Thursday, March 19, 2009

ரெயின் ரெயின் கோஅவே

வறுமையோடு வாய்சண்டை போட்டுக் கொண்டிருந்த காலம் அது.ஒரு சிறிய வீட்டில் குடி இருந்தோம்.நான்,என் மனைவி,என் 6 வயது மகள்.. 150 சதுர அடி ஹால் ..அதில் சமைலறையாக ஒரு சிறிய தடுப்பு.அவ்வளவுதான்...வாசல் முன் புறம் சிமெண்ட் பூசப்படாமல் மண் தரையாகவே இருந்தது.மழைக் காலங்களில் மிக அவஸ்தையாக இருக்கும்..வெளியில் இருந்து உள்ளே வந்தால் ஹால் பூராவும் சேறாகி விடும்..வீட்டு உரிமையாளரிடம் சொல்லி சொல்லி அலுத்து போயிற்று..பொறுமை மீறி ஒரு நாள் இரவு கேட்கப் போய் பெரிய சண்டை.(ஓல்டு மங்க் -ஓவர் டங்க்)


மறு நாள் விடிந்தது..எழுந்திருக்கும் போதே குற்ற உணர்ச்சியில் கூனிப் போனேன்.அவ்வளவு அவரை திட்டியிருக்கிறேன்..

சரி வேற வீடுதான் பார்க்கணும்னு வெளியில் வந்தால் ஹவுஸ் ஓனர் நின்று கொண்டிருந்தார்....இரண்டு ஆட்கள் மண்ணை கொத்திக் கொண்டிருந்தனர்..அவர் முகத்தை நான் தவிர்த்து திரும்பும் போது மணி என்று கூப்பிட்டு மன்னிச்சுக்கப்பா..என் தப்புதான் ..நா சொன்ன மாதிரி இதை முன்னயே செஞ்சு கொடுத்திருக்கணும்..இன்னைக்கு முடிச்சிருவாங்க. சொல்லி விட்டு போயே விட்டார்....என்னை அவமானமும் குற்ற உணர்வும் அரித்தது..சே...நாம் அவருக்கு முன்னாடி ஒரு சின்ன சாரி சொல்லியிருக்கலாம்...மனைவி சொன்னாள்..இனிமேலாவது குடிச்சிங்கின்னா..வாயை மூடிகிட்டு கவுந்தடிச்சு பேசாம படுத்து கிடங்க.....

பின் குறிப்பு.... 1.. அன்று இரவு நானும் அவரும் சேர்ந்து குடித்தோம்..

பின் குறிப்பு.....2... மற்றொரு மழை நாள்..வாசலில் கையில் அதே oldmonk.பக்கத்தில் மனைவியும் மகளும்..ஆனந்தமாக இருந்தது..ஆனால் என் மகள் மட்டும் எதையோ பறி கொடுத்தது போல் இருக்க..காரணம் கேட்டேன்..எல்லாம் உன்னாலதான்பா..முன்னே எல்லாம் மழை பேஞ்சா ஜாலியா இருக்கும். சேத்துல தொப்புனு குதிச்சு விளையாடுவேன்..நம்ம வீட்டு வாசல்ல தோ இங்க உக்கார்ந்து கிட்டே கப்பல் விடுவேன்..இப்ப பாரு தண்ணி நிக்காம ஓடியேப் போயிடுது..நீ அன்னைக்கு சண்டை போடாம இருந்திருக்கலாம்....

5 comments:

நையாண்டி நைனா said...

இணைந்து இருப்பதற்கு நன்றிகள்.

இது போல் சின்ன குழந்தைகளின் உலகமே விசித்திரமானது தான்.

மணிஜி said...

அவர்களுக்கு நைனாவாக இருப்பதும் சுகமோ சுகம்...

பாலா said...

தமிழிஷில் உங்க.. கேள்விக்கு பதில் சொல்லியிருக்கேன் சார். :-)
=========

உண்மைதான்..! விசித்திரமான உலகம் அவங்களது. :-)

benza said...

வீட்டு உரிமையாளருடன் தண்ணி அடிச்சிங்களே ---
பிற்பாடு --- அந்த ஷாம்பாஷனையை விவரியுங்களேன்

மணிஜி said...

அதை ஒரு தனி கதையாவே எழுதலாம்..ஒருத்தர் காதை ஒருத்தர் பிடிச்சு தோப்புக் கரணம் போடாத குறைதான்..அவர் என்னை விட 10 வயது பெரியவர்.. உங்கள் வருகைக்கு நன்றி..உங்கள் ஆல்பம் பார்த்தேன்..ஏன் நீங்கள் நிறைய எழுதலாமே..