Saturday, October 24, 2009

கல்லுடைப்பவனும்,கட்டுடைப்பவனும்
அவன் தலையில்லாமல் நடந்து போனான்


அப்படின்னா முண்டமாவா?


அது அப்படி இல்லை..மூளையில்லாமல்..அப்படித்தான் பின் நவீனத்துவம் சொல்லுது

பின் பக்கமா நடந்து போனானா?

போடா முண்டம்.உனக்கு புரிய வைக்க முடியாது.ஒவ்வொரு இசமா சொல்றேன்.புரியிதா பாரு.நிறைய கேள்வி கேளு என்ன?

சரிங்க

இருத்தலிசம் தெரியுமா உனக்கு?

யார் வீட்டுலங்க தெவசம்

கிழிஞ்சது ..நீட்ஷே பற்றி வாசித்திருக்கிறாயா?

எனக்கு கோட்சேதான் தெரியும்

கிளிஷே?

கிளிஞ்சா தச்சு போட்டுக்க வேண்டியதுதான்

மெட்டிரியலிசம் பற்றி சொல்லவா?

மெட்டிஒலி திரும்ப போடறாங்க இப்ப.பாவம் அந்தாளு.அஞ்சு பொண்ணை பெத்துட்டு..


போதும் .நிறுத்து.இந்த ரோசா..

தெரியுமே..செல்வமணி பொண்டாட்டி.எலெக்‌ஷனல தோத்து போச்சு

இழவு போதும் நிறுத்து..இந்த மேஜிக்கல் ரியலிசம்?

ஜேம்ஸ் மேஜிக் ஷோ தெரியும்.சுவர் புல்லா விளம்பரம் பண்ணியிருப்பாங்க

பூகோவாவது?

வைகோ தெரியும்.பொசுக்,பொசுக்குன்னு அளுதுடுவாரு.தமாஷா இருக்கும்.

பூர்ஷ்வா பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்

ஆமாம்..பழைய சோறும்,பச்சமொளகாயும் சூப்பர்தான்

அதிகாரத்தின் உரையாடல்?

இருங்க.மீன் குழம்பு காரமா இருந்தாதான் நல்லாயிருக்கும்..நீங்க எழுத்தாளரா?

இல்லை.இலக்கியவாதி.கட்டுடைப்பவன்..நீ?

நான் கல்லுடைக்கிறவன்.

அப்ப என்னை விட நீ கண்டிப்பா நல்லாத்தான் உடைப்ப.இப்ப கதை எழுது..

ஒருவன் தெருவில் தலையுடன் சென்றுகொண்டிருந்தான்.

என்னை கிண்டல் பண்ணினே..தலையில்லாம போனா முண்டமான்னு?

இருங்க..அவன் கையில தலையுடன் போய்கிட்டிருந்தான்..அந்த தலை
யாருதுன்னு கேட்டேன்..

யாருதாம்?

கிட்ட வாங்க சொல்றேன்...யாருகிட்டயும் சொல்லாதீங்க


39 comments:

vasu balaji said...

/கிட்ட வாங்க சொல்றேன்...யாருகிட்டயும் சொல்லாதீங்க/

அய். நா வரமாட்டேன். தூரத்தில இருந்தே ஓட்டும், பின்னூட்டமும் போட்டுக்கறேண்ணே. காலைலயே கிரு கிருன்னு வருது! பாதி வார்த்தைக்கு அர்த்தம் தேடணுமா, கல்லுடைக்கப் போலாமான்னு குழப்புது=))

VISA said...

பின் நவீனத்துவம். உண்மையாவே ஜூப்பரு

அகநாழிகை said...

:))

உண்மைத்தமிழன் said...

அண்ணே..

சிரிச்சு மாளலே.. முடியாது.. உங்க கிட்டக்க வரவே முடியாது..!

வாழ்க..!

நித்யன் said...

சிறப்பு...

சிரிப்பு...

அன்பு நித்யன்

தேவன் மாயம் said...

