சமீபத்தில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு போக நேரிட்டது..மிக ஆடம்பரமான திருமணம்..அத்தனை லேட்டஸ்ட் மாடல் கார்களும் ஆஜர்.உறவினர் கூட்டத்தை விட நண்பர்கள் கூட்டம்தான் அதிகம் இருந்தது..திருமண வீட்டாருக்கு ஒரு வேலையும் இல்லை.அத்தனையும் காண்ட் ராக்ட்தான்.நெருங்கிய சொந்தங்கள் சிலர் காணும்..ஆஃபிஸ்,மீட்டிங்க்.ஆடிட்டிங்,அப்ராட்,நாள்(அந்த) என்று ஆயிரம் சாக்குகள்...வாண்டுகள் கூட்டம் கம்மி.வந்திருந்த சிலதும் அப்பாவின் மல்டிமீடியா செல்லை நோண்டி போட்டோ,கேம்ஸ் என்று பிஸி...கூட்டம் நிறைய..சத்தம் நிறைய....ஆனாலும் என்னவோ இல்லை..என்ன அது?
என் சொந்த ஊர் தஞ்சை...சிறு வயதில் உறவினர் வீட்டு கல்யாணம் எல்லாம் சென்னையில்தான்(மெட்.. ராஸ்)..கல்யாணம் என்றால் குஷிதான்..வாழை இலை,காய் எல்லாம் வாங்கி கொண்டு சாயந்திரம் 5 மணிக்கு கிளம்பும் செங்கோட்டா பாஸ் பாசஞ்சரில் ஏறினால் காலையில் எக்மோரில் இறங்கி நேராக சத்திரம்....அப்போதெல்லாம் கல்யாணம் 3 நாள் கூத்து..(இப்போ அதுவும் பாதியாகி விட்டது).நான்,3 தம்பிகள்,ஒரு அக்கா,அப்பா,அம்மா(குடும்பதோடு போகலன்னா கோவிச்சுகுவாங்கன்ணே)..சத்திரம் போய் இறங்கினால் அங்கு பெரிய படையே இருக்கும்.மாமா,சித்தி,பெரியப்பா,மற்றும் நம் உறவினர் வீட்டு வாண்டுகள் எல்லாம் சேர்த்து ஒரு 34/40 தேறும்..அப்ப ஆரம்பிக்கும் அமர்க்களம் இருக்கே..அடடா..வாழை பழம் முதல் வடை வரை சமையற்காரருக்கு தெரியாமல் (அவங்க பிசியா ரம்மி ஆடிட்டு இருப்பாங்க..) திருடி பங்கு பிரிப்பதில் சண்டை போட்டு..(சில ஆள்காட்டி எட்டப்பங்களும் செட்டில் உண்டு) வாரி விழுந்து முட்டி சிராய்ச்சு...அதற்கும் பக்கத்தில் எதாவது சைக்கிள் கடையை கண்டு பிடித்து வாடகை சைக்கிள்(ஹவர் சைக்கிள்)எடுத்து ஓட்டி,ஊரை சுத்தி..ஆளாலுக்கு ஒரு பக்கம் தேட வச்சு..அத்தனை அமர்க்களமும் நடக்கும்..(அத்தை/மாமா பெண்களிடம் பிலிம் காட்டும் சைடு ரீலும் உண்டு).இப்ப போல் ஆடம்பரமான சத்திரங்கள் அப்போ இல்லை..எல்லாம் பரிமுனை(parrys)யில் தெலுங்கு செட்டியார் மண்டபங்கள்தான்..அங்கு ஒரு மானேஜர் ..அவர் குடும்பமும் சத்திரத்தின் ஒரு அறையில் இருப்பார்கள்.அங்கும் ஒரு பெண்ணோ,பையனோ.சினேகிதமாகிவிடுவார்கள்..கல்யாணம் முடிந்து சத்திரம் காலி பண்ணும் போது அவர்களை பிரியும் போது ஒரு மெல்லிய துக்கம் வரும்..இதில் எல்லா அம்மாவும் சொல்ற பொதுவான விஷயம்..அப்பா இந்த சனியங்கள் படுத்தல் தாங்காது..ஒரு இடத்துக்கு அழைச்சுகிட்டு வர முடியுதா??மானம் போகுது...(இதில் யார் படுத்தல்,விஷமம் ஜாஸ்தி என்று பட்டி மன்றம் கூட நடக்கும்(கொஞ்சம் பெருமையோடு என்றும் சொல்லலாம்..)
