Wednesday, February 24, 2010

சிட்டு என்கிற ராமமூர்த்தி


ரெடி..ஹேன் யுவர் மவுத்!

ராமமூர்த்தி தன் அருகில் இருப்பவர்களை சற்றே ஏளனமாய்த்தான் பார்த்தான். என்னையும்தான். வாழ்க்கையின் எல்லாக்கட்டங்களிலும் யாருடனாவது போட்டி இருந்து கொண்டே இருக்கிறது. பெண்கள் விஷயத்தில் ரவியுடன். டேய் ! கொஞ்சம் விட்டு கொடுறா என்று கெஞ்சினால் மட்டும்தான் “போய்த்தொலை” என்பான்.

ராமமூர்த்தி 100 மீட்டரை 13 வினாடிகளில் கடப்பான். நான் 13.5. நான் கொஞ்சம் முயற்சித்து 13 வினாடிகளை எட்டினால், அவன் 12.5. அரை பாதத்தை மட்டும் ஊண வேண்டும். கொஞ்சம் குறுகிய இடைவெளியாய் இருத்தல் நல்லது. ஆனால் 1500 மீட்டர் ரேஸில் என்னை மிஞ்ச ஆள் நான் அந்த ஸ்கூலில் படிக்கும் வரை வரவில்லை. அதற்கான பிரத்யோக டெக்னிக்னுக்குகள் என்னிடம் இருந்தது.நீளமான ஸ்டெப்ஸ். நிதானமாய் மூச்சை சேமித்துக் கொண்டே மிதந்து , இறுதி சுற்றுகளில் பாய்ச்சல் காட்டி

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு பாடல் நீங்கள் கேட்டு இருக்கிறீர்களா? சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து.? சுசிலாவின் கம்பி பாகு சாரீரம்.

வழக்கம் போல் ராமமூர்த்திதான் முதல் இடம். வில்லிருந்து விடுபட்ட அம்பு என்பதை விசில் கேட்ட பின் ராமு என்று மாற்றி விடலாம். சிட்டாய் பறப்பான்.

ஒரு முறை ஊருக்கு போயிருந்தபோது ராமமூர்த்தியை சந்தித்தேன். அவன் அப்பா ஓட்டலை நடத்தி கொண்டிருக்கிறான். புரோட்டா மாவு பிணைவதில் எக்ஸ்பர்ட் !

சலீம் அலி. இந்த பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பறவை ஆர்வலர். அவர் சார்ந்த அமைப்பு தரும் ஒரு தவகல்தான் கொஞ்சம் அதிர்ச்சியாயும், தவிர்க்க முடியாத நம் இயலாமையையும்...

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே ! ராமுவிற்கு பிடித்த பாடல். இந்த இடத்தில் அவன் பட்ட பெயரை நான் சொல்லி விடுகிறேன். சிட்டு. இன்று நான் அவனை பார்த்ததும் என் வாயில் வந்த பெயர் சிட்டுதான். உலக்ஸ்தான் சொன்னான் . மாப்ளை ! சும்மாயிருடா ! உனக்கு மேட்டர் தெரியாது.சிட்டுன்னு கூப்பிட்டா பயங்கர கடுப்பாயிடுவான். ஏண்டா ? என்றேன். அப்புறம் சொல்றேன்.

தேன்மொழியின் சிட்டுக்குருவியை பற்றிய ஒரு கவிதை நினைவுக்கு இதை எழுதும்போது வருகிறது. டைம்லேப்ஸ் என்ற விஷயத்தை மறந்து விடலாம்.

சிட்டு! சாரி ராமு. புரோட்டா நம்ம சாந்தி கடை டேஸ்ட் இருக்குமா? எந்திரிச்சு வந்து கவனிடா? மெட்ராசிலேர்ந்து உன் கடைக்கு சாப்பிட வந்திருக்கேன்.

அந்த அமைப்பினர் சிட்டுக்குருவி சார்ந்த பறவை முட்டைகளை செல்போன் டவர்களின் அருகாமையில் வைத்தனர்.

சொல்டா மாப்ளை ! தலைவெடிச்சுடும் போலிருக்கு.

ஆமாம்டா.. சிட்டுக்கு அந்த பிரச்சனைதான். வெக்கம் நாக்கம் பாக்காம பொண்டாட்டி கிட்டயே சொல்லிபுட்டான்.