இதுவே பின் நவீனத்துவம் மாதிரி இருக்கே!!!

தமிழ் அமுதன் said...

;;)))

தேவன் மாயம் said...

ஒருவன் தெருவில் தலையுடன் சென்றுகொண்டிருந்தான்.

என்னை கிண்டல் பண்ணினே..தலையில்லாம போனா முண்டமான்னு?

இருங்க..அவன் கையில தலையுடன் போய்கிட்டிருந்தான்..அந்த தலை
யாருதுன்னு கேட்டேன்..

யாருதாம்?
//

தலை கிடைச்சா சொல்லுங்க ! போஸ்ட்மார்ட்டம் பண்ணுவோம்!!

தேவன் மாயம் said...

ஒரு தலைக்கு ஒரு வோட்டுத்தானே !! போட்டாச்சி!!

butterfly Surya said...

ஜீ... முடியலை.. hahahahahaha...

velji said...

/நான் கல்லுடைக்கிறவன்.

அப்ப என்னை விட நீ கண்டிப்பா நல்லாத்தான் உடைப்ப.இப்ப கதை எழுது../
கருத்துடன் கூடிய கிண்டல்.

தராசு said...

அய்யய்யோ, யாராவது காப்பாத்துங்களேன்.

புலவன் புலிகேசி said...

//இருங்க..அவன் கையில தலையுடன் போய்கிட்டிருந்தான்..அந்த தலை
யாருதுன்னு கேட்டேன்..

யாருதாம்?

கிட்ட வாங்க சொல்றேன்...யாருகிட்டயும் சொல்லாதீங்க//


எதுக்கு என் தலைய எடுக்கவா?? வர மாட்டனுங்க........

நர்சிம் said...

ஒன்றும் சொல்வதற்கில்லை தல.

Jackiesekar said...

போதும் .நிறுத்து.இந்த ரோசா..

தெரியுமே..செல்வமணி பொண்டாட்டி.எலெக்‌ஷனல தோத்து போச்சு

இழவு போதும் நிறுத்து..இந்த மேஜிக்கல் ரியலிசம்?

ஜேம்ஸ் மேஜிக் ஷோ தெரியும்.சுவர் புல்லா விளம்பரம் பண்ணியிருப்பாங்க

பூகோவாவது?//

இந்த வரிகளில் நீங்கள் சசமுகத்தை நிறைய உற்றுபாத்து கவனிக்கின்றீர்கள் என்பது புரிகின்றது..

Sanjai Gandhi said...

தலைப்பில் திருத்தம்..


"கல்லுடைப்பவனும்,கட்டுடைப்பவனும் , அதைப் போட்டுடைப்பவனும்” என்று வரனும்.. :)

Mahesh said...

எது எப்பிடியோ.... நான் உங்க தீவிர ரசிகராயிட்டேன்....

Thamira said...

நர்சிம் said...
ஒன்றும் சொல்வதற்கில்லை தல//

நானும்.!

ஜெட்லி... said...

//ஒன்றும் சொல்வதற்கில்லை தல//

ஜெட்லி... said...

//ஒன்றும் சொல்வதற்கில்லை தல//

me too...

ரோஸ்விக் said...

அண்ணேன் சென்னை போலிசு...கொஞ்ச நாளைக்கு முன்னால நடந்த கொலையில இன்னமும் தலை கிடைக்கலையாம். பாத்துண்ணே....உங்க கிட்ட வந்து அந்த தலை யாருதுன்னு கேக்கப் போரைங்க....

நானும் கல்லுடைக்க போயிரலாம்னு தான் பாக்குறேன்....எங்கையாவது வைரக்கல்லு இருந்த சொல்லுங்க...

க.பாலாசி said...

சுஜாதாவோட கற்றதும் பெற்றதும்ல ஒருமுறை சொல்லியிருந்தார். அதாவது கதையை சுவாரசியப்படுத்த ஒருத்தன் தெருவில் தலையிலலாம நடந்துபோனான்னு தொடங்கலாம்.. கடைசியா வேணும்னா ஹெல்மெட் போட்டிருந்தான்னு சொல்லி சமாளிச்சிடலாம்னு.

