தலைவர் எதை செய்யறாரோ இல்லியோ ! தினம் சினிமாகாரங்களை சந்தித்து விடுகிறார். பொறந்த வூட்டு பாசம் ! ராதிகா, ஸ்ரீப்ரியாவை தொடர்ந்து ரஜினி காலையில் சந்தித்தார். மாலை அஜீத் சந்திக்கிறார். உடனே பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா பிரமோவில் அஜீத் பெயரும். ஜாக்குவார் தங்கம் அஜீத் மேல் புகார் கொடுக்கிறார். குகநாதனும், கலைப்புலி சேகரனும் ரஜினிக்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள். தலைவரே ! சூப்பர் ஸ்கீரிப்ட் ! சீக்கிரம் பொறுப்பை தளபதி கிட்ட ஒப்படைச்சுட்டு நீங்கள் பொறந்தவீட்டுக்கு போயிடுங்க!
கலைஞர் டிவியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது, அஜீத் இல்லையென்றால் ரேட்டிங் பாதிக்கப்படலாம் என்று சேனல் தரப்பில் சொல்லப்பட்டதாம். எனவே முதலில் தொட்டிலை ஆட்டிவிட்டு , அப்புறம் பிள்ளையையும் கிள்ள முடிவெடுக்கப்பட்டதாம். அஜீத்துக்கு இன்னும் நிறைய இருக்கிறது போலும் !
ஒரு சுவாரசியமான தகவல் படித்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.”சினிமாட்டோகிராபி” என்ற புரொஜெக்டர் கருவி கண்டு பிடிக்கப்பட்ட பின் தான் சினிமா தனது வரலாற்றை தொடங்கியது. முதன்முதலில் திரையில் தோன்றிய மெளனப்படங்களை பார்த்து மக்கள் அதிசயித்தனர். மதத் தலைவர்களுக்கு இது பொறுக்கவில்லை. இது ஆவி, சாத்தான், பில்லிசூனியம் என்று கதை கட்டினர்.
நல்லவேளை ! இந்திய சினிமாவில் இத்தகைய தொல்லைகள் இல்லை. முதலில் வந்த மவுனப்படங்கள் எல்லாமே இந்து மதத்தில் வரும் புராணங்களை அடிப்படையாக கொண்டிருந்தது. இந்தியாவுக்குள் முதன்முதலாக வந்த மவுனப்படம் இயேசுவின் வாழ்க்கை. 1896-ம் வருடம் மும்பை நகரில் முதல்முதலாக மக்களுக்காக திரையிடப்பட்டது.
டூப்பாண்ட் என்ற பிரெஞ்சுக்காரர் ஒரு கையில் புரெஜெக்டரையும், மறு கையில் பிலிம் ரோலையும் எடுத்துக் கொண்டு இந்தியா வந்தார். பல நகரங்களில் இயேசுவின் வாழ்க்கையை திரையிட்டார்.
தமிழ்நாட்டில் முதல்முதலாக சினிமா திரையிடப்பட்ட இடம் கோடம்பாக்கம் இல்லையாம். திருச்சி ! பேசாத படத்தை பற்றிதான் ஊரெங்கும் பேச்சாக இருந்ததாம். அதில் ஒருவர்தான் சாமிக்கண்ணு வின்செண்ட். திருச்சியில் ரயில்வேயில் பணி புரிந்தவர். ஊருக்கு கிளம்பிய டூப்பாண்டிடம் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து கருவியையும், படச்சுருளையும் வாங்கிவிட்டார். தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் சென்று திரையிட்டு காட்டினாராம். இவர் இல்லையென்றால் சினிமா தன் வரலாற்று பயணத்தை 20 ஆண்டுகள் கழித்துதான் தொடங்கியிருக்கும்.
கோவையில் தமிழகத்தின் முதல் தியேட்டரான வெரைட்டி ஹாலை கட்டியவர் இவர்தான்.இந்த வரலாற்றில் சென்னைக்கு அன்று இடமேயில்லை!
பெண்ணரசியை கல்லூரிக்கு பஸ் ஏற்ற சென்று கொண்டிருந்தேன்.
அப்பா! டைம் என்ன?