அத்தனை முட்டைகளும் உள்ளே இருந்த கரு அழிக்கப்பட்டு இருந்தது கூமுட்டைகளாய் !குணா திரைப்படத்து காட்சி நினைவிருக்கிறதா? எங்கள் பழைய வீட்டு உத்திரத்தில் கூட ஒரு கூடு இருந்தது. சிலருக்கு முக அமைப்பு பார்க்க குருவி மாதிரியே இருக்கும். என் ஆசிரியர் ஒருவர் அப்படித்தான் இருப்பார். அவரைக்கூட குருவி என்ற பட்டப்பெயரை சொல்லி அழைத்து அடி வாங்கியதுண்டு.

போறவ சும்மா போகலை.அம்மிக்குழவியை தூக்கி..

காமம் தொடர்பான லேகியத்துக்கு ஏன் சிட்டுக்குருவியின் பெயரை இழுத்தார்கள் என்று தெரியவில்லை.

கோவுச்சுக்காதடா.......... மெல்ல எழுந்து ஒன்றைரைக்காலில் வந்தான் சிட்டு என்கிற ராமமூர்த்தி ..



31 comments:

எறும்பு said...

1st

அகல்விளக்கு said...

2nd

அகல்விளக்கு said...

கதை அருமை அண்ணா...

:)

எறும்பு said...

கதை அருமை அண்ணா...

:)

அகநாழிகை said...

அண்ணா அருமை கதை.

கதை அருமை அண்ணா.

இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் மணிஜி.

சும்மா, விளையாட்டுக்கு..

வழக்கம்போலவே சரளமான நடை, மணிஜிக்கே உரிய சூப்பர் சுறுசுறுப்பான வார்த்தைகள்.

உங்கள் கதைகளில் போகிற போக்கில் எழுதிச் செல்கிற தகவல்கள் முக்கியமானவையாக படுகிறது. உதாரணத்திற்கு இந்த கதையில், சிட்டுக்குருவி லேகியத்துக்கு ஏன் பெயர் சிட்டுக்குருவி பெயர் வந்தது, சலிம் அலி - பறவை ஆய்வாளர் என்ற தகவல்கள், சுசீலாவின் சாரீரம், தேன்மொழி எழுதிய சிட்டுக்குருவி பற்றிய கவிதை, குணா திரைப்படம், சாந்தி கடை பரோட்டா... இது போல.

ஒரு தொகுப்பு போட்டுடலாமா?
எப்பூடி வசதி?

vasu balaji said...

/அகநாழிகை said...

ஒரு தொகுப்பு போட்டுடலாமா?
எப்பூடி வசதி?/

எப்போ சார்:)

vasu balaji said...

மணிஜி. அபாரம்:)

மங்குனி அமைச்சர் said...

//அந்த அமைப்பினர் சிட்டுக்குருவி சார்ந்த பறவை முட்டைகளை செல்போன் டவர்களின் அருகாமையில் வைத்தனர்//
//அத்தனை முட்டைகளும் உள்ளே இருந்த கரு அழிக்கப்பட்டு இருந்தது கூமுட்டைகளாய் //

மனிதனின் டெக்னாலாஜி வளர்ச்சிக்காக நடக்கும் கொலை

butterfly Surya said...

எப்படி மணிஜீ.. ??

கலக்கல்..

வாசு. ரெடி.. நீங்க ரெடியா..??

சைவகொத்துப்பரோட்டா said...

பாவம்தான் சிட்டு குருவிகள், கதை நல்லா இருக்கு அண்ணா.

சங்கர் said...

//வானம்பாடிகள் said...
/அகநாழிகை said...

ஒரு தொகுப்பு போட்டுடலாமா?
எப்பூடி வசதி?/

எப்போ சார்:)//


விழா முடிஞ்சதும் விருந்து கொடுப்பீங்களா? :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்..

Raju said...

\\அகநாழிகை said...
ஒரு தொகுப்பு போட்டுடலாமா?
எப்பூடி வசதி?\\

வெயிட்டிங்க்..
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அண்ணே.

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு மணிஜி.

//ஒரு தொகுப்பு போட்டுடலாமா?
எப்பூடி வசதி?//

தயார் ஆகுங்க மணிஜி.

na.jothi said...

போகிற போக்கில் எவ்வளவு விஷயங்கள் வாசு சார் சொல்ற மாதிரி
நல்லா இருக்கு அண்ணா

அப்புறம் சாந்தி பரோட்டா கடை புதுபேருந்து நிலையத்திலும் திறந்துருக்காங்க தப்பித்தவறிக்கூட
அங்க சாப்பிடாதிங்க

iniyavan said...

