Wednesday, July 1, 2009

கருணாநிதி,ஜெயா சந்திப்பு

அத்வானி மன்மோகனை சந்தித்து வாழ்த்து சொகிறார்..நிதிஷ் லாலு சந்தித்து கொள்கிறார்கள்..ராகுல் அத்வானியிடம் ஆசி பெற்றுக் கொள்கிறார்..அந்த மாதிரி முன்னாள்,இன்னாள் முதல்வர்களை சந்திக்க வைத்தால் என்ன ? என்று ஒரு முயற்சி

அண்ணா சமாதிக்கும்,எம்ஜிஅர் சமாதிக்கும் இடையில் மேடை அமைக்கப் பட்டு இருக்கிறது..கருணநிதி சரியான நேரத்துக்கு வந்து விடுகிறார்..அம்மாவை பற்றி சொல்ல வேண்டுமா?வழக்கம் போல் லேட்டாக வர..கருணா விரல்களால் முகத்தை மூடிக் கொண்டு விரலிடுக்கு வழியாக அம்மையாரை பார்க்கிறார்..

”என்ன என் முகத்தை நேருக்கு நேர் பார்க்க பயமா?

இல்லை அம்மணி “கிரகணத்தை அப்படித்தான் பார்க்கணும்..கேள்விபட்டதில்லையா?

வார்த்தை விளையாட்டு வேண்டாம்..மக்களுக்காக என்ன செஞ்சிருக்கிங்க..

எல்லாருக்கும் எல்லாம் செஞ்சாச்சு..இனி கனி மட்டும்தாம் மீதம்.அதையும் செஞ்சுட்டா என் தலைவலி ஒழியும்..

நான் தமிழக மக்களுக்கு என்ன செஞ்சிங்கன்னு கேட்டேன்..உங்க ஆட்சியில எத்தனை அதிகார மையங்கள்..ஆளாலுக்கு ஆடறாங்க..

அதிகாரம் பரவலாக்கபட வேண்டும் என்பதுதானே அண்ணனின் ஆசையும் கூட..

விலைவாசிய பாத்திங்களா?விலைன்னு எழுதி வாசிக்கத்தான் முடியுது...

அம்மையாரே..மக்களின் வாங்கும் சக்தி அதிகமாகிவிட்டது..அதை விட மக்களை வாங்கும் சக்தியும் அதிகமாகி விட்டது...இந்த தேர்தலில் தெரிந்து கொண்டோம்..

ரொம்ப பீத்திக்காதீங்க...அடுத்த ஆட்சி என்னுடையதே..அப்ப வச்சுக்கறேன்...


அம்மணி....இனி வெற்றி என்பது வாங்கபடவேண்டிய ஒன்று.. 2011 தேர்தலுக்கு நாங்க இப்பவே பட்டுவாடாவை ஆரம்பிச்சுட்டோம்..எப்புடி??

வாக்கு சீட்டு முறை வந்துட்டா நீங்க ஜெயிக்கவே முடியாது..

அறியாமையில் அரற்றுகிறீர்கள்..அது இன்னும் சொர்க்கம்...உங்களுக்கு சுத்தம்..ஒன்னு காந்தி,இல்லன்னா கத்தி..எவனாச்சும் எதிர்ப்பான்?

இடையில் தண்டோரா குறுக்கிட்டு..நீங்க மக்கள் பிரச்சனையை பத்தி ஒன்னுமே பேசலையே..

கருணாநிதி..அம்மையாரே,நம்ம லாவணியை அப்புறம் கூட வச்சுக்கலாம்..முதல்ல இந்த மாதிரி புல்லுருவிகளை என்ன பண்ணனும் தெரியுமில்ல...

ஆமாமாம்..இந்த விஷயத்துல நீங்களும் நானும் ஒரே கட்சிதானே..

அப்புறம் என்ன? ஸ்டார்ட் மூஜிக்....




கடற்கரையில் பதிவர் சந்திப்பு முடிகிறது...

அக்னிப்பார்வை : அதோ, அங்க முனகல் கேக்குது..தண்டோராவா இருக்குமோ?
அடப்பாவி அவனேதான்..அப்பவே சொன்னென் ..ஆட்டோ வரும்னு..பார்த்தா புல் டோசர் ஏறினமாதிரி இருக்கு..


ரமேஷ் வைத்யா : ஏ அப்பா..யாராச்சும் அவனுக்கு சரக்கு வாங்கி கொடுங்கப்பா..எந்திரிச்சுருவான்..

லக்கிலுக் : உடலெங்கும் இருக்கும் நகக்குறிகளை பார்த்தால் புத்திக்கு புதிதாக ஏதோ படுகிறது...ஆனால் மனசு ஏற்க மறுக்கிறது...

