ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு விமர்சனம் செய்வதை போல் இந்த செய்தியை படித்தவுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ள தோன்றியது...(நன்றி : தினத்தந்தி குடும்பமலர்)
ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியின் பெரும்பாலான பகுதிகளில் பனி உறைந்திருந்தது.அப்போது ஏற்பட்ட கடுங்குளிர் காரணமாக தாவரங்கள் மூலம் கிடைத்த காய்,கனி,கிழங்குகள் கிடைக்கவில்லை.தாவர உணவுகளையே நம்பி வாழ்ந்த மனிதன் அசைவ உணவுக்கு அப்போதுதான் தாவினான்.மாமிசத்தில் உள்ள புரதமும்,கொழுப்பும் குளிரை சகித்துக் கொள்ள உதவியதுடன் வெகு தூரம் சென்று வேட்டையாட சக்தியையும் கொடுத்தது.
இன்று ஆண்களும்,பெண்களும் வேலைக்கு செல்கிறார்கள்,ஆதிகாலத்தில் உணவை சேகரிக்க ஜோடியாகப் போனார்கள்.காலப் போக்கில் வேட்டையாடுவதில் ஆபத்துக்கள் பெருகின.பெண் உயிரோடு இருந்தால்தான் மனித இனம் பெருகும் என்பதால் பெண்கள் வேட்டைக்கு வருவதை குறைத்துக் கொண்டார்கள்.இப்படித்தான் பெண்களை ஒரிடத்தில் நிலையாக தங்க வைக்கும் பழக்கம் தொடங்கியது.
பெண்களைப் போல் தாங்களும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஆதிகால ஆண்களுக்கும் இருந்ததை பாரம்பரிய கலை வடிவங்கள் நிரூபிக்கின்றன.தன் தொடையிலிருந்து மகன் டயோனிஸசை பிரசவிக்கும் கிரேக்க கடவுள் சீயஸ்,தன் விலா எலும்பிலிருந்து ஏவாளை உருவாக்கிய ஆதாம் ஆகியோரை உதாரணமாக கூறலாம்.
மாடு மாதிரி உழைக்கிறாள்" என்று அதிகமாக உழைக்கும் பெண்களை பற்றி சொல்கிறார்கள். உண்மையில் ஆணைக்காட்டிலும் பெண்ணிடம்தான் அதிக சக்தி இருக்கிறது.ஆணின் உடலில் தசை அதிகம்.கொழுப்பு குறைவு.அதாவது 40% தசை.15%கொழுப்பு கொண்டது அவன் உடல்.பெண்ணோ நேர்மாறாக தசை 30%.கொழுப்பு 27%.தசைகள் இயங்க நிறைய எரிபொருள் தேவை.கொழுப்புதான் எரிபொருளை சேகரித்து வைத்திருக்கும்.பெண்கள் உடலில் கொழுப்பு அதிகமாக இருப்பதால் ஆண்களை விட கடினமாக உழைக்க முடிகிறது.
ஆண் உடலில் டெஸ்ட்ரோஜன் அவனை உயரமாக,புஷ்டியாக,வழுக்கையாக,வீரம் உள்ளவனாக,உடல் தோலில் அதிக ரோமங்கள் கொண்டவனாக மாற்றுகிறது.ஈஸ்ட் ரோஜன் பெண்னை கொழுக் மொழுக்காக,மார்பு பெரிதாக,இடை சிறிதாக இடுப்பு அகலமாக மாற்றுகிறது.இந்த தோற்றத்தில் பெண்ணை பார்க்கும் ஆண் ஈர்க்கப்படுகிறான்மேலும் இதே ஈஸ்ட் ரோஜன் பெண்களின் நோய் எதிர்ப்பு கேடயமாகவும் விளங்குகிறது.
ஒரு பெண்ணுக்கு முதன் முதலாக மாதாந்திர உதிரப் போக்கு ஏற்படும்போது அவள் பருவம் அடைந்து விட்டதாக கருதப்படுகிறாள்.ஆனால் ஆண்களுக்கு அது போல் இல்லை.அவன் அரும்பு மீசை,உடலில் வளரும் ரோமங்கள் அதற்கு அறிகுறியாகின்றது.ஆதிகால ஆண்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்தது.ஆணும் வயதுக்கு வந்து விட்டான் என்பதை உணர்த்த அவன் உடலில் கீறி ரத்தத்தை வெளியேற செய்வார்கள்.அந்த வடு அவனை வயதுக்கு வந்தவனாக அடையாளம் காட்டும் இன்றும் ஆப்பிரிக்க பழங்குடியினர் நம்புகின்றனர்.
மனித நாகரீக வளர்ச்சியில் எழுத்துக்கள் தோன்றிய காலத்தில் அறிவில் சிறந்து விளங்கிய பெண்ணை ஆண்களுக்கு பிடிக்கவில்லை.இதனால் அவளை ஒதுக்கினார்கள்.இதைப் புரிந்து கொண்ட பெண்கள் ஆண்கள் எதிரில் அப்பாவி போல் நடிக்கத் தொடங்கினாள்.சீனப் பெண்கள் ஆண்கள் புரிந்து கொள்ளா வண்ணம் உருவாக்கிய எழுத்து வடிவம் "நூஷூ".அப்படியென்றால் "பெண்ணின் எழுத்து"என்ற அர்த்தமாம்.
