
புத்தம் சரணம்
மார்க்கம்
யுத்தம் மரணம்
நரகம்
மோகம் முத்தம்
சொர்க்கம்
அடுத்த வரி
யோசிக்கையில்
வாசலில்
அம்மா தாயே
பசிக்குது......
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
என்னதான்
இறுக்கமாய்
இருப்பதாக
உன்னை
காட்டி கொள்ள
முயற்சித்தாலும்
கசியும் அந்த
துளி மெளனத்தில்
எனக்கான சம்மதம்
ஒளிந்திருக்கிறது
இன்னும் கொஞ்சம்
அவகாசம் கொடு
என்று கேட்பதாக
கருதிக்கொண்டு
காத்திருக்கிறேன்.....
29 comments:
”கசியும் மெளனம்” என்ற ஈரோடு கதிரின் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அதை எடுத்து கொண்டிருக்கிறென்.கதிருக்கு நன்றியும்,பிறந்த நாள் வாழ்த்துக்களும்....
-)))))))))))
இவ்ளோதான் சொல்ல முடியும்..!
/இன்னும் கொஞ்சம்
அவகாசம் கொடு
என்று கேட்பதாக
கருதிக்கொண்டு
காத்திருக்கிறேன்.//
கசியும் மெளனம் கொடுக்கும் தைரியம்.:)
முதல் கவிதை சூப்பர்!
கசியும் மௌனம் பார்த்ததும் கதிரின் ஞாபகம்தான் சட்டென்று துளிர்த்தது. அவரின் கேப்ஷனிலிருந்தே ஒரு அழகான கவிதை.
அழகான கவிதைகள்.
இரண்டாவது ரொம்ப பிடிச்சு இருக்கு தல..
அழகான வரிகள்....
தல.. இரண்டுமே அருமை.
கதிருக்கும் வாழ்த்துகள்.
//கசியும் அந்த
துளி மெளனத்தில்
எனக்கான சம்மதம்
ஒளிந்திருக்கிறது//
ஆஹா அழகு
வாழ்த்துகளுக்கு நன்றி தண்டோரா
இரண்டுமே அருமை
திரும்ப திரும்ப நல்லாருக்குன்னு சொல்ல போர் அடிக்குது...
அதனால...........நல்லருக்கு. யதார்த்தகவின்னு பட்டம் கொடுத்தது எவ்வளவு எதார்த்தமான ஒன்னுன்னு கசியும் மௌனத்திலையே புரிஞ்சிடுச்சி...
ஒட்டுக்கைகளை போட்டாச்சு...
பிரபாகர்.
கவிதைகள் அருமை! கதிரின் வார்த்தைகள் பிடிக்கும்.., எடுத்துக் கொண்டேன் எனச் சொன்னது இன்னொரு கவிதை!
முதல் கவிதை நச்...
இரண்டாம் கவிதை அருமை...
அருமையான கவிதைகள்... :)
கவிதை கன் தண்டோரா வாழ்க!!!
பாட்டுக்கு இந்தாங்க லிங்க்......
http://www.tamilentertainments.com/AlbumDetails.aspx?qry=C4c+e8CMtA1HeQh+bJay1Q==
நல்ல கவிதைகள் ..!
ரொம்ப நாளா கவிதை எழுதுவது மறந்து போயிருந்தது. தற்போது உங்களைப் போன்றவர்கள் எழுதுவதை வாசிக்கும்போது மீண்டும் எனக்குள் கவிதை துளிர்க்கின்றது.
இருந்தும் எதற்கும் இருக்கட்டுமென்று அவற்றை அப்படியே வைத்துக்கொண்டு, என்றோ எழுதியவற்றை தற்போது வலையில் தவழ விட்டுக் கொண்டிருக்கின்றேன்.
அப்புறம் . . .
உங்களின் நேர்மை எனக்கு பிடித்திருக்கின்றது (கதிரின் வரிகள் . . .)
அழகான கவிதை.
கதிருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
கவிதைகள் அருமை!
அவளின்
கசியும் மெளனத்தைக்
கண்டறிய எவ்வளவு மெளனமாய்
காத்திருந்திருப்பீர்!
வாழ்த்துகள்.
முதல் கவிதை அருமை...கதிருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..:-)))
I like second one.
@ கதிர்-ஈரோடு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்ன்னா
இரண்டுமே ரொம்ப நல்லா இருக்கு மணிஜி!ரெண்டாவது ஒரு நூல் அதிகமாய்.பிறந்த நாள் வாழ்த்துக்கள் கதிர்!
கதிருக்கு வாழ்த்துகள்.
//கசியும் அந்த
துளி மெளனத்தில்
எனக்கான சம்மதம்
ஒளிந்திருக்கிறது
இன்னும் கொஞ்சம்
அவகாசம் கொடு
என்று கேட்பதாக
கருதிக்கொண்டு
காத்திருக்கிறேன்.....//
சூப்பர்.
ஈரோட்டு கவிஞரும் "வார்த்தை நெசவாளருமான" -கதிருக்கு நெஞ்சம் தித்திக்கும் இனிய
பிறந்த நாள் வாழ்த்துகள்..
கலக்கல் தண்டோரா.
நண்பர்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்து பகிர்வுக்கும் என் மேலான நன்றிகள்...
Post a Comment