சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின் ஒரு கட்டுரையை படித்தேன். கடிதம் பற்றிய அருமையான எழுத்தாக்கம் அது. நாம் எல்லோருமே ஒரு கடிதம் போல் வாழ்க்கையில் பயணித்திருப்போம். அல்லது முகவரி தவறாக எழுதப்பட்ட ஒரு கடிதம் போல் அலைகழிக்கபட்டிருப்போம். இன்று எழுதுவது என்பது கணினி மயமாகிவிட்டது. என்றாலும் கடிதம் பற்றிய நினைவுகள் நிச்சயம் எல்லோரிடமும் மிச்சம் இருக்கும். வேலை நிமித்தம் வெளியூர் சென்ற கணவர்கள் தபாலில் நடத்திய தாம்பத்தியங்கள், பட்டாளம் சென்ற மகன் மனைவிக்கும், பெற்றோருக்கும் எழுதிய தனித்தனி உறையிடப்பட்ட அஞ்சல்கள். சில கடிதங்கள் மரியாதை நிமித்தம் ஒரே கடிதமாக இருக்கும். பெரியவர்கள் வாசித்து விட்டு இணக்கமாக இருந்தால் மருமகளிடம் கொடுப்பார்கள்.அல்லது "உன்னைய கேட்டு எழுதியிருக்கான்" என்று ஒற்றை வரியில் முடித்து விடுவார்கள். இன்னும் வேலைக்கான நேர்முகம், உங்கள் கதை பிரசுரத்திற்கு ஏற்கபடவில்லை. இக்கடிதம் கொண்டு வரும் நபர் வசம் அதை கொடுத்து விடவும். இத்யாதிகள்..
நான் தஞ்சையிலிருந்து மெட்ராஸ் கிளம்பும்போது அம்மா 50 சுய விலாசமிட்ட தபால் கார்டுகளை கொடுத்தாள். “நீ ஒன்றும் எழுதவே வேண்டாம் “ வாரம் ஒன்று அஞ்சல் செய்தால் போதும் என்றும் சொன்னாள். நம்ம சோம்பேறித்தனம் தெரிஞ்சதுதானே !!
முன்பெல்லாம் வீடுகளில் கடிதம் வைக்க ஒரு நீண்ட கம்பி இருந்தது. அதில் தேதி வாரியாக கடிதங்களை சொருகி வைப்பார்கள். "ஆசிர்வாதம்" உபயகுசலோபரி" ஷேமம். ஷேமத்தை தெரிய படுத்தவும். நலம் . நலமறிய ஆவல்" வீடு மாறி விட்டோம். புதிய முகவரி. மஞ்சள் தடவிய காது குத்து, சீமந்தம், புண்யாசனம், அறுபது விழா, "இந்த மாதமாவது பணம் அனுப்ப முடியுமா?" ”நீங்கள் அடகு வைத்த நகை வட்டி அதிகமாகி விட்டதால்” என்று செட்டி கடைகளின் அறிவிப்புகள் என்று கடிதம் சொல்லாத தகவல்களே இருக்காது. காதல் கடிதங்கள் இதில் சேர்த்தி இல்லை. (தயவு செய்து படித்தவுடன் கிழித்து விடவும்) எனக்கு வந்த முதல் காதல் கடிதத்தை நான் முதலில் படிக்கவில்லை என்றால் நம்புவீர்களா? நடந்தது என்னன்னவென்றால் "கடிதத்தை” எதிர்பார்த்து அவள் தெருவில் செல்லும்போது, அவள் கடிதத்தை கீழே போட , நான் எடுப்பதற்குள் அந்த தெரு சண்டியர்கள் கடிதத்தை கைப்பற்றி விட்டனர் (எங்க ஏரியா : உள்ளே வராதே !) முதலில் அவர்கள்தான் அக்கடிதத்தை வாய் விட்டு படித்தனர். அந்த முதல் காதலியின் முதல் கடிதம். எண்ணற்ற எழுத்து பிழைகளுடன் இருந்ததை இங்கு நான் குறிப்பிட விரும்பவில்லை.
