Saturday, October 10, 2009

மாயமான்.................சிறுகதை




ம்ம்...சொல்லுங்க..எத்தனை நாளா இப்படி ஒரு எண்ணம்?

“கொஞ்ச நாளா.. டாக்டர்..” அனு கம்மிய குரலுடன் இடை மறித்தாள்..

இவர் கம்பெனில நிறைய பேரை வேலையை விட்டு அனுப்பிச்சுட்டாங்க...இவருக்கு சம்பளம் பாதிக்கு மேல கட் பண்ணியாச்சு...வீட்டு கடன், கிரெடிட் கார்டு இன்னும் நிறைய பொருள் கடன்ல வாங்கினதுதான்...எல்லாத்தையும் எப்படி அடைக்கப் போறொம் தெரியலன்னு புலம்பிகிட்டே இருந்தாரு..இப்ப திடீர்னு நா செத்துட்டா இன்ஷூரன்ஸ் அது இதுன்னு நிறைய பணம் வரும். கடனை அடைச்சுட்டு நீயும் குழந்தையும் சந்தோஷமா இருங்கன்னு அடிக்கடி.....

எனக்கு பயமா இருக்கு டாக்டர் .எதாவது பண்ணிப்பாரோன்னு பயத்துலயே.. அனு குரல் உடைந்து அழ ஆரம்பித்தாள்.

ரவி அமைதியாக தலையை தொங்கபோட்டிருந்தான்..

இது ஒரு வித டிப்ரெஷன்.. காம்ப்ளெக்ஸ்.. வரப் போகும் பிரச்சனைகளை நம்மால சமாளிக்க முடியுமான்னு குழப்பம்..

மிஸ்டர் ரவி நீங்க மனசை அனாவசியமா குழப்பிக்காதீங்க...நல்ல தூங்குங்க..உங்க குழந்தையோட நேரத்தை செலவழியுங்க.. மறுபடியும் மூணு நாள் கழிச்சு வாங்க. மிஸஸ் ரவி. இந்த டேப்ளேட்ஸ் ரெகுலரா கொடுங்க...டென்ஷன் குறையும்...

அடுத்த இரண்டு நாள் ரவி கொஞ்சம் பெட்டரா இருந்தது அனுவுக்கு ஆறுதலாயிருந்தது.”

நம்ம குல தெய்வ கோயிலுக்கு போயிட்டு வந்திடலாங்க..காசு முடிஞ்சு வச்சிருக்கேன்.. நீங்க வேணும்னா பாருங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். ஆனால் அந்த கிரெடிட் கார்டு வசூலுக்கு வந்தவன் பூதத்தை கிளப்பி விட்டு விட்டான். அக்கம் பக்கம் வேடிக்கை பார்க்க அவன் கத்தின கத்து அனுவிற்கும் சே .செத்துடலாம்னு தோன்றியது.

பால்கனியில் சிகரெட் பிடித்து விட்டு ரவி உள்ளே வந்தான். அனு பால் வைத்திருந்தாள்.

அனு உனக்கு?

ரெண்டு கிளாஸ் இருக்கு பாருங்க.. ப்ரியா குடிச்சாச்சு.. ரவி அனுவின் கிளாசில் பொடி பண்ணி வைத்திருந்த தூக்க மாத்திரையை கொட்டி கலக்கினான்.

மணி 12. ரவி மெல்ல எழுந்து அனுவை பார்க்க மெல்லிய குறட்டையுடன் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தாள். ஆபிஸ் பேக்கை திறந்து ஒரு பேப்பரை எடுத்தான். டைப் செய்யபட்டிருந்த ஒரு கடிதம் அது.அதை டேபிள் மேல் வைத்தான். மீண்டும் படுக்கை அருகில் வந்தவன் ப்ரியாவை அனைத்து நெற்றியில் ஒரு முத்தம்.. அனுவையே உற்று பார்த்தான்.அனு தைரியசாலி. நிச்சயம் இதை அவள் தாங்கி கொள்வாள். போன வருஷம் ரவியின் அம்மா இறந்தபோது அவள்தான் அவனை தேற்றினாள். ”ரவி,எது நடந்தாலும் life has to go.சரியா...

காலை மணி ஐந்து. ரவி ஹாலில் தலை குனிந்து உட்கார்ந்திருக்க, அனு அழுகையினுடே பேசி கொண்டிருந்தாள்.பக்கத்தில் மோகன். ரவியின் உற்ற நண்பன்.
“என்ன பைத்தியகாரத்தனமா லெட்டர் எழுதி வச்சுட்டு போயிருக்கார் பாருங்க.

மோகன் கடிதத்தை படித்தான்.

அனு

இந்த முடிவை நல்லா யோசிச்சுத்தான் எடுத்திருக்கேன்.எனக்கு அப்புறம் இன்ஷுரன்ஸ் அது இதுன்னு கிட்டதட்ட நாற்பது லட்சம் வரும்.கடனையெல்லாம் அடைச்சுடு..உயிரோடிருந்து உன்னையும் ,ப்ரியாவையும் கஷ்டபடுத்த நா விரும்பல.அது மட்டுமில்ல நாளைக்கு எல்லா கடன்காரனும் வீட்டு வாசல்ல கத்தி மானம் போறதை நிணைச்சு பார்க்க முடியல.யார் வந்து கேட்டாலும் அவர் போயிட்டார்.. ஆபிஸேலேர்ந்து பணம் வரும்.கடனை அடைச்சுடறேன்னு சொல்லி..


ரவி.இது என்ன?முட்டாள்தனம்.செத்தா பிரச்சனை தீர்ந்துடுமா?

