Monday, March 15, 2010

மானிட்டர் பக்கங்கள் ....... 15/03/10


இந்த வாரம் ஆனந்தவிகடனில் சாமியார்களைப் பற்றி ஒரு கட்டுரை புகைப்படங்களுடன் வந்திருக்கிறது. சாய்பாபா, ரஜனீஷ், பிரேமானந்தா, நித்தியானந்தா இன்னும் பிற ஜென்மங்களும். சாமர்த்தியமாக ஜெயேந்திரையும், சின்ன சாமியையும் தவிர்த்திருக்கிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றி ஓரிரு வரிகள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் குதிரை ஓட்டி ஜக்கியை விட்டு விட்டார்கள். இத்தனைக்கும் ஜீனியர் விகடன் பழைய இதழில் வெள்ளியங்கிரி மலை மர்மங்கள் பற்றிய ஒரு கட்டுரை படித்த நியாபகம் இருக்கிறது. விகடனில் “அத்தனைக்கும் ஆசைப்படு “ ஜக்கி எழுதுவதால் விட்டுவிட்டார்கள் போலும். கோலங்கள், திருமதி செல்வம் எல்லாம் சன் டிவியில் காட்டப்பட்ட நித்தியின் வீடியோவிற்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை. ஜக்கி பற்றிய சிடி எதுவும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவும் சன் டிவி கையில் சிக்கினால் அவ்வளவுதான். ”அவர்களை” பற்றிய சிடி கிடைத்தாலே ஒளிபரப்புவார்கள் போல ! ஆனால் எங்கோ இருக்கிறது. வரும் என்றுதான் பட்சி சொல்கிறது !


பகுத்தறிவு பகலவனின் பாசறையிலிருந்து வந்த தலைவர் . பாராட்டு விழாவிற்கே பாராட்டு விழா எடுக்கும் பெண்சிங்கத்தின் படைப்பாளி. ஊருக்கெல்லாம் பகுத்தறிவு சோறூட்டும் தானைத்தலைவன். 13 ஆம் எண்ணை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறார். கிடக்கறது கிடக்கட்டும் . கிழவனை தூக்கி மணையில் வை என்பது போல் வேலை அறைகுறையாக முடிந்திருக்கும் புதிய சட்டமன்ற கட்டிடத்தை திறந்து விட்டார். ராசி நம்பராம். இதுக்கு டம்மி டூம். அதுக்கு இரண்டு கோடி ரூபாயாம். 90 லட்சம் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லையாம்.


காந்திய கிராமங்கள் என்ற ஒரு வலைப்பூ. அதில் ஒப்பாரியை பற்றிய ஒரு பதிவு மிகவும் சுவாரசியமாக எழுதப்பட்டிருந்தது. சாந்தி லட்சுமணன் என்பவர் எழுதுகிறார். எல்லாப்பதிவுகளுமே தகவல்பூர்வமாகவும் இருக்கிறது. படித்துப் பாருங்களேன்.

இழவு , சிக்கன் பிரியாணி போன்றவர்கள் இந்த திரைப்படத்தை தலையில் தூக்கி கொண்டாடலாம். ஒடுக்கப்பட்டவர்களின் குறியீடாக ஒற்றைக்கால சட்டையுடன் படம் முழுவதும் அலைவதற்காக. அல்லது ஆதிக்க சாதியினரின் கோயில் தேரை இழுத்து வந்து காலனியில் கட்டி விடுவதற்காக. மாத்தியோசி திரைப்படம் ! ஒரு மண்ணாங்கட்டியையும் மாத்தியோசிக்கவில்லை. இறுதியில் நாயைப் போல் அடிபட்டு செத்து போகிறார்கள் டிரவுசர் பார்ட்டிகள். தயாரிப்பாளருக்கு டிரவுசராவது மிஞ்சினால் சந்தோஷம்தான். இயக்குனர் நந்தா பெரியசாமி . தினமும்தான் வாயால் சாப்பிடுகிறோமே , ஒரு நாள் என்று மாத்தி யோசித்திருக்கிறார் போலும்.

