Monday, August 3, 2009

பிரபல பதிவர்களுடன் கலைஞர் கதை விவாதம்....


தலைவர் ஓய்வுக்காக ராமச்சந்திராவில் இருக்கிறார்.உடன் சண்முகநாதன்.

போரடிக்குதப்பா..எதாச்சும் கதை விவாதத்துக்கு ஏற்பாடு செய்..

ஐயா..கவிப்பேரரசுக்கு போன் போடட்டுமா?

வேண்டாம்யா..அந்த பழைய சோறு பார்ட்டிங்கல்லாம்..பொன்னர் சங்கர் படபிடிப்பை பார்க்க போனதுக்கே எவனோ கார் மேல கல்லை விட்டெறியரான்..

இந்த வாட்டி சும்மா நச்சுன்னு இருக்கணும்...துரைமுருகன்,ஆற்காடு கிட்ட எல்லாம் மூச்சு விட்றாதே..

ஐயா,பதிவுலகத்தில பசங்க எல்லாம் கலக்கறாங்கலாம்.அங்கேயிருந்து வரவச்சுடலாம்..

கேபிள் சங்கர்,வால்பையன்,நையாண்டிநைனா மற்றும் தண்டோரா வருகிறார்கள்..

கோரசாக...வணக்கம் ஐயா..

ம்ம்..உங்களை அறிமுகபடுத்திக்கங்க..

ஐயா நா கேபிள்..

கேபிள்ன்ன அரசு கேபிளா?அது எனக்கு ஆகாது.தெரியுமில்ல...

ஐயா நீங்கதான் அரசு..நா வெறும் கேபிள்தான்..

எஸ்சிவி யா இல்ல ஆர்சிவியா...

நா எம்சிவிங்க....

எம்சிவி யா? அது யார்துயா?

வால் பையன்..அது.. மெக்டவல் விஸ்கிய சொல்றாருங்க..

நீ யாருய்யா?

வால்பையன்..

மதுரையா..நினைச்சேன்

நா நையாண்டி நைனாங்க..

நைனான்னா ஆற்காட்டாருக்கா உறவா?யோவ் சண்முகநாதா..இவங்க என்னைய வச்சு காமெடி கீமெடி எதுவும் பண்றாங்களா?

ஐயா நா தண்டோராங்க..

உன்னைய பத்தி உளவுத்துறை சொல்லியிருக்காங்க.

யாருங்கய்யா? விஜயகாந்தா?

சரி என்ன சாப்பிடறீங்க?

கேபிள்.... சாப்பிட எதுவும் வேணாம்..இப்ப ஒரு நர்ஸ் வந்துட்டு போனாங்களே..பேர் என்ன? மல்லுவா?

யோவ் நீ துரை முருகனோட மோசமா இருப்ப போல..வாலு உனக்கு என்னய்யா வேணும்?

சரக்குத்தான்..ஐயா ஒரு விண்ணப்பம்..லேட்டா திறந்து சீக்கிரம் மூடிராங்க..கொஞ்சம் கவனிங்க.

எந்த பள்ளிக்கூடம்யா அது?

டாஸ்மாக் கடைதாங்க..

இதுக்கே தைலாபுரத்துலேர்ந்து தடியை வீசராங்க...நைனா உனக்கு என்னய்யா வேணும்?

ஐயா நீங்க முரசொலில எழுதின கவிதை கொஞ்சம் கொடுத்தீங்கன்னா..எதிர் கவுஜ போட்டு கடையை காப்பாத்திக்குவேன்..

திடீரென்று வாசலில் கேபிள் சங்கரின் பைக்கை பாத்துட்டு உண்மை தமிழன் உள்ளே வருகிறார்..

நீ யாருய்யா?

அப்பனே முருகா..

துரைமுருகனுக்கு சொந்தமா?

ஐயா நா சரவணன்..

அவர் கையை கட்டிகிட்டு இல்ல இருப்பாரு

தண்டோரா குறுக்கிட்டு..ஐயா தயவு செஞ்சு இவரையும் கையை கட்டிகிட்டுத்தான் இருக்கணும்னு உத்தரவு போடுங்க..டைப் அடிக்க ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டேங்குறாரு..

கேபிள்..இந்த படத்தை தயாரிக்கறது யாருங்க?சன் பிக்சர்ஸா இல்ல கிளவுட் நைன்னா?

அவங்க எல்லாம் ஏமாறுவாங்களா..இதுக்குன்னு கழகத்துல சில அடிமைகளை வச்சிருக்கோமில்ல..நீ கதையை சொல்லுயா?

கேபிள் சங்கர் : பூஜையை போட்ட வுடனே சாங்..

மு.க. : நிறுத்து..நிறுத்து..பகுத்தறிவு பாசறைக்குள்ள வந்துட்டு என்ன பேச்சு?

தயாளு அம்மாள் வருகிறார்..என்னங்க..திருவாரூர் புவனேஸ்வரி அம்மன் கோயில்லேர்ந்து மந்திரிச்சு கயிறு அனுப்பியிருக்காங்க..கட்டி விடவா?

