நான் ஆஸ்திகனா?நாஸ்திகனா?தெரியவில்லை..பிள்ளையார் பொம்மையெல்லாம் வாங்கி,சுண்டல் கொழுக்கட்டை சகிதம் பூஜையெல்லாம் ஆச்சு.(வீட்ல இருக்குறவங்க செண்டிமெண்டுக்கு மதிப்பு கொடுக்கணுமில்ல..அப்புறம் வருஷம் தவறாம ஐயப்பன் கோவில் நிச்சயம்.பக்தி பரவசம் அப்படிங்கிறத விட,அந்த இரண்டு மாசம் சிகரெட்,தண்ணி எல்லாத்துக்கும் தடா..(போயிட்டு வந்தவுடனே சேர்த்து வச்சு வெளுப்போமில்ல)..உடம்பு சும்மா சொன்னதை கேக்கும்.அது மட்டுமில்லாம சபரிமலைக்கு போயிட்டு வரது ஆனந்தானுபவம்.இப்ப எதுக்குடா நீட்டி முழக்கறான் பார்க்கிறீங்க இல்லையா..?கடவுள் பற்றிய என் சந்தேகங்களை சுவாமி”வாலானாந்தா’சென்னை பட்டறைக்கு வரும்போது ”தீர்”த்து வைப்பதாக சொன்னார்.
-------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------
சிங்கப்பூர் பதிவர் நண்பர் பிராபகரை சந்தித்தோம்..ஏர்போர்ட்டிலிருந்து நேராக என் அலுவலகத்திற்கு வந்தார்.அவர் எனக்கு பாலோயராகவோ,நான் அவருக்கு பாலோயராகவோ இருப்பதற்கு தகுதி இல்லை.மனுசன் நோ சிகரெட்..நோ தண்ணி..ஆனால் ஒரு லிட்டர் சீமைச்சரக்குடன் வந்தார்.நான்,கேபிள்,வண்ணத்துபூச்சியார் மூவரும் ஒரு காட்டு காட்டி விட்டு அரசப்பருக்கு டின்னருக்கு போனோம்.லக்கிலுக் அங்கு வந்து சேர்ந்து கொண்டார்.பின் கேபிள் பிராபாவை எக்மோரில் ரயில் ஏத்திவிட்டார்.
அன்புத்தம்பி பிராபகர் புது வாழ்வை தொடங்குகிறார்.எல்லாம் வல்ல இறைவனும்,இயற்கையும் அவருக்கு உறுதுணையாய் இருக்கட்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்
-------------------------------------------------------------------------------------------------
பெருமை வாய்ந்த” பிள்ளை”யார் என்பதில் சகோதரர்களுக்குள் இன்னும் பனிப்போர் ஓயவில்லையாம்.வள்ளி மணாளனுக்கு இருக்கும் மதிப்பு ஆணைமுகத்தானை டிஸ்டர்ப் செய்து கொண்டே இருக்கிறதாம்.அதனால் தானும் மூலவர் போட்டிக்கு தயாராம்..நான் ஆண்டவர்களை சொன்னேன்.நீங்கள் ஆளுபவர்களை நினைத்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல..
-------------------------------------------------------------------------------------------------
ஒரு குறும்படம் பார்த்தேன்..பெயர்’சுயநலம்”.சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளியை பற்றிய கதை..ஒரு தெருவில் சாக்கடை அடைப்பு.தொழிலாளிக்கு கடுமையான ஜீரம்.மக்கள் அவனை கட்டாயப்படுத்தி சாக்கடையில் இறக்கி விடுகின்றனர்.அடைப்பை சரி செய்து விட்டு வீடு,வீடாக சுடுதண்ணி கேட்கிறான்..ஒருவரும் உதவாத நிலையில் ஜன்னி வந்து செத்துப் போகிறான்..
