Wednesday, August 19, 2009

பிள்ளையுமானேன்.....சிறுகதைபார்த்தவுடன் கண்டுபிடித்து விட்டேன்.எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன?கண்டுபிடிப்பது மனசுதானே.அப்படியேதான் இருந்தாள்.என்ன..கொஞ்சம் வயசாயிருந்தது.அந்த கம்பீரம் அப்படியே இருப்பதாய் பட்டது.ஆனால் ஒரு மெலிதான சோகம் முகத்தில்.அவள்?பெயர் தெரியாது.தெரிஞ்சுக்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

நான் சென்னையில் இருந்தபோது 8.50 மின்சார ரயிலை பிடிப்பேன்.அப்போதுதான் அவளை பார்த்தேன்.லேடிஸ் பெட்டியில் ஜன்னலோர மலராய் பூத்திருந்தாள்...அடுத்த நாள் அந்த ரயிலை பிடிக்க நான் பரபரத்தபோதுதான் என்னை இழந்துவிட்டதை உணர்ந்தேன்.அன்றிலிருந்து அந்த ரயிலை தவறவிடுவதில்லை.ஜன்னல் தரிசனம் ஆனப்பிறகு அடுத்த ரயிலை பிடிப்பதே வழக்கமானது.தொடர்ந்து அவளை பார்ப்பது,கவனத்தை ஈர்ப்பது..பின் பேசலாம் என்று திட்டம்...ஆனால் திடீரென்று ஒரு வாரம் அவளை காணமுடியவில்லை..

கிட்டதட்ட பைத்தியம் பிடித்தது.ஒருதலைதான்.இருந்தாலும் அந்த வேதனை...அதை அனுபவித்தேன் என்றே சொல்லவேண்டும்.அவளூம் என்னை தீவிரமாக விரும்பி,சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக எங்கோ சென்றாள் என நினைத்து,அவள் வருகைக்காக காத்திருப்பின் சுகத்தை ரசிக்க தொடங்கியிருந்தேன்.

அவள்வந்துவிட்டாள்..தனியாகஇல்லை...கூடஒருவன்....
திருமணமாகியிருந்தது...பாக்கியவான்...என்ன வரம் வாங்கி வந்திருக்கிறான்...அதே 8.50 ரயிலதான்...ஆனால் இருவரும் சேர்ந்து பொதுபெட்டியில்.நான் அவர்கள் எதிரில் தேர்டு பர்சன் சிங்குலரில்(இருவர் அமரும் சீட்டில்”கொஞ்சம் அவர்கள் பெரிய மனதுடன் ஒதுக்கி தரும் அந்த இடம்).அவள் எதோ பேசிக்கொண்டே வருவாள்.மெல்லிய குரல்.அவனுக்கு மட்டுமே கேட்கும்.அவன் வாங்கிய வரத்தை அனுபவிப்பது போல் இருப்பான்.அவன் பேசி நான் பார்த்ததில்லை.தேவி உபாசகன் போல் இருக்கை நுனியில் பவ்யமாக உட்கார்ந்திருப்பான்.மணியன் செல்வத்தின் ஓவியம் என்று நான் அவளை வர்ணிப்பேன்.

இப்பவும் அப்படித்தான் இருந்தாள்.காதோரம் கொஞ்சம் நரை.கூட அவன்.கணவனா?எப்படி இன்னும் இளமையாக?ம்ம்ம்..அவன் இல்லை.அவர்கள் மகன் என்று நினைக்கிறேன்.கல்லூரியில் படிக்கவேண்டும்....அப்படியே அப்பா மாதிரி..ஆனால் அந்த மூக்கு அவள்தான்.மீண்டும் அவளை பார்த்தேன்.அந்த உச்சிப்பொட்டு இல்லை.காலில் மெட்டி இல்லை.அப்ப அவன் ...அடப்பாவி.நீ அபாக்கியவானா?இல்லை அவள் அபாக்கியவாதியா?அவள் மகன் அப்பாவை போலவே அமர்ந்திருந்தான்.அவள் பேசிக்கொண்டே வந்தாள்.அறிவுரையாக இருக்கலாம்.

எக்மோரில் நான் இறங்க வேண்டும்.அவர்களூம் எக்மோரில் இறங்கினார்கள்.ஆனால் நான் மீண்டும் ரயிலில் ஏறினேன்.அவர்கள் இருக்கைக்கு சென்றேன்.முதலில் அவள் அமர்ந்த இருக்கையில் அமர நினைத்தேன்.ஆனால்..என்னமோ தெரியவில்லை மகனின் இருக்கையில்அமர்ந்தேன்...உபாசகன் போலவே.
இப்போது அவள் முகம் எனக்கு பேரன்போடு பிரகாசமாய் தெரிகிறது.ஒரு காற்றில் அலைபாயும் சிறகாய்,திரிந்து வந்தாயா?பரிவு காட்டுகிறாள்...கவலை வேண்டாமடா மகனே என்று உருகுகிறாள்....எனக்கு கேட்கிறது.ஆனந்தமாய் அழ ஆரம்பிக்கிறேன்....

