இருக்கை தேடி அமர்ந்து
சற்று ஆசுவாசம் ..
அப்புறம் ? நீங்க ..எங்க ..
வழித்துணைக்கு ஆள் சேர்த்தல் ..
குறும்பு செய்யும் குழந்தை .
விழுந்து விடுவானோ
பெருமையும் சற்று
பயத்துடனும் தாய்
ஆங்காங்கு சிணுங்கும் அலைபேசிகள் .
இப்பதான் ...கிளம்பிச்சு .
இன்ன பிற உரையாடல்கள் ..
கொஞ்சம் நேரம் ஆகட்டும் மாப்ள..
"மூடி திறக்கும் " தவிப்பில் 'மப்பர்கள் "
கடந்து செல்லும் சிற்றுண்டி
விற்பவனின் குரலிலும்
தெறிக்கும் பசி
பிச்சை எடுக்கவில்லையப்பா ..
பார்த்து கொடுங்கள்
மண்டியிட்டு சுத்தம் செய்பவனின்
பரிதாப பார்வையில்
பிச்சை பாத்திரம் ....
வெள்ளைத்தோல் காரியை
வெறித்து நோக்கும்
வெள்ளந்தி மனிதர்கள் ...
சேர்வதே நிச்சயமில்லை
எனினும்
திரும்பும் இடம்
பற்றிய கவலைகள் ..
பற்றியும் பற்றாமலும்
சுழன்று கொண்டேயிருக்கிறது
சக்கரம்
பின் குறிப்பு:ஏற்கனவே எழுதிய கவிதைதான்...திரும்ப வாசிக்கையில் சில திருத்தங்கள் தோன்றியது..மீண்டும் நண்பர்களுக்காக..
26 comments:
/வெள்ளைத்தோல் காரியை
வெறித்து நோக்கும்
வெள்ளந்தி மனிதர்கள் ...
//
அலோவ்.. திருத்தம்னா.. அது நான் சைட் அடிச்ச பிரெஞ்சு காரிய பத்தி மட்டும் தானா..?
கேபிள் நீங்க யூத்துதான். அதுக்காக ..??
\\வெள்ளைத்தோல் காரியை
வெறித்து நோக்கும்
வெள்ளந்தி மனிதர்கள் ...\\
நீங்களும் அவங்களும் வெள்ளந்தி மனிதர்களாக்கும்..!
அவ்வ்வ்வ்வ்வ்.
கவிதை நல்லாயிருக்கு!
'மப்பர்கள்'-வார்த்தை புதிதாயிருக்கிறது!
கவிதை, பயணம் செய்யம் பொது நடக்கும் இயல்புகளை அழகாய் எடுத்துக்காட்டுகிறது... அருமை. ஓட்டும் போட்டுவிட்டேன்.
பிரபாகர்.
//விற்பவனின் குரலிலும்
தெறிக்கும் பசி//
இந்த வரியில் உறங்கும் வலிக்கு... என்ன சொல்ல...
கவிதை அருமை, எதார்த்தம், நிஜம்
ரயில் பயண யதார்த்தம் அருமை
இத்த இன்னான்னு சொல்றது,
அயகாக்கீது, அவ்வளவுதான்
கண் முன் வந்துட்டு போச்சு ஒரு ரயில்
get me a platform ticket.
/* Cable Sankar said...
/வெள்ளைத்தோல் காரியை
வெறித்து நோக்கும்
வெள்ளந்தி மனிதர்கள் ...
//
அலோவ்.. திருத்தம்னா.. அது நான் சைட் அடிச்ச பிரெஞ்சு காரிய பத்தி மட்டும் தானா..?*/
அப்படியா.... அப்படின்னா கண்டிப்பா திருத்தனும்...
வெள்ளைத்தோல் காரியை
வெறித்து நோக்கும்
கள்ள தொந்தி மனிதர்கள்...
என்று...