இந்த மாதிரி பிரச்சனைகளை ஆவணப்படமாகத்தான் எடுக்கவேண்டும்.கதையை நுழைக்ககூடாது.ஒரு காட்சி..சாக்கடைக்குள் இறங்குகிறான்.முழங்கால் அளவு,பின் இடுப்பளவு சாக்கடை நீர்.பின் கழுத்து வரை.பச்சையாய் ,நுரைத்துக் கொண்டு மலக்கழிவுகள்...அவன் வாய்க்குள் போகிறது.அப்படியே தலையும் நீரில் மூழ்குகிறது..பரிதாபப் பட்டு ’உச்சு”கொட்டவைக்க வேண்டிய காட்சி...மாறாக பெரும்”கைத்தட்டல்”.பின் இயக்குனரிடம் நான் சொன்னேன்..ஐயா..அந்த கரகோஷம் உமக்கு கிடைத்த வெற்றியல்ல..அவர் அதை ஏற்கவில்லை..
அமுதன் என்பவர் இயக்கிய”பீ”என்ற ஆவணப்படம்.மலம் அள்ளுவோர் பற்றிய பதிவு.பெரும் அதிர்வை உண்டாக்கிய குறும்படம்.யூட்யூபில் இருக்கும் என்று நினைக்கிறேன்.சந்தர்ப்பம் கிடைத்தால் பாருங்கள்..
அழிந்து வரும் கலை “ஒப்பாரி”இதை ஆவணமாக பதிவு செய்யவேண்டும் என்பது என் ஆசை.விரைவில் தொடங்கவிருக்கிறேன்.பதிவுலக நண்பர்கள்,குறிப்பாக தென்மாவட்ட நண்பர்கள் உதவினால் செய்துவிடலாம்.
-------------------------------------------------------------------------------------------------
அதிமுக கப்பல் கிட்டத்தட்ட மூழ்கும் நிலையில்தான் இருக்கிறது போல.கட்சி பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்திருந்தார்களாம்.இப்ப அதில் 300 கோடி அளவிற்கு நட்டம் காட்டியிருக்காராம் உடன் பிறவா சகோதரி.ஆனால் அவர் நடத்தும் மிடாஸ் ஆலையில் வியாபாரம் கொடி கட்டி பறக்குதாம்.அடுத்தது அதிமுக ஆட்சிதான்.அதனால் கட்சி பிரமுகர்கள்“தாரளாமாகநிதியுதவிசெய்தால்,ஆட்சி வந்தவுடன் அள்ளிக் கொள்ளலாம் என்று அறிவுரையாம். விளங்கிடுமில்ல...
ஆனால் இனி திமுகவை தோற்கடிப்பது முடியாத காரியம் என்று தோன்றுகிறது.
முதலில் “காந்தியை நீட்டு” காரியம் ஆகலைன்னா “கத்தியை காட்டு”என்ற பாலிசி நீட்டாக ஒர்கவுட் ஆகிறது.பரவாயில்லை..சசிகலா&கோ விற்கு இவர்களே தேவலாம் என்று மனதை தேற்றி கொள்ள வேண்டியதுதான்.
-------------------------------------------------------------------------------------------------
என் கவிதை ஒன்றை தம்பி செல்வேந்திரன் தன்னை ஈர்த்ததாக “பகிர்தலில்”சொல்லியிருந்தார்.அவர் பெருந்தன்மை என்னை கவர்ந்தது.பதிவுலகில் வாசகர்களை விட எழுத்தாளர்கள்தான் அதிகம்.அதிலும் சிலர் எங்கே பாராட்டினால் தங்கள் எழுத்து ஆளுமைக்கு இழுக்கு வந்துவிடுமோ என்று இருக்கும் நிலையில்,செல்வாவின் செயல் என்னை நெகிழ்த்தியது..நன்றி செல்வா..
-----------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------
‘கோலம்” அமைப்பை ஞானி தொடங்கியிருக்கிறார்.நல்ல சினிமாவுக்காக ஏங்கும் மக்கள் ஆளுக்கு 500 ரூ கொடுத்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டுமாம்.2000 பேர் சேர்ந்தவுடன் படம் எடுத்து டிவிடி கொடுப்பார்களாம்.இவர் நல்ல படம்தான் எடுப்பார் என்று நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.ஏற்கனவே ”ஒற்றை ரீல்”இயக்கம் என்று ஒன்றை ஆரம்பித்திருந்தார்.ஒரு படம்தான் எடுத்தார்.அதற்கு “பிரமீடு”சாமிநாதன்ரூ 3 லட்சம் வரை செலவுசெய்தார் என்று ஞானி சொன்னபோது எல்லாரும் கைத்தட்டினார்கள் இருவரைத்தவிர..