அதிஷா “ஐயா லாலி..லாலி..ஜாலி..ஜாலி...தண்டோர காலி..காலி....

முரளிகண்ணன் : இப்படித்தான் 80களில் வந்த ஒரு திரைப்படத்தில் மோகன் ஹீரோ என்று நினைக்கிறேன்..

கேபிள் :பரங்கிமலை ஜோதி தியேட்டர் போஸ்டர் மாதிரியே இருக்கானே..ஒரு சேஞ்சுக்கு ஹாட் ஸ்பாட்ல போட்றுவமா?

பைத்தியக்காரன் : அதிகார வர்க்கத்தின் உரையாடலில் அற்பர்கள் மூக்கை நுழைத்தால் இப்படித்தான் கட்டுடைந்து போகும்..

ஜ்யோவ்ராம்...: இனியும் ஒவ்வொரு சனியும்

எண்ணெய் தேய்த்து குளியும்..

எழுதும் வாழ்நாள் முழுதும்,

அவர்தமை தொழுதும்

நர்சிம் : எதாவது செய்யணும் பாஸ்..

டோண்டு : என்ன செய்யறது..தொட்டாலே போயிடும்..சமீபத்துல ..இந்த வார்த்தைக்கு காங்கோ மொழில ஒரு கவிதை படிச்சேன்..

வால்பையன் “ “சே..வடை போச்சே..கடைக்கு தனியாத்தான் போகனுமா?

ஜாக்கி சேகர் போட்டோ எடுத்துக் கொண்டு அவசரமாக கிளம்புகிரார்...ஜாக்கி எங்க? பின்ன மீ த பர்ஸ்ட்..போய் சூடா பதிவு போடனுமில்லே.

27 comments:

R.Gopi said...

//விலைவாசிய பாத்திங்களா?விலைன்னு எழுதி வாசிக்கத்தான் முடியுது...//

Ah ha.......

//இனி வெற்றி என்பது வாங்கபடவேண்டிய ஒன்று.. 2011 தேர்தலுக்கு நாங்க இப்பவே பட்டுவாடாவை ஆரம்பிச்சுட்டோம்..எப்புடி??//

Super THALA

Kalakkal............

Pinni irukkenga......

குடந்தை அன்புமணி said...

கருணாநிதி- ஜெயலலிதா சந்திப்பு தமிழக நிலவரங்களை அசைபோட்டது மாதிரி உள்ளது.
பதிவர்கள் சந்திப்பு சூப்பரப்பு!

நையாண்டி நைனா said...

சரி நானும் அப்புறமா வாறேன் ...
ஜாக்கி போட்ட படத்திற்கு கமண்டு போட்டு ஒரு பதிவு ரெடி பண்ணனும்.

நையாண்டி நைனா said...

எச்சூஸ் மீ மிஸ்டர் குடந்தை அன்புமணி...
நீங்களும் உங்க பதிவும் சந்திச்சு ரொம்ப நாள் ஆச்சு போல இருக்கு... கொஞ்சம் அங்கேயும் போய் மீட் பண்ணுங்க...

butterfly Surya said...

கலக்கல்..

கலையரசன் said...

வழக்கம்போல் உங்க டச்சில்
டபுள் ஷாட்!
நான் அங்க இருந்தா வந்திருப்பேன்!!
:-((

Raju said...

பைத்தியக்காரன்,ஜ்யோவ்ராம் கமெண்ட் சூப்பர்.
அதுவும் அந்த கவிதை சான்ஸே இல்ல..!

சிநேகிதன் அக்பர் said...

முடியல . ஆன சீக்கிரம் முடிச்சிட்டிங்க. கலக்கல்.

நம்ம பக்கமும் வாங்க.

மணிஜி said...

////விலைவாசிய பாத்திங்களா?விலைன்னு எழுதி வாசிக்கத்தான் முடியுது...//

Ah ha.......

//இனி வெற்றி என்பது வாங்கபடவேண்டிய ஒன்று.. 2011 தேர்தலுக்கு நாங்க இப்பவே பட்டுவாடாவை ஆரம்பிச்சுட்டோம்..எப்புடி??//

Super THALA

Kalakkal............

Pinni irukkenga......//

வாங்க கோபி...

மணிஜி said...

//கருணாநிதி- ஜெயலலிதா சந்திப்பு தமிழக நிலவரங்களை அசைபோட்டது மாதிரி உள்ளது.
பதிவர்கள் சந்திப்பு சூப்பரப்பு!//

அன்பு வருகைக்கு நன்றி..அப்புறம் அன்றைக்கு நிறைய பேச முடியல..இன்னொரு சந்திப்பில்...

மணிஜி said...

//சரி நானும் அப்புறமா வாறேன் ...
ஜாக்கி போட்ட படத்திற்கு கமண்டு போட்டு ஒரு பதிவு ரெடி பண்ணனும்.//

வாங்க நக்கலிஸ்ட்..

