Thursday, October 1, 2009

சில பொழுதுகளில்...............கவிதை



ஒருதலைக் காதலியுடன்
உறவு
உல்லாசம்......

சாத்தியமில்லாத
இடங்களுக்கு
பயணம்

மில்லியன் டாலர்
லாட்டரியில்
அதிர்ஷ்டம்........

பேய்களுடன்
யுத்தம்
வெற்றி
பெருமிதம்.......

இத்தனையும்
வருகிறது
கனவுகளில்......

வர விழைகிற
ஒன்று.......

என் மழலையும்
பால்குடி
பொழுதுகளும்......
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நானும்,நீயும்
அன்று பார்த்த
திரைப்படங்கள்.......

இன்று
நானும் அவளும்
பார்க்கிறோம்
தொலைக்காட்சியில்......

நானும்,அவனும்
என்றும் வாசிக்கலாம்.....

29 comments:

நையாண்டி நைனா said...

mee firste....

Cable சங்கர் said...

muthal kavithai arumai

Jerry Eshananda said...

//நானும்,அவனும்
என்றும் வாசிக்கலாம்.....//
மிரட்டல் வரிகள்
இன்றைய முதல் ஒட்டு நம்ம கவிதைக்கு தான்

பிரபாகர் said...

//நானும்,அவனும்
என்றும் வாசிக்கலாம்.....
//

வாசிச்சா....

அண்ணே என்ன ஒரு எதிர்பார்ப்பு?... அவரும்னு சொல்ற அளவுக்கு நட்பு இல்லையா?

அற்புதம். ஓட்டுகள போட்டாச்சு.

கலக்குங்கள்.

பிரபாகர்.

நாடோடி இலக்கியன் said...

//நானும்,அவனும்
என்றும் வாசிக்கலாம்.....
//

அருமை.

கலையரசன் said...

புரியிர மாதிரி எழுதுனா கவித இல்லன்னு எவன்யா சொன்னது?
உடன்பிறப்பே! கலக்குங்கள்...

அமுதா கிருஷ்ணா said...

இரண்டாவது கவிதை..
கவிதை..
கவிதை..

ஈரோடு கதிர் said...

//என் மழலையும்
பால்குடி
பொழுதுகளும்......//

வருமா... வரமாக‌

ஈரோடு கதிர் said...

//என் மழலையும்
பால்குடி
பொழுதுகளும்......//

வருமா... வரமாக‌

Raju said...

\\கலையரசன் said...
உடன்பிறப்பே! கலக்குங்கள்...\\

இங்க பார்ரா, கசாப்புக்கடையில வந்து ஆடு கானா பாட்டு பாடுறத.
அண்ணே, கலையை கொஞ்சம் கவனியுங்க..!
:)

ஜெட்லி... said...

:))

மணிஜி said...

/தமிழ்மணம் பரிந்துரை : 7/8//

கவிதைல எதுவும் உள்குத்து வைக்கலையே..அப்புறம் ஏன் ராசா??

மணிஜி said...

///என் மழலையும்
பால்குடி
பொழுதுகளும்......//

வருமா... வரமாக‌//

கதிர் டச்...

மணிஜி said...

/mee firste....//

இந்த மாதிரி போடாதீங்கன்னு சிறுகதை பட்டறைல பா.ராகவன் சொன்னாருப்பா....

மணிஜி said...

/புரியிர மாதிரி எழுதுனா கவித இல்லன்னு எவன்யா சொன்னது?
உடன்பிறப்பே! கலக்குங்கள்...//

கலை...2+2=4...2x2=4...அந்த மாதிரி கவிதை இருக்கணும்...அது என் கருத்து..(கொஞ்சம் ஓவர்தான் இல்ல?)

மணிஜி said...

///நானும்,அவனும்
என்றும் வாசிக்கலாம்.....
//

வாசிச்சா....

அண்ணே என்ன ஒரு எதிர்பார்ப்பு?... அவரும்னு சொல்ற அளவுக்கு நட்பு இல்லையா?

அற்புதம். ஓட்டுகள போட்டாச்சு.

கலக்குங்கள்.//

நன்றி பிரபா..(சிங்கப்பூர் ஸ்பான்சருக்கும் சேர்த்துதான்)

butterfly Surya said...

அருமை மணிஜீ. கவிதையா போட்டு தாக்குறீங்க..

கார்த்திகை மாதம் வரை தொடருமோ..??

இரண்டாவது அருமை.

முதலாவது.. xlent.

க.பாலாசி said...

//இன்று
நானும் அவளும்
பார்க்கிறோம்
தொலைக்காட்சியில்......//

ஆழமான வரிகள் உண்மைகளை சுமந்துகொண்டு....

முதலும் அழகு.....

நையாண்டி நைனா said...

/*
/mee firste....//

இந்த மாதிரி போடாதீங்கன்னு சிறுகதை பட்டறைல பா.ராகவன் சொன்னாருப்பா....
*/

அப்படியா.... நான் பட்டறைக்கு போகலியே.... அஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

ரெண்டாவது கவிதை சூப்பர்.

தேவன் மாயம் said...

//என் மழலையும்
பால்குடி
பொழுதுகளும்......//

ரசித்தேன்!

வால்பையன் said...

அட ஆமாம்ல!
(முதல் கவிதைக்கு)

நான் காதலிகளை சினிமாவுக்கு அழைத்து செல்வதில்லை
(இது இரண்டாவது கவிதைக்கு)

மணிஜி said...

வருகைக்கு நன்றி நண்பர்களே..

.

மணிஜி said...

மைனஸ் ஓட்டு குத்திய கற்பூர புத்தி கழுதைகளுக்கு என் அனுதாபங்கள்....

Beski said...

//நானும்,அவனும்
என்றும் வாசிக்கலாம்.....//

ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா... புரிஞ்சுடுச்சி.

பா.ராஜாராம் said...

ரெண்டு கவிதைகளும் நல்ல கவிதைகள் மணி.மிக நல்ல!

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

இரண்டும் அருமை

ஷங்கி said...

சூப்பர் தண்டோரா!!

அகநாழிகை said...

மணி ஜி,
இரண்டாவது கவிதை நன்றாக இருக்கிறது.