Monday, March 29, 2010

ஜோரா கைத்தட்டுங்க.............


ஏதாவது எழுதணும் ..என்ன எழுதறது ? சரி சும்மாதானே இருக்கோம் . சும்மா எதாவது எழுதி வைப்போம்ன்னு ஆரம்பிச்சு . அட சும்மா பத்தி எழுதிட்டேன் .

நாம எல்லோரும் தினம் ஒரு தடவையாவது சும்மா ங்கிற வார்த்தையை சொல்லாம பயன் படுத்தாம இருக்கோமா? சும்மா சொல்லுங்க ..

எங்க எந்த பக்கம் ? சும்மாதான். என்னா மச்சான் இவ்வளவு நேரம் . எந்த ராத்திரியிலே போன்?. சும்மாதாண்டா ...

சரி எந்த சும்மாங்கிற வார்த்தையின் உண்மையான அர்த்தம் பார்க்கலாம் ன்னு ஒரு தமிழ் அகராதியை தேடி பிடிச்சா ..அதுல சும்மாங்க்கிற வார்த்தையே காணும் ?

நான் தஞ்சையில் பிளஸ் ஒன் படிக்கும் போது , முத முறையா பொம்பளை புள்ளைங்க கூட படிச்சேன் ..அரை டிராயர் லேந்து வேட்டிக்கு மாறின பருவம் ..பயலுங்க எல்லாம் தேன் குடிச்ச நரியா திரிஞ்சோம் ...அப்பா இங்கிலீஷ் வாத்தியார் (ஹநிப் )டேய் ,என் கிளாஸ்லே ஒரு பயலும் தப்பி தவறி கூட தமிழ்லே பேசக் கூடாது. இங்கிலிஷ்லேதான் பேசனும்னு சொல்லி விட்டார் ..அதுலேந்து பயலுக ஒருத்தனும் வாயே தொறக்க மாட்டானே ..எதுக்கு பிள்ளைங்க முன்னாடி அசிங்கபட்டுக்கிட்டுனுதான் ?

ஒரு
நாள் நம்ம உலக்ஸ் (உலகநாதன் )கொட்டாவி விட்டான் ..வாத்தி பாத்துட்டு ..வாட் ஆர் யூ ட்யுஇங் மேன் ?ன்னாரு ? நம்மாளு உடனே சார் நான் பாட்டுக்கு சும்மா சிவனேன்னு இருக்கேன் சார் ன்னான் . வாத்திக்கு வந்ததே கோபம் ..சும்மா ன்னா என்ன ? சிவனேன்னு நா என்னன்னு போட்டு காயடிச்சுட்டார் .. நாம ஆளு க்கு அவமானமா போச்சு ..ஏன்னா அப்பத்தான் அவன் உமா ராணியை பிக்கப் பண்ணிக்கிட்டு இருந்தான் .. எப்படி ரா இவ்வளவு கன்பார்மா அவ உன்னை லவ் பண்றான்னு சொல்லறேன்னு கேட்டா ? பின்ன சும்மா என்னையே தான் பாத்துகிட்டு இருக்கா பாரேனாணன் ...

அப்புறம் ஒரு சினிமா பாட்டு சும்மா ..சும்மா ன்னு . சும்மா இருக்கும் போதெல்லாம் சும்மா சும்மா ன்னு கேட்டு அந்த பாட்டு சூப்பர் ஹிட்டு ....

சும்மா சொல்லக் கூடாது . சும்மா இருக்கிறதுலே ஒரு சொகம் இருக்கத்தான்யா இருக்கு சென்னை பாழையிலே சொம்மா கெட ...நை நை னுட்டு ..

சரி சும்மா இருக்கும்போது படிச்சுப் பாருங்க ...

கடந்த 27/03/10 நடந்த பதிவர் சந்திப்பு அன்று நமக்கான குழுமம் ஆரம்பிப்பதற்கான ஆலோசனை கூட்டம் பல பேரின் ஆழ்ந்த ஆலோசனைகளுக்கு பிறகு, சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் என்று ஒரு ஏரியாவாகவும், இணைய எழுத்தாளர் என்பதை விட வலைப்பதிவர் என்பது தனி அந்தஸ்தை கொடுக்கும் என்று பலரும் கருதியதால் சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் என்பதை தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் என்று ஒரு மனதாய் தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறது.

பிரபல எழுத்தாளர் ஞானி, தன்னுடய சங்க அனுபவங்களை பற்றி கூறி, நிச்சயமாய் ஒரு போரமாய் இல்லாமல் ஒரு சங்கமாய் செயல்பட்டால் என்ன செய்ய வேண்டும், என்ன என்ன பிரச்சனைகள் வரும் என்பதை பகிர்ந்து கொண்டார். சங்கமாய் ஆரம்பிப்பது நல்லது என்றும் சொன்னார்.

