Tuesday, October 27, 2009

சில காரணங்களும்,காரியங்களும்


முன் குறிப்பு: உயிரோடை சிறுகதை போட்டிக்காக எழுதிய கதை.புதிய விமர்சனங்களுக்காக(புதிய வாசகர்களுக்காக)மீண்டும்


பொத்தி,பொத்தி வளர்த்தாங்க...


ம்ம்ம்..அப்புறம்..

அப்புறம் என்ன..பொத்தலாயிடுச்சு..

உரத்த குரலில் சிரித்தாள்..கண்ணில் நீர் வரும்வரை..

அழறியா என்ன?

ம்ஹீம்..ஆனந்த கண்ணீர்...உனக்கு தெரியுமா? ஒரு நாள் எங்கப்பா புது கொலுசு வாங்கி கொடுத்தார்..கால்ல மாட்டி, ரெண்டு பக்கமும் பாவாடையை விரிச்சு முழங்கால் வரைக்கும் தூக்கிட்டு வீட்டை சுத்தி நாலு ரவுண்டு அடிச்சேன்...

அது எல்லாரும் பண்றதுதானே..

ஆனா எங்கம்மா அதுக்கே கால்ல சூடு வச்சா..அப்ப வீட்டுல வெளியாளுக ஏதோ வேலையாக இருந்தாங்க..இப்ப பத்தியா..காலை தூக்கி காட்றதே பொழப்பாயிடுச்சு..

இங்க வந்து எப்படி மாட்டி கிட்ட..?

என் புருஷன் வித்துட்டு போயிட்டான்...

அவனுக்கு சட்டென்று அவன் மனைவியின் நினைவு வந்தது....தேடி,தேடி சலிச்சு அவளை பார்த்தவுடன் பிடிச்சு போக ..கல்யாணம்..ஒரே வாரம்.. முழுசாய் பார்க்க கூட அனுமதிக்க வில்லை..ஏதாவது காரணம் சொல்லி திரும்பி படுத்துக் கொள்வாள்..எட்டாவது நாள்......ஓடிப் போனாள்..ஒரு துண்டு சீட்டு...நாலு வரி..”உங்களை பிடிக்க வில்லை..ஏற்கனவே பிடித்து போனவருடன் போகிறேன்....மன்னிக்கவும்...

என்னய்யா யோசிக்கிற..

உன்னை உன் புருஷன் வித்துட்டு போயிட்டான்..என் பொண்டாட்டி என்னை விட்டுட்டு போயிட்டா?....உன் கதைய கொஞ்சம் சொல்லேன்..

நீ பைத்தியமா? இல்ல... பத்திரிக்கைகாரனா?...பொண்டாட்டி வேற இல்ல...இங்க எதுக்கு வந்த..வா ..என்னை தொழில பார்க்க வுடு..அவள் ஆடைய களைய ஆரம்பிக்க..

இரு..இப்ப வேண்டாம்...நீ அந்த கதையை சொல்லு..

கதையா...நிஜம்யா..தாங்குவியா நீ.. காதல்னு ஒருத்தன் கிட்ட ஏமாந்தேன்...கொஞ்ச நாள் குடும்பம் நடத்தினான்..வயித்துல மூணு மாசம்..ஒரு நாள் நைட்டு புல்லா குடிச்சுட்டு வந்தான்..கூட நாலு பேர்...தேவிடியா மகனுங்க..சின்னா பின்ன மாக்கிட்டானுங்க...சீரழிஞ்சு இங்க வந்து சிக்கிட்டேன்.குழந்தைக்கு பேர் கூட வச்சிருந்தேன்..நல்ல வேளை..கலைஞ்சிருச்சு..இல்ல..அப்பன் யார்னு தெரியாம வளர்ந்து மாமா பையனாயிருக்கும்..இங்க அதை விட கொடுமையான கதையெல்லாம் இருக்கு..இப்ப அவுக்கவா?

ம்ம்ம் சரி அவு..

எல்லா ஆம்பளையும் அப்படித்தான்யா..அவுக்க சொல்லிட்ட பார்த்தியா?ஆமாம் பின்ன ..நீ அதுக்குத்தான வந்திருக்க...ஆனா ஒன்னு..இன்னிக்கு எனக்கே மூடு வந்திருச்சு..விளையாடுயா..

பிறந்த மேனியாக இருந்தாள்..அவன் கண்களை மூடிக்கொண்டு கையில் கொண்டு வந்திருந்த பையை நீட்டி...இந்த புடவையை கட்டி கிட்டு நகையெல்லாம் போட்டு,கிட்டு வா..

