Friday, March 12, 2010

ஒரு காதலின் காதலனின் கதை..........


அவள் இந்த பக்கமாய்த்தான் வரவேண்டும். சொல்லி விட வேண்டும். அவள் அவள்தான். பெயர் ? உங்களுக்கு மிக பிடித்த பெயரை சொல்லிப்பாருங்கள். அதுதான் அவள் பெயர். மிக அழகான பெயர் என்று எதை நினைக்கிறீர்கள் ? அதுவும் அவள் பெயராக இருக்கலாம். இப்போதைக்கு அவள் !

அவள் அழகை பற்றி கொஞ்சம் ! இதுவரை வந்த அத்தனை வர்ணனைகளையும் தள்ளிவிடுங்கள். ஐஸ் வாட்டரால் முகம் கழுவிய பின் ஒரு ஃப்ரெஷ்னஸ் இருக்குமே. அப்படி இருப்பாள். ஆச்சர்யம் என்னவெனில் எப்போதுமே அப்படித்தான் இருப்பாள். பவளச்செவ்வாய் என்று சொல்ல முடியாது. ஆனால் அந்த கத்தி மூக்கு ஒன்று போதும். ஒரு விஷயம் . அவளுக்கு பயங்கரமாக கோபம் வரும்(என்று நினைக்கிறேன்). அது இன்னும் அழகு.

நான் அவளை முதலில் பச்சை தாவணியில்தான் பார்த்தேன். பள்ளி சீருடை அது. இவள் எந்த நடிகை மாதிரி இருக்கிறாள் என்று கொஞ்சம் ஆராய்ச்சியும் செய்தேன். வீண் வேலை. அவளை மாதிரி எந்த நடிகையும் இல்லை. பட்டாம் பூச்சியெல்லாம் படபடக்கவில்லை. லப் டப் அதிகமாகவில்லை. அவளுக்காக எதையும் செய்யலாம் என்றெல்லாம் எனக்கு தோன்றவில்லை. அதற்கெல்லாம் நேரமில்லை. ஒரு துளி நொடியை கூட நான் வீணாக்க விரும்பவில்லை. ஆமாம் ! அவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவளும் என்னைப் பார்த்தாள். ஆனால் நான் அவளைப் பார்த்தது போல் இல்லை . சாதாரணமாக பார்த்தாள். ஒரு சின்ன சிரிப்பும் கூட. சிநேகமாக. சரி அப்படித்தானே ஆரம்பிக்கும். பின் காதலாகி கசிந்துருகும். கற்பனையின் சுகமே சுகம்.

இந்த சனியன் .. அதான் காதல் வந்துவிட்டாலே தியரியே எப்படி மாறிவிடுகிறது ? தினப்படி காரியங்களைக் கூட அவள் அனுமதியுடன் தான் செய்ய வேண்டும் என்று நினக்கத் தொடங்கினேன். அதற்கு அவள் அருகிலேயே இருக்க வேண்டுமே. பொதுவாக காதலுக்கு நட்பு உதவும் என்பார்கள். ஆனால் நான் நண்பர்களையே விலக்க ஆரம்பித்தேன். “டேய் ! பொல்லாத காதல் : ஊர்ல இல்லாத சங்கதியா? ஏண்டா இப்படி திரியறே ? அவன் கேட்ட கேள்விக்கு நான் அவளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தேன் . மானசீகமாக லயித்து போய். அவளும் மென்மையான குரலில், எனக்கு மட்டுமே கேட்கும்படியாக பேசிக்கொண்டிருந்தாள்.

அவளுக்கு மழையில் நனைய பிடிக்குமாம். அவள் என்னிடம் சொல்லவில்லை. நானே தெரிந்து கொண்டேன் பின் ? காதலிக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று தெரியாதவன் எப்படி காதலனாய் இருக்கமுடியும் ? இதுவரை அவளுக்கு வேறென்னவெல்லாம் பிடிக்கும் என்ற முயற்சியில் இருக்கிறேன். அப்புறம் என்னை பிடித்திருக்கிறதா ? என்று அறிந்து கொள்ள வேண்டும் !

ஒரு மழை நேர மாலை. கொட்டித்தீர்க்கிறது. எனக்கு அவளை பார்க்க வேண்டும் போல் இருந்தது. நீங்கள் வீட்டு வாசல் உத்திரத்தில் மழைநீர் கம்பிகளாய் விழுவதை பார்த்திருக்கிறீர்களா? அவள் வீட்டு வாசலில் அப்படித்தான் விழும். அதை ரசித்துக் கொண்டே சாரல் பாவாடையை நனைக்க ஈரமாய் இருப்பாள்.