திருவண்ணாமலையில் நண்பர் அய்யனாரின் மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது. வாழ்த்துக்கள் அய்யனார். நானும் , அகநாழிகை வாசுவும் சென்றிருந்தோம். சிறப்பாக உபசரித்தார் அய்யனார். (அப்சலூட் ஓட்காவுடன்). எழுத்தாளர் பிரபஞ்சன் சொன்னது. அவர் குங்குமத்தில் வேலை செய்தபோது ஒரு முறை டி.ஜி.எஸ். தினகரனை பேட்டி எடுக்கப் போனாராம். காலை சிற்றுண்டியுடன் சிறப்பான வரவேற்பு. ஒரு தட்டில் உணவு வகைகள் வைக்கப்பட்டிருக்க, அதை உண்ண ஆள் யாரும் இல்லை. கேட்டதற்கு தினகரன் சொன்னாராம். அது ஜீசஸுக்காக. அவர் தினமும் என் வீட்டில் உணவு அருந்துவார் என்று. பிரபஞ்சனுக்கு கடுப்பு. நேர்காணல் முடிந்து மதிய உணவு நேரம் வந்துவிட்டது. தினகரன் சாப்பிட சொன்னாராம். பிரபஞ்சன் சொன்னார். மதிய உணவு என் வீட்டில்தான் . வேறெங்கும் சாப்பிட மாட்டேன். ஏனென்றால் மதிய உணவுக்கு ஜீசஸ் வருவார் என்று. தினகரனுக்கு திருடனுக்கு தேள் கொட்டிய நிலமை. அதெப்படி என்று எப்படி கேட்கமுடியும் ? கேட்டால் உங்கள் வீட்டிற்கு டிபனுக்கு வருகிற ஆள் , ஏன் என் வீட்டிற்கு லஞ்சுக்கு வரக்கூடாது என்று கேட்க பிரபஞ்சன் ரெடியாக இருந்திருக்கிறார்.

டிஸ்கி கவுஜை :

எல்லாவற்றையும்
சரியாகவே
புரிந்து கொள்கிறாய் !
நான் சொல்ல வந்ததை
தவிர....

36 comments:

Mohan said...

கவுஜை என்று நீங்கள் சொன்னாலும்,கவிதை நன்றாக இருக்கிறது.

சிநேகிதன் அக்பர் said...

//எல்லாவற்றையும்
சரியாகவே
புரிந்து கொள்கிறாய் !
நான் சொல்ல வந்ததை
தவிர....//

எப்படி அண்ணே எங்க நிலமை புரிஞ்சு எழுதுறீங்க.

பக்கங்கள் அனைத்து அருமை.

Paleo God said...

எல்லாவற்றையும்
சரியாகவே
எழுதிவிடுகிறீர்கள்
நாங்கள் நினைத்து வருவதை தவிர..!!!

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

//ராசி நம்பராம்//

தல இந்த விசயத்த யாருமே யூசிக்கலையே ?
உன்ன தவிர ,...ஸூஊஊஉபெரு

கிருஷ்ண மூர்த்தி S said...

பதிமூணைப் பிடிச்சு நல்லாத்
தொங்கட்டும்! தொங்கட்டும்!

கவுஜ புரியத் தானே செய்யுது!
புரியுதேன்னு சொல்றதால சந்தேகமா?

Jerry Eshananda said...

பிரபஞ்சன் மேட்டர் "சூப்பர்."

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லாருக்கு,வழக்கம் போல.

vasu balaji said...

டம்மி டூம் கணக்கெல்லாம் ஆடிட்ல வராதா?:(.

உண்மைத்தமிழன் said...

பிரபஞ்சன் மேட்டர் சூப்பருங்கண்ணா..!

தராசு said...

பிரபஞ்சன் ----- ஜூப்பரப்பு.

எறும்பு said...

ஏன் அண்ணே, பாசதலைவன் பத்தி எழுதாம உங்க மானிடர் பக்கம் நிறைவு பெறாதா?!. திருந்துற வயசானே அது?

ஈரோடு கதிர் said...

பிர’பன்ச்’சன்

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
டம்மி டூம் கணக்கெல்லாம் ஆடிட்ல வராதா?:(.//

எந்த ஆடிட்ட சொல்றீங்க...

Unknown said...

பிரபஞ்சன்.. :-D)
கவிதை அருமை..

"உழவன்" "Uzhavan" said...

சலாம் பிரபஞ்சன் :-)

வரதராஜலு .பூ said...

டம்மி டூம் என்ன, டம்மி பில்டிங்கே கட்டுவானுங்க

ராசி நம்பரா, அதுக்கு 13 மாடி கட்டியிருக்கலாமே, என் 6 மாடி மட்டும் கட்டறார்?

