Wednesday, February 3, 2010

நானும் கொஞ்சம் பேசுகிறேன்.....2இணையத்தில் எழுத தீவிர வாசிப்பு தேவையா? நிச்சயம் தேவைதான். அப்போதுதான் எழுத்தை உள்வாங்கி எழுத முடியும் என்பது சிலர் கருத்து. உலகின் முதல் சிறுகதையையோ அல்லது நாவலையோ எழுதியவன் எந்த வாசிப்பின் பின் புலத்தில் அதை எழுதியிருக்கலாம். நிச்சயம் அனுபவம் சார்ந்துதான் இருக்க வேண்டும்.

எல்லோர் வாழ்க்கையிலும் நிகழ்வுகள் உண்டு. சோகமோ, சந்தோஷமோ! அதை வெளிப்படுத்துகிறவன் எழுத்தில் இருக்கும் வார்த்தைகளின் வலிமை அளவிட முடியாதது. உதாரணம் இந்த வார நட்சத்திரம் சிவராமனின் இந்தபதிவு. வாசித்து முடித்தவுடன் பத்து நிமிடங்கள் செயலற்று போய் உட்கார்ந்து விட்டேன். பின்பு அவரை அலைபேசியில் அழைத்து பேசியதும்தான் சற்று ஆறுதலாயிருந்தது. காலம் மாறும் சிவராமன். கவலை வேண்டாம். காத்திருப்போம்!

உரையாடல் அமைப்பின் சிறுகதை போட்டிக்கு நான் ஒரு சிறுகதைஎழுதியிருந்தேன். அது என் பெரியப்பாவின் வாழ்க்கையை ஒட்டி எழுதப்பட்டது. பெரியப்பா மகா கோபக்காரர். முரடன். மனைவியை மதிக்காதவர். உணவு பறிமாறும்போது கரண்டி சத்தம் பாத்திரத்தில் கேட்டாலே தட்டை முகத்தில் வீசி விட்டு எழுந்து போய் விடுவார். பெரியம்மா பெயர் தங்கம். பெயர் மட்டுமல்ல ! குணமும்தான். சற்றும் முகம் சுளிக்காமல் இருப்பார். பிறந்த வீட்டிற்கு தன் கஷ்டத்தை அவர் சொன்னதேயில்லை.

ஒரு தீபாவளிக்கு முதல் நாள். பெரியப்பா சீக்கிரம் வீடு திரும்பினார். மனைவியை புடவை மாற்று. இன்னிக்கு வெளியில் போகலாம் என்றார். பெரியம்மாவால் நம்பவேமுடியவில்லை. தான் வணங்கிய தெய்வங்கள் தன்னை கைவிடவில்லை என்றே அவர் நினைத்திருக்க கூடும். அவர்களுக்கு குழந்தையில்லை. என் மீது பாசம் அதிகம். ஆனால் அவர்கள் அப்போது பங்களூரிலிருந்தார்கள். நான் தஞ்சாவூரில்.

முதலில் துணிக்கடை. நல்ல பட்டுப்புடவை. அப்புறம் ஒரு தங்கசங்கிலி. இறுதியில் எம்.டி.ஆரில் இரவு உணவு. நேரமாகி விட்டதாலும், விடிந்தால் தீபாவளி என்பதாலும் சினிமாவிற்கு போகவில்லையாம்.

மறுநாள் பொழுது விடிந்தது. பெரியம்மா எழுந்திருக்கவேயில்லை. முகத்தில் சிரிப்பும், திருப்தியும் உறைந்திருக்க, உயிரை விட்டிருந்தாள்.

அதன் பின் கிட்டதட்ட 20 ஆண்டுகள் பெரியப்பா நாய் படாத பாடு பட்டார். யாரையும் நம்பமாட்டார். தனியே வாழ்ந்தார். அவர் பிணத்தை எடுக்க கூட அவர் சேர்த்து வைத்திருந்த பணம் உதவவில்லை. இன்னும் சுந்தரம் பைனான்சில் கிடக்கிறது.