சில வருடங்களுக்கு முன் ஒரு குறும்பட போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. முதல் பரிசு பெற்ற படத்தின் பெயர் எனக்கு சரியாக நினைவில்லை. பெங்களூரு சிருஷ்டி கல்லுரி மீடியா மாணவிகள் இயக்கியிருந்த படம். ஏதோ இந்தி பெயர். பெயரில் என்ன இருக்கிறது. ஆனால் இன்றளவும் அந்த கதை எனக்கு நினைவில் இருக்கிறது. 10 நிமிட படம்தான். ஒரு பெண் தன் சினேகிதிக்கு ஒரு கடிதம் எழுத நினைக்கிறாள். ஒரு தபால் அட்டையிலோ அல்லது அஞ்சல் உறையிலோ அல்ல. அவளுக்கு தோன்றுவதை எல்லாம் நேரம் கிடக்கும் போதெல்லாம் எழுதி கொண்டே இருக்கிறாள். கடிதத்தை முடிக்க அவளுக்கு மனமே வரவில்லை. வீடு, வயல்வெளி, மலை அடிவாரம் எல்லா இடத்திலும் அமர்ந்து அவள் ரசிப்பதை பகிர்ந்து கொள்கிறாள். இறுதியில் ஒரு வழியாக கடிதத்தை நிறைவு செய்து அஞ்சல் செய்து விட்டு பதிலுக்காக காத்திருக்கிறாள். தோழி தனக்கு என்னவெல்லாம் பதில் எழுதுவாள் என்பதை சிறு பாட்டாக பாடி பார்ப்பாள். மிக மெலோடியான ட்யூன். கவிதையாக வரிகள். இறுதியில் கடிதம் ஆள் இல்லையென்று திரும்பி விடுகிறது.
அந்த படத்தின் பெண் இயக்குனரின் பெய்ர் அப்போதே வாயில் நுழையவில்லை. ஏதோ கொங்கணி பெண் பெயர். தன் டீச்சரின் அனுபவம் அது என்று கூறியது நினைவிருக்கிறது. அவர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இருந்தது. இப்போது தேட வேண்டும்.

28 comments:
ஒரு ஜடியா
பதிவர்களுக்குள்ளே கடிதம் எழுதி , தபாலில் சேர்பித்து , கடிதம் பெற்ற பதிவர் பதிவாய் போட்டால் எப்படி இருக்கும்?
சார்! இது என்ன கனவா? உங்கள காந்தீய கிராமங்கள்ல பாலோயர்ஸ் பட்டியல்ல பாத்ததும் சந்தோசம் தாங்கலை.
நீங்க தானா தல! நன்றி நன்றி சார்!
புல் மேக்கப்புல தோள்பையோட நிக்குறதை பார்த்தா எங்கயோ போற மாதிரி தெரியுதுண்ணே..?
நித்தி ஆசிரமத்துக்கா..?
தினம் இப்படி போட்டு தாக்கினா எப்படி ஜி:). ஆஹா. புகைப்படத்தில் என்ன ஒரு சாந்தம்?
//நான் தஞ்சையிலிருந்து மெட்ராஸ் கிளம்பும்போது அம்மா 50 சுய விலாசமிட்ட தபால் கார்டுகளை கொடுத்தாள். “நீ ஒன்றும் எழுதவே வேண்டாம் “ வாரம் ஒன்று அஞ்சல் செய்தால் போதும் என்றும் சொன்னாள்.//
அம்மா!
கடிதங்கள் பற்றிய நினைவுகளும் குறும்படப் பகிர்வும் அருமை!
கடிதம் - கலக்கல் அண்ணே,
ஆமா, இந்த பதிவுக்கும் அந்த போட்டோவுக்கும் இன்னா கனிக்ஷன்????