40 comments:

நையாண்டி நைனா said...

Nice and It melted my heart.

Cable சங்கர் said...

காதலியை, தாயாய் பார்ப்பது.. எங்கோ குறைகிறார் போல் இருக்கிறதே தண்டோரா..

Raju said...

எல்லாரும் இப்பிடி இருந்துட்டா, கள்ளக் காதல்ன்ற ஒன்னு இருக்காதில்ல தலைவரே..?

கலையரசன் said...

ஒருவேளை உண்மையாவே பாத்துட்டீங்கலோ? ஏன்னா... பீலீங் பிளிரிது.. அதான் கேட்டேன்!!

வால்பையன் said...

டாக்டர் அட்ரஸ் தெரியுமுல்ல!

அகநாழிகை said...

கதை நல்லாயிருக்கு தண்டாரோ.
இன்னும்கூட நீளமாக வந்திருக்கலாம்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

R.Gopi said...

நல்ல உணர்வு பூர்வமாக இருக்கிறது...

வாழ்த்துக்கள் தண்டோரா...

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா இருக்கு தலைவரே.. கொஞ்சம் சுருக்கிட்ட மாதிரி ஒரு பீல்..

மணிஜி said...

//Nice and It melted my heart.//

thanks naina...

மணிஜி said...

/காதலியை, தாயாய் பார்ப்பது.. எங்கோ குறைகிறார் போல் இருக்கிறதே தண்டோரா.//

கேபிள்..அவள் கணவனே அவளை தாயாய் பார்த்தான்.இதில் காமத்தை போட்டு குழப்பகூடாது.வழக்கம் போல் இதிலும் கொஞ்சம் நிஜம் உண்டு

மணிஜி said...

/எல்லாரும் இப்பிடி இருந்துட்டா, கள்ளக் காதல்ன்ற ஒன்னு இருக்காதில்ல தலைவரே..?//

மிகச்சரி தம்பி டக்ளஸ்...கவிதைக்கு ஜெய்ஹோ

மணிஜி said...

/ஒருவேளை உண்மையாவே பாத்துட்டீங்கலோ? ஏன்னா... பீலீங் பிளிரிது.. அதான் கேட்டேன்!//

கலை..சில விஷயங்கள் இப்படி நடந்தால் நமக்கு பிடிக்காமலா போகும்..

மணிஜி said...

/டாக்டர் அட்ரஸ் தெரியுமுல்ல//

வால்..நான் தான் சொல்லிட்டேனே..முத்திபோச்சு.
ஒன்னியும் பண்ணமுடியாது..

மணிஜி said...

/கதை நல்லாயிருக்கு தண்டாரோ.
இன்னும்கூட நீளமாக வந்திருக்கலாம்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்//

நீர்த்துவிடும் என்று நினத்து சுருக்கினேன்..நன்றி வாசு

மணிஜி said...

/நல்ல உணர்வு பூர்வமாக இருக்கிறது...

வாழ்த்துக்கள் தண்டோரா..//

கோபி நன்றி(எந்திரன் டிவிடி வேணுமா?)

மணிஜி said...

நல்லா இருக்கு தலைவரே.. கொஞ்சம் சுருக்கிட்ட மாதிரி ஒரு பீல்//

கார்த்திகைபாண்டியன்..இன்னும் நீளமா எழுதறதுக்கு சம்பவங்கள் இல்லை.சேர்த்தால் செயற்கை வெளிப்படும்..நன்றி

இராகவன் நைஜிரியா said...

கலக்கீறீங்க தலைவரே...

அருமையா எழுதியிருக்கீங்க. சிலரின் உணர்வுகளைப் பிரதிபளித்துள்ளீர்கள்.

மணிஜி said...

/கலக்கீறீங்க தலைவரே...

அருமையா எழுதியிருக்கீங்க. சிலரின் உணர்வுகளைப் பிரதிபளித்துள்ளீர்கள்//

நன்றி..ராகவன்

Unknown said...

நல்லாயிருக்கு.

இன்னும் கூட கொஞ்சம் விவரித்திருக்கலாம்.

மணிஜி said...

/நல்லாயிருக்கு.

இன்னும் கூட கொஞ்சம் விவரித்திருக்கலா//

வருகைக்கும்,பகிர்வுக்கும் நன்றி..நாடோடி நண்பரே..

மணிப்பக்கம் said...

nice :)

Anonymous said...

நல்லா இருக்கு மணி.