தலைவரே,

எனக்கு என்னம்மோ படிக்கும்போது ஒரு கோர்வையா வராத மாதிரி தெரியுது. இன்னும் கொஞம் மெனக்கெட்டால் அருமையான சிறுகதையாக அமையும். தவறாக எண்ண வேண்டாம். மனதில் பட்டதை கூறினேன்.

உண்மைத்தமிழன் said...

ஐயோ பாவம்..!

திசை மாறும் வார்த்தைகளைப் போட்டு ஒரு எழுத்தாளனுக்கே உரித்தான போக்கில் போகிறது உங்களது நடை..!

புத்தகம் கண்டிப்பா போட்டே தீரணும்..!

Unknown said...

வாசு சார், போகிற போக்கில் சொல்லப்படும் தகவல்களில் ஓட்டத்தை விட்டுட்டிங்களே.

சிட்டுவைப் படிக்கிறப்போ எனக்கு என் நண்பன் ஓட்டப்பந்தய வீரன் ராமநாதன் நினைவுக்கு வந்தான். நல்லவேளை, அவனுக்குச் சிட்டுப் பிரச்சனை இல்லை. கால் ரெண்டும் இருக்கு.

பின்நவீனத்துவத்தில் கொலோஜ் அமைப்பைச் சொதப்புறவங்க மத்தியிலே உங்க கதை ... என்ன சொல்ல i salute u.

PPattian said...

//ஹேன் யுவர் மவுத்//

On your mark??

நேற்று படித்த சிறுவயது துறவி கதை போலவே நடை உள்ளதால் கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது. இந்த method இல் அவ்வப்போது எழுதுங்கள். எப்போதும் அல்ல..

தவறிருந்தால் மன்னிக்கவும்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கலக்கிட்டிங்க சார்..
சுஜாதா ஞாபகத்தை கிளரிவிட்டீர்கள்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

Hats off.

Unknown said...

ரொம்ப நல்லாருக்குங்க..

க ரா said...

கதை ரொம்ப நல்லாருக்கு.

Jerry Eshananda said...

புத்தகம் ரிலீஸ் விழாவுக்கு நான் வருவேன்.

Romeoboy said...

:) நல்ல இருக்கு தலைவரே

Cable சங்கர் said...

அடுத்த புத்தகம் ஒரு பார்சல்....:)

புலவன் புலிகேசி said...

//ஒரு தொகுப்பு போட்டுடலாமா?
எப்பூடி வசதி?//

அண்ணன் விழாவுகு வர நான் தயார்...

R.Gopi said...

சலீம் அலி பிரபலமான பறவை ஆர்வலர்...

அவர் பெயரில் கோவையில் ஒரு இன்ஸ்ட்டிட்யூஷன் கூட உள்ளது...

SALIM ALI CENTRE FOR ORNITHOLOGY & NATURAL HISTORY.

வழக்கம் போலவே உங்களின் அபார எழுத்து நடையில் அமைந்த உருக்கமான கதை...

வாழ்த்துக்கள் தலீவா.....

உங்களின் கதை தொகுப்பு ஒரு புத்தக வடிவில் விரைவில் வெளிவர பிரார்த்திக்கிறேன்...

மணிஜி said...

அனைவருக்கும் நன்றிகள் நண்பர்களே! ஊரில் இல்லாததால் கொஞ்சம் தாமதமாக !!

ராகவன் said...

அன்பு தண்டோரா,

தஞ்சாவூர் எப்படி இருந்தது... விருதுகளும் வெற்றிகளும் தொடர்ந்து பெற வாழ்த்துக்கள்...

அந்த குறும்படம் பற்றி கொஞ்சம் சொல்லலாம், அடுத்த பதிவில்.

சிட்டு என்கிற ராமமூர்த்தி, ரொம்ப நல்லாயிருந்தது. சின்ன சின்ன விஷயங்களை நிறைய தொட்டிருந்தீர்கள்... மறுபடியும் உங்கள் நடை ஒய்யாரமாய் குதிரை வால் ஆட ஆட அல்லது ஆட்டி ஆட்டி ஓடி விளையாடும் செல்ல மகள்களை போல கவிதையாய் இருக்கிறது.

பிரமிப்புடனும், அன்புடனும்
ராகவன்

சிநேகிதன் அக்பர் said...

அருமை சார்.