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//பிச்சை எடுக்கவில்லையப்பா ..
பார்த்து கொடுங்கள்
மண்டியிட்டு சுத்தம் செய்பவனின்
பரிதாப பார்வையில்
பிச்சை பாத்திரம் ....//
உண்மையான வரிகள்....கவிதை அனுபவத்தின் வெளிப்பாடு....
நல்லாயிருக்கு.
//வெள்ளைத்தோல் காரியை
வெறித்து நோக்கும்
கள்ள தொந்தி மனிதர்கள்...
என்று...//
இதுவும்தான்.
நல்லா இருக்கு தல.
//கடந்து செல்லும் சிற்றுண்டி
விற்பவனின் குரலிலும்
தெறிக்கும் பசி//
கவிதை நன்றாக இருக்கிறது. குறிப்பாக மேலே உள்ள வரிகள்.
உங்களைப் போலவே நானும் (20 வருடங்களுக்கு முந்தைய) கவிதைகளை ரிப்பீட் போட்டுக் கொண்டிருக்கின்றேன்.
//சேர்வதே நிச்சயமில்லை
எனினும்
திரும்பும் இடம்
பற்றிய கவலைகள் ..//
அருமை.
//Cable Sankar /வெள்ளைத்தோல் காரியைவெறித்து நோக்கும்
வெள்ளந்தி மனிதர்கள் ...
//
அலோவ்.. திருத்தம்னா.. அது நான் சைட் அடிச்ச பிரெஞ்சு காரிய பத்தி மட்டும் தானா..?//
அலோவ் அண்ணன் எவ்ளோ கஷ்டப்பட்டு கவித எழுதியிருக்காப்ல.......நக்கலு.......
//கொஞ்சம் நேரம் ஆகட்டும் மாப்ள..
"மூடி திறக்கும் " தவிப்பில் 'மப்பர்கள் "//
அண்ணே நீங்களும் கேபிளும்தானே
//"மூடி திறக்கும் " தவிப்பில் 'மப்பர்கள் //
மப்பர்கள்னா என்ன ஜி???
நல்லாருக்குங்க..
காட்சி கண்முன் நிழலாடுகிறது..
வாசித்து கருத்துரைத்த அனைத்த நண்பர்களுக்கும் நன்றி(கும்க்கி என்ன போட்டீங்க?)
தண்டோரா ...... said...
வாசித்து கருத்துரைத்த அனைத்த நண்பர்களுக்கும் நன்றி(கும்க்கி என்ன போட்டீங்க?)
ஓ..அதுவா தலைவரே.,
பாண்டியிலிருந்து நண்பர் வாங்கி வந்த ப்ளாக் அண்டு கோல்டு....ப்ரிமியம்.
மன்னிக்க...பின்னூட்டத்த கேட்டீர்களா?
இதுதான்...இரவு போட்டுட்டு போட்டது:
கும்க்கி
பெறுநர் எனக்கு
விவரங்களைக் காண்பி 12:32 AM (9 மணி நேரத்திற்கு முன்பு)
கும்க்கி has left a new comment on the post "பயணங்களில்.......கவிதை":
இதுவரை வாசித்த பின்னூட்டங்கள் எதுவும் உவப்பாயில்லை...
பரவாயில்லை.....
வாசித்து நெக்குருக எனக்கு உவப்பாயிருக்கிறது....
மணிஜி...கண்களிளிருந்து கசியும் ஒரு அல்லது ஒரே சொட்டு கண்ணீர் கூட போதுமானதாக இருக்கும்தானே .........?
இந்த கவிதைகள் குறித்து....வேறென்ன சொல்ல...?
கும்க்கி..பின்னுட்டம் அல்ல அது ..கவிதை
//சேர்வதே நிச்சயமில்லை
எனினும்
திரும்பும் இடம்
பற்றிய கவலைகள் ..//
அருமைங்க நண்பரே,
Post a Comment