அடி மாடுகளை
பார்க்கும் போதெல்லாம்
மனதை ஏனோ
பிசைகிறது
சுரக்கும் வரை
கறந்துவிட்டு
மடி வற்றிய பின்
அடிமாடாக்கி
அண்டை மாநிலத்துக்கு
அனுப்புவதை
நினைத்தால்
ஒரு குறிப்பு:
ஆறு மாசமாச்சு
அன்பு இல்லத்தில்
இருக்கும்
அப்பாவை பார்த்து
ஒரு நடை
போய் வந்தபின்
மேற்கொண்டு
தொடர உத்தேசம்
17 comments:
/ஆறு மாசமாச்சுஅன்பு இல்லத்தில் இருக்கும்அப்பாவை பார்த்து
ஒரு நடைபோய் வந்தபின்மேற்கொண்டுதொடர உத்தேசம்/
அடின்னா இது அடி. அசத்துறீங்க.
எப்படின்னே? முதல் பாதிய படிச்சுட்டு ரொம்ப சாதாரணமா இருக்கேன்னு நினைச்சிட்டு... மறு பாதிய படிச்சிட்டு கலங்கிட்டேன். கலக்குறீங்கண்ணே...
ஓட்டுக்கள போட்டாச்சு.
பிரபாகர்.
அஹா... பின்றாரப்பா.. பின்றாரப்பா..
கவிதையின் கரு மிகப்பழையது.
இன்னும் நல்லா எழுதியிருக்கலாம் மணிஜி.
/கவிதையின் கரு மிகப்பழையது.
இன்னும் நல்லா எழுதியிருக்கலாம் மணிஜி.//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்
உறுத்தல்
அருமை!
நிதர்சனம்
//அடிமாடாக்கி
அண்டை மாநிலத்துக்கு
அனுப்புவதை
நினைத்தால்//
கவிதை நன்றாயிருக்கிறது...
செவிட்டில் அறைந்த கவிதை.....
கரு மிகப்பழையது
but the way u express is intresting
:)
பூங்கொத்து!
//மேற்கொண்டு
தொடர உத்தேசம்//
இதற்காகவே ஓட்டுக்கள்.
சூப்பர் தல... ஒரு எதிர் கவுஜ போடுறேம். கண்டுக்காதீங்க... :))
அதிர்ந்து போயிருக்கிறேன்!
'அடடா'காச கவிதை!
சாமி! என்ன இதெல்லாம்! அசத்துங்க!
ம்ம் எதிர்காலம் பயமாத்தான் இருக்கு
Post a Comment