இன்னும் சில பேர் இப்போதைக்கு பதிவு செய்யப்பட்ட சங்கமாய் இருப்பதை விட விர்சுவலாய் ஒரு குழுமத்தை அமைத்து அதிலிருந்து நாம் அடுத்த கட்டத்தை நோக்கி போவோம் என்று சொன்னார். அதனடிப்படையில் முதற்கட்டமாய் நம்முடைய குழுமத்தை ஆரம்பிப்போம்.தமிழில் எழுதும் உலகில் உள்ள எல்லா வலைப்பதிவர்களும் இதில் இணைந்து கொள்ளலாம்.

இணைத்துக் கொள்ள உங்களது இணைய முகவரி, மின்னஞ்சல், தொடர்புக்கான தொலைபேசி எண்கள், போன்ற விபரஙக்ளோடு நமது tamilbloggersforum@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் உடனடியாயாக உங்களுக்கான இன்விடேஷன் அனுப்பப்பட்டு இணைக்கப்படும்.

அதன் பிறகு நமது எல்லா குழும நண்பர்களூடனும் குரூப் மெயிலின் மூலம் பரிச்சயபடுத்திக் கொள்ள முடியும். இது ஒரு முதல் படியே மேலும் என்ன என்ன செய்யலாம் என்பதை பதிவர்கள் அவர்களது ஆலோசனைகளை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்டு ஒன்று சேர்ந்து குழுமத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சொல்வோம் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் உங்களுக்கு நமது குழுமத்திற்கான ஆலோசனைகளை வரவேற்கிறோம்.

35 comments:

வானம்பாடிகள் said...

ச்ச்சும்மா அசத்துவோம் வாங்க:)

butterfly Surya said...

சும்மா சொல்ல கூடாது. நிஜம்மாவே குழுமம் தானே..?

வாழ்த்துகள் மணிஜீ.

டாடி, பையன் பின்றான்.

செந்தில் நாதன் said...

விர்சுவல் குழுமத்திற்க்கு ஆதரவு தரும் ஒரு பார்வை :

http://blogsenthilnathan.blogspot.com/2010/03/blog-post_28.html

முகிலன் said...

ஏண்ணே,
சும்மா மெயில் மட்டும் அனுப்புனா போதுமா?
சும்மாவே மெம்பர்ஷிப் தர்றீங்களா??
சும்மா வெட்டியா கதை பேசிக்கிட்டு இருக்காம, நல்ல ஒரு முடிவெடுத்திருக்கீங்கண்ணே..

சும்மா சொல்லக்கூடாது உண்மையிலயே நல்ல முயற்சி.. அதோட நீங்க மட்டும் தான் சும்மா யாரு வேணும்னாலும் இந்த குழுமத்துல பங்கேற்கலாம்னு சொல்லியிருக்கீங்க.

மத்தவங்க எல்லாம் சும்மா நடந்ததைப் பத்தி பேசியிருக்காங்களே ஒழிய யார் யாரெல்லாம் பங்கேற்கலாம்னு போடவே இல்லை.

சும்மா பிடிச்சிக்குங்க ஒரு நன்றியை.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ரைட்டுங்க..!

D.R.Ashok said...
This comment has been removed by the author.
D.R.Ashok said...
This comment has been removed by the author.
மணிஜீ...... said...

//D.R.Ashok said...

அ for அசோக்கு தானே ;)
//

அடங்குன்னு அர்த்தம். அசோக்.. உங்கள் இடுகையின் அர்த்தம் என்ன? தேவையில்லாமல் ஜாதி சாயம் ஏன்? உங்கள் அறிவுக்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது என்று தோன்றுகிறது. இனி நீங்கள் இங்கு பின்னூட்டம் இட வேண்டாம். இதற்கு பதில் உள்பட...

~~Romeo~~ said...

சும்மா நானும் எழுதினேன்னு ஒப்பேத்திட்டு போக கூடாது..

திவ்யாஹரி said...

ஓகே சார்.. நாங்களும் உண்டா? மெயில் பண்ணலாமா?

மோனி said...

குயுமம் ஆரம்பிக்குறதுல இவ்ளோ நடந்திருக்கா?

மங்குனி அமைச்சர் said...

யப்பா எங்களையும் சேத்துக்க, நம்ம கொன்னு கொன்னு விளையாடலாம்
சார் நான் "சும்மா" அப்படின்னு இனி சும்மாகூட சொல்லமாட்டேன் ,
அப்புறம் இப்ப சும்மாதானே இருக்கோம்ன்னு மெயில் அனுபிட்டேன்

Vidhoosh said...

சரிங்க. இப்போதான் மெயில் அனுப்பிட்டு வரேன். :)

Sukumar Swaminathan said...

வாழ்த்துக்கள்.. இணைவோம் ..உயர்வோம்

தீப்பெட்டி said...

வாழ்த்துகள்..

:)

கே.ரவிஷங்கர் said...

//விர்சுவலாய் ஒரு குழுமத்தை அமைத்து அதிலிருந்து நாம் அடுத்த கட்டத்தை நோக்கி போவோம் என்று சொன்னார்//

இது நல்ல ஐடியா.