நான் என் சிறுகதையில் பெரியப்பாவை சாகடித்தேன். பெரியம்மா பழியை தீர்த்து கொண்டதாக முடித்தேன். ஆனால் ஒரு நல்ல சிறந்த எழுத்தாளன் (சிவராமன், ரமேஷ்வைத்யா, பா.ராஜாராம், ஜியோவ்ராம்சுந்தர்,நர்சிம், கேபிள்சங்கர், வாசு போன்றவர்கள்) அந்த கருவை இன்னும் செம்மையாக எழுதியிருப்பார்கள். இந்த இடத்தில்தான் தீவிர இலக்கிய பரிச்சயம் கை கொடுக்கும். ரவிஷங்கர் சார் அந்த கதைக்கு ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். கொஞ்சம் ட்யூன் பண்ணியிருந்தால் தி.ஜாவின் டச் கிடைத்திருக்கும் என்று. அந்த மட்டில் திருப்தி.

நண்பர் முரளிக்கண்ணனனுடன் ஒரு தனிப்பட்ட உரையாடலில் ஒரு தகவல் சொன்னார். அது அவர் வீட்டு பாரம்பரிய நகை ஒன்றை அடமானம் வைக்க போனபோது நடந்த கதை. நல்ல ஜீவனுள்ள மேட்டர். முரளியிடம் சொன்னேன். இதை கதையாக எழுதுங்கள் என்று. ஆனால் அப்போது நிலைமை கொஞ்சம் சரியில்லாமல் இருந்தது. முரளி! இப்போது எழுதலாமே! உங்கள் நடையில் அது ஆகச்சிறந்த சிறுகதையாக நிச்சயம் வரும்.

சமீபத்தில் பா.ராஜாராமுடன் அலைபேசி கொண்டிருந்தபோது ஒரு சம்பவத்தை விவரித்தேன்(மப்பில்தான்). மணிஜி! இதை நீங்க எழுதுங்க.இல்லை. நான் எழுதிடுவேன் என்றார். நீங்களே எழுதுங்க மக்கா! உங்கள் எழுத்தில் அதை வாசிக்க எனக்கு ஆசை!!

புத்தக கண்காட்சியில் வாங்கிய “நெற்குஞ்சம்” என்கிற புத்தகத்தை மெதுவாக படித்து முடித்து விட்டேன். சில வரிகளை அல்லது பத்திகளை இரண்டு முறை வாசித்தேன். புனைவா? அனுபவமா? என்று திகைக்க வைக்கும் வகையில் எழுதியிருந்தார் கவிஞர் தேன்மொழி. அவரின் முதல் சிறுகதை தொகுப்பு நெற்குஞ்சம். உரையாடல் கூட கவிதை நடையில்தான். தானே சொல்வதை போல் எழுதப்பட்டிருந்த விஷயங்களின் கனம் இன்னும் அழுத்திக் கொண்டிருக்கிறது. தஞ்சையில் அரசுப் பணியில் இருப்பதாக அகநாழிகை வாசு சொன்னார். ஊருக்கு போகும்போது நிச்சயம் ஒரு சல்யூட்டை போட்டு விட்டு வரவேண்டும். தலித் இலக்கிய வகையில் எழுதப்பட்டிருந்தாலும் மண்ணின் மணம் இன்னும் கமழ்ந்து கொண்டிருக்கிறது. எளிமையும், கடுமையும் சரிவிகிதத்தில் கலந்த வார்த்தைகள்.

அதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்(சில)

“என் மீதான் உன் பிரியங்கள் பொய் என்பதை எந்த நிலையிலும் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. மீண்டும், மீண்டும் அக்காக் குருவி போல, உன் பிரியம் நிஜம் எனும் குரல் எனக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது. என்னை ஏன் பிரிந்தாய் என என்னால் கேட்க முடியாது. நாம் பிரிந்ததாக நான் உணர்ந்ததேயில்லை. ஏன் நீ திரும்ப வரவில்லை என்று மட்டுமே எனக்குள் கேட்டுக் கொண்டேன். “

டிஸ்கி : லத்தீன், தென் அமெரிக்கா, பிரேசில் மற்றும் பொலிவிய எழுத்தாளர்களை வாசிக்கலாம் என்று முடிவெடுத்தாகி விட்டது. ஆனால் முதலில் அந்த எழுத்தாளர்களின் பெயரை மட்டும் வாசிக்க கற்றுக் கொள்ள முயற்சி!! ஒரு எழவும் வாயில் நுழையவில்லை. சாரு இந்த விஷயத்தில் கில்லாடி. மனுஷனுக்கு எல்லோர் பெயரும் அத்துப்படி.

டிஸ்கி:2- மார்க்கெட்டிங்கில் 3 c formula என்று ஒன்று உண்டு. அதாவது convince or confuse or confess . எழுத்துக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன். ஆனால் இன்னும் ஒரு”c" யும் சேர்ந்து. "creativity"

35 comments:

சங்கர் said...