உலகிலேயே அதிக குழந்தைகள் பெற்றவர் ரஷ்யாவின் "வஸீலியே" 69.எதில் 12 பேர் இரட்டையர்.21 பேர் மூன்று முன்றாக பிறந்தவர்(7 தடவை)16 பேர் நான்கு நான் காய் பிறந்தவர்..(4 தடவை).மீதி 20 பேர் தனியாய் பிறந்தவர்கள்.உலகில் அதிக குழந்தைகளுக்கு அப்பா என்ற பெருமையை தட்டி செல்பவர் மொராக்கோ நாட்டின் மகாராஜா மவுலே இஸ்மாயில்..பல மனைவிகள்(ஹீம் ...) மூலம் 888 பிள்ளைகள்.(சே ..சே )
நன்றி : தினத்தந்தி குடும்ப மலர்.
10 comments:
என்னை கொழுப்பெடுத்தவன்னுதான் வீட்ல சொல்றாங்க..
அது உண்மை இல்லனு உங்க பதிவு மூலம் நிரூபிக்க போறேன்.
மிக்க நன்றி.
கிகிகி..
மகப்பேற்றுக்காகத்தான் பெண்களை வீட்டில் அமர்த்திவைத்தது என்னவோ உண்மையாகத்தான் இருக்க வேண்டும்..
ஏனெனில் ஆடுகின்ற ஆட்டமும் தேய்கின்ற காலம் வரும்போது அடுத்த ஆட்டத்தைத் தொடர ஆள் வேண்டும் என்று நமது ஆண் சமூகம் தொலை நோக்குப் பார்வையோடு சிந்தித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
நல்லதொரு சிந்தனையை தேர்ந்தெடுத்து சொல்லியிருக்கிறீர்கள் தண்டோரா ஸார்.. நன்றிகள்..!
ஐயா.. இந்த காலத்துக்கு இது பொருந்துமான்னு தெரியலை.. வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி ரங்கன் சார்
உங்களது பதிவு கவர்ந்தது --- ஆனால் கீழ் கண்ட
பந்தியுடன் நிறுத்திவிட்டேன் --- விளக்கம் தருக்க ப்ளீஸ்
[[[ ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியின் பெரும்பாலான பகுதிகளில் பனி உறைந்திருந்தது.அப்போது ஏற்பட்ட கடுங்குளிர் காரணமாக தாவரங்கள் மூலம் கிடைத்த காய்,கனி,கிழங்குகள் கிடைக்கவில்லை.தாவர உணவுகளையே நம்பி வாழ்ந்த மனிதன் அசைவ உணவுக்கு அப்போதுதான் தாவினான் ]]]
[[[ தாவரங்கள் மூலம் கிடைத்த காய்,கனி,கிழங்குகள் கிடைக்கவில்லை ]]]
கிடைக்காத தாவர உணவை எவ்வாறு மனிதன் நம்பினான் ?
Logic உதைக்குதே அண்ணா !
உண்மை தமிழ் அன்பரே ---
[[[ ஏனெனில் ஆடுகின்ற ஆட்டமும் தேய்கின்ற காலம் வரும்போது அடுத்த ஆட்டத்தைத் தொடர - - - ]]]
வேட்டை ஆடி உணவு தேடிய காலம் சென்று மனிதன் Matriarch காலத்திலும் வாழ்ந்துள்ளானே ?
பெண் ஆதிக்கத்தை ஆண் '' சமயம் '' கண்டுபிடிச்ச காலத்தில் தான் ஒதுக்கியுள்ளான் என என் நம்பிக்கை ---
இது கருணாநிதி கூறியது போல Logic இல்லாத '' மண் தோன்றி கல் தோன்றா காலத்தின் முன் தோன்றிய தமிழ் '' என்ற நம்பிக்கை இல்லை ---
http://www.blogger.com/profile/15486504643937273659தாவரங்கள் மூலம் கிடைத்த காய்,கனி,கிழங்குகள் கிடைக்கவில்லை ]]]
கிடைக்காத தாவர உணவை எவ்வாறு மனிதன் நம்பினான் ?
http://vilambarakkaaran.blogspot.com/அதாவது கடும் உறை பனி ஏற்படுவதற்கு முன் வரை தாவரங்கள் மூலம் கிடைத்த காய்,கனி,கிழங்குகளை நம்பி வாழ்ந்தான்.பனியின் காரணமாக அதற்கு தட்டுபாடு ஏற்படவே அசைவத்துக்கு தாவியதாக நான் படித்தேன்
ஆனால் பாரும்.. உண்மைத் தமிழா..உமக்கு அந்த பிரச்சனையே இல்லை..கொடுத்து வச்ச கட்டை
உலகிலேயே அதிக குழந்தைகள் பெற்றவர் ரஷ்யாவின் "வஸீலியே" 69.எதில் 12 பேர் இரட்டையர்.21 பேர் மூன்று முன்றாக பிறந்தவர்(7 தடவை)16 பேர் நான்கு நான் காய் பிறந்தவர்..(4 தடவை).மீதி 20 பேர் தனியாய் பிறந்தவர்கள்.உலகில் அதிக குழந்தைகளுக்கு அப்பா என்ற பெருமையை தட்டி செல்பவர் மொராக்கோ நாட்டின் மகாராஜா மவுலே இஸ்மாயில்..பல மனைவிகள்(ஹீம் ...) மூலம் 888 பிள்ளைகள்.(சே ..சே )//
இதை தவிர்த்து இருக்கலாம் என்பது எண் எண்ணம் ..நல்ல பதிவு ...
உள்ளேன் ஐயா ...
சுபாசு ம்ற்றும் மோனி.. வருகைக்கும்,வாசிப்புக்கும் நன்றி
Post a Comment