என்னில் பாதியை காணவில்லை
இடுப்புக்கு கீழே
அடுத்தவர் யாரும்
அதை பொருட்படுத்தவில்லை
எனக்குத்தான் இருப்பு
கொள்ளவில்லை
எங்கே போயிருக்கும் ?
வீதியில் இறங்கினேன்
இடம் வந்தது..
இங்குதான் இருக்கவேண்டும்
உள்ளே செல்பவர் வருபவர்
யாவரும்
முழுசாய் வந்தனர்
மரங்கொத்தி மண்டையில் கொத்த..
அதோ அவன்தான்..
இடுப்புக்கு மேலே வெறுமை..
அடையாளம் கண்டு
என்னருகில் வந்தான்
அப்புறமென்ன?
ஆளுக்கு முப்பது போட்டு
”கட்டிங்”அடித்தோம்
முழுதாய் வெளியே வந்தோம்.
------------------------------------------------------------------------------------------------
நில்... என்றால்
நிற்கமாட்டாய்
சொல்லாதே..... என்றால்
சொல்கிறாய்
செய்.... என்றால்
செய்ய மாட்டாய்
வா.... என்றால்
போய்கொண்டே இருக்கிறாய்
எதை சொன்னாலும்
ஏறுக்கு மாறாகவே
செய்கிறாயே
உன் மனதில் என்ன...
”மனசு’ என்ற நினைப்பா?
29 comments:
எளிமையான வரிகளுக்கு "தண்டோரா தேவைதான்."
rendavathu kavithai nallaruku.. aanaa spelling mistake நினைப்பா..? பதிலா.. நிணைப்பா..? வந்திருச்சுன்னு டக்ளஸ் சொல்லுவாரு..
உன் மனதில் என்ன...”மனைவி’ என்ற நினைப்பான்னு முடிக்காம.. நாசூக்கா மனசுன்னு முடிச்ச உங்க மொ.மா.தனம் எனக்கு புடிச்சிருக்குண்ணே!!
கவிதை நல்லாயிருக்கு
தண்டாரோ.
அருமை,
வாழ்த்துக்கள்,
வாழ்க வளமுடன்.
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
//ஆளுக்கு முப்பது போட்டு
”கட்டிங்”அடித்தோம்..//
"கட்டிங்"கே இவ்ளோ அலம்பலா "தல"
//எதை சொன்னாலும்
ஏறுக்கு மாறாகவே
செய்கிறாயே
உன் மனதில் என்ன...
”மனசு’ என்ற நினைப்பா?//
உன் மனதில் என்ன "விஜய்" என்று நினைப்பா??
தலைவரே, ரெண்டு கவிதையும் அருமை.
கேபிள்,
எனக்குன்னு பதிவுலக்த்துல ஒரு இமேஜ் இருக்கு.
அத கெடுத்துராதீங்க.
பிளீஸ்.
:)
//டக்ளஸ்... August 27, 2009 11:15 AM
தலைவரே, ரெண்டு கவிதையும் அருமை.
கேபிள்,
எனக்குன்னு பதிவுலக்த்துல ஒரு இமேஜ் இருக்கு.
அத கெடுத்துராதீங்க.//
நாங்களா கெடுக்கமாட்டோம்!!!!
:)
அழகான எளிமையான வரிகள்.வாழ்த்துகள்.
இரண்டாவது கவிதை தூள்
//ஆளுக்கு முப்பது போட்டு
”கட்டிங்”அடித்தோம்..//
வர்றேன் செப்டம்பர் 12ஆம் தேதி!
முதல் கவிதையின் திடுக் திருப்பம் பிடித்திருக்கிறது (ஆனால், அப்புறம் என்ன? என்ற வரி இடைஞ்சலாய் இருக்கிறது).
/ jerry eshananda.//
எளிமையான வரிகளுக்கு "தண்டோரா தேவைதான்
நன்றி நண்பரே..
Cable Sankar said...
rendavathu kavithai nallaruku.. aanaa spelling mistake நினைப்பா..? பதிலா.. நிணைப்பா..? வந்திருச்சுன்னு டக்ளஸ் சொல்லுவாரு..