கட்டுரைக்கும் முதல் டிஸ்கிக்கும் என்ன சம்பந்தம் :)

சங்கர் said...

மீ த பஸ்ட்டு

Paleo God said...

நீங்க நிறைய பேசுங்க .. :))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வழக்கமான உங்க writing styleல் இருந்து வித்தியாசமாக இருக்கிறது இந்தக் கட்டுரை. தொடர்ந்து இம்மாதிரி(யும்) எழுதவும்.

வெள்ளிநிலா said...

லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களை பின்னி எடுங்கள் ( விமர்சனம் எல்லாம் எப்போ!)

தராசு said...

ஆமா, இதுக்கும் அந்த போட்டோவுக்கும் இன்னா கனிக்ஷன் தல......

sathishsangkavi.blogspot.com said...

தல எல்லாம் சரி... போட்டோவப் பத்தி சொல்லவே இல்லையே....

Romeoboy said...

\\இணையத்தில் எழுத தீவிர வாசிப்பு தேவையா? நிச்சயம் தேவைதான்.//


உண்மையான வரி தலைவரே. என்னை நான் மெருகேற்றி கொள்ள ரொம்ப துணைபுரிவது வாசிப்பே.

CS. Mohan Kumar said...

//வழக்கமான உங்க writing styleல் இருந்து வித்தியாசமாக இருக்கிறது இந்தக் கட்டுரை. தொடர்ந்து இம்மாதிரி(யும்) எழுதவும்.//

ஜ்யோவ்ராம் சுந்தர் சரியா சொல்லிருக்கார். எழுதினது நீங்க தானான்னு ஆச்சரியதோடே படிச்சேன்

Ganesan said...

அன்பின் தண்டோரா,

உண்மையை சொல்லுங்கள், நீங்கள் ரொம்ப நாளாக எழுதி வருகிறீர்களா?

உங்கள் எழுத்துக்கள் தேர்ந்த எழுத்தாளர் போல் இருக்கிறது.

Ganesan said...

மருத்துவர் ஷாலினி மதுரை கருத்தரங்கம்-தொகுப்பு--புகைப்படங்கள்

www.kaveriganesh.blogspot.com

கண்ணகி said...

பேசுங்க..பேசுங்க...

Ashok D said...

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டீர்கள் என்பது மட்டும் புரிகிறது :)

மணிஜி said...

/காவேரி கணேஷ் said...
அன்பின் தண்டோரா,

உண்மையை சொல்லுங்கள், நீங்கள் ரொம்ப நாளாக எழுதி வருகிறீர்களா?

உங்கள் எழுத்துக்கள் தேர்ந்த எழுத்தாளர் போல் இருக்கிறது//

நன்றி... நான் பிளாக் ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது..(பிப் 13)

Pradeep said...

super

Santhappanசாந்தப்பன் said...

எனக்கு புரிஞ்சுடிச்சு....
முதல்ல அந்த போட்டோ (Convince) இரண்டாவது உங்களோட பதிவு (Confess)
மூணாவது டிஸ்கி 1 (Confuse??@#$)

மூணையும் சேர்த்தா "Creativity"

என்னமா போட்டு தாக்குறீங்க!

சங்கர் said...

//D.R.Ashok said...
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டீர்கள் என்பது மட்டும் புரிகிறது :)//

கட்டமா, நான் கட்டிங்னு படிச்சிட்டேன்

கே.என்.சிவராமன் said...

ரைட்டிங் ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு. தொடர்ந்து நீங்க இந்த மாதிரியும் எழுதுங்களேன்... அக்கப்போர்ல எதுக்கு உங்க சக்திய விரையம் பண்ணறீங்க?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

மணிஜி said...

/சங்கர் said...
//D.R.Ashok said...
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டீர்கள் என்பது மட்டும் புரிகிறது :)//

கட்டமா, நான் கட்டிங்னு படிச்சிட்டேன்//

அப்படியே பிளேயரையும் சேர்த்துக்க வேண்டியதுதானே!!

பா.ராஜாராம் said...

என்னிடம் பேசும்போது விவரித்த விதம் இப்பவும் காட்சியாக விரிகிறது மணிஜி.அதை நீங்கள் அப்படியே பதிந்தால் போதும்.அருமையான ஒரு சிறு கதை கிடைக்கும்.என்றாலும் நான் எழுதவேணும் என விரும்பினாலும் செய்கிறேன்.அன்பிற்கு முன்பு ஆண்டி நான். :-)

எழுத்தாழர் லிஸ்ட்டில் என்னையையும் சேர்த்தது வழக்கம் போலான உங்கள் வம்பு என எடுத்துக் கொண்டேன்.

