Saturday, March 28, 2009

சொன்னதை செய்வோம்.. செய்வதைதான் சொல்வோம்...


சொன்னதை செய்வோம்.. செய்வதைதான் சொல்வோம்....திமுக வின் தாரக மந்திரம் இது.....2004 பாராளூமன்ற தேர்தலில் என்ன சொன்னார்கள்..எதையெல்லாம் செய்தார்கள்..கொஞ்சம் பார்க்கலாம்.. பெரியார் அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும்... தென்னக நதிகளை இனைக்கும் திட்டம் உருவாக்கப்படும்.. மேற்கு நோக்கி பாய்ந்து கடலில் வீணாகும் நீரைகிழக்கே திருப்பி விட திட்டம் வரும்.. ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து ம்ற்றும் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த பறக்கும் கப்பல் திட்டம். திருவான்மீயுர் முதல் மாமல்லபுரம் வரை புதிய ரயில் பாதை..பின் பாண்டி வரை நீட்டிக்கபடும்.. மெட்ரோ ரயில் திட்டம் துரிதபடுத்தபட்டு செங்குன்றம் வரை விரிவு படுத்தபடும் திருச்சி,கோவை,மதுரை,விழுப்புரம் முதலிய ரயில் நிலையங்களில் இருந்து 2/3 பெட்டிகள் கொண்ட ரயில் பஸ்கள் அருகில் உள்ள ஊர்களுக்கு இயக்கப்படும். தேசிய உயிரியல் தொழில் நுட்ப நிறுவனம் தமிழகத்தில் நிறுவபடும்.. மண்டல தாவரவியல் வாரியம்,தேசிய அளவில் தாவரவியல் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும். நாங்குனேரியில் கழக ஆட்சியில் தொடங்கபட்ட பிரமாண்ட தொழில் நுட்ப பூங்கா உரிய நிலங்கள் கையகபடுத்தபட்ட பின்னும் கிடப்பில் போடப்பட்ட நிலையை மாற்றி தை செயல் படுத்த மத்திய அரசை வலியுறுத்தப்படும். மாநிலசுயாட்சி கொள்கை வெற்றி பெற தேவையான அரசியல் திருத்தம் நிறைவேற்றபடும். இட ஒதுக்கீடு பிரச்சனையில் அதிக பட்சம் 50% தான் இருக்க வேண்டும் என்பதை மாற்ற சட்ட திருத்தம் கொண்டு வரப்படும். மத்திய அரசு பணிகளுக்கு நடத்தபடும் தேர்வுகளுக்கு அந்தந்த மானில ஆட்சி மொழிகளை இணைத்து எழுத்து ம்ற்றும் நேர்மக தேர்வு நடத்த வலியுறுத்தபடும். இன்னும் எக்கச்சககமான வாக்குறுதிகள்........நிறைவேற்ற பட்டதா???? கிட்ட நெத்தியை கொண்டு வாருங்கள்...
www.dmk.in/e2004/emfesto.htm


4 comments:

நாமக்கல் சிபி said...

தேர்தல் நேரத்துல யாராச்சும் பழைய தேர்தல் வாக்குறுதிகளை ஞாபகம் வெச்சி கேப்பாங்களா?

என்ன இது சின்னப்புள்ளத்தனமா?

இதையெல்லாம் கேள்வி கேட்டா ஓட்டுக்கு இவ்ளோன்னு தேறாது நைனா!

மணிஜி said...

காலைல முட்டை தோசை சாப்பிடும்போதே நினைச்சேன்...இன்னைக்கு நாமக்கல் சம்பந்தமா எதோ இருக்குன்னு..நன்றி வருகைக்கும்(முதல்..)கருத்துக்கும்..ஆமாம்..நாலாம் பிறை ...கருத்து நீங்க முழுசா முடிச்ச உடனே போடலாம்னு

விவேக் said...

அது போன தேர்தல் !! இது வேற தேர்தல் !!
ஆனா அதே அறிக்கைதான் !!
இன்னிக்கி ஒரு பேச்சு நாளக்கி ஒரு பேச்சு கிடையாது
என்னைக்கும் ஒரே பேச்சுதான் !! வெறும் பேச்சு மட்டும்தான்!!!

உண்மைத்தமிழன் said...

தண்டோரா ஸார்..

என்ன இது இப்படி சின்னப்புள்ளத்தனமால்லாம் கொஸ்டீன் கேட்டுக்கிட்டு..?!

இதெல்லாம் பின்னாடி துடைச்சுட்டுத் தூக்கிப் போடறதுக்காக கட்சிக்காரங்க கொடுக்குறது.. அதை எடுத்து பூஜை ரூம்லயா வைக்குறது..

நல்லா கேட்டீங்கய்யா கேள்வி..?!