அண்ணன் உண்மைத்தமிழனும்,லக்கிலுக்கும்தான் அவர்கள்..பின்ன... இருவருக்கும் பிரமீடு சாய்மீரா நிறுவனம் சம்பளபாக்கி வைத்திருக்கிறது.
சிறப்பு விருந்தினர்களை தவிர ஞானி மட்டுமே மேடையில்..வேறு இளம் புதிய படைப்பாளிகளே இல்லை போலும்...மக்களிடம் பணம் வாங்கி படம் எடுத்து ஹீம்..இது திரு ஞானியின் மேதாவிலாசத்தை பறைசாற்றி கொள்ள மட்டுமே உதவும்..ஊரான் துட்டில் மஞ்சள் குளிப்பது இதானோ?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
மகனே..உருகினாள் அன்னை
அப்பா...அன்பு முத்தம் மகள்
அத்தான்...ஆசையுடன் மனைவி
ஐயா...வயதில் மூத்த வேலைக்காரி
சார்...அண்டைவீட்டுக்காரர்
“சாவுகிராக்கி” தெருவில் லாரிக்காரன்
வம்படியாய் மேலே வந்து விழுந்த குடிகாரான்
“தேவடியாப்பையா”
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
59 comments:
பார்வை அருமை. நூறுக்கு வாழ்த்துகள்.
100க்கு வாழ்த்துகள்
பிரபாவின் புதிய வாழ்வு சிறக்க வாழ்த்துகள்
//பெரும் அதிர்வை உண்டாக்கிய குறும்படம்//
நீண்ட நாட்களாய் பார்க்க விருப்பம். இணைப்பு இருந்தால் அனுப்புங்கள்
//வம்படியாய் மேலே வந்து விழுந்த குடிகாரான்
“தேவடியாப்பையா”//
என்ன கொடும சரவணன்
வாழ்த்துகள்... தண்டோரா..!!
போய் ஒரு ஃபுல் ஏத்திட்டு வந்து கொண்டாடுடுங்க! :)
பிரபா கொண்டு வந்த ஒரு லிட்டர் எங்கே..? நாட்டாமை தீர்ப்பை சொல்லு..
100 அடித்து விட்டு, ஆடாமல் இருக்கும் அண்ணன் "தண்டோரா" அவர்கள், மேலும் பல நூறுகள் அடித்து பட்டையைக் கிளப்ப வேண்டும் என்று எங்கள் சங்கத்தின் (சரக்கு அடித்து விட்டு ஊறுகாய் தேடாதோர் சங்கம்) சார்பாக வாழ்த்துகிறேன்...
வாழ்த்துக்கள் "தல தண்டோரா".
சரி நூறாவதுக்கு ஆளுக்கு ஒரு நூறு மில்லி ஊத்தி கொண்டாரிரிவோம்ம்ம்ம்ம்ம்
அருமையான விசயங்களின் தொகுப்பு.
நூறுக்கு வாழ்த்துக்கள்.
நூறுக்கு வாழ்த்துக்கள் தண்டோரா!!!
நூறுக்கு வாழ்த்துக்கள்..
நூறு மில்லி என்பது மிகக் குறைவுதான்..
போக போக அளவு கூடி.. லிட்டரைத் தாண்ட எனது ஆசிகள்..!
சந்தடிசாக்கில் ஞாநியை போட்டுத் தாக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.. அவருக்கு ஒரு ஆசை.. கொடுத்தால் எடுத்துக் கொடுப்பேன் என்கிறார். இதில் தவறில்லை. பிடிப்பவர்கள் கொடுக்கலாம். அனைவரும் கொடுக்க வேண்டும் என்று கட்டாயமில்லையே.. என்கிட்டேயும் கொடுங்க.. காட்டுறனா இல்லையான்னு பாருங்க..!
/என்கிட்டேயும் கொடுங்க.. காட்டுறனா இல்லையான்னு பாருங்க..!
//
அதுக்கு பேசாம ஞானிக்கிட்டயே கொடுக்கலாம்னு சொல்றாஙக் நிறைய பேரு
நூறாவது இடுகைக்கு வாழ்த்துகள். பல நூறுகளை காண வாழ்த்துகள்.
தண்டாரோ,
உங்களோடு பேசுவது போலவே இருக்கிறது பதிவு.
