ஆல் இன் ஆல் அழகுராஜா. டி. ராஜேந்தர். ஒரு பெயருக்கு ஏதோ ஒரு பெயரோடு கட்சியை நடத்தும் நகைச்சுவை திலகம். அவர் கட்சியின் பொதுக்குழு கூடுகிறதாம். கட்சிக்கொடியின் கலரை மாற்றிவிட்டார்களாம். 2011 ல் ஆட்சியை பிடிக்க யாரோடு கூட்டணி வைக்கலாம் என்று ஆலோசனை நடைபெறுகிறதாம். தண்டோராவுக்கு அவர் முன்னர் அளித்த ஒரு பேட்டி. மீண்டும் உங்களுக்காக !
1. உங்க ஊர்,பெயர் சொல்லுங்க.. உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
தண்ணில பாயுறோம்...
வெயில்ல காயுறோம்.
போதைல சாயுறோம்..
என் ஊர் மாயுரம்
ஷங்கர் எடுக்கிரார் எந்திரன்.
என் பெயர் ராஜேந்திரன்..
T.T.R ஆ என்னை ஆக்க ஆசைப்பட்டார் எங்கப்பா.
ஆனா நா T.R ஆ ஆயிட்டேன் தப்பா.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
இந்த டிஆர் எப்பவும் எதுக்கும் அழ மாட்டான்
மாடிலேர்ந்து கீழே விழ மாட்டான்
ஆனா இப்ப மன்சூரலிகான் குடிச்சதுக்கு நா தண்டம் அழுதேன்
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பேப்பர்ல எழுதுவேன் எழுத்து..
பெப்பர் சிக்கனை நீ அழுத்து..
மைல போடுவேன் கையெழுத்து...
டைல போட்டா அது தலையெழுத்து....
4).பிடித்த மதிய உணவு என்ன?
தங்கச்சி...முள்ளுல சேலை விழுந்தாலும்..சேலை முள்ளுல விழுந்தாலும்
சார்..நா பிடிச்ச மதிய உணவு என்னன்னு கேட்டேன்..
யோவ்..தண்டோரா..அதைத்தான்யா சொல்ல வர்றேன்..ஆத்துக்கு தங்கச்சி தண்ணி எடுக்க போயிருக்கு
புரியலயே சார்..
தங்கச்சி தண்ணி எடுத்துட்டு வந்தவுடனே சோத்துல தண்ணி ஊத்தி சாப்பிடுவேன்..
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ரெண்டு நண்பர்கள் காட்டுக்கு போனாங்க..அப்ப திடீர்னு ஒரு கரடி வந்துச்சு.ஒருத்தன் மரத்துல ஏறிட்டான்...கரடிக்கு மரம் ஏறத் தெரியாது...இன்னொருத்தன் மூச்சை அடக்கிட்டு படுத்தானா?
சார்..இப்ப எதுக்கு இந்த கதை..
யோவ் அந்த கரடி நாந்தான்யா..
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
ஏன் நீ முதுகு தேச்சு விடப்போறியா?
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
இப்ப நீ இங்க வந்தப்ப நா எங்க பார்த்தேன்...அதை எழுதிக்க...
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம்: எதிர்ல இருக்கிறவங்களை அடிக்கிறது
பிடிக்காத விஷயம் : அடிச்சப்புறம் கடிக்கிறது...
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
சரி பாதி இல்ல..அவ சரீரத்துல நான் தான் பாதி..
அவ உயிருள்ளவரை நான் உஷார்...
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் பக்கத்தில யாரும் நிக்க முடியாது...
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
நாலு வாழை இலையை இடுப்புல சுத்திகிட்டிருக்கேன்...
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
மச்சி...அவ மூஞ்சில துப்பினா எச்சி...
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
சொர்ணம்..கர்ணம்..புர்....கரடி கலர்
14.பிடித்த மணம்?
கோமணம்...
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
உஷாதான்..ஒட்டியாணம் கேட்டு உயிரை எடுக்கிறாள்.....
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
மன்சூரலிகான்...கழுதைக்கு கருத்தடை பண்றதை பத்தி எழுதியிருந்தார்..படிச்சுட்டு பின்னங்காலால எத்திட்டு வந்தேன்..
17. பிடித்த விளையாட்டு?
திருடன்,போலிஸ்
18.கண்ணாடி அணிபவரா?
இல்லன்னா வேற எங்கயாவது கடிச்சுடுவேன்...