பல்வேறு கடிதங்கள் பற்றிய பகுதி ரொம்ப ரசித்தேன்; எஸ். ரா பற்றிய பதிவு என்பதாலோ, என்னவோ அவர் போல் கொஞ்சம் எழுதிருக்கீன்களோ??
அண்ணே மேட்டர் ஓகே. ஆனா உங்கள எடுத்த போடோகூட மப்புல இருக்கிற மாதிரியே இருக்குது.
:)
ஆமாண்ணே கடைசியா காதல்கோட்டை படத்துல கடிதத்த பார்த்தது. அப்புறமா சமீபத்துல பொக்கிஷம் படத்துலதான் கடிதம் எழுதுற ஸீன் வந்துருக்கும்னு நினைக்கிறேன்.
இதுமாறியே கொஞ்சமா பேசுங்க.. அப்பதான் படிக்க வசதியாயிருக்கு...
//இதுமாறியே கொஞ்சமா பேசுங்க.. அப்பதான் படிக்க வசதியாயிருக்கு...//
Repeateyy
//அந்த முதல் காதலியின் முதல் கடிதம். எண்ணற்ற எழுத்து பிழைகளுடன் இருந்ததை இங்கு நான் குறிப்பிட விரும்பவில்லை.//
//அந்த முதல் காதலியின் முதல் கடிதம். எண்ணற்ற எழுத்து பிழைகளுடன் இருந்ததை இங்கு நான் குறிப்பிட விரும்பவில்லை.//
அண்ணே...அவுக இப்ப அமெரிக்காவுலதான இருக்காக.எனக்குத் தெரியும்.கடித இலக்கியத்துக்கென்றே இதழ் நடத்தியவராயிற்றே நம்ம தஞ்சை
ப்ரகாஷ்.
//நித்தி ஆசிரமத்துக்கா..?
//
அப்படி தான் தோணுது....
//எனக்கு வந்த முதல் காதல் கடிதத்தை நான் முதலில் படிக்கவில்லை என்றால் நம்புவீர்களா?//
ஹ்ம்ம் இங்கேயும் அதே கதை தான். ஆனால், சண்டியர்கள் என் பெற்றோரும், சகோதரிகளும். எனக்கு ஒருத்தி கடிதம் எழுதிய விஷயத்தை 15 வருஷத்துக்குப் பிறகு தான் சொன்னாங்க :-(
கலக்கல் சார்..
/////////பதிவர்களுக்குள்ளே கடிதம் எழுதி , தபாலில் சேர்பித்து , கடிதம் பெற்ற பதிவர் பதிவாய் போட்டால் எப்படி இருக்கும்?////
காவெரி கனேஷ் அய்யா, நீங்க அம்புட்டு ப்ரீயாவா இருக்கீங்க ??
உங்கள் எழுத்து நடை மிகவும் வசீகரித்தது!
// முன்பெல்லாம் வீடுகளில் கடிதம் வைக்க ஒரு நீண்ட கம்பி இருந்தது. அதில் தேதி வாரியாக கடிதங்களை சொருகி வைப்பார்கள். "ஆசிர்வாதம்" உபயகுசலோபரி" ஷேமம். ஷேமத்தை தெரிய படுத்தவும். நலம் . நலமறிய ஆவல்" வீடு மாறி விட்டோம். புதிய முகவரி. மஞ்சள் தடவிய காது குத்து, சீமந்தம், புண்யாசனம், அறுபது விழா, "இந்த மாதமாவது பணம் அனுப்ப முடியுமா?" ”நீங்கள் அடகு வைத்த நகை வட்டி அதிகமாகி விட்டதால்” என்று செட்டி கடைகளின் அறிவிப்புகள் என்று கடிதம் சொல்லாத தகவல்களே இருக்காது. காதல் கடிதங்கள் இதில் சேர்த்தி இல்லை. (தயவு செய்து படித்தவுடன் கிழித்து விடவும்)//
அருமை மணிஜி!