100-வது பதிவா..?
100-1000-10000 என்றாக வாழ்த்துக்கள்
என்றெல்லாம் சொல்லமாட்டேன்.
எவ்வளவு எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல, என்ன எழுதுகிறோம் என்பதுதான் முக்கியம் என்று எனக்குள்ளிருக்கும் தத்துவானந்தா இதை இப்போது நினைவு படுத்துவதால் உங்களுக்கும் சொல்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள், உங்களிடம் அதற்கான விஷய ஞானமும், கூர்ந்த அவதானிப்பும் இருக்கிறது. உங்கள் துறை சார்ந்தும், எழுத்திலும் பல மேன்மைகளைப் பெற என் உள்ளார்ந்த அன்பு.
000
//Cable Sankar :
பிரபா கொண்டு வந்த ஒரு லிட்டர் எங்கே..? நாட்டாமை தீர்ப்பை சொல்லு..//
இதுக்குத்தான் தண்டாரோ, அப்பவே சொன்னேன்...
கேபிளுக்கு இன்னொரு ரவுண்ட் போடுங்கன்னு.
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்.
நூறுக்கு வாழ்த்துக்கள்..
அண்ணன் உண்மைத்தமிழனும்,லக்கிலுக்கும்தான் அவர்கள்..பின்ன... இருவருக்கும் பிரமீடு சாய்மீரா நிறுவனம் சம்பளபாக்கி வைத்திருக்கிறது.---//
சூப்பர்...
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
/என்கிட்டேயும் கொடுங்க.. காட்டுறனா இல்லையான்னு பாருங்க..!
//
அதுக்கு பேசாம ஞானிக்கிட்டயே கொடுக்கலாம்னு சொல்றாஙக் நிறைய பேரு//
வழி மொழிகின்றேன்...
நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.
நல்லாயிருக்கு.
100 க்கு வாழ்த்துகள்.
நூறாவது பதிவுக்கு வாழ்த்து.
100க்கு வாழ்த்துக்கள் அண்ணே..
கடைசி ஒன்னு அருமை!
அப்ப நான் வரும்போதும் 1 லிட்டர் வாங்கிட்டு வரனுமா?
வாங்கிட்டு வந்துடுவோம்!!
///Cable Sankar
//என்கிட்டேயும் கொடுங்க.. காட்டுறனா இல்லையான்னு பாருங்க..!//
அதுக்கு பேசாம ஞானிக்கிட்டயே கொடுக்கலாம்னு சொல்றாஙக் நிறைய பேரு///
யார் அவங்க..? யார்கிட்டே சொன்னாங்க.. நீயா கதை விடுறியா..? நல்ல மனசு வேணும்யா மனுஷனுக்கு.. துரோகி..!
செஞ்சுரிக்கு வாழ்த்துகள் நண்பா :-) விரைவில் லட்சம் இடுகையை லட்சியத்துடன் கடந்து செல்லுங்கள்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
செஞ்சுரிக்கு வாழ்த்துகள்..
100 வது இடுகைக்கு வாழ்த்துகள்
பின்றாங்கப்பா....
அதுல என் பெயரும் இருக்கு ரொம்ப நன்றி
பார்வை அருமை. நூறுக்கு வாழ்த்துகள்//
நன்றி சங்கா...
/100க்கு வாழ்த்துகள்
பிரபாவின் புதிய வாழ்வு சிறக்க வாழ்த்துகள்
//பெரும் அதிர்வை உண்டாக்கிய குறும்படம்//
நீண்ட நாட்களாய் பார்க்க விருப்பம். இணைப்பு இருந்தால் அனுப்புங்கள்
//வம்படியாய் மேலே வந்து விழுந்த குடிகாரான்
“தேவடியாப்பையா”//
என்ன கொடும சரவணன்//
கதிர்... .வருகைக்கு நன்றி
/வாழ்த்துகள்... தண்டோரா..!!
போய் ஒரு ஃபுல் ஏத்திட்டு வந்து கொண்டாடுடுங்க! ://
நன்றி...ஹாலிவுட் பாலா..தலைவரே எங்க காணவே காணும்?
/பிரபா கொண்டு வந்த ஒரு லிட்டர் எங்கே..? நாட்டாமை தீர்ப்பை சொல்லு//
இது நியாயமா கேபிள்..கடைசி சொட்டை நீதானயா அடிச்சே..
