உலகின் நம்பர் 1 பணக்காரர் யார்?பில்கேட்ஸ்?லட்சுமி மிட்டல்?அம்பானி?ம்ஹிம் இவர்கள் யாரும் இல்லை.சாட்சாத் தேவுடா திருப்பதிசாமிதான் அவர்
ரு. 1 லட்சம் கோடிக்கு அதிபதி ஆனார் வெங்கி
ஒரு காலத்தில் ஏகப்பட்ட கடனாளியாக இருந்த ஏழுமலை இன்றைய தேதியில் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் ஆகி இருக்கிறார்
பெயர் ஏழுமலையான், ஊர்.. ஆந்திரமாநிலம் திருப்பதி
வெங்கடாஜலபதியானவர் பத்மாவதி தாயாருடன் தான் செய்த திருமண செலவுக்காக குபேரனிடம் மீட்டர்,ஸ்பீடு மற்றும் எக்ஸ்பிரஸ் வட்டிகளில்
ஏகப்பட்ட கடன் வாங்கினாராம்.
அந்த பணத்தை வட்டியுடன் திருப்பித்தருவதாக அவர் கூறியிருந்தாராம்.
திருப்பதி ஏழுமலையான் அப்படி பணத்தை திருப்பித்தருவதற்காகத்தான், அவருக்கு உதவும் வகையில் பக்த்ர்கள் இன்னமும் காணிக்கைகளை அள்ளித் தந்து கொண்டிருக்கிறார்கள்
வெங்கடாஜலபதியின் இன்றைய சொத்துக் கணக்கை பார்த்தால் அவர் என்றைக்கோ அந்த கடனை அடைத்திருப்பார் என்பது வேறு விசயம்
ஏழுமலையானின் மொத்த சொத்து எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்
ரு.1000 கோடி, 10,000 கோடி... இல்லை
அவரது சொத்து மதிப்பு ரு,1 லட்சம் கோடியையும் தாண்டிவிட்டது.
கடல் மட்டத்திலிருந்து 3,200 அடி உயரத்தில் 10,33 சதுர மைல் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது திருப்பதி கோயில். உலகிலேயே அதிக பக்த்தர்கள் வந்து போகும் நம்பர் 1 கோயில் இதுதான். தினமும் சராசரியாக 1 லட்சம் பக்த்தர்கள் வருகிறார்கள்.
ஓரே ஒரு வினாடி நேரம் வெங்கடாஜலபதியை தரிசிக்க நீங்கள் குறைந்த பட்சம் 48 மணி நேரம் காத்திருந்தால் தான் முடியும். சராசரியாக ஆண்டுக்கு 4 கோடி பேர் இங்கே வருகிறார்கள். அவர்கள் தரும் காணிக்கையால் உலகின் மிகப்பெரிய பணக்கார இந்துக்கோவிலாகத் திகழ்கிறது திருப்பதி.
திருப்பதியின் விசேஷம் இங்கு இந்து, முஸ்ஸீம், கிறிஸ்தவர் எனப் பலதரப்பட்டவர்களும் மிகப் பெரிய அளவில் காணிக்கை செய்திருப்பதுதான்.
தாஜ்மகாலை கட்டிய முகலய மன்னர் ஷாஜகான் வெங்கடாஜலபதிக்கு எட்டு சுற்று சங்கிலி ஒன்றை வழங்கியிருக்கிறார். இதன் எடை100 கிலோவுக்குமேல்.
மன்னர் ஜஹாங்கீரும் இந்தக் கோவிலுக்கு விலை மதிபப்ற்ற ஆபரணங்களை வழங்கியிருக்கிறார். இங்கிலாந்து மன்னர் ஜார்ஜ் மற்றும் ராணி விக்டோரியாவும் கூட தங்கள் பெயர் பொறித்த பல ஆபரணங்களை வழங்கியிருக்கிறார்கள்.
இங்கு காணிக்கையாக வந்த நிலப்பத்திரங்களை அடுக்கி வைக்க மட்டுமே ஒருவரின் வாழ்நாள் போதாது என்கிறார்கள். இந்த பத்திரங்கள் அனைத்தும் வெங்கடாஜலபதி பெயரில் இருப்பது இன்னும் விசேஷம்.