பிரபஞ்சன் மேட்டர் சூப்பர்னா அதுக்கு ஈரோடு கதிரின் கமெண்டு அத விட சூப்பர். :)

கலகலப்ரியா said...

முல்லா வேலைய ப்ரபஞ்சன் ஏன் பண்றாரு மணிஜி.. ம்ம்...

அப்புறம்... ஜக்கி..?.. இந்தக் கூட்டத்தில் ஜக்கியை சேர்ப்பதை ஏனோ மனம் ஒப்பவில்லை...

R.Gopi said...

//கோலங்கள், திருமதி செல்வம் எல்லாம் சன் டிவியில் காட்டப்பட்ட நித்தியின் வீடியோவிற்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை. //

//பாராட்டு விழாவிற்கே பாராட்டு விழா எடுக்கும் பெண்சிங்கத்தின் படைப்பாளி. ஊருக்கெல்லாம் பகுத்தறிவு சோறூட்டும் தானைத்தலைவன். 13 ஆம் எண்ணை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறார்//

//தயாரிப்பாளருக்கு டிரவுசராவது மிஞ்சினால் சந்தோஷம்தான். //

//உங்கள் வீட்டிற்கு டிபனுக்கு வருகிற ஆள் , ஏன் என் வீட்டிற்கு லஞ்சுக்கு வரக்கூடாது //

//எல்லாவற்றையும்
சரியாகவே
புரிந்து கொள்கிறாய் !
நான் சொல்ல வந்ததை
தவிர....//

********

தலீவா...

ஒண்ணும் சொல்றதுக்கில்ல... வழக்கம் போல ஃபுல் ஃபார்ம்ல எழுதி இருக்கீங்க...

“தல”ய விட மாட்டீங்க போல இருக்கே... பல நூறு விழா எடுத்த சாதனை நாயகனுக்கு பாராட்டு விழா அப்படின்னு ஒரு பாராட்டு விழா அண்ணன் ஜல்லி ஜெகத் தயார் பண்ணறாராமாம்...

மணிப்பக்கம் said...

மஞ்சதுண்டுகாரர் மேட்டர், சூப்பரு தல! அடிக்கடி எழுதுங்க இவர பத்தி! வாழ்க்கையில தமாஷூ கருணாநிதி மட்டும்தான் இப்ப, வடிவேலு எந்த மூலை ...?

அப்புறம் ஜக்கி,

பிரியாவை வழிமொழிகின்றேன் ஒரு சின்ன திருத்ததோடு,

ஜக்கி அதுமாதிரி செய்தாலும், அது யாரையும் மோசம் செய்ததாக ஆகாது!

கலக்கல் பதிவு தண்டோரா ... ! வாழ்த்துக்கள்!

தருமி said...

//பிரபஞ்சன் மேட்டர் "சூப்பர்."//

நைட் சாப்பாடு யார் வீட்ல ...?

வெள்ளிநிலா said...

Thaangunga!!!

மணிஜி said...

நன்றி மோகன்..

நன்றி அக்பர்...புரியுது..

ஷங்கர் என்றரியப்பட்ட ப........றை.. நன்றி..

நன்றி சசி...

மங்குனி நன்றி....

வாங்க கிருஷ்ணமூர்த்தி சார்.. வணக்கம்...

டிஎஸ்பி... நன்றி வருகைக்கு..

ஸ்ரீ...நன்றி..

வணக்கம் பாலா சார்...

உண்மைத்தமிழன் அண்ணே... நன்றி

நன்றி தராசு அண்ணே...

ஆமாம் எறும்பு.. நன்றி..

சபாஷ் கதிர்...

வாங்க பாலாசி.. நன்றி

நன்றி பட்டிக்காட்டான்...

நன்றி நவநீதகிருஷ்ணன்..(உழவன்)

நன்றி வரதராஜீலு..

ப்ரியா .. அவர் கிட்டயும் ஒரு காண்ட்ரவர்சி இருக்கு.. அவர் மனைவி சமாதி அடைந்ததைப் பற்றி.. எந்த புற்றில் எந்த பாம்போ?(நீங்க டிவோட்டியா?)

ஆஹா கோபி..வஞ்சனை இல்லாமல் பின்னூட்டம் போடுவதில் உனக்கு நிகர் இல்லை தம்பி!

நன்றி மணிப்பக்கம்...

தருமி ஐயா வணக்கம்..

சர்புதீன் நன்றி..

