என் சில அனுபவங்களை கதையாக எழுதுகையில் அதில் உலக்ஸ் என்ற பாத்திரம் வரும். அவனுக்கு ஒரு வருத்தம் . ஏன் மாப்ளை என் போட்டோவையே போட மாட்டேங்கிறன்னு கேட்டான். போட்டேன்டா மாப்ளை . கேபிள் சங்கர் , ரமேஷ் வைத்யா, அகநாழிகை வாசு ஆகியோருக்கு உலக்ஸுடன் பரிச்சயம் உண்டு. மிக எளிமையான, வெகுளியான நண்பன் அவன்.
மெத்த படித்த மேதாவி நண்பர் அவர் . படித்த என்றால் ஆங்கில எழுத்துக்களை அடுக்கி போட்டுக் கொள்வது இல்லை. இலக்கியம் வகையறாக்களை . நாம் படித்திராத ஒரு எழுத்தாளனைப் பற்றியோ அல்லது எதாவது கவிதையைப் பற்றியோ நம்மிடம் சந்தேகம் கேட்பார் . நடுநிசியில் கூட . (நீங்க வெறும் தாஸா , இல்லை லார்டு லபக்தாஸா என்ற ரீதியில் ) . சும்மா ஈகோவை உரசிப்பார்ப்பதில் ஒரு ஆனந்தம். அவருடன் ஒரு சிறிய உரையாடல் .
தலைவரே . என்னை விட அறிவாளி யாரும் இருக்க முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் ஒரு பிரச்சனைக்கு செகண்டு ஒப்பினீயன் உங்க கிட்ட கேக்கணும் - அவர்.
இருங்க. முதலில் நீங்க அறிவாளியாங்கிறதுக்கே செகண்டு ஒப்பினீயன் தேவைப்படும் போல இருக்கே . (பழி !)
அறிவாளி ,புத்திசாலி, படிப்பாளி,படைப்பாளி என்ன வித்தியாசம் சொல்லலாம் ?
மதுரை அண்ணன் உடைத்து சொல்லிவிட்டார் .”கலைஞரைத் தவிர யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது” என்று. சிக்கல் தீர்ந்தது தலைவருக்கு. பட்டாபிஷேகம் நடக்கும்போது அண்ணனை மூலவராக்கி விட்டு, தளபதியை உற்சவராக்கினால் போதும். அவர் பாட்டுக்கு எழுத்துப் பணியை தொடரலாம் . (ஐயோ கொல்றாங்களே..)
மொபைல் அடித்தது . சாமி. வழக்கமாக முடி வெட்டும் நண்பர். சார் ஃப்ரீயா இருக்கு . வந்துடுறீங்களா? (மொபைல் எவ்வளவு செளகரியம் !)
குமாருக்கு போன் செய்தேன்.
குமார் . துணி எடுக்க வா . ஒரு செட் அர்ஜெண்ட் .
மீண்டும் என் மொபைல் அடித்தது.
சார் வீட்டுல இருக்கீங்களா?
நீங்க யாரு ?
நேர்ல வர்றேன் சார். பக்கத்துலதான் இருக்கேன்.
நீங்க யாருங்க ?
சிட்டி பேங்க் . கிரெடிட் கார்டு கலெக்ஷன் டிவிஷன் .
சே! இம்சை !!
இன்னொரு போன் வந்தது. (இப்ப இதான் லேட்டஸ்ட் ட்ரெண்டு . போன் இல்லைன்னா மெயில்)
நான் உங்க முதன்மையான வாசகன் சார் !
சமயங்களில் எழுதவும் செய்வீங்களோ ? (அட! அவர் இல்லீங்க)
உங்களுக்கு மாதுன்னா ரொம்ப பிடிக்குமோ ?
ஏன் கால் இல்லைன்னா கூட பிடிக்குமே .
இல்லை உங்கள் கதைகளில் ..
நிறுத்துங்க. முதல்ல கதைன்னு ஒத்துகிட்டதுக்கு உங்க காலை கொடுங்க !
அதில்லை சார். கிட்ட தட்ட எல்லாக் கதைகளிலும் மாதுன்னு ஒரு பேர் வருதே. அதான் .