தண்டோரா(இதை நோட் பண்ணிக்கடா... வேலிட் பாயிண்ட் ஆச்சே)

கேபிள் : ஓப்பன் பண்ணா?

வால் .....ஓப்பன் பண்ணா நுரை வருமே தலைவா?

கேபிள்..நம்ம என்ன சோப்பு விளம்பரமா எடுக்கப் போறோம்..ஓப்பன் பண்ணா சன்ரைஸ் தலைவரே..

சண்முகநாதன் குறுக்கிட்டு,தலைவர் காபி குடிக்ககூடாது.டாக்டர் சொல்லியிருக்காரு..கஞ்சிதான்..

கேபிள்...அது இல்லீங்க..உதயசூரியனை காட்றோம்..

தலைவர் நிமிர்ந்து உட்காருகிறார்..இப்ப சீனை நா சொல்றேன்(கேபிள் தலையில் கை வைத்துக் கொள்கிறார்)

ஒரு கல்யாண வீடு..மைக் செட் கட்ட நாயகன் போகிறான்..ஜேகே ட்ட சொல்லி

பூம்புகார்ல பெரிய செட்டா போட சொல்லிடுவோம்..செலவெல்லாம் பழனிமாணிக்கம் பாத்துப்பாரு...

கேபிள்..ஐயா நான் தான் டைரக்டருன்னு சொல்லி இட்டாந்தாங்க..

மு,க..டைரக்டர் நீதான்யா..ஆனா டைரக்‌ஷன் நான் தானே..

கேபிள்..(விளங்கிடும்) ஐயா மேல சொல்லுங்க..நா திரைக்கதை ரெடி பண்ணிடறேன்..

மு.க... மணப்பெண் யாருன்னா..அவன் காதலி..அப்படியே ஷாக் அடிக்குது..

வால்...ஏங்க...ஓயரிங் தப்பாயிடுச்சா?

மு.க.. . கனெக்‌ஷனே மாறி போச்சுயா?இங்க டைட்டில் சாங்..

காயின்றி கனியில்லை...

நோயின்றி மருந்தில்லை..

ஆயின்றி வயிறில்லை...

பேயின்றி பிணமில்லை..

ஈயின்றி பீயில்லை...

நீயின்றி நானில்லை..

எப்பு...டி?

சண்முகநாதன்.. இப்படி இம்சையை கொடுக்கிறாரே..வேண்டாம்னு ஓட கூட முடியலை..இன்னும் கொஞ்ச நேரத்துல பசங்க வந்துடுவாங்க..வாங்கத்தான் போறாரு...

உண்மைத்தமிழன்...அருமை..அருமை..இந்த படத்துக்கு விமர்சனம் எழுதற ரைட்ஸ் எனக்குத்தான் தரணும்..

மு.க .. தன் காதலிதான் மணப்பெண்ணுன்னு தெரிஞ்சவுடனே துக்கம் தாங்காம அழ ஆரம்பிக்கிறான்..அப்ப மறுபடியும் ஒரு பேத்தாஸ் சாங்..

கேபிள்..தலைவரே..ஒரு சந்தேகம்..நம்ம வெறும் ஓளியும்,ஓலியும் மட்டுமா எடுக்கப் போறோம்..இல்லை இசையருவிக்காக எடுக்கிறமா?

மு.க..ரொம்ப பேசினா உன்னையும் காத்திருப்போர் பட்டியல்ல வச்சுடுவேன்..

இப்ப கிளைமாக்ஸ்..

தலைவரே..இடைவேளையே வரலையே..

மு.க..அதுக்குத்தான் நாயகியின் இடையை வர்ணிச்சு 10 நிமிஷத்துக்கு ஒரு பாட்டு வச்சிருக்கமே?சரி..சரி..பசங்க வர்ற நேரமாச்சு..பேட்டா வாங்கிட்டு நீங்க கிளம்புங்க..

யாரோ வரும் சத்தம் கேட்டு பசங்கதான் நினைக்கிறேன்..போர்வைக்குள் ஒளிந்து கொள்கிறார்..

தலைவா....தங்கத்தமிழே..

குங்குமசிமிழே..

நீயின்றி நானில்லையே..

ஜெகத்ரட்சகன் ஆளுயுர மாலையுடன் வருகிறார்..

தலைவரே..நீயின்றி நானில்லை படத்தின் வெள்ளி விழாவை நாளை வள்ளுவர் கோட்டத்தில் வைத்திருக்கிறேன்..இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணம்கலைஞரா...இல்லை..கருணாநிதியா என்ற தலைப்பில் கவியரங்கமும் உண்டு..

மு.க...யோவ்..அடுக்குமாய்யா..உனக்கு?இப்பத்தான் கதையை பத்தி பேசிகிட்டிருக்கோம்..வெள்ளி விழாவுக்கே போய்ட்டியா நீயி?என்ன எதாச்சும் புதுசா காலேஜ் ஆரம்பிக்கப் போறியா?கையெழுத்து போடணுமா?

எங்கோ ஊளையிடுவ்துபோல் அழுகை சத்தம் கேட்கிறது..பார்த்தால் கட்டிலுக்கு அடியில் துரைமுருகன்...

