Monday, August 17, 2009

ஒரு முனை மழுங்கிய கத்தியும்,சில முகரைகளும்










மொண்ணை கத்தியுடன்
திண்ணை தடியன்
சுயம்வரம் நோக்கி..

வழியில் காலை பதம்

பார்த்த கூர் கற்களில்
தீட்டி,தீட்டி
கத்தி நீண்டு வாளானது.
"கதை" போல் இருந்த
திண்ணை தடியன்
வில் போலானான்.

அவையோருக்கு ஆச்சர்யம்

அவனா “இவன்” என்று.

அமைதியாய் புன்னகைத்தேன்..

நான் தான் “அவனாயிருந்தேன்”
என்பதுதானே உண்மை
-------------------------------------------------------------------------------------------------


இரு தரப்பிலும்
ஒருவர் மட்டுமே மீதி
சண்டையா..சமாதானமா?

அவகாசம்
தேவைப்பட்டது..
யோசித்து முடிவுக்கு வந்தனர்..

பின்... தனித்து வாழ்வது
எவ்வளவு கொடுமை?
-------------------------------------------------------------------------------------------------

கால் தரையில் படவில்லை
கையில் தாங்கினர்

பல்லக்கில் பவனி
குதிரை ஏறி குஸ்தி

அத்தனை எதிரிகளும்
வீழ்ந்தனர்....
அந்தபுரத்தில்
ஆடு புலியாட்டம்

விண்முட்டும்
புகழ்மாலை
ஒரு நொடியில் மாறியது
அலைவரிசை

கால் காற்றில் துழாவ
கத்தினால் சத்தம் வரவில்லை

தப்பிக்க ஒரே வழி
விழித்து விட வேண்டியதுதான்..
-------------------------------------------------------------------------------------------------

நுணுக்கங்கள் பிடிபடவில்லை
நுட்பங்கள் புரிபடவில்லை..

கலைந்து கிடக்கும்
எழுத்துக்களை
கோர்க்கும் சூத்திரம்
தெரியவில்லை

வார்த்தைகளை வசீகரமாய்
வார்க்கும் விதம்
வசப்படவில்லை

அறையெங்கும்
இறைந்து கிடக்கும்
குப்பைகளின் கேலி

“அங்கொன்றும்,இங்கொன்றுமாய்"

மயிர் துருத்தி கொண்டிருக்க
‘என்னடா சிரைத்தாய்” என்று
-------------------------------------------------------------------------------------------------
என் காற்றாடியை
களவு கொடுத்து விட்டேன்
கற்பனையில் செய்த
அற்புதம்..

அது எனக்கு
காக்கை குஞ்சல்லவா?

வார்த்தைகளின் வீரியம்
காற்றில் அடித்து போனது
காத தூரத்தில் அது
அந்தரத்தில்.. அருகே
அழகான கடற்கரை
தேவரும்,அசுரரும்
அமுதம் கடைய அங்கே
வருகை..நானும்

எனக்கான துளியை
அடையாளம் காண

பின்...என்
காற்றாடியை மீட்டு
வந்து... மீண்டும்
சீவி,சிங்காரிச்சு...

36 comments:

அகநாழிகை said...

//கால் தரையில் படவில்லை
கையில் தாங்கினர்

பல்லக்கில் பவனி
குதிரை ஏறி குஸ்தி

அத்தனை எதிரிகளும்
வீழ்ந்தனர்....
அந்தபுரத்தில்
ஆடு புலியாட்டம்

விண்முட்டும்
புகழ்மாலை

ஒரு நொடியில் மாறியது
அலைவரிசை

கால் காற்றில் துழாவ
கத்தினால் சத்தம் வரவில்லை


தப்பிக்க ஒரே வழி
விழித்து விட வேண்டியதுதான்//


//நுணுக்கங்கள் பிடிபடவில்லை
நுட்பங்கள் புரிபடவில்லை..

கலைந்து கிடக்கும்
எழுத்துக்களை
கோர்க்கும் சூத்திரம்
தெரியவில்லை

வார்த்தைகளை வசீகரமாய்
வார்க்கும் விதம்
வசப்படவில்லை

அறையெங்கும்
இறைந்து கிடக்கும்
குப்பைகளின் கேலி

“அங்கொன்றும்,இங்கொன்றுமாய்"
மயிர் துருத்தி கொண்டிருக்க
‘என்னடா சிரைத்தாய்” என்று

தண்டாரோ,
இந்த இரண்டு கவிதைகளும் பிரமாதம்.