:-)

மணிஜி said...

/பா.ராஜாராம் said...
என்னிடம் பேசும்போது விவரித்த விதம் இப்பவும் காட்சியாக விரிகிறது மணிஜி.அதை நீங்கள் அப்படியே பதிந்தால் போதும்.அருமையான ஒரு சிறு கதை கிடைக்கும்.என்றாலும் நான் எழுதவேணும் என விரும்பினாலும் செய்கிறேன்.அன்பிற்கு முன்பு ஆண்டி நான். :-)

எழுத்தாழர் லிஸ்ட்டில் என்னையையும் சேர்த்தது வழக்கம் போலான உங்கள் வம்பு என எடுத்துக் கொண்டேன்.

:-)//

நான் எழுதாததில் ஒரு சுயநலமும் இருக்கிறது ராஜாராம். என் மனைவி வாசிப்பாள். வீண் சஞ்சலம் அவளுக்கு. தவிர்க்கவே இதுவரை எழுதவில்லை. நீங்கள் எழுதுங்கள் மக்கா!!

எறும்பு said...

//தொடர்ந்து இம்மாதிரி(யும்) எழுதவும்.//

Repeat...

பா.ராஜாராம் said...

ஆகட்டும்.எழுதுகிறேன் மணிஜி.கொஞ்சம் ஆசுவாசமாகட்டும்...நன்றி மணிஜி.

Unknown said...

//இணையத்தில் எழுத தீவிர வாசிப்பு தேவையா? நிச்சயம் தேவைதான். அப்போதுதான் எழுத்தை உள்வாங்கி எழுத முடியும் என்பது சிலர் கருத்து. உலகின் முதல் சிறுகதையையோ அல்லது நாவலையோ எழுதியவன் எந்த வாசிப்பின் பின் புலத்தில் அதை எழுதியிருக்கலாம். நிச்சயம் அனுபவம் சார்ந்துதான் இருக்க வேண்டும்.//

ஆனால் முதல் கதையோ நாவ்லோ நம்மிடம் இல்லையே அண்ணா

payapulla said...

உண்மையிலேயே உங்கள் பெரியப்பா மிகவும் பாவம்தான் . இப்படி ஒரு தங்கமான மனைவியை இழந்த எந்த கணவனின் பாடும் நாய் படாத பாடுதான் .

செ.சரவணக்குமார் said...

வழக்கமான உங்கள் மொழியிலிருந்து வேறுபட்டு இருக்கிறது பதிவு. தொடர்ந்து நிறைய பேசுங்கள் சார்.

அக்னி பார்வை said...

///மார்க்கெட்டிங்கில் 3 c formula என்று ஒன்று உண்டு. அதாவது convince or confuse or confess . எழுத்துக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன். ஆனால் இன்னும் ஒரு”c" யும் சேர்ந்து. "creativity"
///

Creative!!

நேசமித்ரன் said...

இன்னும் ரொம்ப தூரம் வரணும் போல நான்

Anonymous said...

வெகுகாலமாய் நான் சொல்லி வந்ததும் இதைத்தான் உங்கள் சக்தியை வீனான அக்கப்போரில் எதற்கு செலவழிக்கணும்.

நல்ல வாசிப்பு நல்ல எழுத்துக்கான உரம்.

தேவன் மாயம் said...

காலை எடுத்து உள்ளே செல்லுங்கள்!! சிறுகதை இலக்கிய உலகத்திற்குள்!!

Kumky said...

நல்லது தலைவரே...

அல்லாரும் சொல்றாங்களேன்னு அக்கப்போரை விட்டுடாதீங்க...அவங்களும் ரசிப்பவர்கள்தான்...உங்க ஸ்டைல்ல படிக்கும்போது சுவாரஸ்யம் கூடுதல்..

இதுவும் நல்லாருக்கு..

Jerry Eshananda said...

நல்லாயிருக்கு..

Jerry Eshananda said...

இன்னும் நிறையவே பேசுங்க.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நடை நீரோடைபோல் உள்ளது. (அதை சொல்லல!)

மணிஜி said...

வருகைக்கும், ஆதரவிற்கும் அன்பு நன்றிகள் நண்பர்களே!!