Thursday, October 22, 2009
மானிட்டர் பக்கங்கள்.........22/10/09
ஒரு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டதில் அலுப்பு வந்துவிட்டது.(Aloof என்ற ஆங்கில வார்த்தையும் ,அலுப்பும் ஒரே அர்த்தம் தொனிக்கிறது ).தீபாவளிக்கு தஞ்சைக்கு குடும்பத்தோடு போனேன்..என்.ஹெச் 45 ல் சுகமான பயணம்.சும்மா கார் வெண்ணெய் போல் வழுக்கி போனது.பெரம்பலூர் வருவதற்குள் 5 டோல் பிளாசா.சுமார் 160 ரூ பழுத்துவிட்டது.சாலையையும்,பாலங்களையும் பார்க்கும்போது டி.ஆர்.பாலுவின் “வளமை”புரிந்தது.வழியெங்கும் காணப்பட்ட போஸ்டர்களில் அன்னை,தலைவர்,தளபதிகள் டாக்டர் பட்டத்துடன் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.மக்களை நோயாளிகளாகவே வைத்திருக்கும் மாண்புமிகு ”மருத்துவர்கள்”கேப்டன் மட்டுமே மீதி.அவருக்கும் ஒரு டாக்டர் கொடுத்துவிட்டால் தமிழன் முதுகில் இருக்கும் கொஞ்ச நஞ்ச கூனையும் எடுத்துவிடுவார்.
இரண்டு படங்கள் பார்த்தேன்.முதலில் பேராண்மை.அமெரிக்க சாட்டிலைட்டை ஏமாற்றி பொக்ரானில் அணுகுண்டு வெடித்த பெருமை நமக்கு உண்டு.அப்படிப்பட்ட நம் நாட்டிற்குள் விண்கலத்தை தகர்க்க வரும் வெள்ளைக்காரர்களை நாயகன் முறியடிக்கும் கதைதான்.மேக்கிங்கில் ஜனா பின்னியிருக்கிறார்.ரவியின் உடல்மொழி மற்றும் குரல் மொழி இரண்டும் எக்ஸ்லண்ட்.நிச்சயம் அவருக்கு இது ஒரு மைல்கல்தான்.இளமையும்,தேசபக்தியும் இணைந்து பெண்கள் மிரட்டியிருக்கிறார்கள்.
கேபிள் சொன்னதைப் போல் கதையில் நம்பகத்தன்மை இல்லாததால் சற்றே அலுப்பு தட்டுகிறது..பழங்குடியினரை அப்புறப்படுத்துதல்,வனத்தை அழித்து அயலானுக்கு தாரை வார்த்தல் என்று பிரச்சனையை உக்கிரமாக சொல்லியிருக்கலாம்.வெள்ளைக்காரன் வில்லன் தேவையேயில்லை.அயல் நாட்டு சதி,உள்நாட்டு கைக்கூலிகள் என்று கதைக்களம் அமைந்திருந்தால் நேட்டிவிட்டி கூடியிருக்கும் என்பது என் கருத்து.(சுற்று சூழல் பற்றி நிறைய பேசி விட்டு காட்டில் பெட்ரோல் குண்டுகளை வெடிக்கவைத்து இவர்கள் அதை கெடுத்தது பற்றி என்ன சொல்ல?யதார்த்த மீறல் என்பதை தவிர)
அடுத்தது ஆதவன்.இந்த படம் பார்த்த நேரத்தில் பட்டாசு குப்பைகளை சுத்தப்படுத்தியிருக்கலாம்.வெடிவேலு மட்டும் இல்லையென்றால் சுத்தம்.புஸ்வாணம்தான்.சூர்யா பார்த்து படங்கள் செய்யுங்கள் என்று நான் சொல்வதில் பயன் இல்லை(அவர் இதை படிக்கமாட்டாரே)காஞ்சிவரம் அருணா தியேட்டர் முதலாளியை நேற்று சந்தித்தேன்.22 லட்சத்துக்கு வாங்கினாராம்.எப்படியும் 10 க்கு குறையாமல் லாபம் வரும் என்று சொன்னார்.
ஆக விற்றவன்,வாங்கினவன் எல்லோருக்கும் லாபம்.நமக்குத்தான் பணநஷ்டமும்,மனக்கஷ்டமும்.
தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் ரொம்ப புகழ் பெற்றது.விரால் மீன் குழம்பும்,வருவல்,விரால் மண்டையும் சும்மா பிச்சுகிட்டு போகும்.உட்கார இடம் கிடைக்காது..எனக்கு நண்பர்கள்தான்.எனக்கு அங்கு ஸ்பெஷல் உபசரிப்பு உண்டு.இந்த முறை அந்த ஓட்டல் இல்லை.இன்னொரு அசைவ விடுதிக்கு சாப்பிட போனேன்.அங்கு சப்ளை செய்த ஆளை பார்த்ததும் ஷாக்.முனியாண்டி ஒனர் பையன்.தினக்கூலி 100 ரூபாயாம்.என்னடா ஆச்சு? என்றேன்.அப்பா போயிட்டார்.அண்ணன் தம்பிகள் அகலக்கால் வைத்தார்கள்.கடைசியில் எல்லாம் போச்சு..பாவமாக இருந்தது.எச்சரிக்கையாகவும்தான்..சுதாரிப்பா இருக்கணும் இல்லை..சுண்ணாம்புதான்..