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
ஒரு கிரேன் ஷாட் வச்சுக்குவமா?
20.கடைசியாகப் பார்த்த படம்?
சிம்புவும்,நயனும் ஓட்டல்ல எடுத்துகிட்ட படம்..
21.பிடித்த பருவ காலம் எது?
வீட்டுக்கு போன உடனே ஊசி போட்டுக்க..இல்லன்னா செப்டிக் ஆயிடும்...
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
சிம்புவுக்கு வந்த லவ் லெட்டரையெல்லாம் அழகா பைண்ட் பண்ணி வச்சிருக்கான்..அதைத்தான்....
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
என் கிட்ட ஹார்மோனியம்தான் இருக்கு...
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
நா கடிக்கும்போது நீ கத்துன சத்தம் பிடிச்சது...கடிச்சு அரை மணி நேரமாச்சு..இன்னும் அழுதுகிட்டிருக்க..அந்த சத்தம் பிடிக்கலை..
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
வண்டலூர்
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இன்னொருவாட்டி கேளு..சொல்றேன்...
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
விஜயகாந்த்
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எவ்ளோ பட்டாலும் உனக்கு புத்தி வராது போலிருக்கே...
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
சினிமா தியேட்டர் கக்கூஸ்...
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்ப இருக்கிறா மாதிரிதான்
31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
சவரம் பண்றது
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
பொழைச்சு..போயிடு
34 comments:
டேய்.. யார்ரா.. அது..?
தண்டோரா..?
அவனை டாரு..டாரா கிழிக்க வர்ரேண்டா இந்த செயின் ஜெயபாலு..
டி.ராஜேந்தர் said...
தண்டோரா
நீ என்னை கிண்டல் பண்ணவரா..
நீ ஒரு தண்ட.. டோரா...
நீ பதிவுலகத்தில வெந்த சோறா...
உன்ன கிழிச்சுடுவேன் நார் நாரா...
நீ என்ன பன்னி வாரா...
கிழிப்பேன் உன்னை டங்கு வாரா...
ஆங்...
டண்ட.. ணக்கா...
டமுக்கு... ணக்கா...
இதை மாத்தி பாடு..
தண்டா ரோ ணக்கா
தணக்கு ணக்கா..
நீ என்ன பெரிய கொக்கா..
கிழிச்சுருவேன் உன் சொக்கா..
நீ ஒரு முக்கா...
உன்னை படிக்கறவன் ஒரு மக்கா...
ஆக்கிடுவேன் உன்ன சுக்கா...
மூச்சு வாங்குது...
சோடா குடிச்சுட்டு வந்து
வெச்சுக்கறன் இருடி உன்ன
கிண்டலா பண்ற கிண்டல
ஆக்கிடுவேன் உன்ன சுண்டலு
பொட்டலம் போட்ருவேன்
ஜாக்கிரத...
நாங்களும் ரவுடிதான்...
ஜாக்கிரத...
BE CARE FUL.
ஆங்...
டண்ட.. ணக்கா...
டமுக்கு... ணக்கா...
//அகநாழிகை said...
நாங்களும் ரவுடிதான்...
ஜாக்கிரத...
BE CARE FUL.
//
யார சொன்னீங்க..வடிவேலு மாதிரி உங்ககளுக்கு நீங்களேவா..:-)))))
சிரிச்சி முடியல. எதுக்கும் பத்திரமா இருந்துக்கோங்க தலைவரே, அவரு உங்கள தேடி வந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல.
CAT கொஸ்டின் பேப்பர் அவுட்ன்னு சொன்னாங்க இது அதில்லையா..
------------
பீ கேர்ஃபுல் ( நான் என்னை சொன்னேன்)
-----------------
வாசுசார்
கவுஜ அருமை??:))
------------
....ooooO...............
....(....)....Ooooo.....
.....)../.....(....)....
.....(_/.......)../.....
...............(_/......
தலைவரே இது உங்க பாதம்தானே??
நிறைய பேர் தேடிகிட்டு இருக்காங்க..:))
ஹஹஹஹ சிரிச்சு முடில... பார்த்து அண்ணாச்சி...எதுக்கும் உஷாராவே இருங்க...
ரொம்ப.... கஷ்டம் ..
(யாருக்கு?? படிக்கறவங்களுக்குதான்)
வாசு என்ன..ஒரு மூனுநாளா காலைலயே ஆரம்பிச்சிர்றீங்கபோல
தண்டோரா அண்ணாச்சி பதிவு போட்டா பதிப்பாளர் வாசுதேவன் அய்யா மிகவும் குஷி ஆகிவிடுகிறார் போல..
