இனி தைக்க இடமில்லை
இன்றாவது
வாங்கி வருவீர்களா அப்பா ?
என்ன எழவு காரணம்
இன்றும் தாமதமா?
புடுங்கபோகலாம்
உனக்கு எவன் இங்கு
வேலை கொடுத்தான்?
வட்டி யார் கட்டுவார்?
உப்பு போட்டுத்தானே..
ஊரிலிருந்து இருந்து வந்த கடிதம்
பிரிக்கையில் எதிரொலிக்கும்
அம்மாவின் இருமல்....
பசிவேளையில் பாத்திரத்தில்
கரண்டியின் சத்தம்...
ஆடை தூக்கி..
அவசர புணர்தலில்
இயலாமையின் கழிவிரக்கம்
தூக்கம் தொலைத்த அயர்ச்சி
கருவளையமாய்
கண்ணாடியில் காண்கையில்
நீதான் எவ்வளவு விகாரம்
எத்தனை முறை
தொலைக்கிறேன் உன்னை,
இன்றாவது
வாங்கி வருவீர்களா அப்பா ?
என்ன எழவு காரணம்
இன்றும் தாமதமா?
புடுங்கபோகலாம்
உனக்கு எவன் இங்கு
வேலை கொடுத்தான்?
வட்டி யார் கட்டுவார்?
உப்பு போட்டுத்தானே..
ஊரிலிருந்து இருந்து வந்த கடிதம்
பிரிக்கையில் எதிரொலிக்கும்
அம்மாவின் இருமல்....
பசிவேளையில் பாத்திரத்தில்
கரண்டியின் சத்தம்...
ஆடை தூக்கி..
அவசர புணர்தலில்
இயலாமையின் கழிவிரக்கம்
தூக்கம் தொலைத்த அயர்ச்சி
கருவளையமாய்
கண்ணாடியில் காண்கையில்
நீதான் எவ்வளவு விகாரம்
எத்தனை முறை
தொலைக்கிறேன் உன்னை,
------------------------------------------------------------------------------------------------
24 comments:
தண்டாரோ,
கவிதை நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
அம்சமா இருக்கு நண்பா..:-)))
ஒரு இனம்புரியா சோகம் மனதைக் கவ்விக் கொண்டது
சூப்பர் தல..
நல்லாருக்கு.
:)
நிதர்சனம்..
கவிதைக்கேற்ற புகைப்படமா ? படத்துக்கேற்ற கவிதையா ? இரண்டுமே அருமை நண்பரே !
கவிதையும் படமும் மனதை கலக்குகிறது
அம்சமா இருக்கு நண்பா..:-)))
repeat.
:(
தண்டோரா... உங்க எழுத்து நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது என்பதற்கு இந்த பதிவு இன்னொரு சாட்சி...
படமும், பதிவும், மனதை கனக்க வைத்தது....
நல்லா இருக்கு "தல"...
கவிதை ரொம்ப அழகு.இதுக்கும் விளக்க உரை எழுதலாமா என்று யோசித்து கொண்டேயிருக்கிறேன்
கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க, அருமை.
பொன்.வாசுதேவன்
கார்த்திகைபாண்டியன்
கேபிள்
முரளீ
டக்ளஸ்
கதிர்
அஷோக்
கோபி
சுந்தர்
ஸ்ரீ
அரவிந்த்
கவிஞர் யாத்ரா
அனைவரின் மேலான வருகைக்கும்,சிறப்பான கருத்துகளுக்கும் என் நன்றிகள்..தொடர்ந்து ஊக்கம் அளிக்க வேண்டும் ....
நண்பன்..தண்டோரா
ரொம்ப நல்ல வந்திருக்கு நண்பா.
எல்லா திசைகளிலும் மனசு "வின்"
என தெறிக்கிறது.
சோகம் பிழிந்த அவன் ஏழையா அல்லது நடுத்தர வர்க்கமா?
தண்டாரோ,
கவிதை நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்.
இனிமே உங்களுக்கு டெம்ப்ளேட் பின்னூட்டம் ரெடி பண்ணிர வேண்டியதுதான் போலும்!
அற்புதம், நல்லா வந்திருக்கு!
பொல்லாத உலகில்
போராடும் மனிதன்
வாழ்க்கையை
வலிக்க வலிக்க
சொல்லியிருக்கிறீர்கள்
வரிகளில்...........
pls see my films
http://www.youtube.com/filmliner
raajaachandrasekar
//இனி தைக்க இடமில்லை
இன்றாவது
வாங்கி வருவீர்களா அப்பா ?
//
இந்த ஒரு வரி போதும்... கவிதை அங்கியே முடிஞ்சு போச்சே !!
அருமை!
அண்ணே.... வர வர நீங்க இலக்கியவாதியா ஆகிட்டே வாறீங்க...
அருமையோ அருமை.
Mahesh August 31, 2009 7:15 AM
//இனி தைக்க இடமில்லை
இன்றாவது
வாங்கி வருவீர்களா அப்பா ?
//
இந்த ஒரு வரி போதும்... கவிதை அங்கியே முடிஞ்சு போச்சே !!//
அதே .. அதே ..!
நன்று.
//ராஜா சந்திரசேகர்
pls see my films
http://www.youtube.com/filmliner
raajaachandrasekar//
இவரைப் பற்றிதான் உங்களிடம் சொன்னேன்.
Post a Comment