
நெரிசலான பேருந்தில்
முன் குறிப்பு:அறிகுறிகளே காட்டாமல் கூட உயர் இரத்த அழுத்தம் நம்மை பாதிப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.அவ்வப்போது சோதனை செய்து கொள்ள வேண்டுமாம்.நண்பர்களின் நலம் விரும்பி என் அனுபவத்தை எழுதுகிறேன்(மேட்டர் கிடைக்க கூடாதே?..என்று சிலர் கருதலாம்)
0000000000000
முந்தாள் நாள் காலை முதலே நான் சரியாக வில்லை.லேசான கிடினெஸ் இருந்தது.சரி நேத்து நைட்டு மப்பாயிருக்கும் என்று விட்டு விட்டேன்.அன்று என் அத்தை இறந்து பத்தாம் நாள் காரியம்.அதற்காக எல்லோரும் கிளம்பி குரோம்பேட்டைக்கு போய் விட்டோம்.அங்கு வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருந்தோம்.மீண்டும் ஒரு சாவு செய்தி.என் கசினின் மகள் 45 வயது ஹார்ட் அட்டாக்.அதுவும் கிரோம்பேட்டையில்தான்.தலை நன்றாக சுற்றுவது தெரிந்தது.காலெல்லாம் தெம்பே இல்லாமல் துவள ஆரம்பித்தது.என்னிடம் ஒரு பழக்கம்.என்னதான் முடியவில்லையென்றாலும் வீட்டில் சொல்லி அவர்களை பயமுறுத்துவதை விரும்பமாட்டேன்.நைசாக வெளியில் வந்து ஒரு ஆட்டோ பிடித்து அருகில் உள்ள டாக்டரிடம் போப்பா என்றேன்.
டாக்டர் இன்னும் வந்திருக்கவில்லை.காலை மணி 9.அவர் வரும் நேரம்தான்.டோக்கன் கொடுத்தார் நர்ஸ்.6 ஆம் நம்பர் என்று முதலில் நினைத்தேன்.பின் தான் அது 9 என்று தெரிந்தது.டாக்டர் வந்தவுடன் வரிசைப்படி எல்லோரும் செல்ல ஆரம்பித்தனர்.ஒருவரிடம் கேட்டு பார்த்தேன் பலனில்லை.அவரவர் வேதனை அவரவருக்கு.கிட்ட தட்ட மயங்கி விழும் நிலையில் உள்ளெ சென்றேன்.டாக்டர் பி.பி செக் பண்ணிவிட்டு 180/120.என்னய்யா நினைச்சுகிட்டிருக்கே?மாத்திரை சாப்பிடறதில்லையா?ஹமாம் விளம்பரத்தில் வருவது போல்(பரு வந்துடும்,தன்னம்பிக்கையே போயிடும் இத்யாதி..)கை,கால் இழுத்துக்கும்,மூளை செயலிழுந்துடும் என்று பட்டியலிட்டு விட்டு உள்ளே படுக்க வைக்குமாறு ஏஞ்சலிடம்(அண்ணன் உ.த பாழையில்) சொன்னார்.முதல் உதவி ஆரம்பிக்கப்பட்டது
நான் அதற்குள் இன்ஷூரன்ஸ் பிரிமியம் எதாவது ட்யூ இருக்கிறதா?வரவேண்டிய பேமெண்ட்ஸ் என்னன்ன?கொடுக்க வேண்டிய கடன் பாக்கிகள் என்று புத்தி சகல திசைகளிலும் தறி கெட்டு ஓட ஆரம்பித்தது.இப்பல்லாம் 28 வயசுலயே ஸ்டிரோக் வருதுன்னு டாக்டர் சொன்னது நினைவுக்கு வர 17 வருஷம் போனஸோ என்றும் தோன்றியது.கை,காலகளை ஆட்டி பார்த்துக்கொண்டே இருந்தேன்.
விஷயம் தெரியப்படுத்தபட மனைவி,தம்பி எல்லோரும் வந்துவிட்டார்கள்.ரிஷப்ஷனில் இருந்த தினத்தந்தியில் எமன்(காலம்)பாசக்கயிற்றை வீசும் விளம்பரத்தை பார்த்தது வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது.அவ்வளவு சின்ன குறுகிய வாயில் வழியாக ஒரு எருமை வரும் காட்சியையும் கற்பனை செய்தும் பார்த்தேன்.