/100 அடித்து விட்டு, ஆடாமல் இருக்கும் அண்ணன் "தண்டோரா" அவர்கள், மேலும் பல நூறுகள் அடித்து பட்டையைக் கிளப்ப வேண்டும் என்று எங்கள் சங்கத்தின் (சரக்கு அடித்து விட்டு ஊறுகாய் தேடாதோர் சங்கம்) சார்பாக வாழ்த்துகிறேன்...
வாழ்த்துக்கள் "தல தண்டோரா"//
நன்றி...கோபி
/அருமையான விசயங்களின் தொகுப்பு.
நூறுக்கு வாழ்த்துக்கள்//
நன்றி உலக்ஸ்..
/நூறுக்கு வாழ்த்துக்கள் தண்டோரா!!/
நன்றி செந்திலநாதன்...
/நூறுக்கு வாழ்த்துக்கள்..
நூறு மில்லி என்பது மிகக் குறைவுதான்..
போக போக அளவு கூடி.. லிட்டரைத் தாண்ட எனது ஆசிகள்..!
சந்தடிசாக்கில் ஞாநியை போட்டுத் தாக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.. அவருக்கு ஒரு ஆசை.. கொடுத்தால் எடுத்துக் கொடுப்பேன் என்கிறார். இதில் தவறில்லை. பிடிப்பவர்கள் கொடுக்கலாம். அனைவரும் கொடுக்க வேண்டும் என்று கட்டாயமில்லையே.. என்கிட்டேயும் கொடுங்க.. காட்டுறனா இல்லையான்னு பாருங்க//
உண்மைத்தமிழன் அண்ணே..உங்க சம்பளபாக்கிக்காக குரல் கொடுத்தேனே..பாத்தீங்களா...
/தண்டாரோ,
உங்களோடு பேசுவது போலவே இருக்கிறது பதிவு.
100-வது பதிவா..?
100-1000-10000 என்றாக வாழ்த்துக்கள்
என்றெல்லாம் சொல்லமாட்டேன்.
எவ்வளவு எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல, என்ன எழுதுகிறோம் என்பதுதான் முக்கியம் என்று எனக்குள்ளிருக்கும் தத்துவானந்தா இதை இப்போது நினைவு படுத்துவதால் உங்களுக்கும் சொல்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள், உங்களிடம் அதற்கான விஷய ஞானமும், கூர்ந்த அவதானிப்பும் இருக்கிறது. உங்கள் துறை சார்ந்தும், எழுத்திலும் பல மேன்மைகளைப் பெற என் உள்ளார்ந்த அன்பு.
000
//Cable Sankar :
பிரபா கொண்டு வந்த ஒரு லிட்டர் எங்கே..? நாட்டாமை தீர்ப்பை சொல்லு..//
இதுக்குத்தான் தண்டாரோ, அப்பவே சொன்னேன்...
கேபிளுக்கு இன்னொரு ரவுண்ட் போடுங்கன்னு.
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்//
நன்றி வாசு...
/நூறுக்கு வாழ்த்துக்கள்.//
நன்றி சூர்யா...
/அண்ணன் உண்மைத்தமிழனும்,லக்கிலுக்கும்தான் அவர்கள்..பின்ன... இருவருக்கும் பிரமீடு சாய்மீரா நிறுவனம் சம்பளபாக்கி வைத்திருக்கிறது.---//
சூப்பர்...
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்//
ஜாக்கி நன்றி
/நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்//
அன்புக்கு நன்றி
//நல்லாயிருக்கு.
100 க்கு வாழ்த்துகள்//
நன்றிகள்..
நாடோடி இலக்கியன்..
/நூறாவது பதிவுக்கு வாழ்த்து//
ஸ்ரீ..மதுரையில் சந்திப்போம்
/100க்கு வாழ்த்துக்கள் அண்ணே..
கடைசி ஒன்னு அருமை!
அப்ப நான் வரும்போதும் 1 லிட்டர் வாங்கிட்டு வரனுமா?
வாங்கிட்டு வந்துடுவோம்!!//
கலை..உனக்கும்,அடுத்தவங்களுக்கும் வித்தியாசம் வேணாமா?ரெண்டு லிட்டரா வாங்கிட்டு வாப்பா..