நியாயமா தலைவரே?பொதுப்பணித்துறையையும் புடுங்கிட்டீங்க..மீனாவுக்கு வேற கல்யாணம் ஆயிடுச்சு..நா என்னதான் பண்றது?தெரிஞ்சுக்காம நா நகரமாட்டேன்..

மு.க. நீ ரொம்ப சட்டம் பேசற..அதையும் உன் கிட்டேர்ந்து புடுங்கிட வேண்டியதுதான்..

என்ன இங்க..சத்தம்..என்றபடி ஸ்டாலினும்,அழகிரியும் வருகிறார்கள்...

ஏம்பா..உங்களை ஓய்வு எடுக்க சொன்னா..நீங்க சின்ன பசங்களையெல்லாம் கூப்பிட்டு வச்சு கூத்தடிக்கறிங்களா/

கேபிள் ....ஐயா தளபதி என்னயத்தான் சின்ன பையன்னு சொன்னார்..நா யூத்துப்பா யூத்து..

செக்யூரிட்டி...விரட்டுயா எல்லாரையும்.அப்பா வாசல்ல நல்லகண்ணு,ஜோதிபாசு எல்லாம் காத்துகிட்டு இருக்காங்க..போய் அருகம்புல் ஜீஸ் குடிச்சுட்டு வாக்கிங் போயிட்டு வாங்க..போங்க..

23 comments:

Raju said...

\\கேபிள்..இந்த படத்தை தயாரிக்கறது யாருங்க?சன் பிக்சர்ஸா இல்ல கிளவுட் நைன்னா?\\
ரெண்டுமே இல்ல..
ரெட் ஜெயன்ட்,

Raju said...

\\மு,க..டைரக்டர் நீதான்யா..ஆனா டைரக்‌ஷன் நான் தானே..\\

:)

butterfly Surya said...

கேபிளோட முதல் அனுபவமே இப்படியாயிருச்சே..

செம கலக்கல்.

கார்த்திகைப் பாண்டியன் said...

கொலவெறியோட கேபிளன்னே தண்டோராவத் தேடுரதாக் கேள்வி..:-))

நையாண்டி நைனா said...

சரிதான்... ஏன் இந்த கொலவெறி...
அண்ணே கேபிள் அண்ணே, வந்து தண்டோரா அண்ணனை கவனிங்க.

குடந்தை அன்புமணி said...

உண்மையிலேயே செம கலக்கல். (நான் இடுகையைத்தான் சொன்னேன்...)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

:) :)

கலக்கல்!

R.Gopi said...

"தல"

ஹ்ம்ம்,...பதிவு பின்னுது..........

ஆனா, நீங்க கொஞ்சம் அடக்கி வாசிச்சீங்களே...ஏன்?? பதிவுல சொன்னேன்.....

மொத்தத்துல சூப்பர்............அதுவும் அந்த துரைமுருகன்...மீனா மேட்டர்.... தூள்...

GHOST said...

லொள்ளுதானே????///
பின்னி பெடலெடுத்துட்டீங்க...

Cable சங்கர் said...

என்ன இன்னைக்கு ஆளாளுக்கு என்னைய போட்டு பின்னி யெடுக்கிறீங்க../ சும்மா சொல்லக்கூடாது சூப்பர். தண்டோரா..

அக்னி பார்வை said...

கொஞ்ச நாளா கதை டிஸ்கஷ்ன் கல கட்டிகிட்டிருக்கு.... அருமை , அருமை...

வால்பையன் said...

கடைசி வரைக்கும் எனக்கு சரக்க கண்ணுல காட்டலையே

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அதுவும் அந்த துரைமுருகன்...மீனா மேட்டர்....

இது என்ன? புதுக்கதை

Indian said...

Super...

Indian said...

Super...

அத்திரி said...

//கேபிள் ....ஐயா தளபதி என்னயத்தான் சின்ன பையன்னு சொன்னார்..நா யூத்துப்பா யூத்து..//


ஹிஹிஹிஹிஹி-..................

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நல்ல கற்பனை ..! பாத்துண்ணே, உங்களுக்கே ஆட்டோ அனுப்பிடபோறாங்க...

மணிஜி said...

டக்ளஸ்..
வண்ணத்துப்பூச்சியார்...
கார்த்திகை பாண்டியன்...
நைனா...
வால்பையன்..
அத்திரி...
கேபிள்...
இந்தியன்..
நெல்லை சரவணகுமார்...
யோகன் பாரிஸ்..
கோஸ்ட்...
தம்பி கோபி....
அக்னி...
அன்புமணி..
குருஜி ஜியோவ்..

அனைவரின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி....

RRSLM said...

கூகிள் ரீடரில் நேற்றே படித்தேன். நல்ல கற்பனை அருமையா இருக்கு தல!

Anonymous said...

:)

நாஞ்சில் நாதம் said...

கலக்கல்!

தமிழ் அமுதன் said...

ஜூப்பரு.!;)

ஜோதிஜி said...

இந்த மாதிரி படித்து சிரித்து பல மாதம் ஆகிவிட்டது.