மற்றவை எனக்குப் பிடிக்கவில்லை.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

முரளிகண்ணன் said...

நல்ல முயற்சி

Raju said...

Raittu...

Cable சங்கர் said...

கவிதைகளா..?>>>>>:( நமக்கு புரிஞ்சாத்தானே..வர வர கெட்ட பசஙக்ளோட சேர்ந்து தண்டோரா பின்நவினத்துவ வியாதி ஆயிட்டாருப்பா..

சூர்யா ௧ண்ணன் said...

பிரமாதம்.

யாசவி said...

partially understand

:-)

மணிஜி said...

சில இடப்படாத பின்னுட்டங்கள்:

இப்போ.இதுதான் எழுதனும்னு இருக்கு..இருக்குல்ல.அப்போ.அதை எதுக்கு எழுதனும்.எதை எழுதனும்னு வாசகன் முடிவுக்கு விட்ரு.இதிலே இங்க ”நாம” ங்கிற வார்த்தை அனாவசியம்.அதனால...
--------------------------------------
ஒரு அளவுகோலை கையில் வைத்து கொண்டு எழுதுபவர்களை நான் வேறு பெயரில் கூப்பிடுவேன்...
------------------------------------
நல்ல கவிதை.அருமையான சொற்பிரயோகம்.அப்படியே நம்ம வீட்டுக்கும் வந்து பாருங்களேன்...
------------------------------------
அந்த கழிவறைக்குள் நான் முருகனின்.........ந்த போது
------------------------------------
என் பதில்:நன்றி ”குருமா”ர்களே

நையாண்டி நைனா said...

Nice Kavithais.

நீங்க... பல தளங்களை தாண்டி எங்கேயோ போய்ட்டீங்க.....

இராகவன் நைஜிரியா said...

எந்தரோ மாகானுபாவுலு அந்திரிக்கு வந்தனமு...

ரொம்ப நல்லாகீதுப்பா
பாக உந்தி
அச்சா ஹை
வெரி நைஸ்

என்ன புரிய கொஞ்சம் கஷ்டமா இருக்கு அவ்வளவுதான்..

R.Gopi said...

நல்லா கீது "தல".

அதுக்காக விளக்கம் சொல்லுன்னு வில்லங்கம் எல்லாம் பண்ணக்கூடாது...

உண்மைத்தமிழன் said...

தண்டோரா அண்ணாச்சி..?

வாட் இஸ் திஸ்..?

ஒண்ணும் புரியலே..

இதுல என்ன அரசியல் இருக்கு..?

Ashok D said...

//நான் தான் “அவனாயிருந்தேன்”
என்பதுதானே உண்மை// nice

//பின்... தனித்து வாழ்வது
எவ்வளவு கொடுமை?//super
சேர்ந்து வாழ்வதும் கொடுமைதாங்க

தப்பிக்க ஒரே வழி
விழித்து விட வேண்டியதுதான்..
hahaha

//நுணுக்கங்கள் பிடிபடவில்லை
நுட்பங்கள் புரிபடவில்லை..

கலைந்து கிடக்கும்
எழுத்துக்களை
கோர்க்கும் சூத்திரம்
தெரியவில்லை

வார்த்தைகளை வசீகரமாய்
வார்க்கும் விதம்
வசப்படவில்லை//

நுணுக்கங்கள்
நுட்பங்கள்

வார்த்தைகளை வசீகரமாய்
வார்க்கும் விதம்
வசப்பட்டு தானேங்கே இருக்கு..தன்னடக்கம்..

கவிதைகள்ல் உள்ள கிண்டல் அருமை

அத்திரி said...

அண்ணே இன்னும் தெளியலையா.....................

ஒன்னுமே புரியலை................இவர் மட்டும் கவித எழுதுவாராம்.மற்றவங்க எழுதக்கூடாதாம்

பா.ராஜாராம் said...

தீர கடைகிறது.திரளும் போது உடைகிறது.நல்ல அனுபவம் நண்பரே...ரொம்ப நல்லா வந்திருக்கு எல்லாமே.

வால்பையன் said...

இங்க வந்த டாகடரை அப்படியே திருப்பி அனுப்புறேன் அங்க!

வால்பையன் said...

இங்க வந்த டாகடரை அப்படியே திருப்பி அனுப்புறேன் அங்க!