மணிஜி said...

//கலக்கல்..//

ஓ..பட்டர்பிளை...

மணிஜி said...

//வழக்கம்போல் உங்க டச்சில்
டபுள் ஷாட்!
நான் அங்க இருந்தா வந்திருப்பேன்!!
:-((//

வா..தம்பி//

மணிஜி said...

//பைத்தியக்காரன்,ஜ்யோவ்ராம் கமெண்ட் சூப்பர்.
அதுவும் அந்த கவிதை சான்ஸே இல்ல..!//

தம்பி டக்ளஸ் கருத்துக்கு நன்றி..நேத்து நைட்டு நீ இடியாப்பமும் ,பாயாவும் சாப்பிட்டியா?எனக்கு ஏப்பம் வந்துச்சு..

மணிஜி said...

//முடியல . ஆன சீக்கிரம் முடிச்சிட்டிங்க. கலக்கல்.

நம்ம பக்கமும் வாங்க.//

நிச்சயம் இன்ஷா அல்லா..

R.Gopi said...

//தம்பி டக்ளஸ் கருத்துக்கு நன்றி..நேத்து நைட்டு நீ இடியாப்பமும் ,பாயாவும் சாப்பிட்டியா?எனக்கு ஏப்பம் வந்துச்சு..//

Aevvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

முரளிகண்ணன் said...

செம கலக்கல் தண்டோரா.


கலைஞர் ஜெ சந்திப்ப இன்னும் நீட்டிருக்கலாம்

மணிஜி said...

//செம கலக்கல் தண்டோரா.


கலைஞர் ஜெ சந்திப்ப இன்னும் நீட்டிருக்கலாம்//

வருகைக்கு நன்றி முரளி..பார்க்கவே முடியலயெ..பிஸியா...?

Jackiesekar said...

அம்மையாரே..மக்களின் வாங்கும் சக்தி அதிகமாகிவிட்டது..அதை விட மக்களை வாங்கும் சக்தியும் அதிகமாகி விட்டது...இந்த தேர்தலில் தெரிந்து கொண்டோம்..


மேலுள்ள வரிகளை ரசித்தேன் தண்டோரா...

பரிவர் சந்திப்பு கலக்கல் தலை...

அக்னி பார்வை said...

உங்க ஆட்டொவ வாடகைக்கு வாங்கி உங்க ஆபிஸுக்கே அனுப்பாபோறாங்க..

நாளை சைதாப்பேட்டையில் தான் சுற்ற போகிறேன் ஓய்வாக இருந்தால் போன் செய்யவும் ஆபிஸுக்கு வந்துவிடுகிறேன்..

Thomas Ruban said...

//மக்களின் வாங்கும் சக்தி அதிகமாகிவிட்டது..அதை விட மக்களை வாங்கும் சக்தியும் அதிகமாகி விட்டது...இந்த தேர்தலில் தெரிந்து கொண்டோம்..//

செம கலக்கல்,ரசித்தேன்
//இந்த விஷயத்துல நீங்களும் நானும் ஒரே கட்சிதானே..//

எல்லா கச்சிகளும் ஒரே கட்சிதானே..

மூஜிக் வாசிதள தலைக்கு ஒண்ணும் டேமஜ் இல்லதன.ச்சும்மா!!!

அஹோரி said...

நிஜமா அதுகள் இரண்டும் சந்தித்தால் இப்படித்தான் பேசும்.

JesusJoseph said...

இனி வெற்றி என்பது வாங்கபடவேண்டிய ஒன்று

thi is the best

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

நல்ல நகைச்சுவைப்பதிவு.
மீண்டும் படிக்க எதுக்கும் ஒரு காப்பி எடுத்து வைத்துக்கொள்ளட்டா தலைவா?

மணிஜி said...

ஜாக்கி,அக்னி,அஹோரி,ஜேம்ஸ்,தமிழ்நாட்டுத்தமிழன்...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

வால்பையன் said...

//வால்பையன் “ “சே..வடை போச்சே..கடைக்கு தனியாத்தான் போகனுமா?//

கேபிள் சங்கர், ரமேஷ்வைத்யா இருக்கும் போது எனகென்ன கவலை அப்படியே தோள்ல தூக்கிபோட்டு போயிரமாட்டேன்!

மணிஜி said...

////வால்பையன் “ “சே..வடை போச்சே..கடைக்கு தனியாத்தான் போகனுமா?//

கேபிள் சங்கர், ரமேஷ்வைத்யா இருக்கும் போது எனகென்ன கவலை அப்படியே தோள்ல தூக்கிபோட்டு போயிரமாட்டேன்!//

ஒ..வால்பையன் அனுமாரா??