Monday, July 20, 2009

உனக்கே இது ஓவரா தெரியலை?

எனக்கே சற்று சோம்பல்தான்

அந்த வாசம் நாசியை தாக்கும்வரை

பார்வையை கூராக்கி உற்று நோக்கினேன்

தூரத்தில் பளபளத்தது அது

ஆஹா..அருமையான வேட்டைதான்

தனியொருவனாய் தள்ளிக் கொண்டு வர முடியாது

பரிவாரங்களுக்கு தகவல் அனுப்பினேன்

தளபதிகள் அணிவகுக்க பயணம் தொடங்கியது.

நாங்கள் மேலிருந்தோம்

அது கீழே சமவெளியில்

இத்தனை பேரும் பங்கு போட்டாலும்

மிச்சம் நிறையவே இருக்கும்

இதோ இலக்கு நெருங்கி விட்டது

சின்ன அடையாள ஒலி

அதற்கே வந்துவிட்டாள் தோழி

சீ..சீ நான் அதற்கு அழைக்கவில்லை

பின்..

மேலே பார் அணிவகுப்பை

இடமும்,வலமுமாய்

இரு பக்கமும் காத்திருப்போம்

சரியான தீனிதான்..

என்னை பார்க்கும் போதெல்லாம்

மனதிற்குள் மழையடிக்கும்

என்பீர்களே

இப்போதும் அப்படித்தானா?

எட்டாவது திருமண நாள்

முடிந்ததும் மனைவி கேட்டாள்

இல்லையென்று உண்மையை சொன்னால்

புண்படுவாள்-என்று

“ஆமாம்என்று பொய் சொன்னேன்

இதில் எதாவது முரண் இருந்தால்

அதுமுன் நவினத்துவம்

இல்லையென்றால் ‘பின் நவினத்துவம்

புரியவில்லையென்றால்

சர்க்காரிசம்

ஐஞ்சு பேர்..சமாளிக்க முடியுமா?

ஐயோ..நிச்சயம் முடியாது..

அட்ஜஸ்ட் பண்ணி பாரேன்..

வேற வழியில்லை..வர சொல்லிட்டேன்

என்னை கேட்க வேண்டாமா?

நீ பெரிய கைகாரியாச்சே..உன்னால முடியும்

ம்ம்..பொண்டாட்டி மானத்தை வாங்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க..வரட்டும் ..பார்க்கலாம்

உள்ளே சென்று டப்பாவை திறந்து இருந்த கொஞ்சம் துவரம் பருப்பை எடுத்து ஊற வைத்தாள்..

ஆறு பேருக்கு சாம்பார் வைக்க இந்த பருப்பு எப்படி போதும்..சாம்பார் தண்ணியாத்தான் இருக்கும்.புலம்ப ஆரம்பித்தாள்

(துவரம்பருப்பு கிலோ 96 ரூபாயாம்)

எனக்கொரு வேலை கொடுங்க..

சம்பளம் எவ்வளவு வேணும்?

முத நாள் ஒரு பைசா..

ஒரு பைசாவா?

ஆமாம்..ஆனா அடுத்த நாள் ரெண்டு பைசா..அதுக்கு அடுத்த நாள் நாலு பைசா..அப்புறம் எட்டு..பதினாறு..முப்பத்திரண்டு..

சரியென்று ஒத்துக் கொண்ட முதலாளி ஒரு மாசத்தில் போண்டியானார்..

(கணக்கு போட்டு பாருங்களேன்)

31 comments:

butterfly Surya said...

ஒவராதான் இருக்கு...

ஆனாலும் நல்லாயிருக்கு..

Indian said...

//எனககொரு வேலை கொடுங்க..

சம்பளம் எவ்வளவு வேணும்?

முத நாள் ஒரு பைசா..

ஒரு பைசாவா?

ஆமாம்..ஆனா அடுத்த நாள் ரெண்டு பைசா..அதுக்கு அடுத்த நாள் நாலு பைசா..அப்புறம் எட்டு..பதினாறு..முப்பத்திரண்டு..

சரியென்று ஒத்துக் கொண்ட முதலாளி ஒரு மாசத்தில் போண்டியானார்..
//

இது சூப்பர். செஸ் வரலாறை நுழைத்ததற்காக.

அக்னி பார்வை said...

///அது’முன் நவினத்துவம்’

இல்லையென்றால் ‘பின் நவினத்துவம்’

புரியவில்லையென்றால்

”சர்க்காரிசம்”
///

இது எநத ஊரு குசும்பு?

R.Gopi said...

அந்த முன், பின் நவீனத்துவம்......... ஹ்ம்ம்......... பட்டைய கெளப்புது பாஸு.....

அந்த சம்பளம் மேட்டர் கொஞ்சம் பழசானாலும், இப்போ படிக்கறப்போ சிப்பு சிப்பா வருது.......

கலக்குங்க.............

Raju said...