ரவி ஒன்றும் பேசாமல் எழுந்து படுக்கையறைக்குள் சென்றான்.
வெளியே மோகன் “அனு இதை அப்படியே விட்டுடு. இந்த மட்டும் மனசு மாறி வந்தானே..வீ ஆர் லக்கி”

பீச் ஹோவென்று இருந்தது.குமாருக்கு அவமானமாயிருந்தது.. சே.சின்னப் பையன் .அவன் கிட்ட இருந்து செயினை புடுங்க முடியல.. ம்ம் குடி கொஞ்சம் ஓவர். இல்லன்னா?சரி.. கசுமாலம் சாவறதுக்குத்தானே வந்தான். பேசாம சாகுடான்னு வுட்டிருக்கணும்.. அப்புறம் செயினை கழட்டியிருக்கலாம்...நம்ம கத்தியை காட்டி செயினை கழட்டுடான்னு சொல்ல..வெறி புடிச்சா மாறி இல்ல கத்தியை புடுங்க பார்த்தான். குத்த சொல்ல ஓடிட்டானே..

சாவையே ஜெயிச்சுட்டீங்க..வாழ்க்கையை ஜெயிக்க முடியாதா என்ன?இப்பவாவது புரிஞ்சுதா...ரவியின் கையில் வழிந்த ரத்தத்தை துடைத்து கொண்டே அனு சொன்னாள்..


18 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

நம்பிக்கை..:-))

ஈரோடு கதிர் said...

அருமை

கடைசி வரிகள்
திரும்ப திரும்ப படிக்க வேண்டியவை

கலையரசன் said...

மீல்ஸ் போல இருக்கே!!
சரியா?

மணிஜி said...

/மீல்ஸ் போல இருக்கே!!
சரியா?//

ஆமாம் கலை..சிறிய மாற்றங்களுடன்

அப்பாவி முரு said...

பிளாஸ் பேக் சம்பவத்தை வேறு கலரில் காட்டினால் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்...

பிரபாகர் said...

தன்னம்பிக்கையூட்டும் விதத்தில் எழுதியிருக்கீங்கண்ணே.... அருமை. ஓட்டுக்களை போட்டாச்சு...

பிரபாகர்.

vasu balaji said...

நல்லா இருக்குங்க. திருப்பம் அருமை.

இராகவன் நைஜிரியா said...

//சாவையே ஜெயிச்சுட்டீங்க..வாழ்க்கையை ஜெயிக்க முடியாதா என்ன? //

மிக அழகாக சொல்லப்பட்ட நம்பிக்கை தரும் வார்த்தைகள்.

அத்திரி said...

//சாவையே ஜெயிச்சுட்டீங்க..வாழ்க்கையை ஜெயிக்க முடியாதா என்ன?//

நம்பிக்கை தரும் வார்த்தைகள் அண்ணே

செந்தில் நாதன் Senthil Nathan said...

நல்லா இருக்கு.. நம்பிக்கை தான வாழ்க்கை...

VISA said...

அருமையான கரு. நல்ல சிந்தனை. ஆனால் வேறு நடையில் எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

VISA said...

அதிகபிரசங்கித்தனமாய் சொல்வதாய் நினைக்கவேண்டாம். எனக்கு சில கதைகள் ரொம்ப பிடித்துவிடும். அப்படி இந்த கதையும் பிடித்திருந்தது. அதனால் சொல்கிறேன். இந்த கதையை ஒருவன் பீச்சில் தற்கொலை செய்ய பீச் மணலில் நடக்க தொடங்குகிறான். அங்கிருந்து ஆரம்பித்து அவன் கோணத்திலேயே அவனுடைய மன வலியை சொல்லி வாசகனை தற்கொலையின் விளிம்புக்கு கொண்டுபோய் பின்பு மீட்டிருக்கவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. அனு டாக்டர் அது சார்ந்த காட்சிகளை விட வலியை அனுபவிப்பவன் சொல்வதாக எழுதினால் இன்னும் அழுத்தமாய் போய் சேரும்.

மணிஜி said...

/அதிகபிரசங்கித்தனமாய் சொல்வதாய் நினைக்கவேண்டாம். எனக்கு சில கதைகள் ரொம்ப பிடித்துவிடும். அப்படி இந்த கதையும் பிடித்திருந்தது. அதனால் சொல்கிறேன். இந்த கதையை ஒருவன் பீச்சில் தற்கொலை செய்ய பீச் மணலில் நடக்க தொடங்குகிறான். அங்கிருந்து ஆரம்பித்து அவன் கோணத்திலேயே அவனுடைய மன வலியை சொல்லி வாசகனை தற்கொலையின் விளிம்புக்கு கொண்டுபோய் பின்பு மீட்டிருக்கவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. அனு டாக்டர் அது சார்ந்த காட்சிகளை விட வலியை அனுபவிப்பவன் சொல்வதாக எழுதினால் இன்னும் அழுத்தமாய் போய் சேரும்.//

விசா தயங்காமல் கருத்து சொன்னமைக்கு நன்றி..இது ஒரு குறும்படத்திற்காக எழுதப்பட்ட கதைவிஷூவலாக நீங்கள் சொன்னபடித்தான் காட்சிகள் இருக்கும்.நன்றி..

ஜெட்லி... said...

கதை சுயரிசயமாக இருக்குது ஜி,...
என்ன, கடைசி வரியே ரெண்டு மூணு தடவை படிச்சதுக்கு அப்புறம் தான் புரிஞ்சது...

பித்தன் said...

அருமை. ஓட்டுக்களை போட்டாச்சு...

selventhiran said...

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

மணிஜி said...

வருகை தந்து கருத்துரைத்த நண்பர்களுக்கு நன்றி...வெல்கம் பேக் ஆப்பு...

வால்பையன் said...

புரிதலுக்கு கொஞ்சம் ஆயாசமாக இருக்கிறது!