அவள் புரியாமல் பார்த்தாள். ...பின் மெளனமாக வாங்கி கொண்டு பாத்ரூமுக்கு போனாள்..

தலையை குனிந்து அழுது கொண்டிருந்தவன்...காலடி சத்தம் கேட்டு நிமிர்ந்தான்...
அவன் மனைவியின் நெற்றி சுட்டி,மூக்குத்தி,கம்மல்,தாலி சங்கிலி..பார்வை கழுத்துக்கு கீழே போக திடுக் என்றது..

இது..

அவள் சொன்னாள்..இது என் ஆசைய்யா? நீ ஒன்னும் சொல்ல மாட்டேன்ற நம்பிக்கைலதான்..அவள் குரல் கம்மியிருந்தது..

அவன் முகத்தில் இனம் புரியாத உணர்ச்சி...நா காதை வச்சு கேட்கவா?

அவள் தலையாட்டினாள்..

அவன் எழுந்து அருகில் சென்றான்..அவள் நெற்றியில் முத்தமிட்டு அப்படியே குனிந்து சின்ன தலையணை வைத்து பெரிதாகப்பட்டு இருந்த அவள் வயிற்றில் காதை வைத்து “பேர் வச்சுட்டியா” என்றான்.

19 comments:

மணிஜி said...

இது மீள்பதிவுதான்.இதை எழுதியபோது நிறைய பேர் படிக்கவில்லை.புதிய வாசகர்களின் கருத்துக்காக மீண்டும் பதிவிட்டுள்ளேன்

இளவட்டம் said...

நல்லா இருக்கு சார்.ஆனா முடிவுதான் கொஞ்சம் செயற்கைதனமாக இருப்பதாக தெரிகிறது.

ஹேமா said...

ஒரு பெண்ணின் ஏக்கம்,புலம்பல்,
அவதின்னு சொல்லிட்டே போகலாம்.அதே சமயம் அவலங்களைப் புரிந்துகொள்ளும் சில ஆண் உள்ளங்களும் இருக்கத்தான் இருக்கிறது.கதை சொல்கிறது.

. said...

பயங்கரமா இருக்கே...
டெரர் டெல்லிங்.... (ஸ்டோரி)

ஒரு பூல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி இருக்கு.

நடைக்கு ஒரு சபாஷ். கதை சென்ற வேகத்துக்கு மீண்டும் சபாஷ்.

தண்டோரா மீள் பதிவு போட்டாலும் சபாஷ்... மீள் சபாஷ்...

vasu balaji said...

அண்ணே. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குண்ணே. அருமை

வினோத் கெளதம் said...

அண்னே செம்ம 'டச்சிங்'கான கதை..

பித்தன் said...

டச்சிங்'கான கதை..

Thamira said...

இதைப்போன்ற கதைகள் எஇற்றைய படித்திருந்தாலும் கிளைமாக்ஸில் கூடுதலாக ஒரு விஷயமிருந்தது. இன்னும் ஃபீலாக சொல்லியிருக்கலாம்.

பா.ராஜாராம் said...

அருமையா இருக்கு மணிஜி.மீள் பதிவுக்கு மிக்க நன்றி.நல்ல சிறுகதை வாசித்த நிறைவு.எல்லாம் செய்றீங்க மணி!

Jerry Eshananda said...

கதை முழுவதையும் படிக்க தூண்டும் வசீகரம் இருக்கு, எழுத்து நடையில்.

ISR Selvakumar said...

எதிர்பாராத முடிவு அல்லது ஆரம்பம்.

KARTHIK said...

நல்ல முடிவுங்க

ஜெட்லி... said...

மீள் கதை சூப்பர் அண்ணே...

வால்பையன் said...

நான் ஏற்கனவே படித்துவிட்டேன் தல!

நல்ல கதை!

முக்கியமா வயித்தில் தலையணை நல்ல ட்விஸ்ட்!

butterfly Surya said...

6/6

Romeoboy said...

சூப்பர்னே அவன் ஆசைக்காக அந்த புடவை நகை , இவள் ஆசைக்காக அந்த தலையனை.

ஆகா மொத்தத்தில் இரண்டு பேரும் அவர் அவர் ஆசைகளை தேடிக்கொண்டு தான் இருந்து இருகிறார்கள்.

velji said...

கடைசி டச், அருமை!

Kumky said...

நிச்சயமாக இதனை படிக்கவில்லை.

நல்லாருக்கு மணிஜி.

சுருக்...நறுக்.

பெசொவி said...

லேட்டாத்தான் படிக்கிறேன், மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்! வாழ்த்துகள்!