சப்பை மேட்டர் . ( கவனிக்கவும்... இந்த வார்த்தை வெட்டி ஒட்ட உதவலாம் )
இயக்குனர் கற்றது தமிழ் ராம் சொன்ன ஒரு சம்பவத்தை “கடைசி பெட்டியிலிருந்து சில குறிப்புகள் “ என்று புனைவாக்கியிருந்தேன் . அதைஅவர் படிக்க லிங்க் கொடுத்தேன். படித்து விட்டு அழைத்தார் . நல்லாயிருக்கு தோழர் . நான் அந்த சம்பவத்தை வைத்து ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதை முடிந்தால் நீக்கி விடுங்களேன் என்றார் . நீக்கி விட்டேன். ராம் காட்சி என்ற பெயரில் வலைமனையில் எழுதுகிறார் . எல்லாம் ஏற்புடைய கருத்துக்கள் இல்லை. என்றாலும் அவரின் வலிமையான எழுத்துக்களுக்காக படிக்கலாம். படிங்களேன் . சனிக்கிழமை சந்திப்புக்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார் .பார்க்கலாம் .
பாஸ்கர் சக்தியின் சிறுகதைகளை துண்டு துண்டாக படித்திருந்தாலும், அவரின் முழு தொகுப்பான கனக துர்கா வை (அவர் அன்பு கையெழுத்துடன்) காசு கொடுத்து வாங்கி படித்தேன் . எளிமையான எழுத்து . இயல்பாக தெறிக்கும் நகைச்சுவை . எனக்கு இரண்டு கதைகள் மிகவும் பிடித்திருந்தது . ”ஏழு நாள் சந்திரன்” என்றொரு சிறுகதை . சித்தப்பா என்ற குணசித்திரம்தான் இந்த கதையில் மையம் . “புடிச்சா பண்ணிப்பாத்துரணும் . புடிக்கலின்னா விட்டுட்டு போறோம்” இதான் அவர் பாத்திரத்தின் தன்மை. அண்ணன் மகனுடன் அவர் காட்டும் சிநேகிதம் , ஊர் குடியானவர்களிடம் அவரின் தோழமையும் ,கரிசனமும் . அண்ணனிடம் மூளும் பகை . அருமையான சித்தரிப்புகள் . பழகின மாடு போல் சீரான நடை .
மற்றொரு சிறுகதை “அழகர் சாமியின் குதிரை “ ஒரு அருமையான மண் மணம் கமழும் கிராமத்து கதை . சாமியின் மரக்குதிரை களவு போகிறது . ஊள்ளூர் கோடாங்கியை புறக்கணித்து விட்டு மலையாள குறி சொல்பவனை அழைத்து வருகிறார்கள் . காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கிறார்கள் . மலையாள குறிகாரன் யதேச்சையாக ஏதோ சொல்ல , ஒரு நிஜ மட்ட குதிரை ஊருக்குள் வருகிறது . பின்னாடியே அந்த குதிரைக்கு சொந்தக்காரனும் வருகிறான் . ஊர் கோடாங்கியின் மகளுக்கும், ஒரு இளவட்டத்துக்கும் காதல் டிராக் ஓடிக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் சினிமாவுக்கு ஏற்ற கதை. சமீபத்தில் வம்சி வெளியீட்டு விழாவில் பாஸ்கரை சந்தித்தேன் . இந்த கதையைப் பற்றி பேசும்போது சொன்னார். வெண்ணிலா கபடிக்குழு சுசீந்திரன் அதை திரைப்படமாக்குகிறாராம். ஸ்கிரிப்ட் பாஸ்கர் சக்தி. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் நண்பரே . நிச்சயம் ஏமாற்றாத கதை.
நாளை முதல்
நீளத்தொடங்கும்
தனிமை
ஜெட்லாக் பற்றிய
மருமகளின் சந்தேகத்தை
தீர்த்துக் கொண்டிருக்கிறான்
ஒரே மகன்.
25 comments:
கவிதையில் கரைந்து,உறைந்து போனேன் மணி,[அப்புறம் எங்க அண்ணன் அழகிரி மேட்டர் கலக்கல்.]
நானும் கொஞ்சம் ஓட்டும் கமெண்ட்டும் போட்டுக்கறேன்...
பிரபாகர்.
Still no comment, but 7 vote in tamilmanam (including my vote). What is happening?
:)
ராம் என்ன சொல்ல ஏற்கனவே சொன்ன மாதிரி அவர் சிறந்த எழுத்தாளர் இல்லை சிறந்த பேச்சாளர்.அவர் இன்று எழுதியதைப் பதிவர்கள் சந்திப்பில் பேசியிருந்தால் கைத்தட்டல் அள்ளியிருக்கும்.