ஏம்மா ! நீ வாட்ச் கட்டிகிட்டு வரலையா?
அதுக்கெல்லாம் டைமே இல்லைப்பா !!(எதாவது புரிகிறதா?)
வழக்கமான டிஸ்கி “ கவுஜைக்கு பதில் கதை :
கூகுலூர். சில ஊர்களில் குடுகுடுப்பைகாரர்கள் இருப்பதை போல் கூகுலூரில் கம்ப்யூட்டர் ஜோசியம் பார்ப்பவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். பில்கேட்ஸ் அந்த ஊரில் கூகுலாத்தாவிற்கு கோயில் கட்டி கூழ் ஊற்றினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பஞ்சாயத்து கூடுகிறது.
போதும்டா சாமி ! நம்ம ஊரை எல்லாம் கிண்டலடிக்கிறானுங்க. மொக்கை மெயில்ல கோமாளி ஊர்னு எழுதிட்டாங்க.
அதுக்கு என்ன பண்றது நாட்டாமை?
இனிமே பொறக்கற குழந்தை, ஆணோ, பெண்ணோ கட்டை விரலை வெட்டி விட்டுங்க! அப்பதான் விமோசனம் கிடைக்கும்.
நாட்டாமை நம்ம மொக்கைசாமி சம்சாரம் பிள்ளை பெத்திருக்கா. மொத போணிய போட்ருலாமா?
மொக்கைசாமியின் பிள்ளையின் கட்டைவிரலில் சுண்ணாம்பு தடவப்படுகிறது. மருத்துவச்சி களிம்புடன் தயாராக இருக்கிறாள்.
ம்ம்..ஆகட்டும்.
நாட்டாமையின் செல்ஒன் சிணுங்குகிறது. ஒரு குறுஞ்செய்தி.
“இந்த பிள்ளை சாதாரண பிள்ளை இல்லை. உங்க ஊருக்கே பெரிய பேரை வாங்கித் தரப்போறான். அதனால அவனை உட்ருங்க!
யாருடா இதை அனுப்புனது?
யாரோ “காரு உன்னுதா”ன்னு ஒரு பேர்ல வந்திருக்கு.
காரு உன்னுதாவா? அய்யோ? அவரு நம்ம குலசாமியோட இன்னொரு பேராச்சே!
அப்ப விட்ருங்கடா!
மொக்கைசாமிக்கு ஜல்லிக்கண்ணன் என்று நாமம் சூட்டி வளர்க்கிறார்கள். அவனுக்கு 20 வயது ஆகும்போது ஒரு சாமியார் வருகிறார்.
நான் சுவாமி பைத்தியானந்தா! இந்த பிள்ளையை கூட்டிகிட்டு போக வந்திருக்கேன்!
மொக்கைசாமிக்கு குழப்பம். நான் என் பிள்ளையை அனுப்பமாட்டேன் என்று சொல்லும்போது அவனுக்கு குறுஞ்செய்தி வருகிறது.
காரு உன்னுதாதான் அனுப்பியிருக்கிறார். பையனுக்கு வேளை வந்துவிட்டது. அனுப்பி வை!
அப்புறம் ஜல்லிக்கண்ணன் பெரிய எழுத்தாளனா ஆகி புத்தமெல்லாம் போட்டாரு! (யாரையும் குறிப்பா சொல்லலிங்கோ!)
24 comments:
மிக்ஸிங் ..??
சம்திங் மிஸ்ஸிங்..
//(யாரையும் குறிப்பா சொல்லலிங்கோ!)//
நம்ம்ம்ம்ம்ப்ப்பிட்டோம்
பண்டோரா அண்ணன் டைமிங் சென்சும், காரு உன்னுதாவும் அருமை...
பிரபாகர்.
:)) குசும்பா சொன்னீங்களோ?
//(யாரையும் குறிப்பா சொல்லலிங்கோ!)//
கரெக்ட்டு, நாலஞ்சு பேர சேர்த்து தானே சொன்னீங்க?
டைம் கேட்டா சொல்ல வேண்டியதுதான.!
அத விட்டுட்டு என்னா அழிச்சாடீயம்..!
உங்களுக்கெல்லாம் பூமாதேவி வாயப் பொளந்தாத்தான் சரிய வரும்.