கேபிள்..ஆமாம் டக்ளஸ் தமிழ்தாத்தா
/உன் மனதில் என்ன...”மனைவி’ என்ற நினைப்பான்னு முடிக்காம.. நாசூக்கா மனசுன்னு முடிச்ச உங்க மொ.மா.தனம் எனக்கு புடிச்சிருக்குண்ணே!//
மொள்ள மாறித்தனம் ...சூப்பரப்பு
/"அகநாழிகை" பொன்.வாசுதேவன் said...
கவிதை நல்லாயிருக்கு
தண்டாரோ.
அருமை,
வாழ்த்துக்கள்,
வாழ்க வளமுடன்.
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்//
வாசு..மிக்க நன்றி
///ஆளுக்கு முப்பது போட்டு
”கட்டிங்”அடித்தோம்..//
"கட்டிங்"கே இவ்ளோ அலம்பலா "தல"
//எதை சொன்னாலும்
ஏறுக்கு மாறாகவே
செய்கிறாயே
உன் மனதில் என்ன...
”மனசு’ என்ற நினைப்பா?//
உன் மனதில் என்ன "விஜய்" என்று நினைப்பா//
கோபி..கார்க்கி இங்க வரமாட்டார்
/தலைவரே, ரெண்டு கவிதையும் அருமை.
கேபிள்,
எனக்குன்னு பதிவுலக்த்துல ஒரு இமேஜ் இருக்கு.
அத கெடுத்துராதீங்க.
பிளீஸ்.//
டக்ளஸ்..கொஞ்சம் ஓவர்..அதை பத்தி ஒரு ...
/ அப்பாவி முரு said...
//டக்ளஸ்... August 27, 2009 11:15 AM
தலைவரே, ரெண்டு கவிதையும் அருமை.
கேபிள்,
எனக்குன்னு பதிவுலக்த்துல ஒரு இமேஜ் இருக்கு.
அத கெடுத்துராதீங்க.//
நாங்களா கெடுக்கமாட்டோம்!//
வாங்க நண்பரே...
/D.R.Ashok said...
:)//
நன்றி நண்பா...
/கதிர் - ஈரோடு said...
இரண்டாவது கவிதை தூள்//
நன்றி கதிர்..
/ ஸ்ரீ said...
அழகான எளிமையான வரிகள்.வாழ்த்துகள்//
ஸ்ரீ நன்றி
/ வால்பையன் said...
//ஆளுக்கு முப்பது போட்டு
”கட்டிங்”அடித்தோம்..//
வர்றேன் செப்டம்பர் 12ஆம் தேதி//
வாங்க(ஞாயிறு மதுரை)
/ ஜ்யோவ்ராம் சுந்தர் said...
முதல் கவிதையின் திடுக் திருப்பம் பிடித்திருக்கிறது (ஆனால், அப்புறம் என்ன? என்ற வரி இடைஞ்சலாய் இருக்கிறது//
நன்றி நண்பரே...
சரக்கு அடிச்சா இப்படில்லாம்கூட கவிதை எழுத வருமா..?
ஆங்.. மொதல்ல இது கவிதையா..? அல்லாட்டி..?!!
தொடர் கவிதைப் பயணமாயிருக்கு?! நல்லாருக்கு!
/உண்மைத் தமிழன்(15270788164745573644) August 27, 2009 10:56 PM
சரக்கு அடிச்சா இப்படில்லாம்கூட கவிதை எழுத வருமா..?
ஆங்.. மொதல்ல இது கவிதையா..? அல்லாட்டி..//
அண்ணே.சரக்கு முதல்ல வந்துச்சா,,இல்ல கவிதை முதல்லயான்னு கேக்கறீங்களா?
/ சங்கா said...
தொடர் கவிதைப் பயணமாயிருக்கு?! நல்லாருக்கு//
ஆம் நண்பரே....நான் போனா எக்ஸ்ட்ரீம் ஆன்மீகம்..இல்லைன்னா ஆல்கஹால்தான்..நன்றி சங்கா
எல்லாம் எழுத வரும்
"எதுனா" உள்ளிருந்தால்.
இல்லையா நண்பா?
நீங்கள் கொடுத்து வைத்தவர்!
(கை எட்டும் தூரத்தில் நமக்கு
பிடித்த உலகம் வைத்திருக்கிறீர்கள்...ஹ்ம்ம்..)
நல்லா வந்துருக்கு தண்டோரா..இதுவும்!
Post a Comment