அங்கு போட முடியவில்லை அதான் இங்கு இதை சொல்கிறேன்.
எனக்கு பின்னூட்டங்களால் பிரச்சனை இல்லை ஏன் என்றால் வருவதே இல்லை.வர வர உங்கள் மீதும் பொறாமை வருகிறது.
மணிஜி.. உலக்ஸ் போட்டோ வரலை ஏன்?
அப்புறம் அந்த அறிவாளி(?) பெயர் எனக்கு தெரியும் சொல்லட்டுமா?:)
//எறும்பு said...
Still no comment, but 7 vote in tamilmanam (including my vote). What is happening?
:)//
:)). may be basic manners. when maniji is talking we should only listen=))
நல்லாவே பேசறீங்க சார்:))
//நாளை முதல்
நீளத்தொடங்கும்
தனிமை//
வரமென்றும் சொல்லலாமே...
முத்தாய்ப்பாய் வந்த கவிதையும் நன்றாக இருந்தது.
அஞ்சா நெஞ்சன் மேட்டர் சூப்பர்
யாருஜீ அந்த அறிவாளி..!!
பேசுங்க...பேசுங்க...
பழகின மாடு போல் சீரான நடை .
அழகான கற்பனை.
உலக்ஸ் என்ற பேரின் அர்த்தம் என்ன?
/ நாய்க்குட்டி மனசு said...
பழகின மாடு போல் சீரான நடை .
அழகான கற்பனை.
உலக்ஸ் என்ற பேரின் அர்த்தம் என்ன?//
உலகநாதன்...
ரைட்டு ..
//.. ஏன் கால் இல்லைன்னா கூட பிடிக்குமே ..//
:-))
கவிதை நல்லாருக்குங்க..
கவிதை கலக்கல்.
ஜீ. இந்த வருடமாவது ஏதாவது செய்யுங்க.
பழகின மாடு போல் சீரான நடை .
கவிதை என்று தலைப்பிட்ட வரியை
தெர்மகோல் பஞ்சாக்கி விட்டது இந்த முத்து
//நாளை முதல்
நீளத்தொடங்கும்
தனிமை
ஜெட்லாக் பற்றிய
மருமகளின் சந்தேகத்தை
தீர்த்துக் கொண்டிருக்கிறான்
ஒரே மகன்.//
ஜீ இனி மேல் இந்த மாதிரி எழுதினா வீட்டுக்கு ஜெட் வரும்!!!
ஏன்யா இப்படி எழுதி எங்க எழுத்து மேல எங்களுக்கு இருக்குற
கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் கப்பல்ல ஏத்துறீரு......
நல்லா இரும்யா....
பொளச்சு போங்க "கவிதை அருமை"
அந்த உலக்ஸை எனக்கும் அறிமுகப்படுத்தி வைங்கண்ணே..!
அபாரம்..
நொடிகளில் கை பிடித்து வேகமாய் இழுத்துச்செல்கிறது உங்களின் எழுத்து.
இரண்டு முறை படித்து பாறைக்கு பாறை தவித்தாவி வேறு வேறு உலகங்களை பார்த்துக்கொள்ள ஏதுவாயிருக்கிறது..
வெகு சீக்கிரமே அவசியமில்லாத வார்த்தைகளையும், அலங்கார எழுத்துக்களையும் கலைத்து தூர எரிந்து.,
வெகுதூரம் அழைத்து வந்துவிட்டீர்கள் எங்களை..
சமயங்களில் வேறெதுவும் படிக்க பிடிக்காமலாகிவிடுமோ என்ற அச்சமும் எழாமலில்லை..
போட்டோவை க்ளிக்கி உலக்ஸையும்,
ஒய்யாரமான உங்களையும் சரிபார்த்துக்கொண்டேன்..
//நாளை முதல்
நீளத்தொடங்கும்
தனிமை
ஜெட்லாக் பற்றிய
மருமகளின் சந்தேகத்தை
தீர்த்துக் கொண்டிருக்கிறான்
ஒரே மகன்.//
யோவ்.. :-)
வருகைக்கும், கருத்துப்பகிர்வுகளுக்கும் நன்றி நண்பர்களே !
கொஞ்சம் பேசி, நிறைய பேச வைப்பது..இது தான் ஜி..மணிஜி.
வழக்கமான சுவாரசியம் பதிவில். கவிதை எளிய வரிகளில் பல திசைகளில் பாய்கிறது.!
Post a Comment