தினுசு தினுசா கலக்குறீங்களே தலைவரே..!

Anonymous said...

மூண்றாவதைத்தவிர மற்றதெல்லாம் எனக்குப் புரியவில்லை. உங்கள் தளமே வேற. நான் அங்கு வந்து சேர இன்னும் அதிகம் வாசிக்கணும் போல இருக்கு.

Cable சங்கர் said...

சர்ரியலிசம்.

மணிஜி said...

//ஒவராதான் இருக்கு...

ஆனாலும் நல்லாயிருக்கு..//

நன்றி வண்ணத்துபூச்சியாரே

மணிஜி said...

//ரியென்று ஒத்துக் கொண்ட முதலாளி ஒரு மாசத்தில் போண்டியானார்..
//

இது சூப்பர். செஸ் வரலாறை நுழைத்ததற்காக.//

வருகைக்கு நன்றி ‘தேசமே”

மணிஜி said...

//அது’முன் நவினத்துவம்’

இல்லையென்றால் ‘பின் நவினத்துவம்’

புரியவில்லையென்றால்

”சர்க்காரிசம்”
///

இது எநத ஊரு குசும்பு?

பி,சி.சர்க்கார் தெரியாதா அக்னி

மணிஜி said...

நன்றி கோபி
நன்றி டக்ளஸ்

மணிஜி said...

//அண்ணாச்சி.நேர்ல பார்க்கும்போது பிடரியில் ஒண்ணு போடுங்க..

மணிஜி said...

///கேபிள் யூ 222//

குடந்தை அன்புமணி said...

நான் கணக்குல வீக். அப்பீட்டுக்கிறேன்.

நையாண்டி நைனா said...

sema sema sema kalakkal...

மணிஜி said...

அன்புமணிக்கும்,நையாண்டி நைனாவிற்கும் நன்றிகள்..

தராசு said...

தல,

ஜீப்புல ஏறிட்டிங்க போல,

முதல் மேட்டரு ஒரு எளவும் புரியல.

அப்புறம் அது எதுக்கு இத்தனை "இத்துவம்".

முதலாளி போண்டி......... சூப்பர்.

Unknown said...

//ஐஞ்சு பேர்... சமாளிக்க முடியுமா//

அய்யய்யோ.................. கண்டனப் பதிவு வெயிட்டிங்... போடப் போறது யாருன்னுதான் தெரியல...

கலையரசன் said...

என்னமா யோசிக்கறீங்க..

மணிஜி said...

/தல,

ஜீப்புல ஏறிட்டிங்க போல,

முதல் மேட்டரு ஒரு எளவும் புரியல.

அப்புறம் அது எதுக்கு இத்தனை "இத்துவம்".

முதலாளி போண்டி......... சூப்பர்//

தராசு அண்ணே..யாத்ராவின் எறும்பு கவிதை படிச்சுட்டு நாமளும் எழுதலாம்னு டிரை பண்ணேன்...மேலிருந்து எறும்புகள் கீழிருக்கும் லட்டு துண்டை நோக்கி வர,பல்லிகள் அத இரைக்காக காத்திருக்கின்றன.(அட..அப்படியா?)

மணிஜி said...

///ஐஞ்சு பேர்... சமாளிக்க முடியுமா//

அய்யய்யோ.................. கண்டனப் பதிவு வெயிட்டிங்... போடப் போறது யாருன்னுதான் தெரியல..//

பாக உண்ணாரா?

மணிஜி said...

கலை வாங்க..

அத்திரி said...

அருமை அனைத்தும்

மணிஜி said...

அத்திரி நன்றி..

வால்பையன் said...

//(துவரம்பருப்பு கிலோ 96 ரூபாயாம்)//

பணவீக்கம் மைனஸ்ல போகுதாம்ல!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வால்பையன் July 20, 2009 9:21 AM
//(துவரம்பருப்பு கிலோ 96 ரூபாயாம்)//

பணவீக்கம் மைனஸ்ல போகுதாம்ல!//

அதுதானே

மணிஜி said...

வருகைக்கு நன்றி வால்பையன் மற்றும் டிவிஆர் ....

பரிசல்காரன் said...

ஆஹா!

பின்றீங்க போங்க!

(எனக்குப் பிடிச்சது சர்க்காரிசக் கவுஜ!)

மணிஜி said...

/ஆஹா!

பின்றீங்க போங்க!

(எனக்குப் பிடிச்சது சர்க்காரிசக் கவுஜ!)//

பரிசல் வாங்க ..வணக்கம்..நன்றி..

கிருஷ்ண மூர்த்தி S said...

அட, எனக்கும் கூட இது ஓவராத் தான் தெரியுதுங்க!
ஆனாலும், மன சாட்சி சொல்றதை எப்படிங்க மறுக்கிறது:-))

மணிஜி said...

நைனாவுக்கும்,நெல்லைகவிக்கும் நன்றி...