/செஞ்சுரிக்கு வாழ்த்துகள் நண்பா :-) விரைவில் லட்சம் இடுகையை லட்சியத்துடன் கடந்து செல்லுங்கள்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்//
வருகைகு நன்றி.
லட்சம் இடுகையை//
ஹா..ஹா..ஹா...
அப்புறம்
வேறென்ன சொல்ல
வெங்காயம்தான்...
/செஞ்சுரிக்கு வாழ்த்துகள்//
நன்றி டக்ளஸ்...
/100 வது இடுகைக்கு வாழ்த்துகள்
பின்றாங்கப்பா....
அதுல என் பெயரும் இருக்கு ரொம்ப நன்றி/
அரவிந்த்..அடுத்த படம் எப்போ?
அண்ணே தங்களின் 100 வது இடுகைக்கு வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகின்றேன்.
நான் ஆஸ்திகனா இல்லை நாஸ்திகனா - நீங்க இரண்டும் கலந்த கலவை அய்யா கலவை. யாரும் உண்மையான ஆஸ்திகன் இல்லை யாரும் உண்மையான நாஸ்திகனும் இல்லை.
பிரபாகருக்கு வாழ்த்துகளுடன், எல்லாம் வல்ல ஆண்டவன் அவருக்கு அருள் புரிவாராக
கவிதை நிதர்சனத்தை புரியவைத்தது.
milda ஆரம்பிச்சு
கடைசில காட்டா
முடிச்சிட்டீங்க.
பதிவினில் நூறுகண்ட, அண்ணன் மணிஜி என்றும் அழைக்கப்படும் தண்டோரா அவர்களுக்கு, இந்த வாழ்த்துப்பாவை சமர்பிக்கிறேன்...
100 க்கு வாழ்த்துக்கள்.
விரைவில் குவாட்டர்,ஹாஃப்,புல் அடிக்க வாழ்த்துக்கள்.
அண்ணே.. ஒரு விண்ணப்பம்.. வச்சிருக்கேன்... இங்க வந்து பாருங்க..
http://mynandavanam.blogspot.com/search/label/popcorn%203
உண்மையிலேயே இந்த மானிட்டர் பக்கங்கள் ஸ்பெஷல் தான், எல்லாம் அருமை.
100 வது பதிவுக்கு வாழ்த்துகள்.
100/ 100
கடவுள் இருந்தா என்ன இல்லாட்டி என்ன!
நம்ம தாக சாந்தி தீர்ந்தா சரி!
100 வது பதிவுக்கு வாழ்த்துகள்.
100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள்
(உங்கள் இயற் பெயர் என்ன)
நண்பர் பிரபாவுக்கு வாழ்த்துக்கள்
அண்ணே தங்களின் 100 வது இடுகைக்கு வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகின்றேன்.
நான் ஆஸ்திகனா இல்லை நாஸ்திகனா - நீங்க இரண்டும் கலந்த கலவை அய்யா கலவை. யாரும் உண்மையான ஆஸ்திகன் இல்லை யாரும் உண்மையான நாஸ்திகனும் இல்லை.
பிரபாகருக்கு வாழ்த்துகளுடன், எல்லாம் வல்ல ஆண்டவன் அவருக்கு அருள் புரிவாராக//
ராகவன் நன்றி..
/milda ஆரம்பிச்சு
கடைசில காட்டா
முடிச்சிட்டீங்க//
அஷோக்..பதிவை பிரதிபலிக்கும் கமெண்ட்..நன்றி..
நைனாவுக்கு வாழ்த்துக்கள்..நன்றி
/100 க்கு வாழ்த்துக்கள்.
விரைவில் குவாட்டர்,ஹாஃப்,புல் அடிக்க வாழ்த்துக்கள்//
முரளி...நன்றிகள்.வா மக்கா ..சந்திப்போம்...
அண்ணே.. ஒரு விண்ணப்பம்.. வச்சிருக்கேன்... இங்க வந்து பாருங்க.//
சூர்யா..கவிதை எப்புடீ???
அட என் வாத்தி ..வாய்யா..மகராசா நிஜாம்..நல்லாயிருயா...
வால்..வாங்க...
வசந்த்..நான் மணிகண்டன்..
Post a Comment