இம் நடக்கட்டும் நடக்கட்டும்..
:)
ஆங்...
டண்ட.. ணக்கா...
டமுக்கு... ணக்கா...
Super o' super.
//நா கடிக்கும்போது நீ கத்துன சத்தம் பிடிச்சது...கடிச்சு அரை மணி நேரமாச்சு..இன்னும் அழுதுகிட்டிருக்க..அந்த சத்தம் பிடிக்கலை..//
முடியல... வயிறு வலிக்குது
:-))
suppressing deppressing supervising டி.ஆர்.....!
யாருக்கும் சுயமரியாதையை விட்டு ஆதரவு தரமாட்டோம்...
கேட்டால் ஆதரவு குடுப்போம்,,,, - டி.ஆர்.
மொக்கையினா இது தான் மொக்கை
”தண்டோராவும் டண்டணக்காவும்”..
தலைப்பு பார்த்ததும் இது புது பதிவு போல இருக்கு... கரடி மாட்டினார்னு நெனச்சுட்டே வந்தேன்... பழைய கரடி.. புதிய மொந்தை... ஆனாலும், அந்த டணக்கு டக்கா காமெடி எவ்ளோ தடவை படிச்சாலும் மெய்யாலுமே சூப்பர் தல...
”அகநாழிகை”யின் பாடல் அதகளம்..
தலீவா... இவரும் 2016ல முதல்வரா?
ரொம்ப மொக்கையா இருக்கு
மன்னிக்கவும், வாழைப்பூ வாசனை வந்த
வாரத்திலேவா, இப்படி ஒரு பதிவு உங்களிடமிருந்து.
=)))))... sema kalakkalz maniji...!!
முடியல. முடியல.
//சரி பாதி இல்ல..அவ சரீரத்துல நான் தான் பாதி..//
ரெண்டுபேருமா?????
நண்பர்களீன் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்!
Sure said...
மன்னிக்கவும், வாழைப்பூ வாசனை வந்த
வாரத்திலேவா, இப்படி ஒரு பதிவு உங்களிடமிருந்து
நண்பரே! கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கத்தான்..(நீங்க கூட இந்த பதிவிற்குத்தான் பின்னூட்டியிருக்கிறீர்கள் பாருங்களேன்)
//சார்..இப்ப எதுக்கு இந்த கதை..
யோவ் அந்த கரடி நாந்தான்யா..
//
சான்சேஇல்ல, வயிரு வலிக்குது.
கலக்கல், சிரிச்சு முடியலே
சார் , உங்களது எழுத்துக்களை சமீப காலமாகத்தான் வாசித்து வருகிறேன் . பின்னுட்டமிட என் தகுதி குறித்த
தயக்கமே காரணமாக இருந்தது.( இப்பவும் தயக்கத்துடன் தான் இந்த பதிவு குறித்த என் கருத்தை பின்னுட்டினேன்)
வேறு காரணம் இல்லை.
நன்றி .
நல்லாத்தானே போய்க்கிட்டிருந்தீங்க ஒரு வாரமா.ஏன் இப்படி..... உகாண்டாவிலோ ஜப்பானிலோ பதிவர்கள் இப்படி செய்யமாட்டார்கள் அண்ணா....
சூப்பர்.
வாசு.. பின்னூட்டம்.. முடியலை..
:)
”தண்டோராவும் டண்டணக்காவும்”..
:நம்ம சங்கத்து ஆள அடிச்சவன்(பேட்டி எடுத்தவன்) எவன்டா(சாரி பார் தி "டா ")
:யாரோ தண்டோராவாம்
:சங்கத்துல நான் இருக்கேன்னு தெரியுமாடா
: தெரிஞ்ச பெறகுதான் நல்லா அடிச்சான்
:அடிச்சவன் பேக் ரௌண்டு எப்படி
:மொத்தம் 91857 page, visits ஒரு 64545 அப்புறம் follower ஒரு 194 அவ்வளவுதான்
:.................. நான் ஊர்ல இல்லைன்னு அடிவாங்கினவன் கிட்ட சொல்லிடு
வர ஒரு மாசம் ஆகும்னு மறக்காம சொல்லிடு , நெக்ஸ்ட் மீட்பன்னுவோம்
it is very interesting
Post a Comment