தெருவில் யாருமே இல்லை. இறங்கி நடந்தேன். ஒதுங்கியிருப்பவர்கள் என்னை கோட்டிக்காரனாய் பார்ப்பதை பொருட்படுத்தவில்லை. என்னவளுக்கு பிடித்த காரியத்தை செய்யும் பெருமிதம் என்னிடம் இருந்தது. அவள் தெருவில் நுழைந்தேன். நான் நினைத்த இடத்தில் அவள் இருந்தாள். மழைநீர் கம்பிகளாய் விழுந்து கொண்டிருந்தது. அவள் பாவாடை மட்டுமல்ல. தாவணியும் சாரலில் நனைந்திருந்தது. முகத்திலும் நீர் துளிகள். அவள் வீட்டை அடைந்ததும் அப்படியே நின்றேன். ஏனோ அவள் என்னைப் பார்க்கவில்லை. பரவாயில்லை. நானும், அவளும் அவளுக்கு பிடித்த செயலை ஒரே நேரத்தில் செய்வது எனக்கு சந்தோஷமாக இருந்தது. மழை இன்னும் வலுத்தது. நான் நின்று கொண்டே இருந்தேன்.

மழை லேசாக விட்டிருந்தது. குடையை மடக்கினேன். ஏனோ இப்போதெல்லாம் எனக்கு மழையில் நனையவே பிடிப்பதில்லை. சாலையில் தேங்கியிருந்த நீரில் நனைந்து புடவை கால் பகுதியில் ஈரம்.கொஞ்சம் வேகமாக நடந்தேன்.முன்பெல்லாம் யாரோ பின்னால் தொடர்ந்து வருவது போலவே இருக்கும்.இப்போது அப்படி தோன்றவில்லை. கொடிமரத்துமூலை வந்ததும் என்னையுமறியாமல் கால் இடறியது. கொஞ்சம் பாதுகாப்பான இடத்தில் இருந்ததாலோ என்னவோ இன்னும் அந்த சுவரொட்டி கிழியாமல் இருந்தது. அதில் வரையப்பட்டிருந்த கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவனை எங்கோ அடிக்கடி பார்த்தது போல் இருந்தது. சரியாக கவனம் இல்லை. ஏனோ மனசு அவனுக்காக அழுகிறது. யார் அவன் ? ஏன்?

31 comments:

Unknown said...

இந்தக் கதை புரியிற அளவுக்கு நான் இன்னும் பெரிய ஆள் ஆகலை பாஸ்.. மன்னிச்சிருங்க..

Unknown said...

அய் எனக்குத்தான் வடையா??

Paleo God said...

பதிவு காணாம போகறதுக்கு முன்னாடியே படிச்சிடறேன்..:)
----
@முகிலன்...

இன்னும் நான் வாங்கின வடையே கைக்கு வரல..:)

Anonymous said...

முகிலன்
//என்னவோ இன்னும் அந்த சுவரொட்டி கிழியாமல் இருந்தது//
இங்க இருக்கு ட்விஸ்ட்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அவளுக்கு மழையில் நனைய பிடிக்குமாம்.//

நான் ஷவரில் குளிக்க ஆரம்பித்தேன் :-))

Unknown said...

// சின்ன அம்மிணி said...
முகிலன்
//என்னவோ இன்னும் அந்த சுவரொட்டி கிழியாமல் இருந்தது//
இங்க இருக்கு ட்விஸ்ட்
//

நன்றி சின்ன அம்மிணி.. நீங்க சொன்னதை ஊன்றிப் படிச்சதும் இப்ப எல்லாமே குன்றிலிட்ட விளக்கு மாதிரி புரியுது..


அபாரமான கதை..

Unknown said...

இன்னொரு தடவை ஓட்டுப் போட முடியாதாமே?? ஐய்யோ...

Rajan said...

கவுதம் வாசு தேவ மேனன் ரிட்டர்ன்ஸ் !

Rajan said...

//சாலையில் தேங்கியிருந்த நீரில் நனைந்து புடவை கால் பகுதியில் ஈரம்//

சேலை கட்டி இருந்தீங்களா ?

Rajan said...

என்னவோ போங்க !

Mohan said...

முன்னுரையும்,முடிவுரையும் மட்டும் இருக்கும் இந்தக் கதை நன்றாக இருக்கிறது.

சைவகொத்துப்பரோட்டா said...

அந்த சுவரொட்டி "கண்ணீர் அஞ்சலியா", ஆம் என்றால்,
நான் கதையை புரிந்து கொண்டேன், சொல்லுங்க அண்ணாச்சி, சரியா.

vasu balaji said...