கலகலப்ரியா said...

=))...lol.. devoteeyaa...?? இல்ல மணிஜி... அவங்கள நான் சாமியாரா பார்த்ததில்லை... ஒரு மனிதனா அவங்களை எனக்குப் பிடிக்கும்.. யாருக்கும்.. இது செய்... இது செய்யாத அப்டின்னு போதித்த மாதிரிக் கவனமில்லை... i like him as an individualist... like his speech... and agree with him on most points... thatz it...

மத்தபடி மனுஷங்கள தெய்வமா எல்லாம் நினைக்கிறதுக்கு என்னோட ஈகோ இடம் கொடுக்குதில்ல மணிஜி... =))).. அகம் ப்ரம்மாஸ்மி...

மணிஜி said...

//கலகலப்ரியா said...

=))...lol.. devoteeyaa...?? இல்ல மணிஜி... அவங்கள நான் சாமியாரா பார்த்ததில்லை... ஒரு மனிதனா அவங்களை எனக்குப் பிடிக்கும்.. யாருக்கும்.. இது செய்... இது செய்யாத அப்டின்னு போதித்த மாதிரிக் கவனமில்லை... i like him as an individualist... like his speech... and agree with him on most points... thatz it...

மத்தபடி மனுஷங்கள தெய்வமா எல்லாம் நினைக்கிறதுக்கு என்னோட ஈகோ இடம் கொடுக்குதில்ல மணிஜி... =))).. அகம் ப்ரம்மாஸ்மி..//


ப்ரியா !!!!!!!!!

சலீகா said...

எல்லாவற்றையும்
எனக்கு
சரியாகப் புரியவைப்பதாக
நினைத்துக் கொண்டு

நீ
வாய்மூடாமல்
பேசிக்கொண்டிருக்கிறாய்...

(ஹி...ஹி சும்மாதாங்க)
பதிவுகள் அருமை.

selventhiran said...

பிரபஞ்சன் மேட்டர் சுவாரஸ்யம்!

சிநேகிதன் அக்பர் said...

என்னையும் உங்களோடு சேர்த்துக்கொண்டதற்கு நன்றி சார்.

சென்னை வந்தால் உங்களை எல்லாம் சந்திக்க ஆவலாகவே உள்ளேன்.

Unknown said...

நல்லா இருக்கு தொகுப்பு

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான அலசல். அதிலும் கடைசியில் கவிதை ரொம்ப சூப்பர்.

Romeoboy said...

\எல்லாவற்றையும்
சரியாகவே
புரிந்து கொள்கிறாய் !
நான் சொல்ல வந்ததை
தவிர....//

சொன்னா மட்டும் புரியவா போகுது !!!!

பிரபஞ்சன் செமையா கலைச்சு இருகாரு . ஹா ஹா ஹா

புலவன் புலிகேசி said...

//னென்றால் மதிய உணவுக்கு ஜீசஸ் வருவார் என்று. தினகரனுக்கு திருடனுக்கு தேள் கொட்டிய நிலமை.//

ஹா ஹா ஹா...நல்லக் கேள்வி..

அப்புறம் சட்ட மன்றம் இவனுங்க திருந்தவே மாட்டானுங்க தல

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

சார்! ஒருத்தருக்கு சந்தோசம் குடுக்கறதுக்கும் ஒரு அளவில்லையா? நன்றி சொல்லமுடியாது.அதுக்கு அப்பால வார்த்த இருக்கான்னு யோசனையில் நான்.

பனித்துளி சங்கர் said...

நல்ல பகிர்வு நண்பரே .


மீண்டும் வருவான் பனித்துளி !

திவ்யாஹரி said...

நல்ல பதிவு..

அப்புறம்... ஜக்கி..?.. இந்தக் கூட்டத்தில் ஜக்கியை சேர்ப்பதை ஏனோ மனம் ஒப்பவில்லை...

கலகலப்ரியா அக்காவை வழிமொழிகிறேன்..

Indian said...

// சாய்பாபா, ரஜனீஷ், பிரேமானந்தா, நித்தியானந்தா இன்னும் பிற ஜென்மங்களும். சாமர்த்தியமாக ஜெயேந்திரையும், சின்ன சாமியையும் தவிர்த்திருக்கிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றி ஓரிரு வரிகள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் குதிரை ஓட்டி ஜக்கியை விட்டு விட்டார்கள். //

where is சதுர்வேதி சாமியார் in this list?