இன்னும் சில சுவையான சம்பவங்களைச் சேர்த்து நல்லதொரு சிறுகதையாக வந்திருக்க வேண்டியது.

உண்மைத்தமிழன் said...

ஒரே பீலிங்கா இருக்குங்கண்ணா..!

ஆனா பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் வகை பார்ட்டிகளுக்காக எழுதின மாதிரி தெரியுது..!!!

butterfly Surya said...

அருமை. இதுவும் சேஷீ மாதிரி இருக்கு..

என்னவோ போங்க..

பொக்கிஷம் ரிலீஸ் ஆனதிற்கு இதற்கும் எதுவும் சம்மந்தம் உண்டா..??

மணிஜி said...

/nice :)//

நன்றி மணிபக்கம்

மணிஜி said...

/நல்லா இருக்கு மணி.

இன்னும் சில சுவையான சம்பவங்களைச் சேர்த்து நல்லதொரு சிறுகதையாக வந்திருக்க வேண்டியது//

கருத்து பகிர்வுக்கு நன்றி வேலன்...

மணிஜி said...

/ஒரே பீலிங்கா இருக்குங்கண்ணா..!

ஆனா பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் வகை பார்ட்டிகளுக்காக எழுதின மாதிரி தெரியுது..!//

உண்மைத்தமிழன் அண்ணே..உங்க காதல் அனுபவங்களை ஒரு பதிவா போடுங்க...

மணிஜி said...

/அருமை. இதுவும் சேஷீ மாதிரி இருக்கு..

என்னவோ போங்க..

பொக்கிஷம் ரிலீஸ் ஆனதிற்கு இதற்கும் எதுவும் சம்மந்தம் உண்டா.//

வண்ணத்துப்பூச்சி..அன்னிக்கு மப்புல எடுத்த போட்டோவை பாத்திங்களா?

வால்பையன் said...

//உண்மைத்தமிழன் அண்ணே..உங்க காதல் அனுபவங்களை ஒரு பதிவா போடுங்க... //

இன்னோரு பொக்கிஷத்தை தமிழகம் தாங்குமா!?

மணிஜி said...

///உண்மைத்தமிழன் அண்ணே..உங்க காதல் அனுபவங்களை ஒரு பதிவா போடுங்க... //

இன்னோரு பொக்கிஷத்தை தமிழகம் தாங்குமா!//

வால்குசும்பு..பதிவை பத்தி பின்னூட்டம் போடாம,பின்னூட்டத்தை பத்தி பின்னூட்டம்?

நாஞ்சில் நாதம் said...

ஒரு குறும்படம் எடுக்கலாம் போல

அத்திரி said...

//Cable Sankar August 19, 2009 9:00 AM
காதலியை, தாயாய் பார்ப்பது.. எங்கோ குறைகிறார் போல் இருக்கிறதே தண்டோரா..//


ஹிஹிஹி.........ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு

SUMAZLA/சுமஜ்லா said...

டாகுமெண்ட்ரி படம் மாதிரி! ஆனா, அந்த கணவன் இடத்தில் நாம் இருந்திருந்தால், இந்த அபாக்கியவதியால், நான் அரோகரா, இப்போ தப்பித்தோம் என்ற எண்ணமா?

இரசிகை said...

viththiyaasama irukku....

arumaiyaana kaathal....

பா.ராஜாராம் said...

அன்பு...அன்பு...அழ செய்கிற அன்பு!மு.க.வையும் கடிக்கிரீர்...இப்படி பிரவாகமாயும் வெடிக்கிரீர்...ரெண்டுலயும் அழகாய் இருக்கிறீர்...மிக அழகாய்...

மணிஜி said...

/அன்பு...அன்பு...அழ செய்கிற அன்பு!மு.க.வையும் கடிக்கிரீர்...இப்படி பிரவாகமாயும் வெடிக்கிரீர்...ரெண்டுலயும் அழகாய் இருக்கிறீர்...மிக அழகாய்...//


கமெண்ட் கவிதையாய்..
நெகிழ வைக்கிறீர்
அன்பு ராஜாராம்..
நன்றியுடன்..நண்பன்

மணிஜி said...

/ஒரு குறும்படம் எடுக்கலாம் போல//

நன்றி நாஞ்சிலார்...

மணிஜி said...

அத்திரி...நன்றி

மணிஜி said...

/டாகுமெண்ட்ரி படம் மாதிரி! ஆனா, அந்த கணவன் இடத்தில் நாம் இருந்திருந்தால், இந்த அபாக்கியவதியால், நான் அரோகரா, இப்போ தப்பித்தோம் என்ற எண்ணமா//

இல்லை சகோதரி..அது ஒரு உணர்வின் வெளிப்பாடே...

மணிஜி said...

/viththiyaasama irukku....

arumaiyaana kaathal..//

ரசனைக்கு நன்றி..ரசிகை