ஆஹா ஆஹா. இந்த மாதிரி சுவரொட்டி, ஃப்லெக்ஸ் பான்னர் பார்க்கறப்போ எரிச்சல் பட்டிருக்கேன். இதிலயும் இவ்வளவு சென்சிடிவ் விஷயம் யாருக்கோ இருக்கும்னு இப்போ புரியறது. டாப் க்ளாஸ்

Ashok D said...

அட.. கலக்கிட்டீங்க :)

உண்மைத்தமிழன் said...

எனது கண்ணீர் அஞ்சலி..! போஸ்டரில் இருக்கும் அவனுக்கும், கடந்து செல்லும் அவளுக்கும்..!

☼ வெயிலான் said...

நல்ல வர்ணனைகள்!

ராகவன் said...

Anbu Thandora,

eppadi irukireerkal??

niraiya naatkalaagi vittadhu ungaludan pesi...

romba nallayirukku... enakku kadaisi paththiyin kadaisi variyai padikkum varai indha kathaiyin iyakkam veru thalaththil irundhadhu enakku... kadaisi vari veroro arththaththai koduththadhu...

than mel kaathalulla pen... thirumanaththin munpu varaiyaaga irukkalaam... than thevaikalai, thanakku pidiththa vishayangalai innoru aalaai paarpaththu maathiriyum... thirumanaththirukku pinno allathu etho oru asampaavidhaththirkku pinno thevaikal maarippoi munnurimaikal veru idaththil iruppadhaaga irukkalaam endru ninaiththen...

nalla kathai...

anbudan
raagavan (thamil vaazhga!! aana font kidaikkalai officela...)

கலகலப்ரியா said...

அருமை மணிஜி... :(... மடித்த குடைகளுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் கம்பிக் கோர்வைகள் போன்று... எத்தனை ஆயிரம் குடைகள்... கம்பிகள் மற்றும் கதைகள்.... மீண்டும் மழை... கம்பிகளாக....

யுவகிருஷ்ணா said...

the best!

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு மணிஜி.

நேசமித்ரன். said...

ம்ம் தலைப்பு பார்க்கும்போதே நினைச்சேன் ஆனா பிரும்மாண்டம் பெட்ரோல் மழைத்தண்ணியில வானவில்லை குழைச்ச மாதிரில்ல படருது வாசிக்க வாசிக்க

சங்ககிரி ரமேஷ் said...

வாய்ப்பே இல்லைங்க...உருக்கமான கதை !!

prince said...

//ஏனோ மனசு அவனுக்காக அழுகிறது. யார் அவன் ? ஏன்?//
சுவரொட்டியும் தான் அழுகிறதே என்ன பிரயோஜனம்....காலம் கடந்துவிட்டது...அவனும்தான் மரித்துவிட்டான்..காலம் கடந்துவிட்ட குப்பைதொட்டி நினைவுகள் மட்டும் எதற்கு??? மறுசுழற்சி செய்ய முடியாதவை

Jackiesekar said...

கொடிமரத்துமூலை வந்ததும் என்னையுமறியாமல் கால் இடறியது.--//

அங்கதான் சென்டிமென்ட்... நல்லா இருக்கு...

காலில் புடவை ஈரம் அது போதும் மத்ததை எல்லாம் சொல்ல....

மணிஜி said...

வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி நண்பர்களே...

Unknown said...

நல்லா இருக்கு சார்.

நன்றி - பின்னூட்டத்தில் விளக்கமெல்லாம் கொடுக்காமல் இருந்ததற்கு

Kumky said...

நல்லாருக்கு மணிஜி..

:-))

போதுமா?

மரா said...

எங்கயோ போய்டீங்கண்ணே! எனக்கும் மெடிக்கல் காலேஜ் 1st கேட் கிட்ட போனா கால் இடறும்ணே!!!

பத்மா said...

அவள் தெரியாமல் யோசிக்கும் வரை நமக்கு மனம் கனக்கும். தெரிந்திருந்தால் ஐயோ !ஏன் தான் இப்பிடி எல்லாரும் சோகமா எழுதுறீங்க?:(.நல்ல கதை பாஸ்

Thamira said...

நன்றாக இருந்தது.

காஞ்சி முரளி said...

நல்லா இருக்கு....!

தண்டோரா......சார்...!
"கொடிமரத்துமூலை"யில் நானும் பார்த்தேனே...
அந்த கண்ணீர்...!
என் கண்ணில் படவில்லையே...?
ஹி..! ஹி..!
நமக்கும் அந்த இடமும், ஊரும் பழக்கம்தான் அண்ணாச்சி...!

நட்புடன்...
காஞ்சி முரளி.....