந்தனை

நல்வாழ்த்துகள் தண்டோரா

அத்திரி said...

நல்லாயிருக்கு

Ashok D said...

படித்துதான் படித்தேன்

நல்லாயிருக்குங்க..

(என்னாங்க நாங்க போன் பண்ணா எடுக்க மாட்டீங்களா.. நீங்க 10 மணிக்கு போனிப்பீங்க.. நாங்க பேசனும்.. நாங்க 8.40க்கு போன் பண்ணா எடுக்கமாட்டிங்க... அப்ப நாங்க என்னா..... சாமிக்கே வெளிச்சம்)

Ashok D said...
This comment has been removed by the author.
Mahesh said...

ஐ.. சர்க்கஸ் டென்ட் அடிச்சாச்சா? கொண்டாட்டந்தான்...

Mahesh said...

அங்க போட்ட விருந்து சும்மா டெஸ்டு... இங்க போடறதைப் பாருங்க.. அடுத்த சர்க்கஸ் வரைக்கும் வாசம் போகாது.... என்ன ஒண்ணு... அதை மோந்து பாத்துக்கிட்டே கால்த்தை ஓட்டணும் :)

வால்பையன் said...

நானும் எப்படான்னு ஏங்கிகிட்டு இருக்கேன்!

ஈரோடு கதிர் said...

அடுத்தது பெண்ணாகரத்துலங்கோவ்வ்வ்வ்

ரோஸ்விக் said...

//நம்ம ஊர் "தலை" சொம்மாத்தானே
கிடக்கு..அதுக்கு
செத்தாவது
சீதக்காதியாவட்டுமே//

இங்க தாண்ணே அர்த்தமே இருக்கு.:-)

VISA said...

ரொம்ப நல்லா இருந்திச்சு தண்டோரா....சூப்பர் பிளோ....அப்புறம் ஒவ்வொரு இடை தேர்தலுக்கு புதுசு புதுசா கவிதை எதிர்பாக்குறோம்.....ஏன்னா நாங்களும் ஓட்டு போடுறோம் தானே.

ராமலக்ஷ்மி said...

அர்த்தமில்லாத கவிதையில்தான் எத்தனை அர்த்தங்கள்? அருமை தண்டோரா.

மணிஜி said...

நன்றி நண்பர்களே..தங்களின் மேலான வருகைக்கும்,வாசிப்புக்கும், கருத்துக்களுக்கும்..

"உழவன்" "Uzhavan" said...

முடிவு அருமை.. வாழ்த்துக்கள் வெற்றி பெற