மானிட்டர் சூப்பர்ங்கோ..
//(யாரையும் குறிப்பா
சொல்லலிங்கோ!)//
நம்பிட்டேன்...
மணிஜி,
நல்லா எழுதியிருக்கீங்க.
நம்ம பக்கம் வாங்க கொஞ்சம்...
http://www.aganazhigai.com/2010/02/1.html
‘அக்கினிக்குஞ்சும் ஆங்கோர் பொந்தும்‘
சார் இது உங்க சுயசரிதை தானே (ஹி ஹி ஹி ............. )
பாவம் மத்தவங்களுக்கு இது புரியாம
(சங்கர், இராகவன் நைஜீரிய, ஈரோடு கதிர்) அவுங்கள சொல்றிங்கன்னு தப்பா எடுத்துகிட்டாங்க
ஒரு நாளைக்கு "அவர்"கிட்ட கிழிபடப் போறீங்க..!
வணக்கம்.. (சரோஜ் நாராயண்சுவாமி):)
யாருன்னு பிரியலையே..
என்னா சார் நம்ம ப்ளாக்-க்கு தலைல ஒரு செல்ல குட்டு குட்டாம வந்துடிங்க (ஒரு மோதிரக்கை குட்டு மிஸ்சுடா அமைச்சரே)
ஜல்லிக்கண்ணன்...எழுத்தாளன்... புத்தகம்... ம்கூம் ஒண்ணும் புரியல...
சுரேஷ் கண்ணன்.
கிட்டத்தட்ட நாம ரெண்டு பேருமே தாத்தாவை பத்தி எழுதியிருக்கும் மேட்ட்ர் ஒன்றே..
கேபிள் சங்கர்
//
அப்பா! டைம் என்ன?
ஏம்மா ! நீ வாட்ச் கட்டிகிட்டு வரலையா?
அதுக்கெல்லாம் டைமே இல்லைப்பா !!(எதாவது புரிகிறதா?)//
ஹா...ஹா....ஹா.... இந்த காலத்து பசங்க / பொண்ணுங்க பெரிய லெவல் டெர்ரர்னு புரியுது...
இதோட உங்க “காரு உன்னுதா” படு சூப்பர்.... இன்னும் ”அவர” விடலியா? பாவம்யா அவரு...
cinematography... interesting.. :D
//
அப்பா! டைம் என்ன?
ஏம்மா ! நீ வாட்ச் கட்டிகிட்டு வரலையா?
அதுக்கெல்லாம் டைமே இல்லைப்பா !!(எதாவது புரிகிறதா?)//
=)))...
யாரையும் குறிப்பிட்டுச் சொல்லாத கதையில வர்ற பேருங்க ரொம்ப இண்டரெஸ்டிங் மணிஜி... எப்புடீ இப்புடீ,,, =))
கலக்கல்.
--எங்க ஊர் பெருமை , இப்பதான் தெரியுது. செய்திக்கு நன்றி
----இந்த கால யூத்களோட சொல்லாடல் உங்களக்கு புரியாது சார்
---- சத்தியமா இந்த கதை எனக்கு புரியல.
நன்றி @ சூர்யா
நன்றி @ கதிர்
நன்றி @ பிராபகர்
நன்றி @வானம்பாடிகள்
நன்றி @ சங்கர்
நன்றி @ ராஜீ
நன்றி @ ராகவன்
நன்றி @ வாசு
நன்றி @ மங்குனி அமைச்சர்
நன்றி @ உ.தமிழன்
நன்றி @ ஷங்கர்
நன்றி @ ஆதி
நன்றி @ க.பாலாசி
நன்றி @ கேபிள்
நன்றி @ கோபி
நன்றி @ ப்ரியா
நன்றி @ ராமசாமி
நன்றி @ ஷ்யூர்
புதிய செய்தியோடு கலந்து கொடுத்த விதம் நல்லா இருக்கு,குட் மிக்சிங்
//(யாரையும் குறிப்பா சொல்லலிங்கோ!)//
ஹிஹி...
அப்படியா அண்ணா....
ரைட்டு...
தல சினிமா பற்றிய வரலாறு சூப்பர்...
:--)))
Post a Comment