என்ன ஒரு கொடுமை.தரிசனத்திற்கு போனால் கூண்டில் போட்டு அடைத்து விடுகிறார்கள்.பாலாஜியை அடைவதற்குள் நொந்து நூடில்ஸ் ஆக வேண்டியிருக்கிறதுஒரு முறை நான் பாதியில் ஓடியே வந்துவிட்டேன்.
தூள் திரைப்படத்தில் மயில்சாமியின் ஜிலேபி காமெடியை ரசிக்காமல் இருக்கமுடியுமா?

24 comments:
மணிக்கண்ணக்கா வரிசைல நிக்கறதை நம்ம ஒண்ணும் செய்ய முடியாதுன்னுதான் கடந்த 6-7 வருஷமா போறதையே நிறுத்திட்டேன்.
//சாட்சாத் தேவுடா திருப்பதிசாமிதான் அவர்//
இத்தனை நாளா தேவுடான்னா கெட்ட வார்த்தைன்னு நினைச்சிகிட்டு இருக்கேன்!
sila சமயங்களில் நான் கோயிலுக்கு போய் ஏதோ தெர்மாமீட்டர் ஜுரம் போல 24 அவர், 48 அவர்ன்னு கேட்டதும் வாசலிலேயே ஒரு பெரிய நமஸ்காரத்தை போட்டு விட்டு கீழ் திருப்பதியில் தெலுங்கு சினிமா பார்த்துவிட்டு வ்ந்திருக்கிறேன்.
அட தேவுடா.....
/ஒரு காலத்தில் ஏகப்பட்ட கடனாளியாக இருந்த ஏழுமலை/
ஏகப்பட்ட கடனாளியில்லை சார். சென்னை யானைகவுனி திருப்பத்தில் ஒரு சுண்டல்காரியிடம் வாங்கிய கடன் மட்டும். இன்றைக்கும் புரட்டாசி திருமஞ்சனத்துக்கு சென்னையிலிருந்து செல்லும் குடை சுமந்து வருபவர்கள் அந்த திருப்பம் வந்ததும் ஓடுவார்கள். கடவுளானாலும் கடன்காரனுக்கு எஸ் தான் போல=))
கோவிந்தா...கோவிந்தா
எப்பா... ஏழு கொண்டல வாடா... இங்கே என் கடை காத்தாடுது... எங்க அண்ணன் தண்டோரா அவர்களை மறுபடியும் கவுஜை எழுத வைய்யி... அப்புறம் என் கடை கூத்தாடும்...
கார்த்திகை கோயிலுக்கு போறது ஞாபகம் வந்துருச்சான்னே? நல்ல தகவல்கள்...
பிரபாகர்.
நான் இதுவரைக்கும் ஒரு முறைகூட போனதில்லை..
யாராவது துணைக்கு வந்தால் போகலாம் என்று பார்த்தால் இதுக்குக்கூட ஒருத்தரும் வர மாட்டேங்குறாங்க..!
சாமி பார்க்கணும்னா காத்திருந்துதான் ஆகணும்..!
சினிமா தியேட்டர்ல கியூல நிக்க மட்டும் கால் வலிக்கல பாருங்க..!
அப்புறம் ஒண்ணு..
வழக்கம்போல ஓட்டைக் குத்திட்டேன்..!
மாநில எல்லைகள் பிரிக்கும்போது சென்னைக்காக திருப்பதியை விட்டுக்கொடுத்தோம்ன்னு சிலர் சொல்றது உண்மையா.... ??
"பணம் ஒரே இடத்துல குவியரதுல யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. வேணும்னா பெருமைக்கு வேணும்னா அஹா ஒஹோனு சொல்லிக்கலாம்...அங்க கொண்டு போயி கொட்டுரவங்க வறுமையில இருக்கவங்களுக்கு கொடுத்து உதவி செய்யலாம்" என்பது என்னுடைய அபிப்ராயம். மற்றபடி சுவாரஸ்யமான தகவல்கள். நன்றி மணி...