தீபாவளிக்கு டாஸ்மாக் இலக்கு 150 கோடியாம்.ஆனால் விற்றது 200 கோடி.நம்ம பங்கும் அதில் சுமார் ரூ 5000 இருக்கும்.தலையில் எண்ணெயுடன் கடைக்கு வந்தான் ஒருத்தன்.
ஓவர் மப்பில் எழுதியது..
ஞாபகபடுத்த
சொன்னீர்களே
மறக்காமல்
ஞாபகபடுத்தி
விட்டேன்
ஆனால் எதை
ஞாபகபடுத்த
சொன்னீர்கள்
என்பதைதான்
மறந்தேவிட்டேன்
Subscribe to:
Post Comments (Atom)
33 comments:
கவிதை நல்லாயிருக்கு..ஆதவன் பார்க்காமல் தப்பிச்சாச்சு..கொள்ளைக்கார அரசு..
தண்டோரா,
நானும் பேராண்மை பார்த்தேன். அந்த இரண்டாவது படத்தையும் பார்த்து தொலைத்தேன். விரைவில் சூர்யா, விஜய் இடத்தை பிடித்து சிறந்த காமெடி பீசாக வீணாக்கப்படுவார் என்பதில் சந்தேகமில்லை. திரும்பத்திரும் ஆல் இன் ஆல் ஹீரோ, கடத்தல், பழைய பாட்டுக்கு நடனம், சென்டிமெண்ட், தாதா, தப்பித்தல் என்று அதிவேகமாக அதலபாதாளத்திற்கு பயணம் செய்து திறமைகளை வீணடித்துக் கொண்டிருக்கிறார்.
000
ஊருக்கு போய்வந்த களைப்பா...
மானிட்டரில் போதை குறைவாக இருக்கிறதே.
- பொன்.வாசுதேவன்
// தமிழன் முதுகில் இருக்கும் கொஞ்ச நஞ்ச கூனையும் எடுத்துவிடுவார்//
அது ஒன்னுதான் மிச்சம்
கவிதை நல்லாயிருக்கு
குடிக்கச்
சொன்னீர்களே
மறக்காமல்
குடித்து
விட்டேன்
ஆனால் எதை
குடிக்க
சொன்னீர்கள்
என்பதைதான்
தெரியாமல்
குடித்துவிட்டேன்
சரளமான நடை....
//எதை
குடிக்க
சொன்னீர்கள்
என்பதைதான்
தெரியாமல்
குடித்துவிட்டேன்
//
ஃபினாயில் இல்லையே??? :)))
/பார்க்கும்போது டி.ஆர்.பாலுவின் “வளமை”புரிந்தது./
இப்புடி வெறுப்பேத்தலாமா?
/கேப்டன் மட்டுமே மீதி.அவருக்கும் ஒரு டாக்டர் கொடுத்துவிட்டால்/
ஆமாங்க. நோகியா 1110 வெளிச்சத்துல ஒபன் ஹார்ட் சர்ஜரி பண்ணவராச்சே. அவருக்கு குடுக்காதது பெரிய துரோகம்.
/தமிழன் முதுகில் இருக்கும் கொஞ்ச நஞ்ச கூனையும் எடுத்துவிடுவார்./
அதான் இலங்கைக்கு போய் வந்து தருமி மாதிரி பின்பக்கமா வளைச்சுட்டாங்களே.
மிச்ச விசயமெல்லாம் நமக்கு நோ டச்.
கவிதை சூப்பர்.
கவிதை நல்லாயிருக்கு..
தல எல்லா மேட்டரும் பக்கா..
கவிதை சூப்பரு...
ஸ்ட்ராங்கான மிக்சிங் தல..
kavithai
arumai
thalaivare
சூர்யாவைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது அவர் வாசித்தால் யோசிக்க வைக்கும்.
ஒரே மாதிரி நடிப்பு,பாடல் அசைவு ..கண்ணைச் சொருகி விண்ணைப் பார்த்து ஒரு அபிநயம்....கொஞ்சம் மாத்தி யோசிய்யா சூர்யா...
நாட்டுக்கு ரூ 5000 கொடுத்த வள்ளல்
தண்டோரா அண்ணன் வாழ்க.....
மனம் நிறைய விஷயமுடன்
மடைதிறந்த வெள்ளமென
பின்னூட்டம் போடவந்து
பொசுக்கென மறந்துவிட்டேன்.