//சரி எந்த சும்மாங்கிற வார்த்தையின் உண்மையான அர்த்தம் பார்க்கலாம் //

பார்க்க:

http://raviaditya.blogspot.com/2010/01/blog-post_07.html

க.பாலாசி said...

அசத்துங்கள்... வாழ்த்துகிறோம்....

KVR said...

\\உங்கள் இடுகையின் அர்த்தம் என்ன? தேவையில்லாமல் ஜாதி சாயம் ஏன்? \\

இப்போ தான் அவரோட இடுகை படித்தேன். கிறுக்குத்தனமா இருக்கு. வந்திருந்த பெண்களுக்கு முன்னிருக்கையைக் கொடுப்பது கூட பார்ப்பனீயமா? வெளங்கிடும்.

இராகவன் நைஜிரியா said...

சும்மாவே சும்மாவைப் பற்றி அருமையாச் சொல்லிட்டீங்க. சும்மா சொல்லக்கூடாது அருமையிலும் அருமைதாங்க.

கலக்கலாம்.

மணிஜீ...... said...

/திவ்யாஹரி said...
ஓகே சார்.. நாங்களும் உண்டா? மெயில் பண்ணலாமா?//

உடனடியாக...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நன்றிங்கண்ணே..!

R.Gopi said...

”சும்மா” சொல்லக்கூடாது...அசத்தல் பதிவு...

வாழ்த்துக்கள் மணிஜீ...

அஷீதா said...

சும்மா சொல்லக்கூடாது...
சும்மா அருமையிலும் அருமைதாங்க.

V.Radhakrishnan said...

//இணைத்துக் கொள்ள உங்களது இணைய முகவரி, மின்னஞ்சல், தொடர்புக்கான தொலைபேசி எண்கள், போன்ற விபரஙக்ளோடு நமது tamilbloggersforum@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் உடனடியாயாக உங்களுக்கான இன்விடேஷன் அனுப்பப்பட்டு இணைக்கப்படும்.//

ஏன் இத்தனை அவசரம்? தமிழ் வலைப்பதிவர்கள் அமைப்பின் முக்கிய நோக்கம் என்ன? இருப்பினும் இணைவதில் எனக்கு ஏதும் தடையிருக்காது என்றே எண்ணுகிறேன்.

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

//.. tamilbloggersforum@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் உடனடியாயாக உங்களுக்கான இன்விடேஷன் அனுப்பப்பட்டு இணைக்கப்படும்...//

சும்மா சொல்லறிங்களா..?? :-))

மங்குனி அமைச்சர் said...

sir , visit to my blog please

ப்ரியமுடன் பாலா said...

KHSS ஆ பாஸ்? நானெல்லாம் தமிழ் மீடியம் . So, ராமன் சார் . அவரோட blind dog, uncle Podger hangs a picture, 'Sporrow Sporrow Little Sporrow' எல்லாம் ஞாபகம் வந்தது.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

////////ஜோரா கைத்தட்டுங்க............. ////////


போதுமாங்க கை வலிக்கிறது . சீக்கிரம் சொல்லுங்க !

மணிஜீ...... said...

பாலா....நம்பர் கொடுங்க....

அப்பாவி தங்கமணி said...

சும்மா என்னமோ சும்மா சொல்ல போறீங்கன்னு பாத்தா....நெஜமாவே விசயம் இருக்கு போல. சும்மா கலக்கிடீங்க போங்க (இப்போ அந்த உமா ராணி என்ன ஆனாங்க? சும்மா சொல்லுங்க)

KVR said...

//tamilbloggersforum@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் உடனடியாயாக உங்களுக்கான இன்விடேஷன் அனுப்பப்பட்டு இணைக்கப்படும்.//

எந்த இன்விடேஷனும் வரல ஜி

மணிஜீ...... said...

/அப்பாவி தங்கமணி said...
சும்மா என்னமோ சும்மா சொல்ல போறீங்கன்னு பாத்தா....நெஜமாவே விசயம் இருக்கு போல. சும்மா கலக்கிடீங்க போங்க (இப்போ அந்த உமா ராணி என்ன ஆனாங்க? சும்மா சொல்லுங்க//

உமாராணி வேறு ஒரு பையனை காதலித்தாள். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத உலக்ஸ் திருமணத்திற்கு முன் வரை ஏழெட்டு பெண்களை காதலித்தான். உமாவும் கடைசியில் வீட்டில் பார்த்த பையனையே(கட்டாயத்தின் பேரில்) திருமணம் செய்து கொண்டாள்..

மணிஜீ...... said...

பாலா..நானும் தமிழ் மீடியம்தான்.சாவித்திரி டீச்சர் கிளாஸ்...அழையுங்கள்..பேசலாம்..

punitha said...
This comment has been removed by the author.
punitha said...

சும்மா கலக்கீடீங்க போங்க. வாழ்த்துகள் மணிஜீ.

உங்கள் ப்ளோக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் உணர்வு மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.