ராஜவம்சம் said...

கவிதையை பிரிச்சி மேயிர அளவுக்கு இன்னும் எனக்கு பக்குவம் வரலண்னா

(வயசுக்கு வரலேன்ன)


//தப்பிக்க ஒரே வழி
விழித்து விட வேண்டியதுதான்.//

தப்பிக்க ஒரே வழி
sign out பன்ன வேண்டியதுதான்

நிஜாம் கான் said...

//ஒரு முனை மழுங்கிய கத்தியும்,சில முகரைகளும்//

இதுக்குள்ள ஏதும் உள்குத்து இருக்கா அண்ணாச்சி!

மணிஜி said...

/தண்டாரோ,
இந்த இரண்டு கவிதைகளும் பிரமாதம்.

மற்றவை எனக்குப் பிடிக்கவில்லை.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்//

வாசு நன்றி,,

மணிஜி said...

/நல்ல முயற்சி//

முரளிகண்ணன் ஊக்குவிப்புக்கு நன்றி

மணிஜி said...

டக்ளஸ் நீ என்ன கண்டக்டரா?

மணிஜி said...

/கவிதைகளா..?>>>>>:( நமக்கு புரிஞ்சாத்தானே..வர வர கெட்ட பசஙக்ளோட சேர்ந்து தண்டோரா பின்நவினத்துவ வியாதி ஆயிட்டாருப்பா//

கேபிள் நீங்க எழுதின கமெண்ட்டே கவிதைதான்

மணிஜி said...

//பிரமாதம்//

நன்றி சூர்யகண்ணன்

மணிஜி said...

/partially understand
//

யாசவி நன்றி

மணிஜி said...

/Nice Kavithais.

நீங்க... பல தளங்களை தாண்டி எங்கேயோ போய்ட்டீங்க...//

இது ஜனகராஜ்கிட்ட சிவாஜி சொன்னது இல்ல?

மணிஜி said...

/எந்தரோ மாகானுபாவுலு அந்திரிக்கு வந்தனமு...

ரொம்ப நல்லாகீதுப்பா
பாக உந்தி
அச்சா ஹை
வெரி நைஸ்

என்ன புரிய கொஞ்சம் கஷ்டமா இருக்கு அவ்வளவுதான்//

நைஜிரியா சோமயாஜிலு?

மணிஜி said...

/நல்லா கீது "தல".

அதுக்காக விளக்கம் சொல்லுன்னு வில்லங்கம் எல்லாம் பண்ணக்கூடாது//

கோபி..பிரியுதா இல்லையாங்கிறது பிரச்சனை இல்லை

மணிஜி said...

/தண்டோரா அண்ணாச்சி..?

வாட் இஸ் திஸ்..?

ஒண்ணும் புரியலே..

இதுல என்ன அரசியல் இருக்கு..?//

பின்னுட்டம் கூட நாலு வரியா?

மணிஜி said...

/கவிதைகள்ல் உள்ள கிண்டல் அருமை//

நன்றி அசோக்ஜி

மணிஜி said...

//அண்ணே இன்னும் தெளியலையா.....................

ஒன்னுமே புரியலை................இவர் மட்டும் கவித எழுதுவாராம்.மற்றவங்க எழுதக்கூடாதாம்//

அத்திரி...எதையோ நோட் பண்ணிட்டு பேசற நீ

மணிஜி said...

/தீர கடைகிறது.திரளும் போது உடைகிறது.நல்ல அனுபவம் நண்பரே...ரொம்ப நல்லா வந்திருக்கு எல்லாமே.//

ராஜாராம்...மிக்க மகிழ்ச்சி

மணிஜி said...

/இங்க வந்த டாகடரை அப்படியே திருப்பி அனுப்புறேன் அங்க//

வால்..யாராலும் முடியாது..முத்தின கேஸ்

மணிஜி said...

/தப்பிக்க ஒரே வழி
sign out பன்ன வேண்டியதுதான்//

சூப்பர்.... ராஜவம்சம்

மணிஜி said...

///ஒரு முனை மழுங்கிய கத்தியும்,சில முகரைகளும்//

இதுக்குள்ள ஏதும் உள்குத்து இருக்கா அண்ணாச்சி//


ம்ம்ம்ம்ம்

இரசிகை said...

m...

anganga puriyala...

மணிஜி said...

/m...

anganga puriyala...//

எனக்கும்தான்...நன்றி ரசிகை