அழகு
நல்லா இருக்கு பதிவு. போட்டோல ஆரு அது அவ்வளவ்வு சாந்தமா நிக்கிறது.
Good.:-))))
இன்னும் நிறைய பேசுங்கண்ணே
காவேரி நன்றி..நான் ரெடி.
சாந்தி..உங்களுக்கு பின்னூட்டம் இட்டிருக்கிறேன். நன்றி
உ.த. அண்ணே ! ஆமாம்..ஒரு சம்சாரி சராசரி ஆகக்கூடாதா?
பாலா..அது வேஷம்.. நன்றி!
ராமலக்ஷ்மி மேடம் நன்றி..தலைநகர் எப்படி?
தராசு அண்ணே! நன்றி..
நன்றி மோகன்குமார்..
எறும்பு..சேதி தெரியாதா? டாஸ்மாக்கிற்கு நான் தான் பிராண்ட் அம்பாசிடர்..
நன்றி கவிசங்கர்..
நன்றி அஷோக் & டி.வி.ஆர்
மயில் உனக்கெப்படி தெரியும்?
ஜெட்லி..ஆமாம்யா !
கேவிஆர்..இப்ப மட்டும் என்ன? படிங்க!
நன்றி திவ்யாஹரி..
நன்றி ரவி...அதென்ன அப்படி ஒரு பதில் சொல்லியிருக்கீங்க?
நன்றி மோகன்..
யோவ்வ்வ்வ்வ்..நன்றியா!!!
நன்றி வினோத.
நன்றி இராமசாமி..
நன்றி ஸ்ரீ..
கதிர் நன்றி..
ரொம்ப நாளாச்சு..
சலவை பவுடர் போட்டு ரெண்டு நாள் ஊறவச்சு அடிச்சு தொவைச்சு காயப்போட்டும் திருப்தி வராத டிபார்ட் ”மெண்டல்..திரும்ப சலவைபவுடரோட வந்துடறானுங்க..தினசரி இதே பொழப்பா போச்சு...நம்ம கதய விடுங்க...
ஏன் எப்போதும் எழுதுன விஷயத்த விட்டுட்டு உங்களையே யோசிக்கிறாங்க...அந்தளவு மனசுல எளிமையா பதிஞ்சுட்டீங்க போல..
கடித நினவுகளில் சீனியாரிட்டியும் மெச்சூரிட்டியும் அபாரமா இருக்கு...
வார்த்தைகளை போறபோக்கில் தூவிட்டே போயிடறீங்க...நாங்கதான் அங்க அங்க நின்னு நிதானிச்சு வரவேண்டியதா ஆகிடுது...
போட்டோ என் கண்ணுக்கும் கொஞ்சம் மப்பாத்தான் தெரியுது...அது நம்ம கண்ணு குத்தமா இல்ல போட்டோ மட்டமான்னுதான் தெரியல...பின்னூட்டங்கள்ல தோஸ்த்துங்க நெறய பேரு சொல்லியிருக்கறத பாத்தா போட்டோதான் மப்பாட்டமிருக்கு...
எல்லாத்துக்கும் ஒரேவிஸ்கா(ஆப்பிசர் உபயம்) நன்றி சொல்லீட்டு போயிருவீங்க...தனித்தனியா சொன்னாத்தானே ஒரு நிதா(மறுபடியும் ஆபிசர் உ) இருக்கும்
ஓ..
பதிவ படிச்சுட்டு பழைய கியாபகத்துல பின்னூட்டிட்டேன்..
அல்லாருக்கும் நன்றி சொல்லியிருக்கிங்களே..நல்ல வேளை தலைக்கு பின்னாடி இன்னும் ஒளிவட்டம் வரலை சாமியோ..
:-))
கும்முனுனதுக்கு நன்றிங்கண்ணா..கும்கினா !
ஆமாம், படத்துல ஒரு மகான் இருக்கறாரே அவரு யாரு?
Post a Comment