கொஞ்சம் பெரியவனான பின்(நான் வளர்கிறேனே மம்மி??)கல்யாணம் சைட் அடிக்கும் உற்சவமானது..இன்னும் கொஞ்ச நாளானது...மப்பு.... மங்காத்தா..ரம்மி.. என்று ஆரோக்கியமான ?? வளர்சி அடைந்தது...இப்ப நம்ம குடும்பஸ்தனாயிட்டோம்...கொசு வத்தி முடிய போவுது..
இந்த திருமணத்தில் வாண்டுகளையே காணும்..இருக்கும் சிலரும் பேசினால் அதில் ஒரு சின்ன தற்பெருமையே இருந்தது.(பாட்டு..,கராத்தே..கீ போர்டு..நீச்சல்..(ஒரு தாய் குலம் சொல்கிறார்..விக்கிக்கு யார் கூடவும் விளையாடவும் சரி பேசவும் பிடிக்காது..ஸ்கூல்,கிளாஸ்..கம்ப்யூட்டர்..அதான் அவன் உலகம்)..நான் யோசித்தேன் அவர்கள் எதை இழந்திருக்கிறார்கள்..அல்லது எனக்கு அப்போ எது கிடைக்கவில்லை...(இந்த போலியான பொழுது போக்கும் ஆடம்பரமும்)ஏன் இப்படி பிள்ளைகள் தனித் தனி தீவாய் இருக்கிறார்கள்...
காரணம் ஒன்றுதானாக இருக்கமுடியும்..சமூக,பொருளாதார விழிப்புணர்ச்சி அல்லது நன்கு முன் எச்சரிக்கையுடன் வாழ்வை திட்டமிடுதல்...
"நாம் இருவர்..நமக்கு இருவர்..என்று தொடங்கி..பின் அது "நாம் இருவர்..நமக்கு ஒருவர்" என்று ஆனது..இனி என்ன ஆகும் நாமே இருவர்..நமக்கு எதற்கு இன்னொருவர்.." என்று ஆகிவிடுமோ??
""மாமன் தங்கை மகளனான மங்கை உனக்காக?? தாய் மாமன் சீர் கொண்டு வாராண்டி.அவன் தங்க கொலுசு....இந்த பாட்டுக்கு எல்லாம் வருங்கால சந்ததிக்கு பொழிப்புரை எழுதித்தான் புரிய வைக்க வேண்டுமோ?
எங்கே செல்லும் இந்த பாதை??
9 comments:
sariyana karuththu
மாமான்னு நீங்க "அங்கில்"லை தானே சொல்றீங்க ?????
மிக மிக அருமையான கருத்து நண்பரே....
கவனிக்கவேண்டிய பாதை
அனைவரின் வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்கும் நன்றி
அனைவரின் வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்கும் நன்றி
நாம் இழந்து கொண்டிருப்பவை இவை தான்...
நல்ல பதிவு
உறவுகளும் உணர்வுகளும் குறைந்து வரும் இந்த இயந்திர காலத்தில் தாங்கள் இழப்பது என்னவென்றே தெரியாத மனிதர்கள்தான் நிறைந்திருக்கிறார்கள் .... நல்ல பதிவு
பணத்துக்கும்,பகட்டுக்கும் இயல்பை இழந்து கொண்டிருக்கிறோம் ..தூயா...அதிலை...நன்றி
Post a Comment