ஆழ்ந்த நித்திரைக்கான
கனவுகள்தான்
எல்லா தலையனைகளுக்கும்!
பார்த்து கொண்டிருக்கையில்
ரசம் போனது கண்ணாடி.
நான் மறைந்து
நீ தெரிந்தாய்!
அடிபடும் இடத்தில்
மட்டும் நொடிப் பொழுது
வலியை காட்டும்
ஐந்தறிவு பிராணி!
உடல் முழுதும்
அதிர்கிறது ஒற்றை
சொல்லுக்கே!
வெட்கமாய்த்தான்
உணர்கிறது என்
ஆறாவது அறிவு!
எங்கோ கேட்கும்
வார்த்தைகளை சேகரிக்க
ஓடிக்கொண்டிருக்கிறேன்
மெளனம் என்னை
துரத்திக் கொண்டே
வருகிறது பேரிரைச்சலோடு!
16 comments:
//எங்கோ கேட்கும்
வார்த்தைகளை சேகரிக்க
ஓடிக்கொண்டிருக்கிறேன்
மெளனம் என்னை
துரத்திக் கொண்டே
வருகிறது பேரிரைச்சலோடு!//
ஆமாம் தலை உண்மைதான்....
உங்கள் வரிகள் மனதில் பதிகிறது.......
//ஆழ்ந்த நித்திரைக்கான
கனவுகள்தான்
எல்லா தலையனைகளுக்கும்!//
அருமை !!
கடைசி 12 வரி... apt :)
மெளனம் என்னைதுரத்திக் கொண்டேவருகிறது பேரிரைச்சலோடு!
என்னவோ போங்க..
டச்சிங்..
அருமை தலைவரே.
ம்ம்ம். கட்டிப்போடுது வர வர எழுத்து:). great
காவியக் கவிஞராயிட்டீங்க சாதா கவிஞரே..!
மணிஜி,
கவிதை நல்லாயிருக்கு.
//தலையனைகளுக்கும்//
‘தலையணைகளுக்கும்‘ அப்படின்னு மாத்திடுங்க.
//மெளனம் என்னைதுரத்திக் கொண்டேவருகிறது பேரிரைச்சலோடு!//
இந்த வரிகள் தான் தல நிதர்சனம்.கலக்குங்க கவிஞரே..
அருமையான கவிதை.
//அடிபடும் இடத்தில்
மட்டும் நொடிப் பொழுது
வலியை காட்டும்
ஐந்தறிவு பிராணி!//
அனுபவ வரிகள்... அருமை..
அ.
/mounam ennai thuraththi konde varukirathu periraichchalodu/
arumai . nalla pataippu.
அருமையான கவிதை மீண்டும் மீண்டும் வாசிக்க சொல்கிறது...வாழ்த்துக்கள் தொடருங்கள்....
"ஆழ்ந்த நித்திரைக்கான
கனவுகள்தான்
எல்லா தலையனைகளுக்கும்!"
தல........
எங்க பிடிச்சீங்க.
இந்த வார்த்தைகள.........
சூப்பரப்பு...........
நட்புடன்.........
காஞ்சி முரளி..........
//அடிபடும் இடத்தில்
மட்டும் நொடிப் பொழுது
வலியை காட்டும்
ஐந்தறிவு பிராணி!
உடல் முழுதும்
அதிர்கிறது ஒற்றை
சொல்லுக்கே!
வெட்கமாய்த்தான்
உணர்கிறது என்
ஆறாவது அறிவு!//
உண்மையான வார்த்தைகள்..நல்லா இருக்கு தல
Post a Comment