பிரபாகர்.
//
ஞாபகபடுத்த
சொன்னீர்களே
மறக்காமல்
ஞாபகபடுத்தி
விட்டேன்
ஆனால் எதை
ஞாபகபடுத்த
சொன்னீர்கள்
என்பதைதான்
மறந்தேவிட்டேன்//
நன்றாக உள்ளது தண்டோரா:)!
//சுதாரிப்பா இருக்கணும் இல்லை..சுண்ணாம்புதான்..///
நல்ல செய்தி...
கவிதை நன்று...நீங்க ஓவர் மப்புல எழுதிட்டீங்க...நான் எதுவுமில்லாம நிகழ்த்திகிட்டிருக்கேன்....
கவிதை சூப்பர் :-)))))))))
ஐயாயிரமா..?
டூமச்சா இருக்கேண்ணே..!
குறைக்கப் பாருங்கண்ணே..!
கவிதை கலக்கல் அண்ணே
உங்களை மாதிரி நல்ல உள்ளங்களை நம்பிதான் எங்க பொழைப்பு ஓடுது.[ போனஸ் ,சம்பள உயர்வு , அரியர்னு.]
ஜி, தீபாவளிக்கு நீங்க ஊருக்கு போனதால நான் எந்த படமும் பார்க்கவில்லை... தப்பித்தேன்..
கவிதை.... பையன் பின்னரா டாடி....வகை... (cute)
நாளை.. நமீதா மோகினி பார்க்கலாமா..??
இந்த கருமம் புடிச்ச சரக்கை விற்று அவ்வளவு காசு பாத்துட்டாங்களா..?
கருநாடகா மாதிரி உலகத்தரம்(?) வாய்ந்த சரக்கு விற்றால் தமிழநாடே மிதக்கும் போலிருக்கிறதே....
வாழ்க குடி கிரகாச்சாரம்.
தஞ்சை...?
கோயில்...?
கவிதை நல்லாருக்கு.
11 / 11
அருமை அண்ணே.
அரசியல் மப்பு கொஞ்சம் அதிகமா இருக்கு. லீவு நாளை நன்றாக செலவு செய்யாமல் இப்படி படம் பார்த்து ஏன் வீணடிக்கிறீர்கள்? ஒரு ஆப் வேஸ்டா போய்ட்டே!
ஓ, சரி சரி, அதான் ஏற்கனவே 5K செலவு ஆயிற்றே, படம் பார்க்காமல் இருந்திருந்தால்...?
மப்பில் மறந்தது என்னவோ?
//.தலையில் எண்ணெயுடன் கடைக்கு வந்தான் ஒருத்தன்.//
LOL :)))))
சும்மா கார் வெண்ணெய் போல் வழுக்கி போனது.பெரம்பலூர் வருவதற்குள் 5 டோல் பிளாசா.சுமார் 160 ரூ பழுத்துவிட்டது.சாலையையும்,பாலங்களையும் பார்க்கும்போது டி.ஆர்.பாலுவின் “வளமை”--//
செஞ்சாலும் குத்தம் சொல்லுவிங்க.. செய்யாட்டாலும் குத்தம் சொல்லுவிங்க.... வண்டி வெண்ணெய்யா வழுக்குதுல்ல....
//.. இலக்கு 150 கோடியாம்.ஆனால் விற்றது 200 கோடி ..//
அங்க மட்டும்தான் இலக்கை விட விற்பனை அதிகம் போல..
ஆமா, இதுக்கு :-) போடனுமா? இல்ல :-( போடனுமா?
எழுத்து.சும்மா வெண்ணை போல் வழுக்கிக்கிட்டு போகுது மணிஜி.மனசுக்கு பிடித்த மானிட்டர் பக்கங்கள்!கவிதை எழுதும்போது,உள்ள கொஞ்சம் இருந்தால் நல்லா வரும்போலையே..நம்ம கதை வேற மக்கா..பால் பைண்ட் பேனாவை கார்பன் பென்சில் மாதிரி நாக்குல தொட்டெல்லாம் எழுதுவேன்.கவிதையை விட நாக்கு காலையில் நல்லா இருக்கும்.நவ்வா பழம் தின்ன மாதிரி...பார்க்கத்தானே போறீங்க ஒரு நாள்.
மிக அருமையான கவிதை.
ரசனையான பகுதிகள்.!
(என்ன இந்த தீபாவளியில் ரமாவின் 24 மணி நேர கண்காணிப்பில் இருந்ததால் 90யை நினைத்தும் பார்க்கமுடியவில்லை.. அவ்வ்வ்)
தல!
'ப்'-ஐ மறந்திட்டீயளே!
'ஞாபகப்படுத்தி / ஞாபகப்படுத்த' என்பதே சரி!
பாவம் அந்த முனியாண்டி ஹோட்டல் ஓனர் மகன் ..
அருமையாக இருக்கிறது.
Post a Comment