அதுபோல சுவாரசியமா இருக்கு உங்கள் இடுகையும்....

R.Gopi said...

//இருத்தலிசம் தெரியுமா உனக்கு?

யார் வீட்டுலங்க தெவசம்//

ஆஹா... த‌ண்டோரா பின்ன‌ ஆர‌ம்பிச்சுட்டாரே...

//கிழிஞ்சது ..நீட்ஷே பற்றி வாசித்திருக்கிறாயா?

எனக்கு கோட்சேதான் தெரியும்

கிளிஷே?

கிளிஞ்சா தச்சு போட்டுக்க வேண்டியதுதான்

மெட்டிரியலிசம் பற்றி சொல்லவா?

மெட்டிஒலி திரும்ப போடறாங்க இப்ப.பாவம் அந்தாளு.அஞ்சு பொண்ணை பெத்துட்டு..//

ஹா...ஹா...ஹா... த‌லீவா ஜூப்ப‌ரு..........

//பூர்ஷ்வா பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்//

இது ஆருங்க‌... ந‌ம்ம‌ திரிசாவோட‌ அம்மாங்க‌ளான்னு கேட்டு இருக்க‌ணும்....

//என்னை கிண்டல் பண்ணினே..தலையில்லாம போனா முண்டமான்னு?

இருங்க..அவன் கையில தலையுடன் போய்கிட்டிருந்தான்..அந்த தலை
யாருதுன்னு கேட்டேன்..

யாருதாம்?

கிட்ட வாங்க சொல்றேன்...யாருகிட்டயும் சொல்லாதீங்க//

வ‌ர‌மாட்டேங்கோ... என் த‌ல‌ என்கிட்ட‌ இருக்க‌ வேணாமா??

நேசமித்ரன் said...

நல்லா கட்டு பிரிக்கறீங்க கல்லு தைக்கிறீங்க சி கட்டுடைகிறீங்க

பிரபாகர் said...

...

இரும்புத்திரை said...

புத்தூர் கட்ட உடைக்கிறதுக்கு வழி இருக்கா

இன்றைய கவிதை said...

தெரியாது தெரியாதுன்னு சொல்லிகிட்டே
'எனக்குத் தெரியும்'-னு
தண்டோரா போட்டீங்களே!

தலை! நீ தறுதலை இல்ல!
'தரும்' தலை!!

-கேயார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

haa..haa...haaa

அறிவிலி said...

ஹா.. ஹா.. ஹா

Jerry Eshananda said...

ரசித்தேன் நக்கலிசத்தை

Ashok D said...

என்னா அண்ணே.. 5 லார்ஜொட நிறுத்திக்கனும்...

நல்ல சுவை...

Romeoboy said...

நீங்க கொஞ்சம் உள்நோக்கி எழுதும் கவிதையே சில நேரம் புரியமட்டேன்ருது இதுல பின்நவினத்துவம் சுத்தம்.. நல்ல கிண்டல் போங்க ..

butterfly Surya said...

அந்த பதிவை இன்னும் ஏன் போடவில்லை...

அன்பேசிவம் said...

அண்ணே வணக்கம், நான் முரளி. திருப்பூரிலிருந்து. இப்போதான் உங்க கடைக்கு வரேன். இருங்க மெல்ல சுத்தி பார்த்துட்டு வரேன்.

பித்தன் said...

தல உங்க கிட்ட வரவே முடியாதுன்னு தெரியும்..... அனா இது கொஞ்சம் ஓவர்....

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

http://truetamilans.blogspot.com/2009/10/blog-post_16.html

குப்பன்.யாஹூ said...

சூபர்,

அப்படியே ஸைட் நவீனத்துவம் , பின் பழமைத்துவம் பற்றியும் எழுதுங்க.

selventhiran said...

ஹரே பகவான்!

மண்குதிரை said...

:-)) nice