நோ சிகரெட்..நோ ஆல்கஹால்..நோ சால்ட்..நோ ஆயில்..நோ டென்ஷன்(இதை டாக்டர் சொல்லும்போது எனக்கு சிரிப்பு வந்தது.பின்ன? எத்தனை ரிமோட் உடைத்திருக்கிறேனே)சிரிப்பொலி,ஆதித்யா பாருங்கள்.நோ சீரியல்.நல்ல மீயூசிக்,மெடிடேஷன்..இன்னும்...
இப்படி ஏகப்பட்ட நோக்களையும்,எஸ்களையும் சுமந்து நொந்து வீடு திரும்பினேன்.மாத்திரை சாப்பிட்டு,நேற்று போட்ட என் மகள் பதிவிற்கு பதில் போட்டு விட்டு(இதுக்கு மட்டும் உடம்புல தெம்பு வந்திடுதுப்பா),நன்றாக தூங்கி இரவு 8 மணிக்கு வரட்டு சப்பாத்தி சாப்பிட்டு விட்டு ஒரு வாக்கிங் போனேன்.உடலில் பழைய தெம்பு வந்திருந்தது.கிளைமேட் இதமாக இருக்க ஒரு சிகரெட் பிடிப்பதை விட அப்போதைக்கு வேறு சுகம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை என்று சொன்னால் அது பொய்..(ஜமுக்காளத்தில் வடிகட்டிய).
முன்பு எழுதியது..
நில் என்றால்
ஓட்டம்
பேசு என்றால்
அதிமெளனம்
பேசாதே என்றால்
பேரிரைச்சல்
எல்லாவற்றிலும்
ஏறுக்கு மாறு
ஏட்டிக்கு போட்டி
உன் மனசில்
என்ன?
”மனசு”
என்ற நினைப்பா?
டிஸ்கி:பதிவர் ஜீவன் எழுதிய புகையை நிறுத்துவது எப்படி என்ற ஒரு பதிவு.எனக்கு மிகவும் பிடித்தது.அதன் சுட்டி இணைத்துள்ளேன்.மருத்துவர் தேவன்மயம் உயர் ரத்த அழுத்தம் தொடர்பாக எழுதியிருந்தால் சுட்டியை இணைக்கவும்
இருக்கை தேடி அமர்ந்து
சற்று ஆசுவாசம் ..
அப்புறம் ? நீங்க ..எங்க ..
வழித்துணைக்கு ஆள் சேர்த்தல் ..
குறும்பு செய்யும் குழந்தை .
விழுந்து விடுவானோ
பெருமையும் சற்று
பயத்துடனும் தாய்
ஆங்காங்கு சிணுங்கும் அலைபேசிகள் .
இப்பதான் ...கிளம்பிச்சு .
இன்ன பிற உரையாடல்கள் ..
கொஞ்சம் நேரம் ஆகட்டும் மாப்ள..
"மூடி திறக்கும் " தவிப்பில் 'மப்பர்கள் "
கடந்து செல்லும் சிற்றுண்டி
விற்பவனின் குரலிலும்
தெறிக்கும் பசி
பிச்சை எடுக்கவில்லையப்பா ..
பார்த்து கொடுங்கள்
மண்டியிட்டு சுத்தம் செய்பவனின்
பரிதாப பார்வையில்
பிச்சை பாத்திரம் ....
வெள்ளைத்தோல் காரியை
வெறித்து நோக்கும்
வெள்ளந்தி மனிதர்கள் ...
சேர்வதே நிச்சயமில்லை
எனினும்
திரும்பும் இடம்
பற்றிய கவலைகள் ..
பற்றியும் பற்றாமலும்
சுழன்று கொண்டேயிருக்கிறது
சக்கரம்
பின் குறிப்பு:ஏற்கனவே எழுதிய கவிதைதான்...திரும்ப வாசிக்கையில் சில திருத்தங்கள் தோன்றியது..மீண்டும் நண்பர்களுக்காக..