//என்ன ஒரு கொடுமை.தரிசனத்திற்கு போனால் கூண்டில் போட்டு அடைத்து விடுகிறார்கள்.பாலாஜியை அடைவதற்குள் நொந்து நூடில்ஸ் ஆக வேண்டியிருக்கிறதுஒரு முறை நான் பாதியில் ஓடியே வந்துவிட்டேன்.//
ஏன் இவ்வளவு கஷ்ட படுறீங்க...ஈரோட்டுக்கு வந்த ஒரு மிஸ்டு கால் கொடுங்க...நானே வந்து பாத்துடுறேன். அப்பறம் மறக்காம காணிக்கைய எடுத்துகிட்டு வந்துடுங்க...
//இங்கு காணிக்கையாக வந்த நிலப்பத்திரங்களை அடுக்கி வைக்க மட்டுமே ஒருவரின் வாழ்நாள் போதாது என்கிறார்கள்.//
ஆமா...இவ்வளவு வச்சிகிட்டு என்ன பண்ணிகிட்டு இருக்காங்க...
நான் கூட அடுத்த வாரம் போறேன்....
நான் திருபோரூர்ல மொட்டை போட்டுக்குறேன்
அப்படின்னு சொன்ன எங்க அம்மா திருப்பதிக்கு
தான் வேண்டி இருக்காங்களாம்......
\\sila சமயங்களில் நான் கோயிலுக்கு போய் ஏதோ தெர்மாமீட்டர் ஜுரம் போல 24 அவர், 48 அவர்ன்னு கேட்டதும் வாசலிலேயே ஒரு பெரிய நமஸ்காரத்தை போட்டு விட்டு கீழ் திருப்பதியில் தெலுங்கு சினிமா பார்த்துவிட்டு வ்ந்திருக்கிறேன்\\
கேபிள்ஜி, :-)))))
இப்டி புடுங்கற பணத்துல எதுனா நல்ல காரியம் பன்றானுங்களா?
//சாமி பார்க்கணும்னா காத்திருந்துதான் ஆகணும்..!
சினிமா தியேட்டர்ல கியூல நிக்க மட்டும் கால் வலிக்கல பாருங்க..!//
காசுக்கேத்த மாதிரி தரிசனம் குடுக்கிற சாமிய கியூவுல வேற நின்னு பார்க்கனுமா? ப்ளாக்ல டிக்கெட் விக்கிறதுக்கு பெரிசா எகிற தெரியுதே.. இங்க விஐபி டிக்கெட்னு சொல்லி அதை விட கேவலமா நடந்துக்கிறானுங்களே.. இதையும் கண்டிச்சி சுமார் 4256847 சொச்சம் பக்கத்துல ஒரு பதிவு போட தெகிரியம் இருக்கா?
A Little serious comment :-)
The World Richest man Bill Gates networth is 50bn USD - assuming 1USD is Rs50 - it comes around 2.5 Lakh Crore Rupees and the second Richest man (My Hero?:-)) Warren Buffett's networth is 40bn USD which comes to 2Lakhs Crores.
So Lord Venkatachalapathy needs to work little more to catch them :-)
with regards,
--Bala
மணிக்கணக்கா காத்திருக்கணும்னு தெரிஞ்சதும் பல வாய்ப்புகள் வந்தும் நான் போகலை.
என்ன பறவை திசை மாறி பறக்குது?எதுக்கும் "நானும் கன்னத்துல போட்டுக்கறேன்."
லட்டுக்கு ஆசைப்பட்டு ஒருமுறை சென்றதோடு சரி.. இனிமேல் போவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்..
"தண்டோரா"வின் பக்தியை மெச்சினோம்....
வருகை தந்து தரிசனம் செய்து,பாராட்டி,மாற்று கருத்டும் சொல்லி சென்ற என் இனிய நண்பர்களுக்கு நன்றிகள்
இன்னும் கல்யாணத்திற்காக குபேரன் கிட்ட கடனை அடைக்கலையாமே...
Post a Comment